Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசிய கூட்டைமப்புடன் முட்டிமோதும் சுதந்திரக்கட்சி

Featured Replies

தமிழ்த்தேசிய கூட்டைமப்புடன் முட்டிமோதும் சுதந்திரக்கட்சி

 

சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருக்கின்ற மிதவாதத் தலைவர்களும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருக்கின்ற மிதவாத தலைவர்களும் வெளியே வந்து அரசியல் நோக்கங்களை ஒருபக்கம் வைத்துவிட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் அரசியலமைப்பு தீர்வுத்திட்டம் தொடர்பில் ஒரு தெளிவுபடுத்தலை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும் 

புதிய அர­சி­ய­ல­மைப்பு வரப்­போ­கின்­றதா? அல்­லது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் வரப்­போ­கின்­றதா? என்று தெரி­யாமல் நாட்­டு­மக்கள் குழப்­பத்­தி­லேயே இருக்­கின்­றனர். அர­சி­யல்­வா­தி­களும் மக்­களை குழப்பும் செயற்­பா­டு­க­ளி­லேயே தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு வரு­கின்­றனர். அதா­வது ஒரு­நே­ரத்தில் முழு­மை­யான அர­சி­ய­ல­மைப்பு புதி­தாக கொண்­டு­வ­ரப்­பட்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­மென்று கூறும் அதே அர­சாங்­கத்­த­ரப்பு மற்­று­மொரு நேரத்தில் இல்லை இல்லை அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் மட்­டுமே கொண்­டு­வரப்படும் எனக் கூறி­வ­ரு­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்தே இந்த குழப்­ப­நி­லைமை நீடித்­து­வ­ரு­கின்­றது. வாக்­க­ளித்து அர­சாங்­கத்தை தெரிவு செய்த மக்­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் வரப்­போ­கின்­றதா அல்­லது புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப­ட­போ­கின்­றதா என்­பது தெரி­யாமல் இருக்­கின்­றது. இது­தொ­டர்­பான குழப்­பமே நாட்டில் நில­வு­கி­றது. இதற்கு ஒரு உறு­தி­யான பதிலை கூற முடி­யாமல் நல்­லாட்சி அர­சாங்கம் திண­றிக்­கொண்­டி­ருக்­கின்­றது.

குறிப்­பாக மூன்று முக்­கிய விட­யங்­க­ளுக்­கா­கவே புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த விடயம் மிகப்­பெ­ரிய அளவில் பேசப்­ப­டு­கின்­றது. அவற்றில் தமிழ் பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் மிக முக்­கிய கார­ண­மாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வுத்­திட்டம் காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன் தேர்­தல்­முறைமை மாற்றம், ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் என்­பன முக்­கிய இடங்­களை வகிக்­கின்­றன.

இந்த முக்­கிய மூன்று விட­யங்­களே புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் இடம்­பி­டித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அத­னி­டையே உப விட­யங்கள் காணப்­பட்­டாலும் இந்த மூன்று முக்­கிய விட­யங்­களே பிர­தான இடத்தை வகிக்­கின்­றன. ஆனால் தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருக்­கின்ற ஐக்­கிய தேசி­யக்­கட்சி மற்றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகிய பிர­தான கட்­சி­க­ளுக்­கி­டையே கூட இந்த விட­யங்கள் தொடர்பில் ஒரு உறு­தி­யான இணக்­கப்­பாடு இது­வரை எட்­டப்­ப­டாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

இத­னால்தான் புதிய அர­சி­ய­ல­மைப்பா, அல்­லது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமா கொண்­டு­வ­ரப்­ப­ட­போ­கின்­றது என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு தெளி­வாக எடுத்­துக்­கூற முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அல்­லது புதிய அர­சி­ய­ல­மைப்பு மற்றும் அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் என்று கூறிக்­கொண்டு இந்த விவ­கா­ரத்தை தொடர்ந்து இழுத்­த­டிப்­பதற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றதா? என்ற சந்­தே­கங்­களும் நாட்டு மக்­க­ளி­டையே ஏற்­பட்டு வரு­கின்­றன.

 புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்­டமும் உள்­ள­டக்­கப்­ப­டு­வதால் வர­லாற்றில் இடம்­பெற்­றதைப் போன்றே தீர்­வுத்­திட்­டத்தை இழுத்­த­டிப்­ப­தற்­காக இந்த முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­னவா என்ற சந்­தேகம் தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளது. விசே­ட­மாக பௌத்த பீடங்­களைச் சேர்ந்த மகா­நா­யக்கத் தேரர்கள் இந்த அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்பில் அண்­மையில் எதிர்ப்பை வெளிக்­காட்­டி­யதன் பின்பே இந்த விடயம் தொடர்­பான சர்ச்­சைகள் அதி­க­ளவில் ஏற்­பட்­டன. அதா­வது அர­சி­ய­ல­மைப்பும் வேண்டாம். திருத்­தமும் வேண்டாம் என்ற தொனியில் மகா­நா­யக்க தேரர்­களின் அறி­விப்­புக்கள் அமைந்­தி­ருந்­தன.

 மாறாக தேர்தல் முறை மாற்­றத்தை மட்டும் கொண்­டு­வந்தால் போதும் என்ற நிலைப்­பாட்டை மகா­நா­யக்கத் தேரர்கள் அறி­வித்­தி­ருந்­தனர். இதனால் நிலைமை சற்று மோச­மா­கி­யது. இத­னை­ய­டுத்து அர­சியல் கட்­சி­களும் குழப்­ப­ம­டைந்­த­துடன் இன­வாத கடும்­போக்­கு­வாத சக்­திகள் உற்­சா­க­ம­டைந்­தன. அதா­வது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுக்கும் அது உள்­ள­டக்­கப்­பட்ட ஒரு புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கும் தொடர்ந்து எதிர்ப்பை வெளிக்­காட்­டி­வரும் தரப்­புக்கள் மகா­நா­யக்கத் தேரர்­களின் அறி­விப்­புடன் உற்­சா­க­ம­டைந்­த­துடன் தமது இன­வாத செயற்­பாட்­டிற்கு அதனை ஒரு சிறந்த ஆயு­த­மாக பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.

இதனால் அர­சாங்­கமே கூட புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் சற்று குழப்­ப­ம­டைந்­து­விட்­டது என்று கூறலாம். அந்­த­ள­விற்கு பௌத்த பீடங்­களின் மகா­நா­யக்கத் தேரர்­களின் அறி­விப்பு சர்ச்­சையை தோற்­று­விப்­ப­தாக அமைந்­தது.

எவ்­வா­றெ­னினும் அதன் பின்னர் மகா­நா­யக்கத் தேரர்­களை சந்­தித்து உரை­யா­டிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள் தொடர்பில் மகா­நா­யக்க தேரர்களுக்கு தெளி­வு­ப­டுத்­தப்­படும் வகையில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும் அவ்­வாறு இல்­லாமல் எதுவும் செய்­யப்­ப­ட­மாட்­டாது என்றும் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

அதே­போன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் நாடு பிள­வு­ப­டுத்­தப்­ப­டாத, பௌத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் ஒரு அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­ப­டு­மென கூறி­யி­ருந்தார். இவ்­வாறு இந்த நிலைமை தற்­கா­லி­க­மாக சீர்படுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் திடீரென ஏற்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இந்த சர்ச்சை இன்னும் தீர்ந்­த­பா­டில்லை.

இந்­நி­லையில் மகா­நா­யக்கத் தேரர்­களின் அறி­விப்பின் பின்னர் பிர­தான அர­சியல் கட்­சிகள் அர­சி­ய­ல­மைப்பு குறித்த தமது நிலைப்­பா­டு­களை தற்­போது அறி­வித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யான து புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் மிகவும் தெளி­வாக இருக்­கின்­றது. அதா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட்ட மற்றும் தேர்தல் முறைமை மாற்­றப்­பட்ட இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ள­டக்­கப்­பட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­படும் என்றும் அது சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்­பிற்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­மென்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி கூறி­வ­ரு­கின்­றது.

ஒற்­றை­யாட்சி மாறாத பௌத்­தத்­திற்­கான முன்­னு­ரி­மையை ஒழிக்­காத புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­ப­டு­மென ஐக்­கிய தேசி­யக்­கட்சி கூறு­கி­றது. அதே­வேளை ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது இவ்­வாறு தமது நிலைப்­பாட்டை திட­மாக கூறி­யுள்­ள­போ­திலும் அக்­கட்சி இது­வரை பிர­தான வழி­ந­டத்தல் குழு­விற்கு தமது கட்சி சார்­பான யோச­னையை முன்­வைக்­க­வில்­லை­யென குற்­றச்­சாட்­டொன்றும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இவ்­வாறு புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த கட்­சியின் யோச­னை­களை முன்­வைக்­காமல் இந்த விட­யங்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி இழுத்­த­டித்து வரு­வ­தாக ஒரு குற்­றச்­சாட்டும் உள்­ளது. எவ்­வா­றெ­னினும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது புதிய அர­சி­­ய­லமைப்பு விட­யத்தில் உறு­தி­யாக இருக்­கின்­றது. அது­மட்­டு­மன்றி புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான எதிர்ப்பை மகா­நா­யக்க தேரர்கள் வெளி­யிட்ட பின்­னரும் கூட ஐக்­கிய தேசி­யக்­கட்சி புதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற நிலைப்­பாட்டில் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்­றது.

மறு­புறம் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிதான் இங்கு குழப்­பத்தின் மத்­தி­யாக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது என்று கூறலாம். அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யில்லை என்றும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமே போது­மா­னது என்றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கின்­றது. மேலும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­த­மாக தேர்தல் முறை மாற்­றத்­தையும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் கொண்­டு­வர வேண்­டு­மென்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மிகவும் தெளி­வான முறையில் கூறி­வ­ரு­கின்­றது.

ஆனால் அதிலும் சில குழப்ப நிலை­மைகள் நீடித்­துக்­கொண்டே இருக்­கின்­றன. அதா­வது சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யில்லை என்ற விட­யத்தை இது­வரை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மா­கவும் பகி­ரங்­க­மா­கவும் அறி­விக்­க­வில்லை. சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய அர­சி­ய­ல­மைப்­பு­தே­வை­யில்லை என்றும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமே போது­மா­னது என்றும் இது­வரை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை. ஆனால் சுதந்­தி­ரக்­கட்சி தொடர்ச்­சி­யாக அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்பில் கருத்­துக்­களை வெளி­யிட்டே வரு­கி­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யில்லை என்றும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்­லக்­கூ­டாது என்றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மிகவும் தெளி­வாக கூறி­வ­ரு­கின்­றது.

இதே­வேளை பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பா­னது கிட்­டத்­தட்ட ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் நிலைப்­பாட்டில் இருக்­கின்­றது என்று கூறலாம். அதா­வது இனப்­பி­ரச்­சி­னைக்­கான முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட தீர்­வுடன் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்ல வேண்­டு­மென தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு கூறி­வ­ரு­கின்­றது. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் ஒற்­றை­யாட்சி விவ­கா­ரங்­களில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கும் பாரிய வித்­தி­யாசம் உள்­ளது. எனினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு வர­வேண்டும் என்­ப­திலும் அது சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்­பிற்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­திலும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் உறு­தி­யாக இருக்­கின்­றன.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு இவ்­வாறு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை கோரு­கின்­றமை தொடர்பில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தி­நி­திகள் விமர்­சித்து வரு­கின்­றனர். அதா­வது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை கோரு­வதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற்­றுக்­கொள்ள முடி­யு­மான தீர்­வுத்­திட்­டத்­தையும் இழந்து விடு­வ­தற்கு தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு முயற்­சிப்­ப­தாக சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சாளர் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்றார்.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது தற்­போது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புடன் கூடிய புதிய அர­சி­ய­ல­மைப்பை கோரு­வ­தை­வி­டுத்து தேர்தல் முறை மாற்­றத்­தையும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு தம்மை அர்ப்­ப­ணித்­துக்­கொள்­ள­வேண்­டு­மென சுதந்­தி­ரக்­கட்சி கூறு­கின்­றது. ஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது இந்­த­வி­ட­யத்தில் மிகவும் தெளி­வாக உள்­ளது. அதா­வது தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்கும் தீர்­வா­னது நாட்டின் அனைத்து மக்­க­ளி­னாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்­பதில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உறு­தி­யாக இருக்­கின்­றது.

இந்த விட­யத்தில் சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் முட்­டி­மோதும் நிலைப்­பாட்டைக் கொண்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அதா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டு­வதை கூட்­ட­மைப்பு ஆத­ரிக்கக் கூடாது என சுதந்­தி­ரக்­கட்சி கூறி­வ­ரு­கின்­றது. இந்த சர்ச்சை நிலைமை தொடர்ந்தும் இவ்­வாறே நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

 இது இவ்­வா­றி­ருக்க மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­பட்டு சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதில் மிகவும் தெளி­வாக உள்­ளது. இவ்­வாறு பிர­தான அர­சியல் கட்­சிகள் தமது நிலைப்­பா­டு­களை இவ்­வாறு அறி­வித்­துள்­ள­போ­திலும் புதிய அர­சி­ய­ல­மைப்பா, அல்­லது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமா வரப்­போ­கின்­றது என்­பதில் தொடர்ந்தும் குழப்ப நிலை­மையே நீடிக்­கின்­றது. ஆனால் அர­சாங்கம் ஒரு விட­யத்தை மனதில் வைத்­துக்­கொள்­ள­வேண்டும். கடந்த காலத்தில் பத­வி­யி­லி­ருந்த அர­சாங்­கத்­திற்கு தமிழ் மக்கள் ஆத­ர­வ­ளிக்­க­வில்லை. அதனால் அந்த அர­சாங்­கமும் தீர்வு விட­யத்தில் அக்­க­றை­காட்­டாமல் இருந்­தது. எனினும் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி ஏற்­பட்ட மாற்­றத்­திற்கு இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் பாரிய ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தனர். தமது நீண்­ட­கால பிரச்­சினை தீர்க்­கப்­படும் என்ற நம்­பிக்­கை­யி­னாலும் எதிர்­பார்ப்பின் கார­ண­மா­க­வுமே தமிழ் பேசும் மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஆட்­சிக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தனர்.

அப்­ப­டி­யான நிலை­மையில் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தீர்­வுத்­திட்­டத்தை வழங்­க­வேண்­டி­ய­தொரு தார்­மீகக் கடமை காணப்­ப­டு­கின்­றது. அதனை யாரும் மறுத்­து­வி­ட­மு­டி­யாது. குறிப்­பாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இந்த நிலை­மையை உணர்ந்து கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். கடந்த காலம் முழு­வதும் இரண்டு பிர­தான கட்­சி­களும் பிரிந்து செயற்­பட்­டதன் கார­ண­மாக இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் ஒரு இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யாத நிலைமை காணப்­பட்­டது.

ஆனால் வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு இன்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் இணைந்து செயற்­ப­டு­கின்­றன. இரண்டு கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்­ளன. எனவே ஒரு நியா­ய­மான தீர்­வுத்­திட்­டத்தை காண­மு­டி­யு­மான சூழல் ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதைப் போன்று முட்டுக்கட்டைகளும் தடைகளும் முற்றுகையிட ஆரம்பித்துள்ளன. அவை பல்வேறு வடிவங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

எவ்வாறெனினும் இவற்றைக் கலைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்துடன் புதிய அரசியலமைப்பை கொண்டுவரவேண்டிய பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் காணப்படுகின்றது. அதுவும் இந்த முயற்சிக்காக சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் அதனைப் பயன்படுத்தி தீர்வைக் காணவேண்டியது அவசியமாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போன்று தீர்வுத்திட்டமானது நாட்டின் அனைத்து மக்களினதும் அங்கீகாரத்துடன் பெறப்பட்டால் மட்டுமே அது நீண்டகாலம் நிலைத்திருப்பதாக இருக்கும். எனவே இதனை சிறிலங்கா சுதந்திரக்கட்சி உணர்ந்து கொள்ளவேண்டும். சர்வஜனவாக்கெடுப்பு என்று வருகின்றபோது ஒருசில புறக்காரணிகள் அதன் நோக்கத்தை சிதறடித்துவிடக்கூடும்.

ஆனால் மக்கள் மத்தியில் தெளிவான விளக்கத்தை அளித்து இதனை நிறைவேற்றிக்கொள்ளவேண்டியது அனைத்து மிதவாத தலைவர்களினதும் பொறுப்பாகும். இதற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருக்கின்ற மிதவாதத் தலைவர்களும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருக்கின்ற மிதவாத தலைவர்களும் வெளியே வந்து அரசியல் நோக்கங்களை ஒருபக்கம் வைத்துவிட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு தெளிவுபடுத்தலை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக புதிய அரசியலமைப்பா, அல்லது அரசியலமைப்பு திருத்தமா கொண்டுவரப்போகின்றது என்பது குறித்து முதலில் மக்களை தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் இருக்கின்றது.

ரொபட் அன்­டனி

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.