Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்கும் ரணிலுக்கும் இடையில் டீல் இல்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

Featured Replies

எமக்கும் ரணிலுக்கும் இடையில் டீல் இல்லை

Mah-905092d90f750211ec8d81904550d99933ef2e26.jpg

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
(ஆர்.யசி)

அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி களை மறந்து வெறும் ஊழல் மோசடிகளை மாத்திரமே மேற்கொண்டு வருகின்றது. எம்மை பழிவாங்குவதென்ற ஒரே நோக்கம் மாத்திரமே அரசாங்கத்திடம் உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.  

எமக்கும் ரணிலுக்கும் இடையில் எந்தவொரு டீலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஆட்சியை கைப்பற்றும் வரையில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஆட்சியை கைப்பற்றியவுடன் வாக்குறுதிகளை மறந்துவிட்டனர்.

தாம் எவ்வாறு ஆட்சி செய்கின்றனர் என்பது தெரியாது ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். நாடு பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டு உற்பத்திகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது. நோய்களும் பிரச்சினைகளும் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதேபோல் தேசிய பாதுகாப்பு அச்சுறுதலாக மாறி வருகின்றது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் எந்தவித அக்கறையும் இன்றி செயற்பட்டு வருகின்றது. நாம் ஊழல் வாதிகள் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று மிகப்பெரிய ஊழல் மோடிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் மடியில் அமர்ந்துகொண்டு கொஞ்சி விளையாடிய நபர்கள் இன்று எம்மை குற்றம் சுமத்தி வருகின்றனர். நாம் ரணிலுடன் டீல் செய்துள்ளதாக குற்றம் சுமத்தி வருகின்றனர். நாம் யாருடனும் டீல் போடவில்லை. எமது டீல் முழுமையாக மக்களுடன் மட்டுமே உள்ளது. அதற்கான விளைவு விரைவில் வெளிப்படும். மக்கள் இன்று யார் பக்கம் உள்ளனர் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். எனினும் நாம் புரட்சிகள் மூலமோ அராஜகமாகவோ ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஜனநாயகம் எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறும். நாம் ரணிலுடன் டீல் போட்டிருந்தால் என்னுடைய பிள்ளைகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

இன்று மக்கள் தீர்வு ஒன்றை எதிர்பார்த்து வருகின்றனர். அந்த தீர்வு எம்மிடம் தான் உள்ளது.ஆகவே மக்களின் நோக்கைத்தை நிறைவு செய்யும் எமது பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மீண்டும் பலமான ஒரு ஆட்சியை உருவாக்கும் நடவடிக்கைகள் அவசியம். எம்முடன் இணைந்து செயற்படும் நபர்கள் மக்களுடன் இணைந்து அதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.