Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுவிக்கும் காணிகளில் எமது காணிகள் எதுவும் இல்லை : அமைச்சரை வழி மறித்து போராட்டம்

Featured Replies

விடுவிக்கும் காணிகளில் எமது காணிகள் எதுவும் இல்லை : அமைச்சரை வழி மறித்து போராட்டம்

 

 

கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி இன்றுடன் 141 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Watermark_logo.jpg

 

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களின் 180 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதனால் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இன்றையதினம் காணிகள் பகுதியளவிலாவது விடுவிக்கப்படுமென்ற ஆவலுடன் காத்திருந்த மக்கள் இன்று விடுவிக்கப்படவிருக்கும் காணிகளில் தமது எந்த விதமான காணிகளும் அடங்கவில்லை மாறாக வேறு இடங்களை சேர்ந்த  6 பேருக்கு சொந்தமான மத்தியவகுப்பு காணிகள்  மட்டுமே விடுவிக்கப்படவுள்ளது என்பதனை அறிந்த மக்கள் ஆத்திரமடைந்த நிலையில் காணி விடுவிப்புக்காக கேப்பாபுலவுக்கு வருகைதந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதன் மற்றும் முல்லைத்தீவு அரச அதிபர் ஆகியோரை காணிவிடுவிப்புக்காக கேப்பாபுலவு இராணுவத்தலைமையகத்துக்குள் செல்லவிடாது வீதியில் மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

kapapilavu.jpg

வீதியை மறித்து அமைச்சருடன் வாக்குவாதப்பட்ட மக்கள் தொடர்ந்து தம்மை ஏமாற்றலாம் என்று நினைக்கவேண்டாம் எனவும் இம்முறையும் அரசு கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படுமென கூறி தம்மை ஏமாற்றும் விதமாக நடந்துகொள்வதாகவும் இன்று விடுவிக்கப்படும் காணிகளில்  ஒரு அங்குலமேனும் தற்போது 141 நாட்களாக வீதியில் போராடும் மக்களின் காணிகள் அடங்கவில்லை எனவும் இவ்வாறு பல தடவைகள் வேறு காணிகளை விடுவித்துவிட்டு கேப்பாபுலவு காணிகள் விடுவிக்கப்பட்டது. என அனைவரையும் ஏமாற்றிவருவதாகவும் இனியும் தம்மால் இந்த வீதியில் இருந்து அல்லல் பட முடியாது எனவும் ஆவேசத்துடன் அமைச்சருடன் கலந்துரையாடினர்.

 

இந்த நிலையில் மக்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சுவாமிநாதன் உங்களின் வலி வேதனைகள் எனக்கு புரிகின்றது நீங்கள் 141 நாட்களாக வீதியில் இருந்து அல்லல் படுவதை கருத்தில் கொண்டே நான் எனது அமைச்சிலிருந்து 5மில்லியன் பணத்தை இராணுவத்துக்கு கொடுத்து காணிவிடுவிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன் . இதனடிப்படையிலேயே பகுதியளவில் இன்று காணிகளை விடுவிக்க வருகைதந்தேன் .உங்களது மிகுதி காணிகளும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதனிடம் போராடிவரும் மக்கள் இன்று இந்த 180 ஏக்கர் காடுகளை விடுவித்து விட்டு கேப்பாபுலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்ட்தாக ஊடகங்கள் வாயிலாக மீண்டும் செய்திகளை வெளியிட்டு எம்மை ஏமாற்ற வேண்டாம் எனவும் இந்த காணி விடுவிப்பு எமக்கு அவசியமில்லை எனவும் உறுதிபட தெரிவித்தனர். இதனால் போராட்டம் இடம்பெறும் பகுதி சிறிது நேரம்  பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்பட்ட்து . இதன் காரணமாக மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு பொலிஸாரின் துணையுடன் அமைச்சர் டி எம் சுவாமிநாதன் இராணுவத்தலைமையகத்துக்கு சென்று இராணுவ உயர் அதிகாரிகளுடன் காணிவிடுவிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

இதனையடுத்து இன்றையதினம் காணிவிடுவிப்புக்காக இராணுவத்தலைமையகத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெறவிருந்த காணிவிடுவிப்பு நிகழ்வு நடைபெறவில்லை .அதனை தொடர்ந்தும் மீண்டும் மக்களை சந்தித்த மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதன் உங்களின் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை நான் தொடர்ந்து மேற்கொள்வேன் . மேலும் காணிவிடுவிப்புக்காக நான் பணம் இராணுவத்துக்கு வழங்கவுள்ளேன் .நீங்கள் இந்த போராட்டத்தை  கைவிட்டு உங்களின் வீடுகளுக்கு செல்லுங்கள் என கேட்டுக்கொண்டார் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் நாம் எமது வீடுகளுக்கு எவ்வாறு செல்வது நாம் வீதியில் கிடக்கின்றோம் வீதிதான் எமது வீடு என தெரிவித்தனர் .சொந்த நிலங்கள் என்று விடுவிக்கப்படுகின்றதோ அன்றுதான் நாம் இந்த போராட்டத்தை கை விடுவோம் எனவும் உறுதிபட தெரிவித்தனர்.

இத்தனை தொடர்ந்து மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களில் 5பேர் அடங்கிய குழுவினரை எதிர்வரும் 26 ம்  திகதி சந்திப்புக்காக கொழும்புக்கு வருகைதருமாறும் இந்த காணிவிடுவிப்பு தொடர்பில்  அன்று உரிய வகையில் கலந்துரையாடுவோம் எனவும் தெரிவித்து சென்றார்.

20205868_1428870427150859_931175220_o.jp

இன்றையதினம் கேப்பாபுலவு மக்களை  சந்திப்பதற்காக பாராளுமன்ற  உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா  வடக்கு மாகாண சபையின்  பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன்,மற்றும் புவனேஸ்வரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.  

http://www.virakesari.lk/article/22088

  • தொடங்கியவர்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு நடவடிக்கை ஏமாற்று வித்தை – நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி கண்டனம்

20170719_134723.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்;

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட கேப்பாபிலவு காணியில் 180 ஏக்கர் மக்களுக்கு கையளிக்கப்படும் என விளம்பரப்படுத்தி கௌரவ சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு  மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்    இன்று புதன் கிழமை வருகை தந்தார்

ஆனால்  அவர்களால் விடுவிக்கப்பட என அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் 141 நாட்களாக போராடிவரும் மக்களுக்கு சொந்தமானது அல்ல எனவும் மத்தியதர வர்க்கத்தினர் ஆறு பேருக்கு வழங்கப்பட்ட காணியையும் அரசுக்கு சொந்தமான காணியை விடுவிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் இக்காணி தற்போது வன இலாகாவிற்கு சொந்தமானது என எல்லையிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய தர வர்க்கத்தில் உள்ள காணி உரிமையாளர்கள் ஆறு பேரும் இந்த நாட்டில் இல்லை ஆகவே இந்த காணியை கௌரவ அமைச்சர் யாருக்கு விடுவிக்கின்றார் அரசுக்கா ? என அவர்  கேள்வி எழுப்பினாhர்.

141 நாட்களாக போராடிவரும் மக்களின் ஒரு துண்டு காணியைக்கூட விடுவிக்க முடியாத அமைச்சர் மக்களின் எதிர்ப்பலைகளை தாக்கு பிடிக்க முடியாது ஆடம்பர நிகழ்வாக செய்ய நினைத்த நிகழ்வு கைவிடப்பட்டு திரும்பியுள்ளார். மக்களின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளித்து காணியை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று அமைச்சரை கேட்டுக்கொள்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி தெரிவித்துள்ளார்.

20170719_134732.jpg

 

http://globaltamilnews.net/archives/33436

  • தொடங்கியவர்

தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படாமைக்கு கேப்பாப்புலவு மக்கள் கடும் எதிர்ப்பு

 

 

தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படாமைக்கு கேப்பாப்புலவு மக்கள் கடும் எதிர்ப்பு
 

முல்லைத்தீவு – கேப்பாப்புலவிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்காது, நடுத்தர தொழில் முயற்சிக்காக வழங்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்து மக்கள் இன்று கடும் எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.

காணி விடுவிப்பிற்காக சென்றிருந்த மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கும், மக்கள் தமது ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.

கேப்பாப்புலவில் படையினர் வசமிருந்த 189 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்படுவதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும், இந்த காணி வௌிமாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கு நடுத்தர தொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகள் அதில் உள்வாங்கப்படவில்லை எனவும் மக்கள் குறிப்பிட்டனர்.

காணி விடுவிப்பு பணிகளுக்காக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன், முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தலைமையகத்திற்குள் செல்ல முயன்றபோது மக்கள் வழிமறித்து எதிர்ப்பை வௌியிட்டனர்.

141 நாட்களாகப் போராடிவரும் தாம் ஏமாற்றப்படுவதாகக் கூறி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விமானப் படைத்தளத்திற்குள் செல்வதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் மக்கள் இடையூறு செய்தனர்.

எவ்வாறாயினும், பொலிஸ் பாதுகாப்புடன் அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகள் இராணுவத் தலைமையகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இராணுவத்தினருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சரும் அதிகாரிகளும் வௌியேறினர்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, இந்த வருடத்தின் மே மாதம் வரை, வட கிழக்கில் 37, 427.21 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

முப்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் அரச மற்றும் தனியார் காணிகள் அடங்குவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, இந்த வருடத்தின் மே மாதம் வரை யாழ்ப்பாணத்தில் 3,660.70 ஏக்கர் காணியும், கிளிநொச்சி மாவட்டத்தில் 24,174.62 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், முல்லைத்தீவில் 4, 507.07 ஏக்கரும் மன்னாரில் 1709.26 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவில் 1496.38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதே காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் 549.69 ஏக்கரும், மட்டக்களப்பில் 1005.68 ஏக்கர் காணியும், திருகோணமலையில் 323.81 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

 

http://newsfirst.lk/tamil/2017/07/தமது-பூர்வீகக்-காணிகள்-வ/

முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் இன்று விடுவிக்கப்படவுள்ள 180 ஏக்கர் காணிகளும் காடுகள் நிறைந்த பகுதி என தமக்கு இப்போது தான் தெரியும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள 180 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்த நிலையில் குறித்த பகுதிக்கு தற்போது வருகை தந்துள்ளார்.

எனினும் தாம் வருகை தந்த பிறகே குறித்த பகுதிகள் காடு என்பது தெரிந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் சுவாமிநாதன் தற்போது உயர் இராணுவத்தினரிடம் கலந்துரையாடுவதற்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய தினம் இராணுவம் விடுவிப்பதாக உறுதியளித்துள்ள காணிகள் வெறும் காடுகளே, அவை மக்கள் வாழ்வதற்கு ஏதுவான இடம் அல்ல என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

பேச்சுவார்த்தையின் பின்னர்..

இராணுவத்தினரால் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்ட பகுதிகள் காடுகள் என்பதை நேரில் சென்று அவதானித்த அமைச்சர் சுவாமிநாதன், இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடன் பேர்ச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இராணுவத்தினர் விடுவிப்பதாக தெரிவித்த 180 ஏக்கர் காணிகளும் காடுகள் என எனக்கு இப்போதுதான் தெரியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐவரை இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பிற்கு வருமாறு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

 

 

http://www.tamilwin.com/politics/01/152528?ref=home-feed

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.