Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோர் குறித்த அலுவலகம் நீதியை தருமா?

Featured Replies

காணாமல் போனோர் குறித்த அலுவலகம் நீதியை தருமா?

 

ரொபட் அன்­டனி

சீயாரா­லியோன் என்ற நாட்டில் இவ்­வா­றா­ன­தொரு பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு ஏழு வரு­டங்­க­ளாக விசா­ரணை நடத்­தப்­பட்­டது. 200 மில்­லியன் டொலர் செல­வ­ழிக்­கப்­பட்டு 24 பேரே பொறுப்­புக்­கூ­ற­வேண்­டி­ய­வர்­க­ளாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­டனர். அதே­போன்று கம்­போ­டி­யா­விலும் இது­போன்­ற­தொரு பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு பல வரு­டங்­க­ளாக செயற்­பட்டு 200 மில்­லியன் டொலர் செல­வ­ழித்து ஐந்­து­பேரை மட்­டுமே பொறுப்­புக்­கூ­ற­வேண்­டி­ய­வர்­க­ளாக கண்­டு­பி­டித்­தனர்

- கலா­நிதி ஜெகான் பெரேரா

ஏதா­வது ஒரு பொறி­மு­றையை முன்­னெ­டுத்து இந்த காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் ஆராய்ந்து மக்­க­ளுக்கு பதி­ல­ளிக்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். காணாமல் போயி­ருப்போர் எமது நாட்டின் பிர­ஜைகள். எனவே அந்த விட­யத்தில் அர­சாங்­கத்தின் பொறுப்பை புறக்­க­ணித்து செயற்­ப­ட­மு­டி­யாது.   

 மெக் ஷ்வல் பர­ண­கம

காணா­மல்­போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது? அவர்கள் உயி­ருடன் இருக்­கின்­றார்­களா? இல்­லையா? உயி­ருடன் இல்­லை­யாயின் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது? உயி­ருடன் இருந்தால் எங்கே இருக்­கின்­றார்கள்? போன்ற பல்­வேறு ஆதங்­கங்­க­ளுடன் பாதிக்­கப்­பட்ட மக்கள் ஏங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.    

புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­தது, ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது, ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு என்­னவோ இது­வரை நீதி­மட்டும் கிடைக்­க­வே­யில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் பிர­தான இடத்தை வகிக்­கின்­றனர். காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யாமல் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

பாதிக்­கப்­பட்ட மக்கள் காணா­மல்­போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரிந்­து­கொள்­வ­தற்­கான உரி­மையை முழு­மை­யாக கொண்­டி­ருக்­கின்­றனர். அந்த உரி­மையை எவரும் மறுக்க முடி­யாது. அர­சாங்கம் மக்­களின் அந்த உண்­மையை அறிந்­து­கொள்ளும் உரி­மையை மறுக்க முடி­யாது. காணா­மல்­போ­ன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்மை அந்த மக்­க­ளுக்கு கூறப்­ப­ட­வேண்டும்.

காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களைப் பொறுத்­த­வ­ரையில் பொரு­ளா­தார நெருக்­கடி, சமூ­கப்­பா­து­காப்புப் பிரச்­சினை உள்­ளிட்ட பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கும் சிர­மங்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். காணா­மல்­போன தமது உற­வுகள் உயி­ருடன் இருக்­கின்­ற­னரா? இல்­லையா என்­பது கூட தெரி­யாமல் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது வாழ்க்­கையின் அடுத்த கட்டம் தொடர்­பாக எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும் மேற்­கொள்ள முடி­யாமல் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

பொரு­ளா­தார ரீதியில் பாரிய நெருக்­க­டி­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். உதா­ர­ண­மாக குடும்­ப­மொன்றில் குடும்­பத்­த­லைவன் காணாமல் போயி­ருந்தால் அந்த குடும்­பத்தின் பொரு­ளா­தார, சமூக பாது­காப்பு நெருக்­க­டிகள் சொற்­க­ளினால் வரை­வி­லக்­க­ணக்­கப்­ப­டுத்த முடி­யா­த­வை­யாக உள்­ளன. அந்­த­ள­விற்கு காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் சிக்­கல்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். தமது வாழ்க்­கையில் அடுத்த கட்ட முடி­வொன்றை எடுப்­ப­தற்குக் கூட இந்த பாதிக்­கப்­பட்ட மக்­களால் முடி­ய­வில்லை. காரணம் காணா­மல்­போ­ன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டிக்­காமல் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யா­துள்­ளது.

யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் கடந்து விட்­டன. எனினும் இது­வரை இந்த காணா­மல்­போனோர் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு ஆக்­கப்­பூர்­வ­மான எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. காணா­மல்­போ­ன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்மையை கண்­டு­பி­டிக்கும் வரை அவர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு ஏதா­வது பொரு­ளா­தார அல்­லது சமூக ரீதி­யான உத­வி­களை செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் கூட இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை. மேலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் இந்த காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்வு காணு­மாறு பல்­வேறு அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஐக்­கி­ய­ நா­டுகள் சபையும் காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தை மிக முக்­கிய விட­ய­மாக பார்க்­கி­றது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் சபையின் காணா­மல்­போனோர் குறித்து ஆராயும் செயற்குழுவும் இலங்­கைக்கு விஜயம் செய்து காணா­மல்­போனோர் குறித்து ஆராய்ந்­து­விட்டு பல்­வேறு பரிந்­து­ரை­களை முன்­வைத்­து­சென்­றது. ஆனால் எதுவும் நடக்­க­வில்லை. உள்­நாட்­டிலும் காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­துக்கு தீர்­வு­கா­ணுமாறு பாரிய அழுத்­தங்கள் விடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஏதா­வது ஒரு பொறி­மு­றையை முன்­னெ­டுத்து காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­கி­றது. கடந்த ஆட்­சி­யின்­போது 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதி­பதி மெக் ஷ்வல் பர­ண­கம தலை­மையில் காணா­மல்­போனோர் தொடர்­பாக விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டது.

அந்த ஆணைக்­கு­ழு­விற்கு காணா­மல்­போனோர் தொடர்பில் 19 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட எழுத்­து­மூல முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றன. அந்த ஆணைக்­கு­ழு­வா­னது ஒரு விசா­ர­ணைக்­கு­ழு­வையும் அமைத்து வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வந்த நிலையில் அதன் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­தது. அந்த வகையில் அந்த ஆணைக்­குழு அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தாலும் காணா­மல்­போனோர் தொடர்பில் எந்­த­வொரு பிரச்­சி­னைக்கும் தீர்­வு­காண முடி­ய­வில்லை.

இந்­நி­லை­யி­லேயே 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக ஒரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அமெ­ரிக்கா உள்­ளிட்ட ஐந்­து­நா­டு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்ட இந்தப் பிரே­ர­ணைக்கு இலங்­கையும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. இந்த பிரே­ர­ணையில் 20 பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதில் மிக முக்­கி­ய­மாக காணா­மல்­போனோர் தொடர்­பான பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் என கூறப்­பட்­டி­ருந்­தது.

அதற்­க­மைய காணா­மல்­போனோர் தொடர்­பாக ஆராய்­வ­தற்கு ஒரு அலு­வ­ல­கத்தை நிறுவி காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்ற உண்­மையை கண்டு பிடிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கு உறு­தி­ய­ளித்­தது. அதன் பிர­காரம் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது.

எனினும் அந்த சட்­ட­மூ­லத்­திற்கு பல்­வேறு எதிர்ப்­புக்­களும், விமர்­ச­னங்­களும் எழுந்­தன. அதனால் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் பாரிய சவால்­களை எதிர்­கொண்­டது. அதன் பின்னர் அதில் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. அந்த திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்டு சில வாரங்­க­ளுக்கு முன்னர் காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான திருத்த சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது. அந்த சட்­ட­மூ­லத்தை வர்த்­த­மா­னியில் வெளி­யி­டும்­நோக்கில் அண்­மையில் ஜனா­தி­ப­தியும் அதில் கைச்­சாத்­திட்­டி­ருந்தார்.

இதன்­படி இந்த அலு­வ­ல­கத்­திற்கு ஏழு ஆணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள். அர­சி­ய­ல­மைப்புப் பேரவை ஆணை­யா­ளர்­களை நிய­மிக்கும். அவர்­களில் தலைவர் ஒரு­வரும் நிய­மிக்­கப்­ப­டுவார். இவர்கள் காணா­மல்­போனோர் தொடர்பில் கிடைக்கும் முறைப்­பா­டு­க­ளுக்கு அமைய விசா­ர­ணை­யா­ளர்­களை நிய­மித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்­வார்கள். அவ்­வாறு விசா­ர­ணைகள் மூலம் கிடைக்கப் பெறும் அல்­லது வெளிப்­ப­டுத்­தப்­படும் உண்­மைகள் சம்­பந்­தப்­பட்ட குடும்­பத்­தி­ன­ருக்கு அறி­விக்­கப்­படும். பொது­வாக கூறு­வ­தென்றால் காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்ற உண்மை இதன்­மூலம் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வேண்டும்.

அந்த உண்­மையை கண்­டு­பி­டிப்­ப­துடன் இந்த அலு­வ­ல­கத்தின் பணி முடிந்­து­விடும். அந்த உண்­மை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அடுத்த கட்ட சட்ட நட­வ­டிக்­கை­களை பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரே எடுக்­க­வேண்டும். மாறாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விட­யங்­களைக் கொண்டு காணா­மல்­போனோர் குறித்த அலு­வ­லகம் அடுத்­தக்­கட்ட சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்க முடி­யாது. உண்­மையை கண்­டு­பி­டிப்­பதே இந்த அலு­வ­ல­கத்தின் பணி­யாக இருக்­கப்­போ­கின்­றது.

இந்த சூழலில் இந்த சட்­ட­மூ­லத்­திற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடு­மை­யான எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். இந்த சட்­ட­மூ­லத்தின் ஊடாக இரா­ணு­வத்­தினர் காட்­டிக்­கொ­டுக்­கப்­ப­ட­போ­கின்­றார்கள் என்றும் யுத்­தத்­திற்கு தலை­மை­தாங்­கிய அர­சியல் தலை­வர்­க­ளுக்கு சிக்கல் ஏற்­ப­டப்­போ­கின்­றது என்றும் முன்னாள் ஜனா­தி­பதி குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருக்­கின்றார்.

இங்கு வேடிக்கை என்­ன­வெனில் இந்த காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தின் ஊடாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உரிய முறையில் நீதி கிடைக்­குமா என்ற சந்­தேகம் பாதிக்­கப்­பட்ட மக்கள் தரப்பில் இருக்­கின்­ற­போது , தென்­னி­லங்­கையில் ஒரு­சிலர் இந்த அலு­வ­லகம் அதீத அதி­கா­ரங்­களை கொண்­டது என விமர்­சித்து வரு­கின்­றனர்.

அந்­த­வ­கையில் காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் இரண்டு வரு­டங்­க­ளாக ஈடு­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஓய்வு பெற்ற மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மெக் ஷ்வல் பர­ண­க­ம­விடம் நாம் இது­தொ­டர்பில் வின­வினோம். அவர் இவ்­வாறு குறிப்­பி­டு­கிறார்.

"" காணா­மல்­போனோர் அலு­வ­லகம் ஒன்றை அமைப்­ப­தற்­கான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அதற்கு எதிர்ப்­புக்­களும் எழுந்­துள்­ளன. ஏதா­வது ஒரு பொறி­மு­றையை முன்­னெ­டுத்து இந்த காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் ஆராய்ந்து மக்­க­ளுக்கு பதி­ல­ளிக்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். காணாமல் போயி­ருப்போர் எமது நாட்டின் பிர­ஜைகள். எனவே அந்த விட­யத்தில் அர­சாங்­கத்தின் பொறுப்பை புறக்­க­ணித்து செயற்­ப­ட­மு­டி­யாது. காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது ? அவர்கள் உயி­ருடன் இருக்­கின்­ற­னரா? இல்­லையா என்­பது தொடர்பில் கண்­டு­பி­டித்து அவர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு உண்­மையை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.

இந்த பொறுப்­பி­லி­ருந்து அர­சாங்கம் விலக முடி­யாது. மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும். ஒருவர் இறந்­து­விட்டால் அவர் சம்­பந்­தப்­பட்ட குடும்பம் அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை எடுக்கும். ஆனால் காணா­மல்­போனோர் ஒருவர் தொடர்பில் இவ்­வாறு எதுவும் செய்ய முடி­யாது. உயி­ருடன் இருக்­கின்­றாரா? இல்­லையா? என்­பது கூட தெரி­யாமல் உற­வி­னர்கள் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இது­தொ­டர்பில் அர­சாங்கம் கவ­னத்­தில்­கொள்­ள­வேண்டும். மக்­களின் வேத­னையை உணர்ந்­து­கொள்­ள­வேண்டும். காணாமல் போன தமது உற­வுக்கு என்ன நடந்­தது என்­பதே தெரி­யாமல் இருப்­ப­தா­னது கொடூ­ர­மான நிலை­யாகும். எனவே ஒரு முறை­யான விசா­ரணை பொறி­முறை அவ­சி­ய­மாகும். அத­னூ­டாக இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண முன்­வ­ர­வேண்டும். மாறாக இந்தப் பிரச்­சி­னையை தொடர்ந்து இழுத்­த­டித்துக்­கொண்டு இருப்­பது முறை­யா­ன­தல்ல""

இவ்­வாறு காணாமல் போனோர் குறித்து விசா­ரணை நடத்­திய ஆணைக்­கு­ழுவின் தலைவர் மெக் ஷ்வல் பர­ண­கம குறிப்­பி­டு­கின்றார்.

உண்­மையில் இந்த அலு­வ­லகம் ஊடாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­குமா? காணா­மல்­போனோர் தொடர்பில் உண்­மைகள் வெளிக்­கொண்­டு­வ­ரப்­ப­டுமா? என்­பது ஒரு­புறம் இருக்க ஏதா­வது ஒரு கட்­டத்­தி­லி­ருந்து இதற்­கான செயற்­பாட்டை ஆரம்­பிக்­க­வேண்டும் என்­பதே இங்கு மிக முக்­கி­ய­மான விட­ய­மாக உள்­ளது.

ஒரு­வேளை இந்த அலு­வ­ல­க­மா­னது அதி­கா­ரங்கள் அற்­ற­தாக இருக்­கலாம். ஆனால் இத­னூ­டாக உண்­மையைக் கண்­டு­பி­டிக்க முடி­யு­மாயின் உண்­மை­களை வெளிக்­கொண்­டு­வர முடி­யு­மாயின் அது ஒரு­வ­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஆறு­த­லாக அமையும் என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. எனவே இந்த காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை உட­ன­டி­யாக நிறுவி அதன் செயற்­பா­டு­களை ஆரம்­பிக்­க­வேண்டும். இந்த சிக்­கலை தொடர்ந்தும் நீடித்­துக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டாது.

இது­தொ­டர்பில் தேசிய சமா­தானப் பேர­வையின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா எம்­முடன் கருத்து பகிர்­கையில்;

காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­லகம் அமைக்­கப்­ப­டு­கின்­றமை ஒரு மிக முக்­கிய நட­வ­டிக்­கை­யாக அமையும். இதன் ஊடாக நல்­லி­ணக்­கத்தில் முன்­செல்ல முடியும். அது­மட்­டு­மின்றி நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­லகம் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு என்­ப­வற்­றுக்கு இது முன்­னோ­டி­யாக அமையும். இதன் ஊடாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­குமா என்­பதை உறு­தி­யாக கூற முடி­யாது. ஆனால் இது ஒரு ஆரம்­ப­மாக அமையும். வர­லாற்றை திரும்­பிப்­பார்த்து என்ன நடந்­தது என்­பதை ஆரா­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இவ்­வா­றா­ன­தொரு அலு­வ­லகம் ஊடாக சாட்­சி­யங்­களை பெற­மு­டியும். உண்­மைகள் வெளி­வரும். ஆனால் கிடைக்­கப்­பெற்ற உண்­மை­களைக் கொண்டு இந்த அலு­வ­ல­கத்­தினால் எத­னையும் செய்ய முடி­யாது. மாறாக கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களைக் கொண்டு பாதிக்­கப்­பட்­ட­வர்­களே நீதி­மன்றம் செல்ல வேண்டும். பின்னர் நீதி­மன்­றத்தில் இந்த செயற்­பா­டா­னது பூச்­சி­யத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்கும். எனவே இதன் ஊடாக விரை­வா­கவும், முழு­மை­யா­கவும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­குமா என்­பதை உறு­தி­பட கூற­மு­டி­யாது. ஆனால் ஏதோ ஒரு இடத்தில் மக்களுக்கான நீதிவழங்கும் செயற்பாடு ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும்.

இதற்கு முன்னர் சீயாராலியோன் என்ற நாட்டில் இவ்வாறானதொரு பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு ஏழு வருடங்களாக விசாரணை நடத்தப்பட்டது. 200 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டு 24 பேரே பொறுப்புக்கூறவேண்டியவர்களாக கண்டுபிடிக்கப்பட்டனர். அதேபோன்று கம்போடியாவிலும் இதுபோன்றதொரு பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு பல வருடங்களாக செயற்பட்டு 200 மில்லியன் டொலர் செலவழித்து ஐந்துபேரை மட்டுமே பொறுப்புக்கூறவேண்டியவர்களாக கண்டுபிடித்தனர். இவ்வாறான பொறிமுறைகள் ஊடாக முழுமையாகவும் விரைவாகவும் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் இவ்வாறானதொரு பொறிமுறை ஆரம்பிக்கப்படவேண்டியது அவசியமாகும்"" என்று குறிப்பிட்டார்.

கலாநிதி ஜெகான் பெரேரா கூறுவதைப் போன்று அமைக்கப்படவுள்ள இந்த காணாமல்போனோர் அலுவலகத்தின் ஊடாக முழுமையாகவும் விரைவாகவும் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமேயாகும். ஆனால் அதற்காக இந்த செயற்பாட்டை வெறுமனே விடமுடியாது. குறைந்தபட்சம் தண்டனை பெற்றுக்கொடுப்பதை ஒரு பக்கம் வைத்துவிட்டு உண்மையை கண்டுபிடிக்கவேண்டியது அவசியமாகும். காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்கவேண்டியது அவசியமாகும். இதன் தாற்பரியத்தை இந்த சட்டமூலத்தை பாதகமானது எனக்கூறி எதிர்க்கின்றவர்களும் உணர்ந்துகொள்ளவேண்டும். அதேபோன்று அதிகாரம் போதாது எனக்கூறி எதிர்க்கின்றவர்களும் உணர்ந்துகொள்ளவேண்டும். எவ்வாறெனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்கவேண்டும் என்பதே அனைவரதும் தேவையாக இருக்கின்றது. அதனால் உடனடியாக இந்த அலுவலகத்தை நிறுவுங்கள்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-29#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.