Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முப்படைகளைக் களமிறக்குவதை ஏற்க முடியாது – மாவை. சேனாதிராசா

Featured Replies

முப்படைகளைக் களமிறக்குவதை ஏற்க முடியாது – மாவை. சேனாதிராசா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடத்த வாள்வெட்டுச் சம்பவங்களைக் காரணம் காட்டி முப்படைகளை பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

அரச தலைவரும், தலைமை அமைச்சரும் சிறந்த நிர்வாகத் திறமையும், நேர்மைப் பண்புகளையும் கொண்ட பொலிஸாரை வடக்கு, கிழக்கில் கடமைகளில் ஈடுபடுத்துவதன் ஊடாக போதைப் பொருள் கடத்தல்களையும், வாள்வெட்டுச் சம்பவங்களையும் கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.

பொலிஸார் நேர்மையாகச் செயற்படும்போது பொதுமக்கள் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் வந்திருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பவர் என்று கூறியிருந்தார். அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

http://uthayandaily.com/story/15575.html

  • தொடங்கியவர்

'வடக்கில் சிறந்த பொலிஸாரை கடமையிலீடுபடுத்த ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும்'

 

 

ஜனாதிபதியும் பிரதமரும் சிறந்த நிர்வாகத்தையும்,நேர்மை பண்புகளையும் கொண்ட பொலிசாரை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிறுத்தி போதைவஸ்து கடத்தல், வாள்வெட்டு சம்பவங்களை நிறுத்துவதற்கு முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

mavai-senathirajah.jpg

யாழ்.மாவட்டத்திற்கு இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தப்படுவார்கள் என கூறியிருக்கும் கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்களை காரணம் காட்டி முப்படைகளை பயன்படுத்துகின்ற நடவடிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்கமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.  

பொலிஸார் நேர்மையாகசெயற்பட்டால் வாள்வெட்டு குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலாம். பொலிஸார் நேர்மையாக செயற்பட்டால் பொதுமக்களும் தங்கள் பூரணமான ஒத்துழைப்பை வழங்குவார்கள். இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/22610

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.