இனவாதம் பேசி இனி பிரபலமாக வரலாம் ...
அரசு கைது செய்து பிரபலம் அடையும்,பேசியவர்கள் சிறை சென்று பிரபலம் அடைவார்கள் ....
மொத்தத்தில் தமிழனுக்கு ஆப்பு நாலா பக்கமும் இருக்கு
இது என்ன சின்னதனமான கேள்வி...
பிரிவினைக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு தான் தண்டனை ...பிரிவினையை தூண்ட இனவாதம் பேசுபவர்களுக்கு பிணை 😅
வெளிநாடுகளில் இனத்துவசத்திற்கு சில சட்டங்கள் உண்டு ...இதை சாதாரண பொதுமக்கள் கணக்கில் எடுக்கின்றனர் ...சிலசமயம் சில அதிகாரிகள் திட்டினால் திட்டுவாங்கினவர் .."டொன்ட் பி எ ரெசிட்"என சொன்னால்
உடனே அந்த அதிகாரி பயந்து போய்விடுவார் கண் எல்லாம் சிவந்து போகும்...அவனுக்கு தெரியும் தனது வேலைக்கு ஆபத்து ,பதவி உயர்வுக்கு ஆபத்து என பல விடயங்களில் பாதிப்பு ஏற்படும் எண்டு...
🤣 இதுவாவது பரவாயில்லை.
அங்கால அண்ணன் சீமானை, துரைமுருகனை எல்லாம் தம்பிகளே விமர்சிக்க வெளிக்கிட்டார்கள்.
இனி யாழில் வந்து “காசி யாத்திரை போகும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்” என்ற வகையில் எழுதினால்தான் பொழைக்க முடியும் போல இருக்கு🤣.
🤣 எல்லாரும் நாட்டாமை எல்லோ…அப்படித்தான் இருக்கும்🤣
ஓம் அண்ணை.
இதில் ரணில் போன்ற இனவாதிகளுக்கு இரெட்டை இலாபம்.
1. இலஞ்சம் கொடுத்து ஆதரவையும் பெற்றாயிற்று.
2. இனி நாம் பையில் போட்ட எலிகள் போல இதைவைத்தே அடிபடுவோம்.
கவனித்தேன்.
———
நன்றி
உண்மை அதுதான் நடை பெறும் ...இனவாதம் வேண்டாம் வேண்டாம் என சொல்லுவதும் சிங்கள நலன் கருதி என்பது எனது பார்வை...இவ்வளவு காலமும்(சுதந்திரம் கிடைத்த காலம் முதல்) சிங்கள இனவாதம் /இனக்கலவரங்கள் போன்ற வற்றை உருவாக்கி தங்களது இலக்கில் 90% அடைந்து விட்டனர் சிங்கள அரசியல்வாதிகள்..முக்கியமாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் நில தொடர்பை துண்டித்து விட்டார்கள் ..
அமைச்சர் சந்திரசேகரத்தின் பாராளுமன்ற உரையை கவனித்தீர்களா?...மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தல் நடை பெறும் பொழுது புலிகள் வெட்டு வைத்தார்கள் அதை தொடர்ந்து நூலகம் எரிக்கப்பட்டது என கூறுகிறார் ...மாவட்டங்களுக்கு சில சமயம் அதிக அதிகாரங்களை கொடுக்க முன்வரலாம் இதனால் ...தமிழர் நிலப்பரப்பு தனது அடையாளத்தை இழக்கும்...இலங்கையர் என சொல்வது வெளிநாட்டு உதவிகள் பெறுவதர்கு மட்டுமே....
அருண் ஹெமசந்திரா பிரதி வெளிநாட்டு அமைச்சராக் நியமித்துள்ளனர்...வெகு விரைவில் டயஸ்போராக்களை சந்திக்க முன்வரலாம் ...
டில்வின் சில்வா ஊடாக மாகாணசபை கலைப்புக்கு ஆதரவாக போராட்டங்களை நடதுவார்கள்..அரசுக்கு தேவையான பொழுது இனவாத கருத்துக்களை பரப்ப/போராட்டங்களை நடத்த தான் அவருக்கு அரசாங்கத்தில் பதவிகள் வழங்கவில்லை போலும் மேல் மட்ட உறவில் இருப்பார்கள்..
மகிந்தா ..ரணில் உறவு போன்றது(வலதுசாரி)
ரில்வின் ..அனுரா உறவு(இடது சாரி உறவு)
..புதிய அரசியல் யாப்பில் அதிகார பகிர்வு மாவட்ட ரீதியில் இருக்கும் இதை சிங்கள மக்கள் சில சமயம் எதிர்க்க கூடும் ...
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
Recommended Posts