Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க அணிகள் இணைப்பு: அதிமுக-வின் மூன்று அணிகளும் தனித்தனியே ஆலோசனை #LiveUpdate

Featured Replies

அ.தி.மு.க அணிகள் இணைப்பு: அதிமுக-வின் மூன்று அணிகளும் தனித்தனியே ஆலோசனை #LiveUpdate

 

 *ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தங்கள் அணியினருடன்  தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

*முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

police
 
 

*இதனிடையே டிடிவி தினகரன் சென்னை அடையாறு இல்லத்தில், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அமைச்சர்கள் சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடம் சென்று விட்டு, பின்னர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

* புதிய அமைச்சரவை இன்று மாலை 3 மணிக்கு பதவியேற்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

அமைச்சரவையில் மாற்றம்..? அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர் #

அ.தி.மு.க. அணிகள் இணைப்புகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். 

ஆளுநர் வித்யாசாகர் ராவ்

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பின்னர், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்படலாம் என்றும், அவரது அணியைச் சேர்ந்த  இரண்டு பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டால், புதிய அமைச்சரவை இன்றைய தினமே பதவியேற்கும் என்றும் தெரிகிறது. அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைக்கும் விதமாக, மும்பையிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை திரும்புகிறார். தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் மகாராஷ்ட்ரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தற்போது மும்பையில் இருக்கிறார். மும்பை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு... இன்று நண்பகலில் அறிவிப்பு?

அ.தி.மு.க. அணிகள் இணைப்புகுறித்த அறிவிப்பு, இன்று நண்பகல் 12 மணிக்கு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர், இரு அணிகள் இணைப்புகுறித்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. அ.தி.மு.க. சட்டவிதிகள் மாற்றம் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் கூடி ஆலோசிக்க உள்ளனர். கட்சியில், தினகரன் நியமித்த நிர்வாகிகளின் நியமனங்கள் செல்லாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பின்னர், நிர்வாகிகள் ஒன்றுகூடி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அணிகள் இணைப்புகுறித்து, கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால், அணிகள் இணைப்பில் இழுபறி நீடித்துவந்தது. இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அணிகள் இணைப்புகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

http://www.vikatan.com/news/tamilnadu/99747-admk-merger-announcement-may-be-out-today-sources-liveupdate.html

  • தொடங்கியவர்

ஆட்சிக்கு பழனிசாமி - கட்சிக்கு ஓபிஎஸ்: அதிமுக அணிகள் இன்று இணைப்பு- பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கவும் திட்டம்

 

அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைகின்றன. கட்சியை ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியை முதல்வர் பழனிசாமியும் வழி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் பொதுக்குழுவைக் கூட்டிக் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அதிமுகவில் இரு அணிகள் இணைப்புக்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. அணிகள் இணைந்தால் கட்சியிலும், ஆட்சியிலும் ஓபிஎஸ் அணிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வெள்ளிக்கிழமை போரூரில் ஓ. பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் பி.தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து நிபந்தனைகளை ஏற்று கொண்டதாகத் தெரிவித்தனர். அதன்பின் அன்று மாலையே, ஓபிஎஸ் இல்லத்தில் ஆதரவு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதேபோல், முதல்வர் பழனிசாமி வீட்டிலும் அமைச்சர்கள் ஆலோசித்தனர்.

ஓபிஎஸ் வீட்டில் நடந்த கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர் ஒருவர், தான் பதவியை விட்டுவிட்டு வந்ததாகக் குறிப்பிட அதை மூத்த நிர்வாகி ஒருவர் கண்டித்துள்ளார். அதேபோல், சில முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். நம்பிப் பிரிந்து வந்து ஆதரவளிக்கும் கட்சியினருக்கும் தேவையான பாதுகாப்பு அளிக்கும் வகையில், பொறுப்புகள் இருக்க வேண்டும் என்றும் தங்கள் முடிவைத் தெரிவித்தனர்.

ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் உள்துறை, நிர்வாகம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறைகளை கேட் பது குறித்தும் செம்மலை, பாண்டியராஜன் ஆகிய இருவருக்கும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவிகள் கேட்கப்படுவது குறித்தும் பேசப்பட்டது.

அதேபோல், முதல்வர் பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், வட மாவட்டத்தைச் சேர்ந்த சில அமைச்சர்கள் ஓபிஎஸ் தரப்புக்குத் துணை முதல்வர் பதவியுடன் மற்றும் கட்சியில் முக்கியத்துவம் அளிப்பதை எதிர்த்துள்ளனர். அதன்பின், தினகரன் தரப்பின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி முதல்வர் பழனிசாமி அவர்களைச் சமாதானம் செய்துள்ளார்.

இதையடுத்து, ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கைகளை ஏற்பதாக, முதல்வர் பழனிசாமி தரப்பிலிருந்து, ஓபிஎஸ்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே, நேற்று முன்தினம் திருவாரூர் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியும், சென்னையில் ஓபிஎஸ்ஸும் அணிகள் இணைப்பு உறுதி எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, இன்று மாலைக்குள் அணிகள் இணையும் என்று இரு அணி வட்டாரங்களும் தெரிவித்தன. இது தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது:

 

ஓபிஎஸ்ஸுக்கு புதிய பதவி

அணிகள் இணைந்ததும், ஓபிஎஸ் கட்சி நிர்வாகத்தையும், முதல்வர் பழனிசாமி ஆட்சியையும் கவனித்துக் கொள்வார். கட்சியை நிர்வகிக்கக் குழு அமைக்கப்படும். குழுவின் தலைவராக ஓபிஎஸ் இருப்பார். அக்குழுவில் முதல்வர் பழனிசாமியும் முக்கிய பொறுப்பில் இருப்பார். இரு அணிகளைச் சேர்ந்த முக்கியமானவர்கள் அந்தக் குழுவில் இடம் பெறுகின்றனர். அமைச்சரவையில் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விரைவில் ஆளுநரைச் சந்தித்து, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும். இரு அணிகளும் இணைந்ததும், ஓபிஎஸ் மற்றும் முதல்வர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து, பொதுக்குழுவை கூட்டி சசி கலாவை கட்சியை விட்டு நீக்குவது, அதற்கு முன்னதாகக் கட்சி சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வருவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாளை (இன்று) அணிகள் இணைந்ததும் கட்சி தலைமை அலுவலகத்துக்கு இரு தரப்பினரும் வந்து அடுத்தகட்ட முடிவுகள் குறித்து ஆலோசிக்கின்றனர். அதன்பின் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19532834.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

*ஒ.பன்னீர்செல்வம் அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டனர். ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திய பின்னர் ஓ.பி.எஸ் அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்கின்றனர். 

ops house

படம் : தே.அசோக்குமார்

*அணிகள் இணைப்பு உறுதியாகியுள்ள நிலையில் இன்று பிற்பகல் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தவுள்ளனர். தற்போது சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. 

*ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தங்கள் அணியினருடன்  தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

*முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

  • தொடங்கியவர்

ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் கடைசி நேர நிபந்தனை!

அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இறுதிநேரத்தில் முக்கியமான ஒரு நிபந்தனையை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஓ.பன்னீர்செல்வம்


அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதுகுறித்த அறிவிப்பு இன்றே வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருவரும் சந்தித்துப் பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட பின்னரே, தலைமைக் கழகத்துக்கு வர முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கடைசி நேர நிபந்தனை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள் விபரமறிந்தவர்கள்.

அதேபோல், சென்னை அடையாற்றில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் டி.டி.வி. தினகரன் தரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் 16 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டுள்ளனர். சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட தினகரன் தரப்பு தயாராகி வருவதாகத் தெரிகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/99772-ops-asks-eps-faction-to-sack-sasikala-from-general-secretary-post.html

  • தொடங்கியவர்

‘ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த மோதல்! - முன்னாள் அமைச்சரை வசைபாடிய மூத்த நிர்வாகி #VikatanExclusive

 
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சருக்கும் மூத்த நிர்வாகிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சமரசம் செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க-வில் அணிகள் இணைப்புப் பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய மூன்று அணிகளைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 
அமாவாசையான இன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணையவதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அணிகள் இணைவதற்கான அனைத்து டீல்களும் ஓ.கே ஆகிவிட்டதாக இரு அணிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சருக்கும் மூத்த நிர்வாகிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. அந்தத் தகவலை ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர், "அணிகள் இணைப்புகுறித்து தொடர்ந்து ஆலோசனை நடந்துவருகிறது. கூட்டத்தில், முன்னாள் அமைச்சரின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது. அவர், தன்னுடைய அமைச்சர் பதவியைத்  துறந்து, அணியில் இணைந்ததாகக் குறிப்பிட்டார். இது, மூத்த நிர்வாகி ஒருவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 'நீங்கள் மட்டுமல்ல...  நாங்கள், உங்களைவிட உயர்ந்த பதவியை விட்டுத்தான் இங்கு வந்துள்ளோம். தேவையில்லாமல் பேச வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதைப்பார்த்த மற்ற நிர்வாகிகள் இருவரையும் சமரசம் செய்துள்ளனர். அதன்பிறகு, ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடந்தது" என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் அணி வட்டாரங்கள் கூறுகையில்,"அணிகள் இணைவது உறுதியாகிவிட்டது. எங்கள் அணியில் உள்ளவர்களில் யார், யாருக்கெல்லாம் என்னென்ன பதவிகள் என்று பட்டியல் போடப்பட்டது. அப்போது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் மற்றும் உள்துறை, பொதுப்பணித்துறை போன்ற முக்கிய துறைகள் ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அதுபோல, முன்னாள் அமைச்சரான மாஃபா.பாண்டியராஜனுக்கும் முக்கிய இலாகா கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகளான எம்.எல்.ஏ-க்களில் சிலர், எங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று அடம்பிடித்தனர். அவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் உள்பட சிலர் தெரிவித்தனர். ஆனால், அவர்களில் ஒருசிலர் எங்களுக்குக் கண்டிப்பாக அமைச்சர் பதவி வேண்டும் என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்பட அந்த அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்பட மூன்று பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, அணிகள் இணைப்பு உறுதியானது. மேலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஆரம்பத்திலிருந்தே ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கேட்டுள்ளார். அவருக்கும் எம்.பி. பதவி கொடுக்கிறோம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாம். மற்றவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது" என்றனர். 

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசியவர்கள், “அணிகளை இணைத்தால் மட்டுமே ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்திச் செல்ல முடியும். தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்க முடியும். சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க முடியும். இதற்கு, ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆதரவு தேவை என்று நாங்கள் கருதினோம். அதனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சம்மதம் தெரிவித்துள்ளோம். அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. தினகரன், திவாகரனின் ஆதரவு அமைச்சர்களை மாற்றவும் முடிவு எடுத்துள்ளோம். அதுதொடர்பாக, ஆலோசனை நடத்தியபிறகு அறிவிப்பு வெளியாகும். கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்பட உள்ளது. அதில், இரு அணிகளைச் சேர்ந்தவர்களுக்கு சமமாக பொறுப்புகள் வழங்கப்படும். சசிகலா குடும்பத்தினரின் தயவு மற்றும் தலையீடு இல்லாமல் அ.தி.மு.க இனி செயல்படும். கட்சி விதிகளில் மாற்றம்செய்வதுகுறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்படும். நிச்சயம் இரு அணிகளும் இன்று இணைந்துவிடும்" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/99760-admk-senior-cadre-reveals-about-problems-happened-at-paneerselvam-home.html

  • தொடங்கியவர்

திடீர் திருப்பம் : அணிகள் இணைப்பு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இறுதி நேரத்தில் முக்கிய நிபந்தனை ஒன்றை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட பின்னரே, தலைமைக் கழகத்துக்கு வர முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கடைசி நேர நிபந்தனைகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

admk merger

*இன்னும் சற்று நேரத்தில் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர் இணைய உள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்துவிட்டனர். அனைவரின் முகங்களிலும் உற்சாகம். 

admk merger

*ஒ.பன்னீர்செல்வம் அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டனர். ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திய பின்னர் ஓ.பி.எஸ் அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்கின்றனர். 

 

 

 

அதிமுக அணிகள் இணைப்பு: அடுத்தடுத்த நிகழ்வுகளின் தொகுப்பு

 

 
anigal

அதிமுக தலைமை அலுவலகம் | படம்: எல்.சீனிவாசன்

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு இன்று நடைபெறவுள்ளது. கட்சியை ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியை முதல்வர் பழனிசாமியும் வழி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் பொதுக்குழுவைக் கூட்டிக் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இன்று (திங்கள்கிழமை) காலை முதலே அதிமுக தலைமை அலுவலகம், முதல்வர் இல்லம், க்ரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லம், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் ஆகியன பரபரப்பாக இருக்கின்றன.

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு:

 

1.15 pm: டி.டி.வி.தினகரனால் சமீபத்தில் பதவி வழங்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மாதாவரம் மூர்த்தி , டி.கே.எம்.சின்னையா அவரது ஆதரவாளர் கரிகாலன் உள்ளிட்டோரும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

12.55 pm: சூரிய கிரகணம் காரணமாக ஓ.பி.எஸ் வீட்டிலிருந்து கட்சி தலைமை அலுவலகத்துக்கு கிளம்புவதில் தாமதம் என ஓ.பி.எஸ் தரப்பில் தகவல்.

12.45 pm: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

12.43 pm: அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தடைந்தனர்.

12.40 pm: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகல் 12.10 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்துக்கு கிளம்புவதாக இருந்த நிலையில் தற்போது அவர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

12-10 pm : சரியாக 1210 மணிக்கு வீட்டிலிருந்து கட்சி அலுவலகம் கிளம்புகிறார் ஓ.பி.எஸ் , வழியில் கோவிலில் பூரண கும்ப மரியாதை கொடுக்கப்படுகிறது. பின்னர் கட்சி அலுவலகம் சென்றடைகிறார்.

11.40 am: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் சென்னை வருகிறார்.

11.15 am: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவரும் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

11.10 am: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் இருந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்குப் புறப்பட்டார்.

11.00 am: அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் 16 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

10.15 am: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

10.0 am: அதிமுகவின் இரு அணிகள் இணைவதை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. போலீஸார் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி:

அணிகள் இணைந்ததும், ஓபிஎஸ் கட்சி நிர்வாகத்தையும், முதல்வர் பழனிசாமி ஆட்சியையும் கவனித்துக் கொள்வார். கட்சியை நிர்வகிக்கக் குழு அமைக்கப்படும். குழுவின் தலைவராக ஓபிஎஸ் இருப்பார். அக்குழுவில் முதல்வர் பழனிசாமியும் முக்கிய பொறுப்பில் இருப்பார். இரு அணிகளைச் சேர்ந்த முக்கியமானவர்கள் அந்தக் குழுவில் இடம் பெறுகின்றனர். அமைச்சரவையில் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விரைவில் ஆளுநரைச் சந்தித்து, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும். இரு அணிகளும் இணைந்ததும், ஓபிஎஸ் மற்றும் முதல்வர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து, பொதுக்குழுவை கூட்டி சசி கலாவை கட்சியை விட்டு நீக்குவது, அதற்கு முன்னதாகக் கட்சி சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வருவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article19533182.ece?homepage=true

  • தொடங்கியவர்

மும்பையில் இருந்து கவர்னர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை வந்தார்

தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் மும்பை நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இன்று அவசரமாக சென்னை வந்தார்.

மும்பையில் இருந்து கவர்னர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை வந்தார்
 

சென்னை:

அ.தி.மு.க.வில் இரு அணிகளாக உள்ள எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இன்று இணைய உள்ளதால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளும் இணைந்த பிறகு அமைச்சரவையும் மாற்றம் செய்யப்படுகிறது. அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது. இது தவிர மாபா. பாண்டியராஜன், செம்மலை ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என தெரிகிறது.

அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கான கடிதத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி கவர்னரிடம் இன்று மாலை வழங்குவார் என தகவல் வெளியானது. இதற்காக கவர்னர் வித்யாசாகர்ராவ் மும்பை நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இன்று மதியம் 1 மணிக்கு அவசரமாக சென்னை வந்தார்.

201708211337373231_1_ttvkarn._L_styvpf.j

அ.தி.மு.க. இரு அணிகள் இணையும் போது டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிலைப்பாடு என்ன என்பதும் அப்போது தெரியும். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்களா? இல்லையா? என்பதும் தெரியவரும்.

இதனால் அரசியல் பரபரப்பு மீண்டும் உருவாகி உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/21133735/1103575/Governor-Vidyasagar-Rao-came-to-Chennai-from-Mumbai.vpf

  • தொடங்கியவர்

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு:

1.40 pm: அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் ஓபிஎஸ் பயணத்திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1.35 pm: முதல்வர் பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வரும் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

1.30 pm: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தடைந்தார்.

முதல்வரின் பயணத் திட்டம் ’திடீர்’ ரத்து! - அணிகள் இணைப்பில் அடுத்தடுத்த சிக்கல்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு செல்வதாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயணத் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 

அதிமுக தலைமை அலுவலகம்

 


சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து தலைமைக்கழகம் வந்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிபந்தனை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். சசிகலாவை நீக்குவது தொடர்பாக நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனை காரணமாக இணைப்பு தாமதமாவதாகக் கூறப்படுகிறது. இதனால், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் செல்வதாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அவரது கான்வாய் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் செல்லுவதாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பயணத்திட்டமும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க. அணிகள் இணைப்பு மேலும் தாமதமாகும் என்று தெரிகிறது.  முதல்வரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதால் தலைமை கழகத்தில் இருந்த தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து போகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/99783-eps-convoy-cancelled-due-to-ops-factions-lastminute-condition.html

தலைமை அலுவலகம் புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி Share on FacebookShare on Twitter
  • தொடங்கியவர்

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு:

2.25 pm: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் அணி வருகை.

2.20 pm:  முதல்வர் பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தடைந்தார். இதனால் கட்சி அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் மீண்டும் குவிந்தனர்.

2.00 pm:  அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி

  • தொடங்கியவர்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! - புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு #LiveUpdate

 
 

மீண்டும் ஜெயலலிதா சமாதி: இரு அணிகள் இணைந்தப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றனர். அங்கு ஜெயலலிதா சமாதிக்கு இருவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும், ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து அவரது படத்துக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல, எம்.ஜி.ஆர் சமாதியிலும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.  அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையில் பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். 

ops_vccc1_15237.jpg

பழனிசாமி - பன்னீர்செல்வம் சந்திப்பு : ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிரிந்த அணிகள் தற்போது இணைந்தன. எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கைக்குலுக்கினர். அணிகள் இணைந்ததை அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

இணைப்பு உறுதி : புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாம்.
 

ops-_edapadi_1_15177.jpg

அதிமுக தலைமை அலுவலகத்தில் தரையை தொட்டு வணங்கினார் பன்னீர்செல்வம்!

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பிற்பகல் 2.22 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார். அப்போது, கையெடுத்து மேலே கும்பிட்ட பன்னீர்செல்வம், பின்னர் கையை தரையில் வைத்து வணங்கினார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் உள்ளே சென்றார் பன்னீ்ர்செல்வம்.
 

ops-_edapadi_1aa_15462.jpg

இன்னும் சற்று நேரத்தில் இணைகிறது பழனிசாமி- பன்னீர்செல்வம் அணி!

பழனிசாமி- பன்னீர்செல்வம் அணியினர் இன்னும் சற்று நேரத்தில் இணையப்போகிறது. அதிமுக தலைமைக் கழகத்தில் முதல்வர் காத்திருக்கும் நிலையில், பன்னீர்செல்வம் தனது அணியின் முக்கிய நிர்வாகிகளுடன் தலைமைக்கழகம் புறப்பட்டுள்ளார்.

*ஓ.பன்னீர்செல்வம் அணி தலைமை அலுவலகம் வந்துவிட்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டுவிட்டதாக ட்வீட் செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று அணிகள் இணைப்பு உறுதியாக நடக்கும் எனத் தெரிகிறது.

*முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டார். 

admk merger

*ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு தங்கமணி, எஸ்.பி.வேலுமணி , வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் வருகை தந்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பன்னீர்செல்வத்துடன் இவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆலோசனைக் கூட்டம் முடிந்தப்பின்னர் அணிகள் இணைப்பு குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 
  •  

யார் யாருக்கு அமைச்சர் பதவி! - பட்டியலை வெளியிட்ட ஆளுநர் மாளிகை

 
 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பிரிந்த அணிகள் தற்போது இணைந்தன. எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கைகுலுக்கினர். அணிகள் இணைந்ததை அதிமுக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளுநர் மாளிகை புதிய அமைச்சரவை குறித்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

rajbhavan press release
 

*அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.  

*அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
 புதிய அமைச்சரவையில் பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
* கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கீடு

*தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லியல் துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் நியமனம்.

*சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதலாக சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை பொறுப்பை கவனிப்பார்.

*பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

http://www.vikatan.com/news/tamilnadu/99802-admk-merger-governor-house-has-been-released-new-ministry-list.html

  • தொடங்கியவர்

17 எம்.எல்.ஏ.,க்களுடன் தினகரன் ஆலோசனை

 

சென்னை: சென்னை அடையாற்றில் உள்ள வீட்டில் தினகரன் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், முத்தையா, கோதண்டபாணி, அரூர் முருகன், மாரியப்பன் கென்னடி, தங்க தமிழ்ச்செல்வன், தங்கதுரை, பாலசுப்ரமணியன், கோதண்டபாணி, வெற்றிவேல், ரங்கசாமி, கதிர்காமு, சுந்தரராஜன், சுப்பிரமணியன், ஜக்கையன், உமா மகேஸ்வரி ஆக மொத்தம் 17 பேர் உள்ளனர். தமிழக அரசின் டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1838646

  • தொடங்கியவர்

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு:

4.42 pm: தமிழக துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

4.30 pm: பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநர் மாளிகை வந்தடைந்தனர்.

4.05 pm: பின்னர் எம்.ஜி.ஆர்., நினைவிடம், அண்ணா நினைவிடத்திலும் மலரஞ்சலி செலுத்தினர்.

3.55 pm: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

3.50 pm: அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என எம்.பி., வைத்திலிங்கம் அறிவித்தார். விரைவில் பொதுக்குழுவை கூட்டி சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என அவர் கூறினார்.

3.40 pm: பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எம்.சி. சம்பத்திடம் இருந்த சுரங்கம் மற்றும் கனிமவளம் துறை கூடுதலாக வழங்கப்படுகிறது.

3.30 pm: ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதி மற்றும் வீட்டு வசதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

3.15 pm: இரட்டை இலை சின்னத்தை மீட்டு எதிரிகளை வீழ்த்துவோம் - முதல்வர் பழனிசாமி.

3.15 pm: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளார் - ஓ.பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளர் - எடப்பாடி பழனிசாமி; துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி. வழிகாட்டுக் குழுவில் 11 பேர் இடம்பெறுகின்றனர்.

3.10 pm: பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரு அணிகளும் இணைந்துள்ளன- முதல்வர் பழனிசாமி.

3.05 pm: உலக அரசியல் அரங்கில் அதிமுக சரித்திரத்தை உருவாக்கியுள்ளது- ஓபிஎஸ்.

3.01 pm: தொண்டர்கள் விருப்பப்படி அணிகள் இணைப்பு நடைபெற்றது. இனி எங்களை யாராலும் பிரிக்க முடியாது. அணிகள் இணைப்பு நடந்ததால் என் மனப் பாரம் எல்லாம் இறங்கிவிட்டது- ஓபிஎஸ்.

3.00 pm: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன.

http://tamil.thehindu.com/tamilnadu/article19533182.ece?homepage=true

  • தொடங்கியவர்

தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் கவர்னரை சந்திக்க திடீர் முடிவு!

அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்துவருகின்றன. இரு துருவங்களாக இயங்கிவந்த எடப்பாடி கோஷ்டியும் ஒ. பன்னீர்செல்வம் கோஷ்டியும் இணைந்துவிட்டனர். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்கள். அதையடுத்து, இன்று இரவு தினகரனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் ஜெயலலிதா சமாதிக்கு மரியாதை செலுத்த வருகிறார்கள். 
முக்கியமான முடிவுகளை அப்போது அவர் அறிவிக்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்லுகிறார்கள். 

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்


தமிழக துணை முதல்வர் பதவியில் அமர்ந்துவிட்டார் ஒ. பன்னீர்செல்வம். அ.தி.மு.க-வில் சபாநாயகரை தவிர 134 எம்.எல்.ஏ&கள் இருக்கிறார்கள். சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க 117 எம்.எல்.ஏ-க்கள் தேவை. ஒ.பன்னீர்செல்வம் கோஷ்டியில் 10 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். தினகரன் கோஷ்டியில் 18 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக அவர்கள் தரப்பில் சொல்லுகிறார்கள். எடப்பாடி கோஷ்டியில் 99 எம்.எல்.ஏ-க்கள் இருக்கலாம் என்பது ஒரு கணக்கு. 

இப்படியிருக்க...அண்மையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீடியாக்களிடம் பேசும்போது, 'ஒ.பி.எஸ். தரப்பினர் எங்களுடன் சேர்ந்தால், மேற்கொண்டு இரண்டு எம்.எல்.ஏ-கள் மெஜாரிட்டி காட்ட தேவைப்படுவார்கள். அதுதான்........... பாதாளம் வரை பாயுமே?' என்று பொடி வைத்து முதலில் பேசிவிட்டு உஷாரானார்.  பாசம் பாதளம் வரை பாயுமே? என்று சமாளித்தார். ஆக, அமைச்சர் சீனிவாசன் சொல்கிறபடி, எடப்பாடி கோஷ்டியில் பெரும்பான்மை எம்.எல்.க்கள் இல்லை. மைனாரிட்டி அரசு என்பது தெளிவாகிறது என்று எதிர்கட்சியினர் குரல்கொடுத்தனர்.

தினகரன்

இந்தநிலையில், எடப்பாடியும் ஒ.பன்னீர்செல்வமும் ஒரே அணியில் சேர்ந்தும், விரைவில் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் நீக்குவோம் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். இவரின் இந்தப் பேச்சு தினகரன் கோஷ்டியினருக்கு கடுங்கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. சசிகலாவை நீக்க விட்டால்தானே?...அதற்கு முன்பே, ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று எச்சரித்துள்ளனர். எடப்பாடி கோஷ்டியினருக்கு தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் நேரில் சந்திக்க முடிவெடுத்துள்ளனர். முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையுடன் சந்திக்க இருக்கிறார்கள். முடிவெடுக்கவேண்டிய இடத்தில் உள்ள கவர்னர் அடுத்த என்ன செய்வார் என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/99858-dinakaran-faction-likely-to-meet-governor.html

  • தொடங்கியவர்
 

மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தியானம்

Dinakaran camp MLAs to visit Jayalalaithaa memorial

ஜெ. சமாதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து தியானம்!

 

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சமாதியில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தியானம்..!

மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் தியான நிலையில் அமர்ந்துள்ளனர். 

25851c8c-883a-40e3-ada4-2f0761c24a55_202


எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இன்று இணைந்தன. அந்த இணைப்பின் போது அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களா பொறுப்பெற்றுக்கொண்டனர். இந்தநிலையில், டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தியான நிலையில் அமர்ந்துள்ளனர்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் சுப்ரமணியன், ஏழுமலை, தங்க தமிழ்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி, மாரியப்பன் கென்னடி ஆகிய 18 எம்எல்ஏ-க்களும் அமர்ந்துள்ளனர். இருப்பினும் ஜெயலலிதா சமாதிக்கு டி.டி.வி.தினகரன் வரவில்லை. இரு அணிகள் இணைப்பு நடைபெற்ற நிலையில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர், 23-ம் தேதி செய்தியாளர்களைச் சந்திப்பதாகவும், தற்போது காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/99868-ttvdinakaran-support-mlas-are-doing-meditation-in-jayalalitha-memorial.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DH1z6CGXsAUGTHz.jpg:large

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.