Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பியிருக்கும் மலையகம்; கண்டுகொள்ளுமா தாயகம்?

Featured Replies

நம்­பி­யி­ருக்கும் மலை­யகம்; கண்­டு­கொள்­ளுமா தாயகம்?

Untitled-3-0469ef80f3d208cdf32eef3b5dfc1f2215cfd40f.jpg

 

இலங்கைத் தமி­ழர்­களின் பிரச்­சினை பற்றி தமி­ழ­கத்­திலும், ஒட்­டு­மொத்த இந்­தி­யா­விலும் பேசப்­பட்ட அள­வுக்கு இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரான இலங்கைப் பெருந்­தோட்டச் சமூ­கத்தின் அவலம் பற்றி ஒரு விவாதம் கூட தமி­ழ­கத்­திலோ, இந்­தி­யா­விலோ நடத்­தப்­ப­ட­வில்லை. இந்­திய ஊட­கங்கள் கூட அது­பற்றிப் பேச முன்­வ­ர­வில்லை. இந்­தி­யாவும், வேறு பகுதி மக்­க­ளுக்கே உத­வி­களை அள்ளி வழங்­கு­வ­தாக மலை­யகத் தமிழர் எண்­ணு­கின்­றனர். இலங்­கையில், இந்­தியத் தமிழர் என்­றொரு சமூகம் இருப்­பது குறித்து இந்­தி­யா­வுக்குத் தெரி­ய­வில்­லையா என்­பது அவர்­க­ளது கேள்­வி­யாகும். தமது தாய­க­மாகக் கருதும் இந்­தியா தம்மைக் கைவிட்­டு­ விட்­டது என்­பதே மலை­யக மக்­களின் வருத்­த­மாகும்.

 மலையக பெருந்­தோட்ட அர­சி­யல்­வா­திகள் இந்­தியா சென்று அங்­குள்ள அர­சி­யல்­வா­தி­களைச் சந்­தித்த போதும், ஒரு சிறு கொள்கை அறி­விப்பை விடுக்­க­வைக்கும் முயற்­சிகள் கூட எடுக்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன், இந்­திய அரசு அறி­விக்கும் புல­மைப்­ப­ரி­சில்கள் மலை­யக மாண­வர்­க­ளுக்குப் பெற்றுத் தரப்­ப­டு­கி­றதே அன்றி, மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு என்று பிரத்­தி­யே­க­மாக புல­மைப்­ப­ரி­சில்கள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை.

இது­போன்ற பல கருத்­தா­டல்கள் ‘மலை­யகத் தமி­ழர்கள்: ஒரு புதிய எதிர்­கா­லத்­துக்­கான நோக்­காடு’ (Up-Country Tamils: Charting a New Future) என்ற தொனிப்­பொ­ருளில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் ஒலித்­த­வை­யாகும் இனத்­துவ கற்­கை­க­ளுக்­கான சர்­வ­தேச நிறு­வனம் ஏற்­பாடு செய்­தி­ருந்த இக் கலந்துரையாடல் கடந்த 2ஆம், 3ஆம் திக­தி­களில் பொர­ளை­யி­லுள்ள மேற்­படி நிறு­வ­னத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது.

அண்மைக் காலத்தில் நடை­பெற்ற மலை­ய­கத்தின் எதிர்­காலம் குறித்த ஒரு காத்­தி­ர­மான கலந்­து­ரை­யாடல் அல்­லது மாநாடு என்று இதைக் குறிப்­பி­டலாம், தற்­போ­தைய சூழ்­நி­லையில், மலை­யகத் தமி­ழர்கள் பற்­றிய ஒரு மாநாட்­டுக்கு அரங்கம் நிறைந்த பங்­கேற்­பா­ளர்கள் - குறிப்­பாக, அதி­க­ள­வி­லான சிங்­கள சகோ­தர, சகோ­த­ரிகள் - பங்­கேற்­றமை வியப்­புக்­கு­ரி­யது. மேலும், மலை­யகத் தமி­ழரின் வாழ்க்­கையை பல்­வேறு கூறு­க­ளாக வகுத்து, அக்­கூ­று­களை அலசி ஆராய்ந்­தது பாராட்­டுக்­கு­ரி­யது.

மலை­யகம் குறித்த மேம்­போக்­கான பார்வை அல்­லது அறிவு கொண்­ட­வர்கள் இம்­மா­நாட்டில் கலந்து கொண்­டி­ருப்­பார்­க­ளே­யானால், மலை­யக மக்கள் படும் பெருந்­து­யரம் அவர்­களை நிச்­சயம் கண்­க­லங்க வைத்­தி­ருக்கும். அங்கு தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்­கள்­பற்­றிய ஒரு கண்­ணோட்டம் கீழே தரப்­ப­டு­கி­றது

1983இல் பாது­காப்புக் கருதி மலை­யக மக்கள் வடக்கு மற்றும் கிழக்குப் பகு­தி­க­ளுக்கு பெரு­ம­ளவில் இடம்­பெ­யரத் தொடங்­கினர். இன்று வவு­னியா, கிளி­நொச்சி போன்ற பல பகு­தி­களில் நாற்­பது சத­வீ­த­மாக மலை­யகத் தமி­ழர்கள் வாழ்­கின்­றனர். இருந்­த­போதும், வட­ப­குதி மக்கள் தம்­மி­ட­மி­ருந்து மலை­ய­கத்­த­வரைச் சற்றுத் தள்­ளியே வைத்­தி­ருக்­கின்­றனர். குறிப்­பாக, தாம் வாழும் இடங்­க­ளுக்கு ‘நகர்’ என்று முடியும் இடப் பெயர்­க­ளையும், மலை­யக மக்கள் வாழும் இடங்­களை ‘புறம்’ என்று முடியும் இடப் பெயர்­க­ளையும் வட­ப­குதித் தமி­ழர்கள் சூட்­டி­யுள்­ளனர். மலை­யகத் தமி­ழரின் மாட­சாமி, மாரி­யம்மன் போன்ற கட­வு­ள­ரும்­கூட மாடேஸ்­வரர், ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் என்ற பெயர்­க­ளி­லேயே வட­ப­குதித் தமி­ழர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அர­சி­ய­லிலும், அரச வேலை­வாய்ப்­பு­க­ளிலும் மலை­ய­கத்­த­வர்கள் ஒதுக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.

‘இந்­தியத் தமிழர்’ என்ற பதம் பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்­க­ளா­லேயே வழங்­கப்­பட்­டது. இதன் அடிப்­ப­டையில், இலங்கை இல­வசக் கல்­வியின் தந்­தை­யாகக் கரு­தப்­படும் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்­னங்­கர கூட மலை­யகத் தமி­ழ­ருக்கு இல­வசக் கல்வி வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்றும், அவர்­க­ளுக்­கான கல்வி ஊட்­டலை இந்­தி­யாவே பொறுப்­பேற்­க­வேண்டும் என்றும் குறிப்­பிட்டார். ஆனால் தற்­போ­தைய அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களோ மலை­யகத் தமி­ழர்­களை இந்­தியத் தமி­ழர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்த முனை­கின்­றன. இந்த அடை­யாளக் குழப்­பங்கள் மற்றும் கேந்­திரப் பண்­புகள் மலை­யகத் தமி­ழர்­களை கொஞ்சம் கொஞ்­ச­மாக சிங்­க­ள­வர்­க­ளா­கவும் அதே­ச­மயம், கிறிஸ்­தவ மற்றும் முஸ்லிம் சம­யத்­த­வர்­க­ளா­கவும் மாற்­றி­வ­ரு­கின்­றன.

பிள்­ளை­களை ‘புத்தா’, ‘துவ’, திவச நிகழ்வை ‘தான கெதர’, தாய் வீட்டை ‘மாகெ­தர’ என்று சிங்­கள வார்த்­தைகள் கொண்டு மலை­யகத் தமி­ழர்கள் சுட்­டு­கின்­றனர். தைப்­பொங்கல் அன்று ‘கிரிபத்’ தயா­ரிப்­பது, மூன்று வேளையும் சோறை உண­வாகக் கொள்­வது என, அடுத்த தலை­முறை முழுக்க முழுக்க சிங்­க­ள­மா­கவே மாறி­விடும் அபாயம் உண்டு.

மலை­ய­கத்தில் இயங்­கி­வரும் உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளிலும் மலை­யகத் தொழி­லா­ளர்கள் நெருக்­க­டி­யான பணிச் சூழலால் கடும் உடல், உள உளைச்­ச­லுக்கு ஆளா­கி­வ­ரு­கின்­றனர். விடு­முறை உட்­பட, தொழிற்­சட்­டங்கள் பலவும் அங்கு மீறப்­பட்டு வரு­கின்­றன.

மலை­யகத் தமி­ழர்கள் இந்­தியத் தமிழர் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­வதே நல்­லது. இந்­தி­யா­வுடன் மலை­யக மக்­களும் தலை­மை­களும் நெருங்­கிய தொடர்பைப் பேண­வேண்டும். மேலும், அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து உட்­படப் பல நாடு­களில் வாழும் இந்­தி­யர்­க­ளுக்கு ‘இந்­தி­யாவில் வசிக்­காத இந்­தி­யர்கள்’ என்ற பொதுப்­ப­தத்­தையும், அவர்­க­ளுக்குப் பல சலு­கை­க­ளையும், அவர்­க­ளது விவ­கா­ரங்­களை கவ­னிக்க தனித் துறை­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் இந்­திய அரசு, மலை­யகத் தமி­ழர்­க­ளையும் அதே பிரி­வுக்குள் உள்­ள­டக்­க­வேண்டும்.

மலை­ய­கத்தில் ஆண்­களை விடப் பெண்­களே உழைக்கும் வர்க்­க­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றனர். அவர்கள் தோட்ட வேலை­க­ளையும் வீட்டு வேலை­க­ளையும் சேர்த்துச் செய்­ய­வேண்­டிய கட்­டா­யத்தில் இருக்­கின்­றனர். நகரில் வழங்­கப்­ப­டு­வ­துபோல் மகப்­பேற்று விடு­முறை கூட வழங்­கப்­ப­டு­வ­தில்லை. பெண்­களின் சம்­பளம் அவர்­க­ளது குடும்­பத்தின் ஆண் உறுப்­பி­னர்­க­ளுக்கே வழங்­கப்­ப­டு­கின்­றன. தமிழ் தெரி­யாத அலு­வ­லர்­களை மலை­ய­கத்தின் அரச நிறு­வ­னங்­களில் பணிக்­க­மர்த்­து­வது மலை­ய­கத்­தா­ரிடம் கடும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கி­றது.

 மொன­ரா­கலை, அலி­யா­வத்தை பகு­தியில், காடாக இருந்த நிலத்தைப் பண்­ப­டுத்தி, கடந்த முப்­பத்­தைந்து வரு­டங்­க­ளாக (3ஆம் பக்கம் பார்க்க)

தோட்டம் செய்­து­வரும் தமி­ழர்­க­ளிடம் இருந்து காணிகள் பிடுங்­கப்­பட்டு, பெரும்­பான்மைச் சமூ­கத்­தி­ன­ருக்குத் தாரை வார்க்­கப்­பட முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பொய்க் குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில், அப்­ப­குதித் தமி­ழரை அங்­கி­ருந்து வெளி­யேற்ற முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.

சிறு­தோட்­டங்­களின் உரி­மை­யா­ளர்கள் மலை­யக மக்­களின் பல­வீ­னத்தை தமக்குச் சாத­க­மாக மாற்­றிக்­கொள்­கி­றார்கள். வீட்­டை­விட்டு வெளி­யேறும் மலை­யகக் காத­லர்­க­ளுக்கு வேலை வழங்­கு­வதன் மூலம், அவர்­களை தோட்­டத்தை விட்டு வெளி­யே­றாமல் பார்த்­துக்­கொள்­வதில் சில முத­லா­ளிகள் ஆர்வம் காட்­டு­கின்­றனர். தேசிய அடை­யாள அட்­டையைப் பறித்து வைத்­துக்­கொண்டு வேலை செய்­யும்­படி பணிக்­கின்­றனர். குழந்­தைகள் உள்ள குடும்­பங்­களில், குழந்­தை­களை ஏறக்­கு­றையப் பிணை­யாக வைத்­துக்­கொண்டு தொழி­லா­ளர்கள் பணியில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர்.

மலை­யகப் பெண்­க­ளுக்கு வழங்­கப்­படும் கல்வி விகி­தத்தில், ஆறு முதல் உயர் தரம் வரை­யி­லான கல்வி கற்கும் பெண்­களின் எண்­ணிக்கை எப்­போதும் வீழ்ச்­சி­ய­டைந்தே காணப்­ப­டு­கி­றது. அந்த வய­தெல்­லையைச் சேர்ந்த பெண்கள் அவர்­க­ளது பெற்­றோரால் உழைக்கும் வர்க்­கத்­தினுள் உள்­ளீர்க்­கப்­ப­டு­கின்­றனர்.

மலை­ய­கத்தில் பெண்­களின் திறமை கணக்கில் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை அல்­லது குறைத்து மதிப்­பி­டப்­ப­டு­கி­றது. நூறு சத­வீதம் பெண்­களே மலை­ய­கத்தின் வரு­மா­னத்தை உரு­வாக்கி வந்­த­போதும், குடும்பம் சார்ந்த எந்­த­வொரு முடி­வையும் எடுக்க பெண்கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. தோட்­டங்­களில் அடக்­கு­மு­றைக்கு ஆட்­பட்டு வேலை செய்ய விரும்­பாத பெண்கள் வெளி­நா­டு­க­ளுக்குச் சென்று உழைத்­தா­லும்­கூட, நாடு திரும்­பி­யதும் மீண்டும் அதே தோட்ட நிர்­வா­கத்தின் கீழேயே வேலை செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது.

பாட­சாலை செல்லும் மலை­யகச் சிறார்­களில் படிப்பில் நாட்­ட­மில்­லா­த­வர்­களை வீட்டு வேலை­களில் சேர்த்­து­விடும் அவலம் தொடர்­கி­றது. தொழில்­வாய்ப்பே இளை­ஞர்­களை தோட்­டங்­களை விட்டு வெளி­யேற்­று­கின்­றது. கொழும்பு அல்­லது வேறு நகர்ப்­பு­றங்­க­ளுக்குச் செல்லும் இவர்கள், கட்­டட நிர்­மாணத் துறை­யி­லேயே ஈடு­ப­டு­கி­றார்கள். நாளொன்­றுக்கு சுமார் 1000 ரூபா சம்­பளம், உணவு மற்றும் இரவில் இல­வச மது என்­பன இளை­ஞர்­களை ஈர்க்­கின்­றன. கணி­ச­மான பணத்தை உழைத்­தபின் முச்­சக்­க­ர­வண்­டி­யொன்றை வாங்­கி­விடும் இவர்கள், தின­சரி அதி­க­மாக உழைக்க வாய்ப்புக் கிடைப்­பதால் வழி தவறிப் போய்­வி­டவும் செய்­கி­றார்கள். இளம் யுவ­திகள் நக­ரங்­களின் ஆடைத் தொழிற்­சா­லை­க­ளுக்கும், வீட்டு வேலை­க­ளுக்கும் அனுப்­பப்­ப­டு­வ­துடன், அங்கு அவர்கள் மீது நடத்­தப்­படும் உடல், உள ரீதி­யான தாக்­கு­தல்­களைச் சகித்­துக்­கொண்டு சூழ­லுக்கு ஏற்ப மாறிப் போய்­வி­டு­கின்­றனர். மலை­யக மாண­வர்­க­ளுக்கு கல்­வி­யுடன் ஒரு தொழிற்­கல்­வியும் பயிற்­றப்­ப­டு­வது அவ­சியம்.

அப்­புத்­த­ளையில் மாற்றுக் கல்­வியை அறி­மு­கப்­ப­டுத்தும் வகையில், பன்­னோக்கு கற்றல் மையம் என்ற ஒன்று கடந்த ஏழு மாதங்­க­ளாக இயங்­கி­வ­ரு­கி­றது. இந்த முயற்­சியைத் தடுப்­பதில் அர­சியல் புள்­ளிகள் சிலர் கடும் தடை­யாக இருந்­துள்­ளனர்.

இது­போன்ற காத்­தி­ர­மான பல கருத்­துக்கள் அங்கு முன்­வைக்­கப்­பட்­டன எனினும் இந்த மாநா­டு­பற்­றிய கருத்­துக்­க­ளையும் பகிர்ந்­து­கொள்­வது பொருத்­த­மா­ன­தாக இருக்கும்

மலை­யக மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­கள்­பற்றி விரி­வாக எடுத்­து­ரைக்­கப்­பட்ட இந்த முக்­கிய நிகழ்­வுக்கு, அந்தப் பிரச்­சி­னை­களைத் தீர்க்­கக்­கூ­டிய இடத்தில் இருக்கும் குறிப்­பி­டத்­தக்க அர­சியல் தலை­மை­களைக் காண­மு­டி­ய­வில்லை அவர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்­லையா அழைப்பு விடுத்தும் அவர்கள் வர­வில்­லையா அல்­லது குட்டு வெளிப்­பட்­டு­விடும் என்ற பயமோ தெரி­ய­வில்லை!

மலை­யகத் தமி­ழர்கள் குறித்த இந்த நிகழ்வில், இளம் தலை­மு­றை­யினர் பலர் கலந்­து­கொண்­டது நம்­பிக்கை தரு­வ­தாக அமைந்­தது. மேலும், மொழி பேதங்­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, சிங்­கள இளம் தலை­மு­றை­யி­னரும் மலை­யக மக்­களின் பிரச்­சினை குறித்துப் பேசி­யது பாராட்­டு­தற்­கு­ரி­யது.

அதே­வேளை, இன ரீதி­யான நேரடித் தாக்­கு­தலும் நிகழ்வில் அரங்­கே­றி­யது. மோடியின் வருகை சில பெரும்­பான்மைப் பிரி­வி­ன­ருக்கு உறுத்­த­லாக இருப்­பதை ஒருவர் நேர­டி­யா­கவே குறிப்­பிட்டார். மோடியின் விருப்­பத்­துக்கு இலங்­கையில் ஒன்றும் செய்ய விட முடி­யாது என்று அவர் பட்­ட­வர்த்­த­ன­மாகத் தெரி­வித்தார்.

அதற்கு பதி­ல­ளித்த பேரா­சி­ரியர் மயில்­வா­கனன், மோடி தன்­னிச்­சை­யாக இலங்கை வர­வில்லை என்றும், இலங்­கையின் அழைப்பின் பேரி­லேயே வந்­த­தா­கவும், அவ­ரது நட­வ­டிக்­கைகள் அனைத்தும் தூத­ரக ரீதி­யா­ன­வையே என்றும் ஆணித்­த­ர­மாகக் கூறினார். மோடி எந்த நாட்­டுக்குச் சென்­றாலும் அவ­ரது ஈர்ப்பு அந்­நாட்டு அர­சி­யலில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி விடு­கி­றது என்றும், அது அவ­ரது தனிச் சிறப்பு என்றும் மயில்­வா­கனன் கூறினார்.

முதல்நாள் அமர்வில், மலை­யக மக்­களை எவ்­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­து­வது என்­பது குறித்த கருத்­தா­டல்கள் செறி­வாக இருந்­ததைக் காண முடிந்­தது. எனினும், கலந்­து­கொண்­ட­வர்­களுள் எந்த அடை­யா­ளத்தை எடுத்­துக்­கொள்­வது என்­ற­வொரு குழப்­பமும் காணப்­பட்­டது.

அதா­வது, மலை­யக மக்­களை மலை­யக மக்கள் என்று விளிக்க வேண்டும் என்றும், இந்­தியத் தமி­ழர்கள் என்று குறிப்­பிட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர் என்று குறிப்­பிட வேண்டும் என்றும் மாறு­பா­டான கருத்­துக்கள் நில­வின. விசா­ரித்த வரையில், மலை­ய­கத்தின் மூத்த உறுப்­பி­னர்கள் தாம் இந்­தி­யா­வுடன் இணைத்தே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என விரும்­பி­ய­தையும், இளம் தலை­மு­றை­யினர் தம்மை இலங்கைத் தமி­ழ­ராக அடை­யா­ளப்­ப­டுத்­தினால் போதும் என்றும் தெரிந்­தது.

தோட்­டங்­களில் பணி­பு­ரி­வ­தற்­காக இந்­தியத் தமி­ழர்கள் இலங்கை வந்து சுமார் 200 ஆண்­டு­க­ளா­கின்­றன என்று கூறப்­பட்­டது. இக்­காலப் பகு­தி­யினுள் சுமார் ஆறு தலை­மு­றைகள் கண்­டு­விட்­டது மலை­யகம். இன்னும் ‘இந்­திய’ என்ற அடை­மொழி தேவை­தானா என்றே எண்ணத் தோன்­று­கி­றது.

ஆய்­வ­றிக்கை சமர்ப்­பித்­த­வர்­க­ளுக்குப் பதி­னைந்து நிமி­டங்கள் மட்­டுமே வழங்­கப்­பட்­டி­ருந்­தன. பல மாத கால ஆய்­வு­களின் அறிக்­கையை வெறும் பதி­னைந்து நிமி­டங்­க­ளுக்குள் அடக்­கி­விட முடி­யாமல் பலரும் தடு­மா­றி­யதைக் காண முடிந்­தது. இன்னும் சிலர், பல விட­யங்­களைத் தவிர்த்­து­விட அல்­லது கைவிட நேர்ந்­தது. முன்­கூட்­டியே இந்த நேர அளவு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது என்றால், பேசி­ய­வர்கள் முன்­கூட்­டியே அந்தக் கால எல்­லைக்குள் தமது அறிக்­கையை இன்னும் அடர்த்தியுடன் சுருக்கியிருக்கலாம்.

இன்னொரு முக்கிய விடயம், குறித்த நேரத்தினுள் பிரச்சினை பற்றி மட்டுமே பேசியதால், பலரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைத் தரவில்லை. ஒரு கட்டத்தில், இரு நாள் நிகழ்விலும் சுறுசுறுப்புடனும், ஆக்கபூர்வமாகவும் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ், மலையக மக்கள் குறித்த இனிமையான பதிவுகளே இல்லையா என்று கேட்டே விட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்த அமரர் பி.சந்திரசேகரன், மலையகத் தமிழர் என்ற பதத்தைப் பயன்படுத்தியதாகவும், அதற்கு பதிலளித்த பிரபாகரன், அவர்களும் ஈழத் தமிழரே என்று குறிப்பிட்டதாக ஒரு குறிப்பு இங்கு கூறப்பட்டது. ஆக, விடுதலைப் போராட்டம் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காகவே முன்னெடுக்கப்பட்டது என்பது நிதர்சனம்!

தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளின் தடுமாறும் கொள்கைகளை முன்னிறுத்தி இனியும் வடபகுதித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், கொழும்புத் தமிழர்கள் என்ற பிரிவினையைக் கைவிட்டால் ஒழிய, இலங்கையில் சிறுபான்மையினர் என்ற பதம் தமிழரை விட்டு நீங்காது!

இந்தியாவை மலையகம் தூக்கிக் கொண்டாடினாலும் கூட, இந்தியா மலையகத்தைப் போதுமானவரை போஷிக்கவில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தும் இன்னும் இந்தியாவைக் கொண்டாட வேண்டுமா என்பதை மலையக மக்களே தீர்மானிக்க வேண்டும்!

பேராதனை பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவரும் பேராசிரியருமான சிவமோகன் சுமதியின், அமெரிக்க விருதுபெற்ற ‘இங்கிருந்து’ என்ற, தோட்டத் தொழிலாளர்களின் முழு நீளத் திரைப்படமும் திரையிடப்பட்டது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/kathir/2017-08-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.