Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களால் ஆதாரத்துடன் தெளிவுபடுத்த முடியுமா? டெனீஸ்வரன் கேள்வி

Featured Replies

உங்களால் ஆதாரத்துடன் தெளிவுபடுத்த முடியுமா? டெனீஸ்வரன் கேள்வி

ரெலோ கட்சியானது யாப்பு விதிகளுக்கு அமைவாக சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் என்ற போர்வையில் எனது அமைச்சு பொறுப்பை கபடத்தனமாகவும் சூட்சுமமாகவும் தட்டிப்பறிக்க நினைக்கின்றார்கள் என வடக்குமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றைய தினம் ரெலோ கட்சியின் உயர்மட்டக்குழு கூடியிருந்த நிலையில் கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தாவினால் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து ஆறுமாதங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

ரெலோ கட்சியானது யாப்பு விதிகளுக்கு அமைவாக சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் என்ற போர்வையில் எனது அமைச்சு பொறுப்பை கபடத்தனமாகவும் சூட்சுமமாகவும் தட்டிப்பறிக்க நினைக்கின்றார்கள்.

அந்தவகையில் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக நானும் நகரவேண்டி உள்ளதனால், கட்சியின் அடிப்படை உறுப்புரிமை இல்லாத ஒரு நபரை ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தங்களுடைய கட்சியின் யாப்பில் இடம் இருக்கின்றதா?

 

 
 

அத்தோடு கட்சியின் அடிப்படை உறுப்புரிமை பெற்ற நபரென்று கூறுவீர்கள் என்று சொன்னால், அத்தகைய உறுப்புரிமையானது எங்கு, எப்போது, எவ்வாறு, உறுப்புரிமை எனக்கு வழங்கபட்டது என்பதை தங்களால் எனக்கும் எமது மக்களுக்கும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்த முடியுமா? என்ற கேள்வியை பகிரங்கமாக ரெலோ கட்சிக்கு விடுத்துள்ளார்.

மேலும் 2013ஆம் ஆண்டு வடமாகாண சபை தேர்தலின்போது தங்களின் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் நான் போட்டியிட்டேன் என்பதனை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்வதோடு அதனை மக்களும் நன்கறிவார்கள்.

அந்தவகையில் தேர்தலின் பின்னர் அன்றிலிருந்து இன்றுவரை தங்களுடைய கட்சிக்கு நம்பிக்கையாகவும் அடிப்படைத் தொண்டன் என்ற வகையிலும் செயற்பட்டு வருவதனை தாங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகின்றேன்.

கட்சியும் கட்சியின் செயலாளர் நாயகமும் பலதடவைகள் தங்களுடைய கூட்டங்களுக்கு வருவதில்லை என்றும் ஏறக்குறைய 21 கூட்டங்களில் ஒரு கூட்டத்திற்கே வந்துள்ளதாகவும் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இவ்வாறு தங்களுடைய கூட்டத்திற்கு வராமல் இருப்பதற்கான பல காரணங்கள் இருக்கின்றன, குறிப்பாக மாகாணசபை உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் முதன்முதலில் தங்கள் கட்சியினால் மன்னார் மாவட்டத்தில் ஒழுங்குசெய்து நடாத்தப்பட்ட கூட்டமே எனக்கும் ரெலோ கட்சிக்குமிடையில் நடைபெற்ற முதலாவது கூட்டமாகும்.

அக்கூட்டத்தில் பல ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை தாங்கள் முன்வைத்தபோது அதற்கு எதிராக தனியொரு மனிதனாக குரல்கொடுத்து தங்களின் நிலைப்பாடு பிழை என்பதனை அன்றைய தினமே தெளிவாக சுட்டிக்காட்டி இருந்தேன். அதற்கு பின்னர் நடைபெற்ற 20 கூட்டங்களுக்கும் சமூகமளிக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆனால் ஏன் எதற்காக வரவில்லை என்ற காரணம் எனக்கும் தங்களுக்குமே தெரிந்தவிடயம், குறித்த காரணங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று தாங்கள் நினைத்தால் அதனை செய்வதற்கும் தயாராகவே உள்ளேன்.

மேலும் நான் ஒரு அடிப்படை உறுப்புரிமை பெற்ற உறுப்பினராக இருப்பின் தங்களுடைய கட்சியின் விதிகள் சரியாக இருக்குமெனில் மூன்று கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக வராமல் இருக்கும்போதே அத்தகைய உறுப்பினர் தனது அடிப்படை உறுப்புரிமையினை இழக்கநேரிடும்.

சட்டம் மற்றும் யாப்பு விதிகளில் இது பொதுவாக காணப்படும் ஒரு ஏற்பாடாகும், அவ்வாறெனில் தொடர்ச்சியாக 20 கூட்டங்களுக்கு வராமல் இருந்த ஒரு உறுப்பினரை தாங்கள் ஏன் எதற்காக கட்சியிலிருந்து நீக்காமல் விட்டீர்கள்? என்ற கேள்வியையும் பகிரங்கமாகவே தங்களிடம் கேட்க விரும்புகின்றேன்.

கட்சியானது முதலமைச்சரோடு சேர்ந்து சூட்சுமமாக எனது அமைச்சுப் பொறுப்பை பறித்து பழிவாங்க வேண்டுமென்ற நோக்கில் செயற்படுவதனை என்னால் உணரமுடிகின்றது.

எனக்குத் தெரியாமல் ரகசியமாக என்னை அமைச்சுப்பதவியிலிருந்து நீக்குமாறு முதலமைச்சருக்கு கடிதம் எழுதாமல் என்னோடு நேரடியாக கதைத்திருந்தால் எவ்வித தயக்கமுமின்றி அமைச்சு பதவியினை தங்களுக்கு விட்டுத்தந்திருப்பேன், அனால் தற்பொழுது தாங்களும், முதலமைச்சரும் புறமுதுகு குத்தி என்னை பழிவாங்க வேண்டுமென்று அல்லது நடவடிக்கைகள் மேற்கொள்வீர்களாயின் தகுந்த நேரத்தில் எமது மக்கள் தங்களுக்கு தகுந்தபாடம் புகட்டுவார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தாங்கள் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டவாறு அதற்கு தக்க பதிலளிக்க வேண்டுமென்று கடந்த 12ஆம் திகதி நேரடியாகவே தங்களின் கூட்டத்திற்கு வந்து தகுந்த பதிலினை தங்கள் எல்லோர் முன்னிலையிலும் தெரிவித்திருந்தேன்.

ஆனால் கட்சியின் யாப்புவிதிகளை கேட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் ஏன் எதற்காக எனக்கு தரவில்லை? என்ற கேள்வியினையும் தற்பொழுது வெளிப்படையாகவே கேட்க விரும்புகின்றேன். அத்தோடு தங்களது கட்சியில் நான் ஒரு அடிப்படை உறுப்புரிமை இல்லாதவன் என்ற வகையிலா அனுப்பிவைக்காமல் இருக்கின்றீர்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியானது ஜனநாயக ரீதியாக வளர்ந்து வருகின்றபோது வெளிப்படை தன்மையோடும், நேர்மையுடனும் செயற்பட்டாலேயே அக்கட்சியானது மக்களின் மனங்களில் இடம்பிடிக்க முடியும். இது தவிர்த்து சிறுபிள்ளைத்தனமாகக் கட்சி நடந்துகொள்ளுமாயின் அக்கட்சியின்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பதனையும் மறந்துவிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே எது எவ்வாறு இருப்பினும் சட்ட மற்றும் யாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக முறைப்படி என்னை கட்சியில் ஒரு உறுப்பினராக சேர்த்துவிட்டு, அதன்பின்னர் தங்களது யாப்பில் பின்னோக்கியாளும் சட்ட ஏற்பாடுகள் காணப்படுமிடத்து, ஆறு மாதங்கள் தற்காலிகமாக இடைநிறுத்துவதனை விட நிரந்தரமாகவே தங்கள் கட்சியில் இருந்து நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு செய்தால் அதனை முழுமனதோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்பதாகவும் தெரியப்படுத்தியுள்ளதோடு, எவரும் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக எதையும் செய்யமுடியாது என்பதோடு, யாவரும் சட்டத்திற்க்குமுன் சமனானவர்கள் என்பதனையும் நினைவில் கொள்ளுமாறு குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/politics/01/155976?ref=home-feed

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எனது கட்சியின் அடிப்படை உரிமையினை தெளிவு படுத்துங்கள் : அமைச்சர் டெனிஸ்வரன்

 

 

சிரேஸ்ட சட்டத்தரணியை தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தனது செயலாளர் நாயகமாக வைத்துக்கொண்டு,சில நடவடிக்கைகளை நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) எடுத்துள்ளார்கள்.

 

குறிப்பாக நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) எனது கட்சியின் அடிப்படை உரிமையினை எதிர்வரும் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

நான் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் ஒரு சில விடையங்களை மக்களுக்கு தெழிவுபடுத்த வேண்டிய  அடிப்படையிலும் சில சட்ட நகர்வுகளை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றேன் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

deniswaran-minister.jpg

 

அந்த வகையில் பகிரங்கமாகவே எனது கட்சியிடம் கேட்கின்றேன் ஒரு கட்சியில் அடிப்படை உரிமை இல்லாத நபர் ஒருவருக்கு எதிராக 6 மாதம் தற்காலிக இடை நிறுத்தம் செய்ய முடியுமா?

முதலில் எனது கட்சியின் அடிப்படை உரிமையினை நிறுபியுங்கள். அதன் பின்னர் சட்ட ரீதியாக உங்கள் யாப்பின் அடிப்படையில் இருக்கும் விதிகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

தனக்கு எதிராக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மேற்கொண்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே டெனீஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/23411

  • தொடங்கியவர்

விநோதமான கருத்துக்களை வெளியிடும் டெனீஸ்வரன்!

தான் கட்சியில் உறுப்பினராக இருக்கவில்லை என்று முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறத் தொடங்கியிருப்பது விநோதமானது என்று ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ள ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா,

முன்னாள் போராளிகளுக்கான உதவித்திட்டத்தில் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் உதவி வழங்குமாறு தன்னைச் சிலர் கோரினார்கள் என்று அவர் கூறியிருப்பது உண்மை அல்ல.

சகல முன்னாள் போராளிகளுக்கும் உதவி வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என்பது இத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதே அவருக்கு கூறப்பட்டிருந்தது.

இனியாவது டெனீஸ்வரன் இவ்விதம் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வார் என நம்புகின்றோம்.

தன்னைக் கட்சியில் இருந்து வெளியேற்றினால் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்த கருத்துக்களும் ஊடகங்களில் வெளியாகி இருந்த சூழ்நிலையில், தான் கட்சியில் உறுப்பினராக இருக்கவில்லை என்று முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறத் தொடங்கியிருப்பது விநோதமானது என்றும் ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/politics/01/156076?ref=home-latest

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.