Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியா கொலை வழக்கு: லலித் ஜயசிங்கவின் மறியல் நீடிப்பு

Featured Replies

வித்தியா கொலை வழக்கு: லலித் ஜயசிங்கவின் மறியல் நீடிப்பு

 
 
வித்தியா கொலை வழக்கு: லலித் ஜயசிங்கவின் மறியல் நீடிப்புகோப்புப் படம்
 

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்தது.

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட லலித் ஜயசிங்கவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.ரியால் உத்தரவிட்டார்.

வித்தியா கொலை வழக்கு தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி விசாரணைகளுக்கென அழைக்கப்பட்டிருந்த லலித் ஜயசிங்க அன்றே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 209 ஆவது பிரிவின் கீழ், பிரதான சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தமை, சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவினார் என அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

அதேவேளை வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெறப்பட்ட வாக்குமூலம் இன்று நீதிவானிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டுவரும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜன், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விமான நிலையத்திலிருந்து பாதுகாப்புக் கமராப் பதிவுகளைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.

வழக்குடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அனைவரிடமும் இருந்து எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவி 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பான விசாரணை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெறுகின்றது.

http://newuthayan.com/story/21786.html

  • தொடங்கியவர்

வித்தியா படுகொலை வழக்கால் மாவை சேனாதிராசாவுக்கு நேர்ந்த கதி!

 
 

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமையின்பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் விசாரணைமேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி ஏ.எம்.றியாழ், அடுத்த தவணைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஏனைய இரண்டு பொலிஸ் அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலம் அரச சட்டத்தரணியால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் யாழ் மேல் நீதிமன்றில் ட்ரியல் அட் பார் முறையில் நடந்துவந்த வழக்கில், வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியப்பதிவுகள் நிறைவடைந்து எதிரிகள் தரப்புச் சாட்சியத்திற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/punguduthivu-student-vithya-murder-tna-mp

  • தொடங்கியவர்

சுவிஸ்­குமார் தப்­பித்து சென்ற விவ­காரம் : மாவை எம்.பி. உட்­பட 6 பேரிடம் வாக்­கு­மூ­லங்­களை பெற உத்­த­ரவு

04-c99027bbcac3412e9fe4e23fac8d7877129b4767.jpg

 

(ரி.விரூஷன்)

ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்­று­வரும், சிவ­ லோ­க­நாதன் வித்­தியா பாலியல் வல்­லு­றவு படு­கொலை சம்­ப­வத்தின் பிர­தான சந்­தே­க­ந­ப­ரான சுவிஸ்­குமார் தப்பிச் சென்­றமை தொடர்­பான வழக்கில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் 

 மாவை சேனா­தி­ராஜா உட்­பட ஆறு நபர்­க­ளிடம் பெற்­று­கொள்ள வேண்­டிய வாக்கு மூலத்தை பதிவு செய்து எதிர்­வரும் வழக்கு விசா­ர­ணையின் போது மன்றில் சமர்­பிக்­கு­மாறு ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றம் குற்றப் புல­னாய்வு பிரி­வுக்கு கட்­டளை பிறப்­பித்­துள்­ளது.

மேலும் குறித்த வழக்கு தொடர்­பாக ஏற்­க­னவே சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் உள்­ள­டங்­க­லாக நால்­வ­ரிடம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட வாக்கு மூல­மா­னது மன்றில் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் மேற்­கு­றித்த வாக்­கு­மூ­லங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­படும் வரை இவ் வழக்கில் கைது செய்­யப்­பட்­டுள்ள சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜய­சிங்­கவை எதிர்­வரும் 04ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க மன்று உத்­த­ர­விட்­டுள்­ளது.

புங்­கு­டு­தீவு பாட­சாலை மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தியா கூட்டு பாலியல் வல்­லு­றவு செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட வழக்கு தொடர்­பாக பிர­தான சந்­தே­க­ந­ப­ரான சுவிஸ்­குமார் பொலி­ஸா­ரது கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து தப்பிச் சென்­றி­ருந்தார். இதன்­பின்னர் அவர் கொழும்பில் விடு­தி­யொன்றில் வைத்து கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். இச் சம்­பவம் தொடர்­பாக தனி­யா­ன­தொரு வழக்­கா­னது ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்டு அது தொடர்­பாக சம்­பவ காலப்­ப­கு­தியில் வட­மா­கா­ணத்­திற்கு பொறுப்­பா­க­வி­ருந்த சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித்­ஜ­ய­சிங்க கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இதனை விட சுவிஸ்­குமார் தப்பிச் சென்ற விவ­கா­ரத்தில் தொடர்­பு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் உப பொலிஸ் பரி­சோ­தகர் எஸ்.சிறி­கஜன் தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில் அவரை கைது செய்­யவும் மன்­றினால் பிடி­யானை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றான நிலையில் நேற்­றைய தினம் குறித்த வழக்­கா­னது ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்­னி­லையில் விசா­ர­ணைக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

இதன்­போது குற்றப் புல­னாய்வு பிரிவு சார்­பாக அரச சட்­ட­வாது நாக­ரட்ணம் நிஷாந் முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார். சந்­தே­க­ந­ப­ரான லலித்­ஜ­ய­சிங்க சார்பில் வைர­முத்து சுபாஸ்­கரன், சம்பத் விதா­ரன, துசித் ஜோன்­தாசன் ஆகி­யோ­ருடன் சமிந்த அத்­து­கொ­ரல முன்­னி­லை­யா­கி­ருந்தார். அத்­துடன் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை விசா­ரனை பிரிவு பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலீஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்­வாவும் மன்றில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார்.

நேற்­றைய தினம் வழக்கின் ஆரம்­பத்தில் அரச சட்­ட­வாதி இவ் வழக்கு தொடர்­பாக சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் மற்றும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் உள்­ள­டங்­க­ளாக நால்­வ­ரிடம் பெற்­றுக்­கொண்ட வாக்கு மூலத்தை மன்றில் சமர்­பித்­தி­ருந்தார்.

இதனை தொடர்ந்து சந்­தே­க­நபர் சார்­பு­சட்­டத்­த­ர­ணிகள் குறித்த பிரதி பொலிஸ்மா அதிபர் சம்­பவ காலத்தின் போது சுவிஸ்­குமார் என்­பவர் இவ் வழக்கில் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்­லாத வகையில் அவ­ரது கட­வு­சீட்டு இலக்­கத்தை முடக்­கு­வ­தற்கு குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­திற்கு அறி­வுக்­கு­மாறு பொலி­ஸா­ருக்கு அறி­வு­றுத்­தி­யி­ருந்தார். இவ்­வா­றன நிலையில் சுவிஸ்­கு­மாரை கைது செய்­யவே இவர் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார். என வாதிட்­ட­துடன் இவர் இவ் வழக்­குடன் தொடர்­பு­பட்­டுள்ளார் என கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தற்கு ஆட்­சே­பனை தெரி­வித்து அவரை பிணையில் விட கோரி­யி­ருந்­தார்கள்.

இதனை தொடர்ந்து அரச சட்­ட­வா­தி­யான நாக­ரட்ணம் நிஷாந் இவ் வழக்கு தொடர்­பாக விசா­ர­ணைகள் இடம்­பெற்­று­வரும் நிலை­யிலும் இன்­னமும் இவ் வழக்கு தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராசா உட்­பட ஆறு பேரிடம் வாக்கு மூலங்கள் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யி­ருப்­ப­த­னாலும் அவற்­றிற்கு இடை­யூறு ஏற்­ப­டக்­கூ­டிய சந்­தர்ப்­பங்கள் உள்­ளது என்­ப­த­னாலும் பிரதி பொலிஸ்மா அதி­ப­ருக்கு பிணை வழங்­கு­வ­தற்கு ஆட்­சே­பனை தெரி­வித்­தி­ருந்தார்.

இதன்­போது சந்­தே­க­நபர் சார்பு சட்­டத்­த­ர­ணிகள் இவ் வழக்கு தொடர்­பான விசா­ர­னைகள் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பே ஆரம்­பித்­து­விட்ட நிலையில் தற்­போது இது தொடர்­பாக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றது. வாக்கு மூலங்கள் பதிய வேண்­டி­யுள்­ளது என காரணம் கூறு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்ற விதத்­திலும், விசா­ர­னைகள் முடி­வ­டை­ய­வில்லை, என்­ப­தற்­காக பிணை வழங்க முடி­யாது என கூற முடி­யாது எனவும் வாதிட்­டனர். மேலும் இவ் வழக்கு தொடர்­பாக உப­பொலிஸ் பரி­சோ­தகர் சிறி­கஜன் என்­பவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்­பட்ட வேளை அவரை கட்­டு­நா­யக்கா சர்­வ­தேச விரான நிலை­யத்தில் வைத்து திருப்­பி­ய­னுப்­பி­ய­தாக கூறப்­படும் நிலையில் அவர் அங்கு வந்து சென்­றமை தொடர்­பான வீடியோ காட்­சி­களை மன்று பெற்­றுக்­கொள்ள வேண்டும் எனவும் மன்றில் தெரி­வித்­தனர்.

இதற்கு அரச சட்­ட­வா­தி­யான நாக­ரட்ணம் நிஷாந் தாம் கடந்த வழக்கு தவ­ணையின் போது கூறி­ய­வாறு சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளது வாக்கு மூலங்­களை பெற்று மன்­றுக்கு சமர்­பித்­துள்­ள­தா­கவும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ரா­சா­விடம் வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொள்ள முயன்ற போதும் அவர் அதற்­கான நேரத்தை ஒதுக்கித் தரா­மை­யினால் அவ­ரிடம் வாக்கு மூலத்தை பெற்­றுக்­கொள்­ள­வில்லை எனவும் மன்றில் தெரி­வித்தார். அத்­துடன் இவ் வழக்கு தொடர்­பாக மாவை சேனா­தி­ராசா உட்­பட இன்­னமும் நான்கு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் ஒரு சிவில் நபர் ஆகி­யோ­ரிடம் வாக்கு மூலம் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

இரு­த­ரப்பு வாதங்­க­ளையும் கவ­னத்­தி­லெ­டுத்த மன்­றா­னது குறித்த வழக்கு தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராசா உள்­ள­டங்­க­ளாக ஆறு பேரி­டமும் வாக்கு மூலங்­களை பதிவு செய்து எதிர்­வரும் வழக்கு தவ­ணையில் மன்றில் சமர்­பிக்க வேண்டும் எனவும், அவற்றை பரி­சி­லித்து மன்­றா­னது நட­வ­டிக்­கைகள் எடுக்­கு­மெ­னவும், சிறி­கஜன் கட்­டு­நா­யக்கா விமான நிலை­யத்­திற்கு சென்­றமை தொடர்­பாக கண்­கா­ணிப்பு கமரா வீடியோ பதி­வினை பெற்று மன்­றுக்கு சமர்பிக்குமாறும் மன்றானது கட்டளை பிறப்பித்திருந்தது.

அத்துடன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிரேஸ் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித்யசிங்கவை எதிர்வரும் மாதம் 04ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை கடந்த வழக்கு தவனையின் போது குறித்த வழக்கினை விசாரணை செய்வதற்கு இந் நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் உண்டா என்பது தொடர்பாக ஆராய மன்று உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்று மன்றில் இரண்டு தரப்பு சட்டத்தரணிகளும் இந் நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் உண்டென ஏற்றுக்கொண்டிருந்தனர். இதனையடுத்து வழக்கு நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.