Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வருடன் இணையும் விந்தன்! சீ.வி.விக்கினேஸ்வரன் கடிதம்

Featured Replies

ரெலோ­வின் பரிந்­து­ரை­யைப் புறந்­தள்ளி அமைச்­ச­ராக குண­சீ­லனை நிய­மிக்க விக்கி தீர்­மா­னம்

 
ரெலோ­வின் பரிந்­து­ரை­யைப் புறந்­தள்ளி அமைச்­ச­ராக குண­சீ­லனை நிய­மிக்க விக்கி தீர்­மா­னம்
 

ரெலோ சார்­பில் க.விந் தனை அமைச் ச­ராக நிய மிக்­கு­மாறு அந்­தக் கட்சி பரிந்து­ரைத்­துள்­ள­ போ­தும் அத­னைப் புறந் தள்­ளிய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன், மன்­னார் மாவட்­டத்­தைச் சேர்ந்த ரெலோ­வின் உறுப்­பி­ன­ரான ஜி.குண­ சீ­லனை சுகா­தார அமைச் ச­ராக நிய­மிக்கு­மாறு ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரேக்கு கடி­தம் அனுப்­பி ­யுள்­ளார்.

வடக்கு மாகாண அமைச் சர்­கள் த.குருகுல­ராசா, பொ.ஐங்­க­ர­நே­சன் இரு­வ­ரும் முத­ல­மைச்­ச­ரின் விசா­ர­ணைக் குழு­வால் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கப்­பட்ட பின்­னர், ஒட்­டு­மொத்த அமைச்­ச­ர­வை­யுமே மாற்ற வேண்­டும் என்­பதை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்த வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அதில் விடாப்­பி­டி­யா­க­வும் நின்று கொண்­டார்.

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தமிழ் அர­சுக் கட்­சி­யைப் பழி­வாங்­கு­கின்­றார் என்று தெரி­வித்து அந்­தக் கட்சி, வடக்கு அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­ப­தில்லை என்ற முடிவை எடுத்­தது. வடக்கு அமைச்­ச­ர­வை­யில் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த ப.சத்­தி­ய­லிங்­கம் தனது பத­வி­யி­லி­ருந்து வில­கும் முடிவை முத­ல­மைச்­ச­ருக்கு அறி­வித்­தார். அதனை முத­ல­மைச்­சர் ஏற்­றுக் கொண்­டார்.

மற்­றொரு அமைச்­ச­ரான பா.டெனீஸ்­வ­ரன் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து விலக மாட்­டேன் என்று தெரி­வித்­தி­ருந்­தார். அத­னால் அவரை ரெலோ­வி­லி­ருந்து ஆறு மாதங்­கள் இடை­நி­றுத்­து­வ­தா­க­வும், தமது கட்சி சார்­பில் க.விந்­தனை அமைச்­ச­ராக நிய­மிக்­கு­மா­றும் முத­ல­மைச்­ச­ரி­டம் கோரி­யி­ருந்­தது. ஆனா­லும் அந்­தக் கட்­சி­யி­னுள் ஜி.குண­சீ­லனை நிய­மிக்க வேண்­டும் என்று ஒரு தரப்பு வேண்­டு­கோள் முன்­வைத்­தி­ருந்­தா­லும், கட்­சி­யின் இறுதி முடி­வாக க.விந்­தனே பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ரெலோ­வின் முடி­வைப் புறந்­தள்ளி, ஜி.குண­சீ­லனை சுகா­தார அமைச்­ச­ராக நிய­மிப்­ப­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரேக்கு நேற்­றுக் காலை கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

http://newuthayan.com/story/21702.html

  • தொடங்கியவர்

குணசீலனுக்கு அடித்தது யோகம், விந்தனிற்கோ ஏமாற்றம்

 
 
 
 
 
 
 
 
599c0deebed14-IBCTAMIL.jpg
599c0ea11ad8b-IBCTAMIL.jpg
599c0ea15d1fa-IBCTAMIL.jpg

வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்திய கலாநிதி குணசீலனின் பெயரினை பரிந்துரைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

வடமாகாண சபை சுகாதார அமைச்சராக தன்னை நியமிக்குமாறு விந்தன் கனகரட்ணம் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் ரெலோ கட்சியும் விந்தனிற்கு வடமாகாண அமைச்சு பதவி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் பலருடன் கலந்துரையாடியதற்கு அமைய சுகாதார அமைச்சிற்கு பொருத்தமானவர் தொழில் ரீதியாக உரிய தகுதியுடையவர் என்ற அடிப்படையில் மன்னார் மாவட்டத்தை பிரதிநித்துவப் படுத்தும் வைத்திய கலாநிதி குணசீலனை சுகாதார அமைச்சாக தெரிவு செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே .இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநித்துவப் படுத்தி மாகாண சபை உறுப்பினர் சிவநேசனுக்கு அமைச்சு பதவி ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் வடமாகாண போக்குவரத்து அமைச்சு தனது அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனை உரியவாறு தொழிற் திறனோடு தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறும் முதலமைச்சர் விந்தன் கனகரட்ணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Gunaseelan-as-new-minister

புதிய அமைச்சரவையின் பெயரில் விந்தன் கனகரத்தினத்தை உள்ளடக்க முடியாமைக்கு வருந்துகின்றேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ந. ஸ்ரீகாந்தாவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறும், அவருக்குப் பதிலாக எமது கட்சியின் சார்பில் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள விந்தன் கனகரத்தினத்தை நியமிக்குமாறும் வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரனுக்குத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா நேற்று மாலை அவசர கடிதம் அனுப்பியிருந்தார்.

குறித்த கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையில் வடமாகாண முதலமைச்சர் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

காரணங்களை அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். அக் கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன். எனினும் விந்தன் கனகரத்தினம் எமக்கு வேண்டிய ஒருவர் அவரின் சேவை எமக்குக் கட்டாயமாக வேண்டும்.

அந்த வகையில் அவரை என் அமைச்சுடன் சேர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அழைத்துள்ளேன் எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/politics/01/156056?ref=home-feed

  • தொடங்கியவர்
பரிந்துரைக்காத ஒருவரை அமைச்சராக்க டெலோ எதிர்ப்பு
 

“வட மாகாண சபையில் டெலோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியை, டெலோவின் உத்தியோகபூர்வ பரிந்துரையை மீறி குணசீலனுக்கு வழங்குவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவது, டெலோவுக்குள் கடும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது” என, டெலோ தெரிவித்துள்ளது. 

இது குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

“அமைச்சர் பா.டெனிஸ்வரன் டெலோவின் கொள்கைகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் அப்பால் சென்று வடக்கு மாகாண முதலமைச்சருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் முகமாக முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையொப்பமிட்டிருந்தார்.  

“மேலும், முதலமைச்சரால் இரண்டாம் முறை நியமிக்கப்படவிருந்த ஊழல் மற்றும் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான விசாரணைக் குழுவுக்கு முகங்கொடுப்பதிலும் மறுப்புத் தெரிவித்து வந்தார்.  

“இந்நிலையில் முதலமைச்சரின் பணிக்குத் தடையாக இருக்கும் பா. டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அப்பதவிக்கு டெலோவினால் பரிந்துரைக்கப்படும் வேறு ஒருவரை நியமிக்குமாறு முதலமைச்சரை உத்தியோகபூர்வமாக டெலோ கேட்டிருந்தது. அதற்கு முதலமைச்சரும் தாமதங்கள் இன்றி ஆமோதித்து கடிதப் பரிமாற்றங்களில் ஈடுபட்டார். 

“டெலோ சார்பான புதிய அமைச்சரை நியமிப்பதில் டெலோ பல கூட்டங்களைக் கூட்டி ஆராய்ந்திருந்தது. கடந்த ஜூலை 16ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற டெலோவின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் அமைச்சராக நியமிக்கப்படக்கூடிய உறுப்பினர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் தற்போது அமைச்சர் வாரியத்துக்கு நியமிக்கப்படுவதற்கு முதலமைச்சரால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஊடகங்களின் தெரிவிக்கும் குணசீலனின் பெயர், பல குற்றச்சாட்டுகளின் காரணங்களால் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனால் முற்றாக நிராகரிக்கப்பட்டது. 

“மிகுதியாக இருக்கின்ற டெலோவின் வட மாகாண சபை உறுப்பினர்களில் விந்தனுடைய பெயரும் சிவாஜிலிங்கத்தின் பெயரும் கடந்த மாதம் வவுனியாவில் நடைபெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டு வாக்கெடுக்கப்பட்டது. இதன்போது, ஒன்பது அரசியல் உயர்பீட உறுப்பினர்களில் கலந்துகொண்ட எட்டு பேரில், ஐந்து பேர் விந்தன் கனகரட்ணத்தையும் மிகுதி மூவர் சிவாஜிலிங்கத்துக்கும் வாக்களித்தனர். 

“இதன் பின்னர், டெலோவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறிகாந்தா, முதலமைச்சருக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டதன் மூலம், ஊடகங்களுக்கு விந்தனை அமைச்சராக்கப் பரிந்துரைப்பது பற்றிய தகவல் வெளியானது.  

“இதன் பின்னர், இம்மாதம் ஓகஸ்ட் 20ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற டெலோவின் தலைமைக் குழுக்கூட்டத்திலும் 14 பேர் கலந்துகொண்டு விந்தனை அமைச்சராக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அம்முடிவும் முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

“டெலோவின் பரிந்துரைகளும் முடிவுகளும் இவ்வாறாக இருக்கையில், முதலமைச்சர் குணசீலனை டெலோவின் விருப்புக்குப் புறம்பாக அமைச்சராக நியமிக்கின்றமை டெலோவுக்குள் கடும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பரிந்துரைக்காத-ஒருவரை-அமைச்சராக்க-டெலோ-எதிர்ப்பு/71-202668

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரனை எதிர்க்க தயாராகும் ரெலோ

 

விக்னேஸ்வரனை எதிர்க்க தயாராகும்  ரெலோ

வடமாகாண சபையின் சுகாதார அமைச்சராக வைத்திய கலாநிதி குணசீலனை நியமிக்க முதலமைச்சர் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

வடமாகாண சபையின் சுகாதார அமைச்சராக வைத்திய கலாநிதி குணசீலனை நியமிக்க தீர்மானித்துள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதிலளித்து முதலமைச்சருக்கு, ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் அமைச்சரவை நியமன விடயத்தில் தமது கட்சியின் பரிந்துரைக்கு மாறாக, தமது கட்சியைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரை அமைச்சராக தெரிவு செய்துள்ளமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரெலோ கட்சியின் பெயரில் முதலமைச்சரின் தெரிவாக எவரையும் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ள தாம் தயாரில்லை. 

ரெலோ கட்சியின் சார்பில் மாகாணசபை உறுப்பினர் ஒருவரை நீங்களே தேர்ந்தெடுத்து அமைச்சராக்குவது குறித்த நியமனத்தை பலவந்தமாக திணிக்க முயற்சிப்பதாகவே முடியும்.

இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுமதிக்கவும் மாட்டோம்.

இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை. நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த அரசியல் தவறை நிவர்த்தி செய்ய  முன்வரவேண்டும்.

வடமாகாணசபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்தில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயலாற்றுவதற்கு இது அவசியமானது.

எமது கட்சிக்கு சுயமரியாதை உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் எந்தக் காரணத்துக்காகவேனும், அதனை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக  ஸ்ரீகாந்தா முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/TELO-protest-to-the-CM-s-decision-to-Gunaselan

  • தொடங்கியவர்

வட மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள அமைச்சுக்களுக்கு குணசீலன், சிவநேசன் தெரிவு

 


வட மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள அமைச்சுக்களுக்கு குணசீலன், சிவநேசன் தெரிவு
 

வட மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கு மாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி குணசீலன் மற்றும் எஸ்.சிவநேசன் ஆகியோரை தெரிவு செய்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்திற்கு இன்று முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் சிபாரிசை ஏற்று அமைச்சுப் பதவியொன்றை வழங்க முடியாமைக்கு வருந்துவதாகவும் வட மாகாண முதலமைச்சர், விந்தன் கனகரத்தினத்திற்கு அறிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சை எடுத்து நடத்துவதற்கு போதிய அனுபவ ஞானம் உள்ளதை வெளிப்படுத்தியமைக்காக அவரைப் பாராட்டியுள்ள முதலமைச்சர், பலருடன் கலந்தாலோசித்த பின்னர் சுகாதார அமைச்சுக்கு தொழில் ரீதியாக உரிய தகைமைகள் உடையவரே பொருத்தமானவர் என்ற முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், மாகாண போக்குவரத்து அமைச்சை உரியவாறு தொழிற்திறனுடன் முன்னெடுப்பதற்கு தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விந்தன் கனகரத்தினத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதியுடன் மற்றுமொரு கடிதத்தையும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தாவிற்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

வட மாகாண அமைச்சரவையில் இருந்து பா.டெனீஸ்வரனை ஏற்கனவே நீக்கிவிட்டதாக ஶ்ரீகாந்தாவிற்கு முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

http://newsfirst.lk/tamil/2017/08/வட-மாகாணத்தில்-வெற்றிடமா/

  • தொடங்கியவர்

ஒரு­போதும் ஏற்கோம் : ரெலோ திட்­ட­வட்டம்

 

(நமது நிருபர்)

எமது கட்­சியின் பரிந்­து­ரைக்கு மாறாக இன்­னொரு உறுப்­பி­னரை எந்த கார­ணத்­திற்­கா­க­வேனும் அமைச்­ச­ராக நிய­மிப்­ப­தற்கு நீங்கள் முயன்றால் அதனை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம். எனவே நீங்கள் எடுத்­துள்ள முடி­வினை மீள் பரி­சீ­லனை செய்­ய­வேண்டும் என்று ரெலோ அமைப்பின் செய­லாளர் என். சிறி­காந்தா நட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.  

தங்­களின் அமைச்­ச­ர­வையில் நிய­மனம் செய்­யப்­ப­டு­வ­தற்­காக எமது கட்­சி­யினால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட மாகா­ண­சபை உறுப்­பினர் விந்தன் கன­க­ரத்­தி­னத்­துக்கு குறித்த நிய­மனம் விடயம் தொடர்பில் தாங்கள் அனுப்­பி­யி­ருந்த கடி­தத்தின் பிர­தியை எனக்கும் அனுப்பி வைத்­த­மைக்கு நன்றி தெரி­விக்­கின்றேன் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அமைச்­ச­ரவை விடயம் தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வ­ர­னுக்கு அனுப்­பிய கடி­தத்­தி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அக்­க­டி­தத்தில் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

 எமது கட்­சியின் பரிந்­து­ரைக்கு மாறாக எமது கட்­சியை சேர்ந்த இன்­னொரு உறுப்­பி­னரை எந்த கார­ணத்­திற்­கா­க­வேனும் நீங்கள் தேர்ந்­தெ­டுத்­தி­ருந்­தாலும் அதனை எமது கட்சி ஒரு போதும் ஏற்­கொள்­ளாது என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.

ஒரு வேளை எம்மால் பிரே­ரிக்­கப்­ப­டு­பவர் தொடர்பில் ஏதா­வது மன­சங்­கடம் தங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருப்பின் அதனை தெரி­வித்­தி­ருந்தால் அதற்­கான கார­ணத்தை ஆராய்ந்து எமது நிய­ம­னத்தை மறு­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தி­யி­ருப்போம். ஆனால் எம்மால் பிரே­ரிக்­கப்­ப­டுவர் தொடர்பில் எவ்­வித மன­சங்­க­டமும் தங்­க­ளுக்கு இல்லை என்­பது தௌிவான உண்மை. தங்­களின் குறித்த கடி­த­மும்­அ­த­னையே புலப்­ப­டுத்­து­கின்­றது. இந்­நி­லையில் எங்கள் பெயரில் உங்கள் தெரி­வாக எவ­ரையும் அமைச்­ச­ர­வையில் ஏற்­றுக்­கொள்ள தயா­ரில்லை.

 நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் வட­மா­காண அமைச்­ச­ரவை அமைக்­கப்­பட்­ட­போது எமது கட்­சியின் சார்­பிலும் ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் சார்­பிலும் அதில் நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் சம்­பந்­தப்­பட்ட கட்­சி­களால் பிரே­ரிக்­கப்­பட்­ட­வர்கள் அல்லர். மாறாக உங்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்கள். அத­னு­டைய விளை­வுகள் நாம் எல்­லோ­ரும்­அ­றிந்­த­வையே.

இப்­பெர்­ழுது எமது கட்­சியின் சார்பில் எமது மாகாண சபை உறுப்­பினர் ஒரு­வரை நீங்­களே தேர்ந்­தெ­டுத்து அமைச்­ச­ராக்­கு­வது என்­பது குறித்த நிய­ம­னத்தை எம்­மீது பல­வந்­த­மாக திணிக்க முயற்­சிப்­ப­தா­க­வுள்­ளது. இதனை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அனு­ம­திக்­கவும் மாட்டோம். இப்­பொ­ழுதும் காலம் கடந்­து­வி­ட­வில்லை. நிகழ்ந்து கொண்­டி­ருக்கும் இந்த அர­சியல் தவறை நிவர்த்தி செய்ய நீங்கள் முன்­வ­ர­வேண்டும். வட­மா­காண சபையின் எஞ்­சி­யுள்ள பத­விக்­கா­லத்தில் நாம் எல்­லோரும் ஒன்­றுப்­பட்டு அவ­சி­ய­மாகும்.

எமது கட்­சிக்கு சுய­ம­ரி­யாதை உண்டு. எந்த சூழ்நிலையிலும்,அதனை நாங்கள் விட்டுகொடுக்க மாட்டோம் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். தமிழ் மக்களின் தகவலுக்காக குறித்த கடிதத்தையும் அதனுடன் சேர்த்து இன்று நீங்கள் எனக்கு அனுப்பியிருந்த இன்னுமொரு கடிதத்தையும் ஊடகங்களுக்கு அனுப்புகிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.