Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சிக் கிளையை நான் அழைக்கவில்லை!

Featured Replies

தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளைக்கிளைக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை அவ்வாறு இருக்கும்போது தாங்கள் நிகழ்வினை பகிஸ்கரிப்பதாக கூறியிருப்பது நகைப்புக்குரியது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் முயற்சியினால் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது நினைவுத்தூபியை திறந்துவைத்து மேலும் உரையாற்றிய அவர்,

கடந்த காலத்தில் இவ்விடத்திற்கு வந்து மிகவும் கவலையுடன் சிதைந்த நினைவிடத்திலேயே விளக்கேற்றிய நிலையிருந்தது.

இப்பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் ஒருவர் வைபர் குறுப்பில் விடுத்தவேண்டுகோளினையேற்று இந்த நினைவுத்தூபியை புனரமைக்க உடனடியாக நடவடிக்கையெடுத்தேன். இந்த தூபியை புனரமைப்பு செய்வதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இங்கு எனக்கு புதிய பிரச்சினைவந்தது. மக்கள் பிரதிநிதிகளுக்கும் இப்பகுதியில் உள்ள சில கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியவர்களுக்கு மட்டுமே இந்த நிகழ்வுக்கு நான் அழைப்புவிடுத்திருந்தேன்.

இருந்தபோதிலும் தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளை இந்த நிகழ்வினை பகிஸ்கரிப்பதாக கூறியிருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. நான் அவர்களை அழைக்கவேயில்லை. நான் அழைக்காதவர்கள் எவ்வாறு பகிஸ்கரிப்பார்கள்?. நான் அழைக்காதவர்கள் எவ்வாறு பகிஸ்கரிப்பார்கள்?

நான் இந்த நிகழ்வுக்கு தமிழரசுக்கட்சி கிளையினையும் அழைக்கவில்லை, எனது கட்சியான டெலோவின் கிளையினையும் அழைக்கவில்லை.

வேறு எந்த கட்சி கிளையினையும் நான் அழைக்கவில்லை. இந்த நிகழ்வினை எக்காரணம் கொண்டு அரசியலுக்காக நான் பயன்படுத்தவில்லை. எனது அரசியல்வாழ்கையில் இவ்வாறான விடயங்களை நான் அரசியலுக்கு பயன்படுத்துவதில்லை.

இறந்தவர்களை வைத்து அரசியல் நடத்துவதற்கு நான் தயாராக இல்லை. சில கட்சிகளும் அதன் பிரதேச கிளைகளும் இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யலாம். அந்த அரசியலை நாங்கள் ஒருபோதும் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/politics/01/156105?ref=homepage-manithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.