Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி - கூட்டமைப்பு பேச்சு! இராணுவம் வெளியேற 15 கோடி ரூபா! அமைச்சரவை அனுமதி

Featured Replies

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி - கூட்டமைப்பு பேச்சு! இராணுவம் வெளியேற 15 கோடி ரூபா! அமைச்சரவை அனுமதி

 

கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்உயர்குழு நேற்று ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புடன் பேச்சுக்களில்ஈடுபட்டது.

கேப்பாபிலவுக் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்தினருக்கு 14 கோடி 80 லட்சம்ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில்தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு நேற்று மாலை 4.30 மணி தொடக்கம் சுமார் ஒரு மணி நேரம்நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியுடன் இராணுவத் தளபதி மற்றும் முல்லைத்தீவு, யாழ். படைகளின் தளபதிகளும்இந்தச் சந்திப்பில் பங்குபற்றினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நேற்றைய சந்திப்பில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் சுகவீனம் காரணமாகப் பங்குபற்றவில்லை. நாடாளுமன்றஉறுப்பினர்களான மாவை சேனாதிராஜாவும், எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டனர்.

கேப்பாப்பிலவில் 111 ஏக்கர் காணிகளை விடுவித்து, புதிய இடத்தில் கட்டிடங்கள்அமைத்து இடம்பெயர்வதற்காக இராணுவம் கோரிய 14 கோடி 80 லட்சம் ரூபா நிதியைவழங்குவதற்கு நேற்றுக் காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்வழங்கப்பட்டது எனஜனாதிபதி குறிப்பிட்டார்.

நிதி வழங்கப்பட்டு விட்டதால் 111 ஏக்கர் காணியிலிருந்து அடுத்த ஆறுமாதத்துக்குள் - இயன்ற வரை விரைவில் படைகள் விலக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அதற்கு மேலும் அதிகளவில் காணிகள் விடுவிக்கப்படும் என்றுசுட்டிக்காட்டப்பட்டது.

கேப்பாபிலவில் எஞ்சியிருக்கும் 70 ஏக்கர் காணியில் அருகில் நந்திக் கடலில்மின்பிடித் தொழில் செய்வதற்கு இடமளிக்கும் விதத்தில் சில பிரதேசங்களைஇப்போதைக்கு விட்டுத்தரவும் படைத் தரப்பில் உறுதி கூறப்பட்டது.

இதுபோல மயிலிட்டி உட்பட வெவ்வேறு இடங்களிலும் காணி விடுவிப்பு இடம்பெறும்எனவும் தளபதிகள் தெரிவித்தனர்.

மயிலிட்டியிலும், நந்திக் கடல் பகுதியிலும் கடற்றொழில் செய்வோருக்கு வாழ்வாதாரஉதவிகளை ஜனாதிபதிக்குக் கீழ் இருக்கும் தேசிய நல்லிணக்க அமைச்சு ஊடாகவழங்குவது பற்றியும் நேற்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது என அறியவந்தது

http://www.tamilwin.com/property/01/156124?ref=home-feed

  • தொடங்கியவர்

கேப்பாப்புலவில் இராணுவத்தினரை இடமாற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு

03-847f3644337dfb56f407671f76847e9a547e5d07.jpg

 

சில மாதங்களுக்குள் விடுவிக்கப்படும்; கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி உறுதி
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

கேப்­பா­ப்பு­லவில் உள்ள படை­யினரை இட­மாற்றம் செய்­வ­தற்­காக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் ஒரு ­சில மாதங்­களில் அவர்கள் அந்­நி­லங்­களை விடு­விப்­பார்கள். பொது­மக்கள் மீன்­பிடித் தொழிலில் ஈடு­ப­டு­வ­தற்கும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தோடு வாழ்வா­தார உத­வி­களை வழங்­கு­வ­தற்­கு­ரிய  நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் தெரி­வித்­துள்ளார். 

பாரா­ளு­மன்ற வளா­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடை­யி­லான சந்­திப்பு இடம்­பெற்­றது. இச்­சந்­திப்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ரா­ஜாவும், கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரனும் கலந்­து­கொண்­ட­தோடு இரா­ணு­வத்­த­ள­பதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக்க தலை­மையில் முல்­லைத்­தீவு, யாழ் மாவட்ட கட்­டளைத் தள­ப­தி­களும் பங்­கேற்­றனர்.

இதன்­போது முதலில் கேப்­பா­பு­லவு மக்கள் தொடர்ச்­சி­யாக போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்ற நிலையில் பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான நிலத்­தி­லி­ருந்து படை­யினர் வௌியே­று­வ­தற்கு காணப்­படும் தாம­தங்கள் என்ன? என கூட்­ட­மைப்பு எம்.பிக்கள் கேள்வி எழுப்­பி­ய­தோடு எதிர்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் குறித்த விடயம் சம்­பந்­த­மாக ஜனா­தி­பதி, பிர­தமர், படைத்­த­ரப்­பினர், உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு எழு­திய கடி­தங்கள் அவற்­றுக்­கான பதில்கள் குறித்தும் சுட்­டிக்­காட்­டி­னார்கள்.

இதன்­போது பதி­ல­ளித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கேப்­பா­பு­லவில் 111ஏக்­கர்­களை விடு­விப்­ப­தற்­காக படை­யி­ன­ருக்கு 148மில்­லியன் ரூபாவை வழங்­கு­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் இன்று(நேற்று) அமைச்­ச­ர­வையில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே படை­யினர் மாற்று இடத்­திற்கு விரைந்து செல்லும் செயற்­பா­டு­களை மேற்­கொள்­ள­வுள்­ளனர் என்றார்.

அத­னை­ய­டுத்து நாங்கள் இன்னும் ஒரு­சில மாதங்­களில் மாற்று இடத்­திற்கு செல்­ல­வுள்ளோம். மக்­களின் காணி­களை விரைவில் விடு­விப்போம் மேலும் கேப்­பா­பு­லவில் ஏனைய 70ஏக்கர் நிலத்­தினை விடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­க­கை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ள­தோடு பொது மக்கள் மீன்­பிடித் தொழிலில் ஈடு­ப­டு­வ­தற்­கான அனு­ம­தி­யையும் வழங்­கு­கின்றோம் என படைத்­த­ரப்­பினர் சார்பில் தெரி­விக்­கப்­பட்­டது.

இச்­ச­ம­யத்தில் அவ்­வாறு மீன்­பி­டிப்­ப­தற்­கான அனு­மதி வழங்­கி­னாலும் அவர்கள் தொழில் புரி­வ­தற்­கான ஏது நிலை­மைகள் எதுவும் இல்லை. அவர்­க­ளி­டத்தில் உப­க­ர­ணங்கள் இல்லை. அனைத்­தையும் இழந்த நிலை­மையில் தான் இருக்­கின்­றார்கள். ஆகவே அவர்­க­ளுக்கு வாழ்­வ­தார உத­வி­களை வழங்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என கூட்­ட­மைப்பு எம்.பிக்கள் குறிப்­பிட்­டனர்.

அத்­துடன் மயி­லிட்டி துறை­மு­கப்­ப­குதி விடு­விக்­கப்­பட்­டாலும் அங்கு மக்கள் தங்­கி­யி­ருந்து தொழில் புரி­வ­தற்­கான நிலை­மைகள் இல்லை. ஆகவே அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளையும் ஜனா­தி­பதி விரைந்து எடுப்­ப­தோடு அந்­தப்­ப­குதி மக்­க­ளுக்­கான மீன்­பிடி உப­க­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­க­கை­ளையும் எடுக்­க­வேண்டும் என்றும் கூட்­ட­மைப்பு எம்.பிக்கள் கோரி­னார்கள்.

இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனக்கு கீழ் காணப்­படும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான அமைச்சின் ஊடாக நட­வ­டிக்­கை­களை விரைந்து எடுப்­ப­தா­கவும் மயி­லிட்டு உட்­பட வடக்கில் ஏனைய பகு­தி­களில் படைத்­த­ரப்­பி­ன­ரி­டத்தில் உள்ள காணி­களை படிப்படியாக விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து இரணைதீவில் கடற்படையினர் தங்கியுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது குறித்தும் கூட்டமைப்பு எம்.பிக்களால் கேள்வி எழுப்பபட்டது. இச்சமயத்தில் கடற்படைத்தளபதி சமுமளித்திருக்காத நிலையில் அவருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள ராடரை மாற்று இடமொன்றுக்கு கொண்டு செல்வது குறித்து பரிசீலனைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.