Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்துக்குப் பூட்டு

Featured Replies

யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்துக்குப் பூட்டு

 
யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்துக்குப்  பூட்டு
 

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம் இன்று தொடக்கம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு யாழ்.பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடத்தில் கல்வி பயின்று வந்த விஜயரத்னம் விந்துஷன் என்ற மாணவன் கோண்டாவில் விடுதியில் இருந்த போது டெங்குத் தொற்றால் பீடிக்கப்பட்டு கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மேலும் 09 மாணவர்கள் டெங்குத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

டெங்கு நோய் பரவுவதையடுத்து விஞ்ஞானப் பீடத்தினை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் ஒன்றிணைந்து பீடாதிபதி எம்.குகநாதனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியாடி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக பீடாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

http://newuthayan.com/story/22152.html

  • தொடங்கியவர்

டெங்கினால் பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை  : யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

 

டெங்கு நோய் தொடர்பில்இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

jaffna-hospital.jpg

டெங்குத் தொற்றால் பல்கலைக்கழக மாணவனொருவன் இறந்ததைதையடுத்து யாழ்.பல்கலைக்கழத்தின் விஞ்ஞான பீடம் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து இது தொடர்பில் நாம் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

டெங்கு நோய் தொடர்பில் இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை.

 

விஜயரட்ணம் விந்துசன் என்ற இளைஞன் இருதய அழற்சி நோயால் உயிரிழந்துள்ளதாகவும் இருப்பினும் அவரது இறப்பபுத் தொடர்பான மேலதிக பரிசோதனைக்காக அரவரது உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 2014 ஆம் ஆண்டு 1039 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த 2015 1309 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த 2016  ஆம் ஆண்டு 670 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் இவ்வாண்டு ஆரம்பம் முதல் 21 ஆம் திகதி 8 ஆம் மாதம் வரை 1702 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலையில் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23500

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.