Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவேறியது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்ட வரைவு

Featured Replies

நிறைவேறியது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்ட வரைவு

 
நிறைவேறியது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்ட வரைவு
 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட வரைபு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்ட வரைவுக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ளன. 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த சட்ட வரைவுக்காக தினேஷ் குணவர்தன முன்வைத்த திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.

ஆயினும் சட்ட வரைபு மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேவேளை கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

http://newuthayan.com/story/22818.html

  • தொடங்கியவர்

உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

 

120 பேர் ஆதரவு ; எதிராக வாக்களிப்பில்லை; 44 பேர் பங்கேற்கவில்லை

(எம்.எம்.மின்ஹாஜ்)

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்தசட்டமூலம் பெரும்பான்மை வாக்குக ளினால் நேற்று பாராளுமன்றத்தில் நிறை  வேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதர வாக 120 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. எதி ராக எவரும் வாக்களிக்கவில்லை. எனினும் 44 பேர் வாக்கெடுப்பில் இருந்து விலகி கொண்டனர்.  

வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக் கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரச ஆதரவு அணியினர், மக்கள் விடுதலை முன்  னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈழ மக்  கள் ஜனநாயக கட்சி ஆகியன ஆதரவாக  வாக்களித்தன. எனினும் கூட்டு எதிர்க் கட்சி வாக்கெடுப்பில் இருந்து விலகிகொண்டது. பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு  சபாநாயகர் கரு ஜெய  சூரிய தலைமையில் கூடியது.  

இதன்போது மனுக்கள் சமர்ப்பித்தல், பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது பிரேரணை முன்னறிவித்தல்கள் நிறைவடைந்த பின்னர் உள்ளூராட்சி மற்றும் மாகாண அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் திருத்த சட்டமூலத்தில் திருத்தங்களை முன்வைத்தார்.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க, கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி மற்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி ஆகியோர் திருத்தங்கள் முன்வைத்தனர்.

தொடர்ந்து திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டு முன்றாம் வாசிப்பின் பின்னர் சபாநாயகர் கரு ஜெயசூரிய சட்டமூலத்திற்கு சபை ஆதரவா என கேட்டார். இதன்போது சபையில் இருந்த அனைவரும் ஆதரவு என கூறியதன் பின்னர் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆசனத்தில் இருந்து எழுந்து கோஷமிட்டனர். இதன்போது குறுக்கிட்டு பேசிய தினேஷ் குணவர்தன எம்.பி. கூட்டு எதிர்க்கட்சியினராகிய நாம் உள்ளூர் அதிகார சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பின் பின்னர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்ததாக ஏற்கனவே அறிவித்தோம். எனினும் சபாநாயகரே நீங்கள் வாக்கெடுப்பின்றி சட்டமூலத்தை நிறைவேற்றினால் நாம் விலகியதற்கான பதிவு இருக்காது. ஆகவே சட்டமூலத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றார்.

இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் கோஷமிட்டு குழப்பம் விளைவித்தனர். பிரசன்ன ரணவீர எம்.பி. எழுந்து சபாநாயகரை விமர்சிக்கும் விதமாக கோஷமிட்ட போது சபாநாயகர் கரு ஜெயசூரிய அவருக்கு அமருமாறு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இதன்பின்னர் கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு அமைவாக வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து வாக்கெடுப்பிற்கு தயாராகுமாறு சபாநாயகர் அறிவித்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்கெடுப்பிற்கான அழைப்பு விடுக்கும் கோரம் ஒலிக்க தொடங்கியது.

 தொடர்ந்து இலத்திரனியல் முறைமையின் பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அனைவரும் தம்முடைய ஆசனத்தில் அமருமாறு கோரப்பட்டது. நண்பகல் 12.10 மணியளவில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். வாக்கெடுப்பின் பின்னர் பெறுபேறு களரியில் பொருத்தபட்டுள்ள தொலைக்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்தசட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளினால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஆதரவாக 120 வாக்குகள் கிடைக்கபெற்றன. எதிராக எவரும் வாக்களிக்கவில்லை. எனினும் 44 பேர் வாக்கெடுப்பில் இருந்து விலகி கொண்டனர்.

வாக்கெடுப்பின் போது நீதி மற்றும் புத்தசாசன முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை. மேலும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்கெடுப்பு நேரத்தில் சபையில் இருக்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஸ்ரீநேசன், ஸ்ரீதரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட எம்.பிக்களும் வருகை தரவில்லை. ஆளும் தரப்பில் மலிக் சமரவிக்கிரம, எம்.எச்.ஏ ஹலீம், மனோ கணேசன், எம்.எச் .எம் பெளசி ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.

ஐக்கிய மக்கள் சுத்திர முன்னணியின் பங்காளி கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம் ஆகியோரும் வருகை தரவில்லை. கூட்டு எதிர்க்கட்சி சாரபில முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளும்னற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவும் வருகை தரவில்லை.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.