Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் கரும்புலிகளினதும் கடற்படையினரதும் இரு தொப்பிகள் மீட்பு!

Featured Replies

முள்ளிவாய்க்காலில் கரும்புலிகளினதும் கடற்படையினரதும் இரு தொப்பிகள் மீட்பு!

 

 

இலங்கையின் வடக்கே இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் கரும்புலி அனியினர் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ தொப்பி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

முள்ளிவாய்க்காலின் மேற்கு கடற்கரை பகுதியிலிருந்து இது மீட்கப்பட்டுள்ளதோடு இந்த தொப்பி இருந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் இலங்கைக் கடற்படையினரின் தொப்பி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதி யுத்தம் மிக உக்கிரமாக நடந்த பகுதியான முள்ளி வாய்க்காலிலிருந்து அவ்வப்போது இருதரப்பு இராணுவ எச்சங்கள் மீட்கப்பட்டுவந்தாலும் தற்பொழுது கரும்புலி அணியினரின் தொப்பியும் கடற்படையின் தொப்பியும் மீட்கப்பட்டுள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முள்ளி வாய்க்காலில் யுத்தம் நடந்துகொண்ட்ருந்தபோது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் முன்னணிச் சண்டை முனைகளுக்கு சென்று தாக்குதல் நடத்தியிருந்தனர். முள்ளிவாய்க்காலில் கரும்புலிகளை முன்னிறுத்தி விடுதலைப் புலிகள் பல ஊடறுப்புச் சமர்களை மேற்கொள்வதற்கு முயற்சித்திருந்தனர்.

மேலும் முள்ளி வாய்க்காலின் இறுதிக் காலங்களில் இலங்கை இராணுவத்தினர் கடல் மார்க்கமாக தரையிறங்கியிருந்தார்கள். இதன்போது இலங்கைக் கடற்படையினரும் முள்ளி வாய்க்கால் யுத்த களமுனையில் நின்று போர் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்படி போரில் நேரடியாகத் தொடர்புபட்ட இருதரப்பு உறுப்பினர்களினதும் இராணுவ எச்சங்களாக மீட்கப்பட்ட தொப்பிகள் விளங்களாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Two-hats-in-the-Mullivaikal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.