Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேட்கவேண்டிய கேள்விகள்

Featured Replies

கேட்கவேண்டிய கேள்விகள்

 

 

கொழும்­பில் கடத்­தப்­பட்ட 11 தமி­ழர்­கள் தொடர்­பான வழக்கு விசா­ர­ணை­கள் முக்­கி­ய­மான கட்­டத்தை அடைந்­துள்­ளன. இந்­தக் கடத்­தல்­கள் மற்­றும் கொலை­கள் குறித்து கடற்­ப­டை­யின் முன்­னாள் தள­பதி ரியர் அட்­மி­ரல் வசந்த கர­ன­கொ­ட­வுக்­குத் தெரிந்தே இருந்­தது என்று வழக்கை விசா­ரித்து வரும் குற்­றப் புல­னாய்­வுப் பொலி­ஸார் நீதி­மன்­றில் அறிக்­கை­யிட்­டுள்­ள­னர்.

கடத்தப்­பட்­ட­வர்­க­ளில் 5 பேர் மாண­வர்­கள். 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ஆம் திக­திக்­கும் செப்­ரெம்­பர் மாதம் 11ஆம் திக­திக்­கும் இடையே இவர்­கள் கடத்­தப்­பட்­டார்­கள். கொழும்பு நகர் மற்­றும் புற­ந­கர் பகு­தி­க­ளில் இவர்­கள் கடத்­தப்­பட்­டார்­கள். பின்­னர் காணா­மற்­போய்­விட்­டார்­கள்.

இந்த வழக்கு தற்­போ­தைக்கு ஒரு குற்­ற­வி­யல் வழக்­கா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்­த 11 தமி­ழர்­க­ளும் கப்­பம் பெறு­வ­தற்­கா­கக் கடத்­தப்­பட்­டுப் பின்­னர் கொல்­லப்­பட்­டார்­கள் என்ற ரீதி­யி­லேயே வழக்கு விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­ கின்­றன. இது தொடர்­பில் கடற்­ப­டை­யைச் சேர்ந்த ஓர் அதி­காரி உட்­பட 7 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

சிப்­பாய்­கள், இள­நிலை அதி­கா­ரி­கள் மட்­டு­மன்றி மூத்த தள­ப­தி­ க­ளும் ஏதோ ஒரு விதத்­தில் இந்­தக் கடத்­தல் மற்­றும் கொலை­ க­ளு­டன் தொடர்­பு­பட்­டி­ருந்­த­னர் அல்­லது அது பற்­றித் தெரிந்­தும் அதன் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­மல் இருந்­த­னர் என்­பது விசா­ர­ணை­க­ளின் மூலம் நீதி­மன்­றத்­தின் முன் வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்த இடத்­தில்­தான் இந்த வழக்கு ஒரு குற்­ற­வி­யல் வழக்கு என்ற நிலைக்கு அப்­பா­லும் பெரும் பரி­மா­ணத்­தைக் கொண்­டி­ருக்­கி­றது. தமி­ழர்­க­ளின் அர­சி­ய­லைப் பொறுத்­த­வ­ரை­யில் அது கூர்ந்து அணு­கப்­ப­ட­வேண்­டி­யது. அதை­யொட்­டிச் சில கேள்­வி­கள் எழு­கின்­றன.

1. இது ஒரு கடத்­தல் மற்­றும் கொலைக் குற்ற வழக்கு என்­றா­லும் கடத்­தப்­பட்­ட­வர்­கள் அனை­வ­ரும் தமி­ழர்­கள். அவர்­கள் தமி­ழர்­கள் என்­ப­தற்­கா­கவே இவ்­வாறு கேட்­டுக் கேள்­வி­யின்றி, இல­ கு­வா­கக் கடத்­தப்­பட்­டுக் கொல்­லப்­பட்­டார்­கள் என்­பதை மறுக்க முடி­யுமா? ஏனெ­னில் இந்­தக் காலப் பகு­தி­யில் எந்­த­வொரு படை­யி­ன­ரா­லும் சிங்­க­ள­வர்­கள் எவ­ரும் கடத்­திக் கொல்­லப்­பட்­ட­னர் என்­கிற குற்­றச்­சாட்­டுக்­கள் இல்லை.

2. தமி­ழர்­கள் கடத்­தப்­பட்­டார்­கள் என்­பது கடற்­ப­டை­யின் உயர் அதி­கா­ரி­க­ளுக்­குத் தெரிந்­தி­ருந்­தும் அவர்­க­ளைக் காப்­பாற்ற எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. கடத்­தப்­பட்­ட­வர்­கள் கொல்­லப்­பட்­டார்­கள் என்று தெரிய வந்­த­போ­து­கூட குற்­ற­வா­ளி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. அப்­ப­டி­யா­னால் உயர் அதி­கா­ரி­க­ளின் மறை­முக ஆத­ர­வு­டன் நடத்­தப்­பட்ட கடத்­தல் கொலை­கள்­தான் இவை. அந்த மறை­முக ஆத­ரவு என்­பது தமிழ் இனப்­ப­டு­கொ­லை­யின் ஒரு பகுதி இல்­லையா?

3. தமி­ழர்­கள் கடத்­தப்­பட்­ட­தும் கொல்­லப்­பட்­ட­தும் கடற்­ப­டை­யின் தள­பதி வரைக்­கும் தெரிந்­தி­ருந்­தும் அதன் மீது அவர் நட­ வ­டிக்கை எடுக்­கத் தவ­றி­ய­தும் குற்­ற­வா­ளி­கள் மேலோட்­ட­மான விசா­ர­ணை­யின் பின்­னர் சுதந்­தி­ர­மாக உலாவ விடப்­பட்­ட­தும், தமிழ் இனப்­ப­டு­கொலை ஒரு நிறு­வ­ன­ம­யப்­பட்ட நன்கு திட்­ட­மிட்ட வகை­யில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது என்­ப­தற்­கான சான்று இல்­லையா?

4. கடற்­ப­டை­யின் தள­பதி தமி­ழர்­கள் படு­கொலை செய்­யப்­ப­டு­வதை அனு­ம­திக்­கி­றார், கடத்­தப்­பட்ட தமி­ழர்­களை விடு­விக்­கும்­படி அர­சி­யல்­வாதி ஒரு­வர் கடற்­ப­டை­யி­ன­ரி­டம் கோரிக்கை முன்­வைக்­கி­றார் என்­றால் இந்­தப் படு­கொ­லை­ க­ளுக்கு அர­சி­யல் தலை­மைத்­து­வ­மும் இருந்­தது என்று அர்த்­தம் இல்­லையா?

5. அரசை வழி­ந­டத்­தி­ய­வர்­க­ளின் ஆசி, அனு­மதி இருந்­த­மை­யால்­தான் இத்­த­கைய குற்­றங்­கள் எந்­த­வி­தத் தயக்­க­மும் இன்றி நடந்­தன என்­பதை நிரா­க­ரிக்க முடி­யாது. அப்­ப­டி­யா­னால் தமிழ் இனப் ப­டு­கொலை திட்­ட­மி­டப்­பட்ட ஒரு பொறி­மு­றை­யின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது என்­பதை நிரா­க­ரிக்க முடி­யுமா?

6. இந்­தக் கோணங்­களை எல்­லாம் நிரா­க­ரித்து இந்த வழக்கு ஏன் வெறும் குற்­ற­வி­யல் வழக்­காக மட்­டுமே முன்­னெ­டுத்­துச் செல்­லப்­ப­டு­கி­றது? தமி­ழர்­கள் நிச்­ச­யம் கேட்டு ஆராய வேண்­டி­ய­தும் கவ­னம் செலுத்த வேண்­டி­ய­து­மான கேள்­வி­கள் இவை. போர்க் குற்­றங்­கள் நடக்­க­வில்லை என்­றும் இனப்­ப­டு­கொலை நடக்­க­வில்லை என்­றும் மறுத்­து­வ­ரும் ஓர் ஆட்­சி­யின் கீழ் இந்­தக் கேள்­வி­ க­ளுக்கு விடை தேடப்­ப­டு­வது மிக முக்­கி­யம்.

http://newuthayan.com/story/23085.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.