Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் மகனை தூக்கிலிட்டாலும் பராவாயில்லை : தாயின் உள்ளக்குமுறல்

Featured Replies

என் மகனை தூக்கிலிட்டாலும் பராவாயில்லை : தாயின் உள்ளக்குமுறல்

 

 

கல்கமுவ அசோகபுர பிரதேசத்தில் 17 வயதான மாணவியை துஷ்பிரயோகப்படுத்தி கொலை செய்த குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஹர்ஷன சமன் குமாரவின் தாயார் தன்னுடைய மகனை தூக்கிலிட்டு கொன்றாலும் பரவாயில்லை என கல்கமுவ பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Local_News.jpg

தான் எழுதிய கடிதத்தை கொலை செய்யப்பட்டுள்ள மாணவியின் பூதவுடலுக்கு முன்னால் வாசிக்குமாறு கடிதத்தில் கோடிட்டு காட்டியுள்ளார்.

அக் கடிதத்தில் இத்தகைய குற்றத்தை செய்த குற்றவாளியின் தாயாக இருப்பதால் தான் வெக்கப்படுவதாகவும் அதனால் ஏற்பட்ட மன வேதனையை தன்னால் சொல்ல முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தன்னுடைய மகனை தூக்கிலிட்டு கொன்றாலும் தனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்துள்ள மாணவியின் ஆத்ம சாந்திக்காக தான் பிரார்த்தனை செய்வதாகவும் எழுதியள்ளார்.

உயிரிழந்த மாணவி 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தவர் என குறிப்பிடத்தக்கது

இக் கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். 

http://www.virakesari.lk/article/23708

  • தொடங்கியவர்
‘மகனை தூக்கிலிடுங்கள்’
 

கல்கமுவ, கிரிபாவ, சாலிய - அசோகபுர பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, அம்மாணவியை கொலைசெய்த தன்னுடைய மகனைத் தூக்கிலிடுமாறும் அதனால், தனக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லையென்றும், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவரின் தாய், கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 36 வயதான ஹர்சன சமன் குமார என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருடைய தாயாரான குசுமாவதியே மேற்கண்டவாறு , கடிதம் எழுதியுள்ளார்.   

கல்கமுவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு அனுப்பிவைத்துள்ள அந்த கடிதம், மாணவியின் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.   

இத்தகைதொரு குற்றவாளியின் தாயாக இருப்பதால் ஏற்பட்டுள்ள மனவேதனையைத் தாங்கிகொள்ள முடியவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   
  சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே, சந்தேகநபரும் வசித்து வந்துள்ளார்.   

வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மாணவி மயங்கியதையடுத்து அச்சமடைந்த அந்த நபர்,  அம்மாணவியைப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்த தப்பியோடியுள்ளார்.   

 சந்தேகநபரின் உடலிலும், படுகொலை  செய்யப்பட்ட மாணவியின் சடலத்திலும் கீறல்காயங்கள் பல உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.  

இதேவேளை, சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அலைபேசியில், நிர்வாண மற்றும் பாலுறவில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய சுமார் 300க்கும் மேற்பட்ட படங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.   கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, அநுராதபுரம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளையில், அவரை எதிர்வரும் 04ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/மகனை-தூக்கிலிடுங்கள்/175-202988

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.