Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து விடயங்களும் தோல்வியே

Featured Replies

உல­கி­லேயே இலங்­கை­யா­னது அதி­கூ­டிய வலிந்து காணாமல் ஆக்­க­பட்­டோரை கொண்­டி­ருக்கும் நாடாகும். 

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைப்­ப­தற்கு ஒரு மசோ­தாவை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­றி­யது. 

எனினும், இந்த நாள்­வ­ரைக்கும் அது நிறு­வப்­ப­ட­வில்லை. வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் வழக்­கு­களை விசா­ரிக்க பணிக்கப்பட்ட எல்லா வகை­யி­லு­மான ஆணைக்­கு­ழுக்கள் இது­வ­ரைக்கும் எந்­த­வொரு வழக்­கு­க­ளையும் விசா­ரணை செய்து தீர்க்­க­வில்லை. அனைத்து விடயங்களிலும் தோல்வியே காணப்பட்டுள்ளது என சுவிட்ஸர்­லாந்தில் இயங்­கி­வரும் மனித உரிமை அமைப்பின் இலங்­கைக்­கான பிர­சார முகா­மை­யாளர் யுவேஸ் போவி தெரி­வித்­துள்ளார். 

மேலும் அவர் அந்த அறிக்­கையில் தெரி­வித்­துள்­ள­தா­வது ஆரம்ப காலத்தில் இருந்தே, இலங்­கையின் வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள தெருக்­களில் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோருக்­காக இலங்­கையில் தமிழ் பெண்­களால் முன்­னெ­டுக்கப்படு­கின்ற எதிர்ப்பு போராட்­ட­மா­னது வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோருக்கு என்ன நடந்­தது மற்றும் எங்கே இந்த வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் இருக்­கின்­றனர், அவர்­களின் தலை­விதி என்ன என்­ப­ன­வற்றை முன்­வைத்து எடுக்­கப்­ப­டு­வது ஒன்­றாகும். 

ஆகஸ்ட் 30 ஆம் திக­தியை, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் சர்­வ­தேச தினம் என பிர­க­டனம் செய்து, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பி­லான உண்­மைகள், அவர்­க­ளுக்­கான நீதி மற்றும் அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட இழப்­புக்­கான நல்­ல­தொரு பதி­லை­பெ­றுதல் ஆகி­ய­வற்­றினை இந்த எதிர்ப்­பு­போ­ராட்­டத்தின் கோரிக்­கை­யாக கொண்டு கிட்­டத்­தட்ட 200 நாட்­க­ளுக்கு தொடர தீர்­மா­னித்­துள்ளோம். இந்த பொன்­னான நாளில், அச்­சு­றுத்­த­ப்பட்­டுள்ள மக்­க­ளுக்­கான சங்கம் இலங்கை தமிழ் பெண்­களின் எதிர்ப்பு போராட்­டத்தை ஆத­ரித்தும் மற்றும் தமிழ் பெண்­க­ளோடு ஒன்­றிணைந்து பெர்­ஸி­லுள்ள காசினோ பிளாட்ஸ் நகரில் ஒரு மாபெரும் எதிர்ப்பு போராட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளது. பல மாதங்­க­ளாக, இலங்­கையின் வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள ஐந்து கிரா­மங்­களில் நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் பெண்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோருக்­காக எதிர்ப்பு போராட்­டங்­களில் ஈடு­பட்டு தங்­க­ளது உற­வு­க­ளுக்­காக குரல் கொடுக்­கின்­றனர்.  

இவர்­களின் இந்த குரல் ஒலி­யா­னது சுடும் சூரியன் எதிர்த்து நின்­றாலும், பாதை ஓரத்தின் அழுக்கு மற்றும் தூசு சிர­மமாய் மாறி­னாலும் இரவின் இருட்டு இடராய் இருந்­தாலும் இலங்­கையின் பாதை ஓரங்­களில் உற­வு­க­ளுக்காய் முழக்­கம்­மி­டு­கின்­றனர். 

அவர்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வுகள் எங்கு மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர் என்பது பற்­றிய பதில்­களைப் பெறு­வதை தங்­களின் கோரி­க்கை­யாக முன்­வைத்­துள்­ளனர். உல­கி­லேயே இலங்­கை­யா­னது அதி­கூ­டிய வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரை கொண்­டி­ருக்கும் நாடாகும். 

யுத்தம் முடி­வ­டைந்­ததில் இருந்து அப்­பாவி மக்­களின் மர­ணத்­துக்கும் மற்றும் இழப்­பிற்கும் எந்­த­வொரு முடிவும் இன்னும் கிடைக்­க­வில்லை. இலங்கை அர­சாங்­க­மா­னது இன்­று­வரை வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் பிரச்­சனை தொடர்பில் தீர்­வு­காண எடுத்த எந்­த­வொரு முயற்சி­யிலும் தோல்­வி­யி­னையே கண்­டுள்­ளது. பொறுப்­பான அமைப்­புக்கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்:

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைப்­ப­தற்கு ஒரு மசோ­தாவை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­றி­யது. எனினும், இந்த நாள்­வ­ரைக்கும் அது நிறு­வப்­ப­ட­வில்லை. வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் வழக்­கு­களை விசா­ரிக்க பணிக்க பட்ட எல்லா வகை­யி­லு­மான ஆணைக்­கு­ழுக்கள் இது­வ­ரைக்கும் எந்­த­வொரு வழக்­கு­க­ளையும் விசா­ரணை செய்து தீர்க்­க­வில்லை. நாட்டின் செய­லற்ற தன்மை கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் பெண்கள் தெருக்­களில் ஆர்ப்­பாட்டம் நடத்­தினர். 2017ஆம் ஆண்டு, ஜூன்­மாதம் 26ஆம் திகதி, ஜனாதிபதி சிறிசேன, வலிந்து காணாமல் ஆக்­க­பட்டோர் தொடர்­பாக நீதி­கோரி எதிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களை சந்­தித்தார். 

அதன்­போது இந்த எதிர்ப்பு போரா­டத்தில் ஈடு­ப­டுவோர் சிலர், அவர்­களின் கோரிக்­கைகள் அடங்­கிய விண்­ணப்­பத்தை இலங்கை அதி­பரின் கைகளில் ஒப்­ப­டைத்­தார்கள். இந்த சந்­திப்பின் முடிவில், கால அளவில் வலிந்து காணாமல் ஆக்­க­ப்பட்டோர் தொடர்­பான மூன்று பட்­டி­யல்­களை பத்­தி­ரி­கை­களில் வெளியீடு செய்­வ­தற்கு இணக்கம் தெரி­வித்தார். இவற்றுள் முத­லா­வது பட்­டி­ய­லா­னது இறுதி யுத்­தத்தின் முடிவில் யாரெல்லாம் 

சர­ண­டைந்­தார்­களோ மாற்றும் யாரெல்லாம் தடுப்­பு­கா­வலில் அடைத்து வைக்­க­பட்டு உள்­ளார்கள் என்­பதை பற்­றிய பெயர் பட்­டி­ய­லாகும், இரண்­டா­வது பெயர் பட்­டி­ய­லா­னது யாரெல்லாம் இர­க­சிய தடுப்­பு­காவல் நிலை­யங்­களில் தடுத்து வைக்­க­பட்­டி­ருப்­ப­வர்கள் பற்­றி­யது, மற்றும் மூன்­றா­வது பெயர்­பட்­டி­ய­லா­னது யாரெல்லாம் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின்கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்டு இருக்­கின்­ற­னரோ அவர்­களின் பெயர்­பட்­டியல். 

ஆனால் இன்­று­வ­ரையும் இலங்கை அதிபர் தன்னை சந்­தித்து கோரிக்­கை­களை சமர்­ப்பித்த, இந்த வலிந்து காணாமல் ஆக்­க­ப்பட்டோர் தொடர்­பாக நீதி­கோரி எதிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு, தான் கொடுத்த வக்­கு­று­தியை நிறை­வேற்­று­வதில் தோல்­வி­யி­னையே கண்­டுள்ளார். "அர­சாங்­க­மா­னது இப்­போது வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோர்­காக எதிர்ப்பு போராட்­டங்­களில் ஈடு­ப­டு­வோரின் கோரிக்­கை­களை செயற்­ப­டுத்த வேண்டும், இதன் ஊடாக இலங்­கையில் இன, மத, மற்றும் மொழி என்­ப­வற்றால் வேறு­பட்­டி­ருக்கும் மக்­களுக்கிடையே நல்­லி­ணக்­கத்தை கொண்டுவரமுடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/23799

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.