Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைத்தீவு காணிகளை விடுவிப்பதில் கடற்படையினருக்கு ஆட்சேபனை இல்லை: டி.எம்.சுவாமிநாதன்

Featured Replies

இரணைத்தீவு காணிகளை விடுவிப்பதில் கடற்படையினருக்கு ஆட்சேபனை இல்லை: டி.எம்.சுவாமிநாதன்

 

 

இரணைத்தீவு காணிகளை விடுவிப்பதில் கடற்படையினருக்கு ஆட்சேபனை இல்லை: டி.எம்.சுவாமிநாதன்
 

கிளிநொச்சி – இரணைத்தீவு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் பூநகரி- நாச்சிக்குடா கடற்படை முகாமில் இன்று இடம்பெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

மக்களின் வாழ்விடங்களை விடுவிப்பதற்கு கடற்படையினர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எனவும், இரணைத்தீவில் வசித்து வந்த 198 குடும்பங்களின் காணியை அளவிடும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் இரணைத்தீவிற்கு சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/08/இரணைத்தீவு-காணியை-விடுவி/

  • தொடங்கியவர்

இர­ணை­தீவு காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைக்கு கடற்­ப­டை­யினர் இணக்கம்

p19-b759b72c7cc132b3a2152d219955b111d7483f4f.jpg

 

முதற்­கட்ட நட­வ­டிக்கை வெற்றி

(கண்­டா­வளை, கரைச்சி நிரு­பர்கள்)

கிளி­நொச்சி பூந­கரி பிர­தேச செயலாளர் பிரிவில் கடற்­ப­டை­யினர் வச­முள்ள மக்­க  ளின் பூர்­வீக காணி­யான இரணை­தீவு  காணி விடு­விப்பின் முதற்கட்­ட  மாக காணி­களை அடை­யா­ளப்ப­டுத்தும் நட­வ­டிக்கையினை மேற்­கொள்ள கடற்­படை­யினர் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர். 

இந்த விடயம் தொடர்­பான கலந்­ து­ரை­யா­ட­லொன்று நேற்­று­ பூ­நகரி பிரதான கடற்­படை தளத்தில் நடை­பெற்­றது. இந்த கலந்­து­ரை­யா­டலில் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஸ்ரீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் உட்­பட  பலரும் கலந்து கொண்­டனர். 

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் உள்­ளிட்ட குழு­வினர் பாது­காப்பு படை­யி­ன­ருடன் மேற்­கொண்ட கலந்­து­ரை­யா­டலின் போது முதலில் இர­ணை­தீவு காணி­களை விடு­விக்க முடி­யாது என தெரி­வித்­துள்­ளனர்.

அத்­துடன் குறித்த காணியை விடு­விப்­பது தொடர்பில் பல்­வேறு பாது­காப்பு பிரச்­சி­னைகள் உள்­ள­தா­கவும் அவர்கள் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ரிடம் தெரி­வித்­தனர்

குறித்த இர­ணை­தீவு பகு­தி­யா­னது இலங்­கையின் தேசிய பாது­காப்­பிற்கு முக்­கிய ஒரு­இ­ட­மாக இருப்­ப­தா­கவும் போதைப்­பொருள் கடத்­த­ல­க­ளைக்­கட்­டுப்­ப­டுத்­தவும் றாடர் கண்­கா­ணிப்பு நிலை­யங்கள் இருப்­ப­தனால் இர­ணை­தீ­வி­னு­டைய வடக்­குப்­ப­குதி முழு­மை­யா­கத்­தே­வை­யென்றும் கடற்­ப­டை­யினர் குறிப்­பிட்­டனர்.

இதே­வேளை அந்­தப்­ப­கு­தியில் மக்­களை மீள்­கு­டி­யேற்றும் போது கடற்­க­ரை­யோ­ரப்­ப­கு­தி­களில் உள்ள கடல்வாழ் உய­ரி­னங்கள் அழி­வ­டையும். அத்­துடன், அங்கு குடிநீர் ப்பிரச்­சனை பல்­வேறு பிரச்­ச­னைகள் இருக்­கின்­றனர் என்று இர­ணை­தீவில் மக்கள் குடி­யே­று­வதை தடுக்கும் வகையில் பல்­வேறு கார­ணங்­களை குறிப்­பிட்­டனர்.

இத­னை­ய­டுத்து 400 வரு­டங்­க­ளிற்கு மேலாக இந்­தத்­தீ­விலே மக்கள் வாழ்ந்­தி­ருக்­கின்­றார்கள், அவர்­க­ளது வாழ்­வா­தாரம் இங்­கேதான் இருக்­கின்­றது. குறித்த தீவு விடு­விக்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் பார­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சாள்ஸ் நிர்­ம­ல­நாதன், சிவ­ஞானம் சிறி­தரன் ஆகியோர் தெரி­வித்­த­தை­ய­டுத்து, நீண்ட விவா­தங்­களின் பின் இர­ணை­தீவுப் பகு­தியில் பொது­மக்­க­ளுக்­குச்­சொந்­த­மான 186 ஏக்கர் காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு கடற்­ப­டை­யினர் இணக்கம் தெரி­வித்து இதற்­கான குழு­வொன்­றி­னையும் நிய­மித்து அதன் மூலம் 186 ஏக்கர் காணி­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்­கான இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டன.

இதே­வேளை இப்­ப­குதி கடற்­தொ­ழி­லா­ளர்கள் பட­கு­களை நிறுத்­து­வ­தற்கு 400 மீற்றர் கரை­யோ­ரப்­ப­கு­தி­க­ளையும் விடு­விப்­ப­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. சுமார் ஏறத்தாள் ஆயி­ரத்து 100 பரப்­ப­ள­வைக்­கொண்ட இர­ணை­தீவில் 186 ஏக்­கரை மாத்­திரம் விடு­விக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அடுத்த வாரம் பூநகரிப்பிரதேச செயலாளர் மற்றும் இரணைமாதா நகரைச்சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் சென்று காணிகளை அடையாளப்படுத்துவதற்கு அனுமதித்ததாக கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

குறித்த இச்சந்திப்பில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், பூநகரிப்பிரதேச செயலர் எஸ்.கிருஸ்னேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-01#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.