Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித்து ஆட்சியமைக்கும் திட்டத்துடன் அடுத்த தேர்தலில் மைத்திரிபால தரப்பு களமிறங்கும்

Featured Replies

தனித்து ஆட்சியமைக்கும் திட்டத்துடன் அடுத்த தேர்தலில் மைத்திரிபால தரப்பு களமிறங்கும்

 
தனித்து ஆட்சியமைக்கும் திட்டத்துடன் அடுத்த தேர்தலில் மைத்திரிபால தரப்பு களமிறங்கும்
 

விஜே­தாச ராஜ­பக்ச ஐ.தே.கட்­சி­யின் உறுப்­பி­னர். அவர் தொடர்­பில் முடி­வெ­டுக் கும் உரிமை ஐ.தே.கட்­சிக்கே உண்டு. விஜே­தாச ராஜ­பக்ச தொடர்­பான பிரச்­சினையை முடி­வுக்­குக் கொண்டு வரு­வ­தற்கு அரச தலை­வ­ரும் கடும் முயற்சி எடுத்­தார்’’ எனத் தெரி­வி­த்துள்­ளார் அமைச்­ச­ரும் ஐ.ம.சு. கூட்­ட­மைப்­பின் செய­லா­ள­ரு­மான மகிந்த அம­ர­வீர. சிங்­க­ளத் தொலைக்­காட்­சி­யொன்­றுக்கு அவர் வழங்­கிய செவ்வி கீழே தரப்­ப­டு­கின்­றது.

கேள்வி:சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66ஆவது மாநாட்­டுக்­கான ஏற்­பா­டு­கள் எந்­தக் கட்­டத்­தில் உள்­ளன?

பதில்:இரண்டு முதன்மை கட்­சி­கள் ஒன்­றி­ணைந்து தேசிய அரசு ஒன்றை அமைத்­துள்ள ஒரு மாறு­பட்ட சூழ­லில், – சுதந்­தி­ரக் கட்­சி­யின் இந்த 66ஆவது மாநாட்டுக்கான அனைத்து ஏற்­பா­டு­க­ளும் பூர்த்­தி­யா­கி­ யுள்­ளன.

கேள்வி:இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் பலர் கட்­சியை விட்­டுச் சென்­று­விட்­டார்­கள் என்­பதை உண­ரு­கி­றீர்­களா?

பதில்:அப்­படி இல்லை.தற்­கா­லி­க­மாக சில பின்­ன­டை­வு­ கள் ஏற்­ப­டு­வது சாதா­ரண விட­யம்.நாம் இரண்டு தேர்­தல்­க­ளில் தோல்­வி­ய­டைந்து இருக்­கின்­றோம்.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ராக இருந்­து­கொண்டு மகிந்த அரச தலைவர் தேர்தலில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்­தார்.அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும் சுதந்­தி­ரக் கட்சி தோல்­வி­ய­டைந்­தது.இருந்­தும் நாம் ஐக்­கிய தேசிய கட்­சி­யு­டன் இணைந்தே ஆட்சி அமைத்­தோம்.

கட்­சி­யின் மாநாட்­டுக்­கான அழைப்பை நிரா­க­ரித்­து­ விட்டது மகிந்த தரப்பு

கேள்வி:இந்த மாநாட்­டில் கலந்­து­கொள்­வ­தற்­காக மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு அழைப்பு விடுத்­துள்­ளீர் களா?

பதில்:ஆம்… அவ­ருக்கு மாத்­தி­ர­மன்றி சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் அழைப்பு விடுத்­துள்­ளோம்.ஆனால்,அந்த அழைப்பை நிரா­க­ரிக்­கப் போவ­தாக மகிந்த அணி­யி­னர் கூறி­விட்­ட ­னர்.

தற்­போ­தைய தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்த ஜன­நா­ய­க உரிமையை எமக்கு வழங்­கியுள்­ளார். அந்த வகை­யில் மகிந்த அணி­யி­னர் மாநாட்­டில் கலந்­து­கொள்­வ­தும் அதைப் புறக்­க­ணிப்­ப­தும் அவர்­க­ளது உரிமை.

கேள்வி:சுதந்­தி­ரக் கட்­சி­யின் 64 ஆவது மாநாட்­டில் மஹிந்­த­வும் கலந்­து­கொண்­டார்.பின்­னர் அவ­ரது குடும் பத்தை விசா­ர­ணைக்கு அழைத்து அவ­மா­னப்­ப­டுத்­தி­னீர்­கள்.இப்போதும் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.இந்த நிலை­யில் மீண்­டும் மகிந்த இந்த மாநாட்­டில் கலந்­து­கொள்­வார் என்று நீங்­கள் நம்­பு­கி­றீர்­களா?

பதில்:மகிந்­த­வின் குடும்­பமோ, சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­களோ இவ்­வாறு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­து, ஊழல்­வா­தி­கள் தண்­டிக்­கப்­ப­டு­வர் என்று தேர்­த­லில் நாம் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­யின் அடிப்­ப­டை­யில்­தான் இடம்­பெ­று­கின்­றது.

இது அர­சி­யல் பழி­வாங்­கல் அல்ல.ஊழல்­வா­தி­கள் தண்­டிக்­கப்­ப­டு­வது பிழை என்று சொல்ல முடி­யாது.இந்த ஆட்­சி­யில் ஊழ­லில் ஈடு­பட்ட அமைச்­சர்­கள்­கூட தண்­டிக்­கப்­ப­டு­வ­தை­யும் அமைச்­சுப் பத­வி­க­ளில் இருந்து நீக்­கப்­ப­டு­வ­தை­யும் நீங்­கள் அறி­வீர்­கள்..

கேள்வி:தானே சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வர் என்று மகிந்த கூறு­கின்­றாரே?

பதில்:சுதந்­தி­ரக் கட்­சி­யின் 64 ஆவது மாநாட்­டில் கலந்­து­கொண்டு மகிந்த ஆற்­றிய உரை, மைத்­திரி சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைத்­து­வப் பத­வியை ஏற்­ற­மைக்கு மகிந்த அனுப்­பிய வாழ்த்­துச் செய்தி மற்­றும் தலை­வர் பத­வியை மைத்­தி­ரி­யி­டம் கொடுத்­து­விட்டு மகிந்த நிகழ்த்­திய உரை போன்­ற­வற்­றைக் கேட்­டுப் பார்த்­தால் உண்மை புரி­யும்.எவரோ சிலரது பேச்­சைக் கேட்­டுக்­கொண்­டு­தான் மகிந்த இப்­போது இவ்­வாறு கூறு­கின் றார்.

மகிந்த இந்த நாட்­டுக்­குச் செய்த சேவையை நாம் மறக்­க­வில்லை.போரை நிறைவு செய்து இந்த நாட்­டுக்கு நிரந்­தர சுதந்­தி­ரத்­தைப் பெற்­றுக் கொடுத்­த­வர் அவர். அவ­ரு­டன் நாங்­கள் நீண்ட காலம் அர­சி­யல் செய்­த­வர்­கள்.ஆனால், அவ­ரால் கட்சி இரண்­டா­கப் பிள­வு­பட்­டி­ருப்­பது கவ­லைக் கு­ரிய விட­ய­மா­கும்.

கேள்வி:துமிந்த திஸா­நா­யக்க கட்­சி­யின் செய­லா­ளர் பத­வி­யில் இருந்து விலக வேண்­டும் என்று அமைச்­சர் டிலான் பெரேரா அடிக்­கடி கூறி வரு­கி்ன்­றார்.கட்­சி­யின் 66 ஆவது மாநாட்­டில் இது தொடர்­பில் ஏதா­வது முடிவு எடுக்­கப்­ப­டுமா?

பதில்:அப்­படி எது­வும் நடக்­காது.அதற்­கான தேவை இல்லை. பண்­டா­ர­நா­யக்க எந்த நோக்­கத்­தில் இந்­தக் கட்­சி­யைத் தொடங்­கி­னாரோ அந்த நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் கட்சி இப்­போது பய­ணிக்­கின்­றது.கட்­சி­யின் முத­லாம், இரண் டாம், மூன்­றாம் நிலைத் தலை­வர்­கள் உரு­வா­கிக்­கொண் டி­ருக்­கும் சந்­தர்ப்­பம் இது.

துமிந்த திஸா­நா­யக்க செய­லா­ளர் என்ற அடிப்­ப­டை­யில் அவ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கும் பத­வியை சரி­யான முறை­யில் பயன்­ப­டுத்­திக்­கொண்டு செல்­கின்­றார். முன்­னேற்­றத்தை நோக்கி கட்­சியை நகர்த்­திக் செல்­லும் திறமை அவ­ரி­டம் உண்டு.அதை அவர் சரி­யா­கச் செய்து வரு­கின்­றார்.அவ­ரி­டம் ஏதும் குறை­பா­டு­கள் இருந்­தால் அது பற்­றிப் பேசி அதைத் தீர்த்­துக் கொள்­ள­லாம்.

கட்­சிக்கு எதி­ரா­கச் செயற்­பட்­ட­தால் அமைப்­பா­ளர்­கள்  கட்­சி­யில் இருந்து நீக்­கம்

கேள்வி:கட்­சி­யின் பல அமைப்­பா­ளர்­களை நீக்­கி­யமை அர­சி­யல் பழிவாங்­க­லின் அடிப்­ப­டை­யிலா?

பதில்:பல அமைப்­பா­ளர்­கள் மகிந்த தரப்­பு­டன் சேர்ந்து கொண்டு கட்­சிக்கு எதி­ரா­கச் செயற்­பட்­ட­னர்.கட்­சி­யின் மே தினக் கூட்­டத்­துக்கு மக்­களை அழைத்து வராது மகிந்த அணி­யின் கூட்­டத்­துக்கு அழைத்­துச் சென்­ற­னர்.

இவ்­வா­றா­ன­வர்­களை வைத்து எப்­ப­டிக் கட்­சியை வளர்ப்­பது? அவ்­வா­றா­ன­வர்­களை நீக்­கி­விட்டு புதிய அமைப்­பா­ளர்­களை நிய­மித்­தோம்.அவர்­க­ளின் தொகு­தி­க­ளில் இருந்­து­தான் எமது மாநாட்­டுக்கு அதிக மக்­கள் வர­வி­ருக்­கின்­ற­னர்.

கேள்வி:அமைச்­சர்­கள் டிலான் பெரேரா, லக்ஸ்­மன் யாப்பா அப­ய­வர்­தன மற்­றும் சுசில் பிரே­மச்­சந்­திர ஆகி­யோ­ருக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணை­யைக் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக ஐக்­கிய தேசிய கட்சி தெரி­வித்­துள்­ளது.அப்­படி நடந்­தால் உங்­க­ளின் நிலைப்­பாடு என்­ன­வாக இருக்­கும்?

பதில்:முழு­மை­யா­கத் தோற்­க­டிப்­போம்.இந்த மூவ­ரும் ஊழல் புரிந்­த­ வர்­கள் அல்­லர்.ஒரு­வேளை இவர்­கள் ஊழ­லு­டன் தொடர்­பு­பட்­டி­ருந்­தால் எங்­க­ளது கட்­சிக்­கா­ரர்­கள் என்­று­கூ­டப் பார்க்­கா­மல் அவர்­க­ளுக்கு எதி­ராக நான் வாக்­க­ளிப்­பேன்.ஆனால்,இவர்­கள் அரசை விமர்­சித்­தார்­கள் என்ற குற்­றச்­சாட்­டின் கீழ்­தான் நம்­பிக்கை இல்­லாப் பிரே­ர­ணை­யைக் கொண்­டு­வ­ர­வுள்­ளார்­க­ளாம்.

இது­வொரு குற்­றச்­சாட்டா?அரசை விமர்­சிப்­பது ஜன­நா­யக உரி­மை­யா­கும்.நான்­கூட பல தட­வை­கள் அரசை விமர்­சித்­தி­ருக்­கின்­றேன்.மத்­திய வங்கி ஊழலை நான்­தான் முத­லில் வெளியே கொண்டு வந்­தேன்.

அர்­ஜுன மகேந்­தி­ரனை மத்­திய வங்கி ஆளு­நர் பத­வி­யில் இருந்து நீக்­கும் போராட்­டத்தை நானே முன்­னெ­ டுத்­தேன்.அவ­ரைப் பாது­காப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி முயற்சி செய்­த­போது நாம் போராடி வெற்றி பெற்­றோம்;அவரை நீக்­கி­னோம்.இதற்­காக எனக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணை­யைக் கொண்­டு­வந்­தால் நாட்டு மக்­கள் அதைச் சரியென எடுத்­துக்­கொள்­வார்­களா?

கேள்வி:மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் தொடர்­பில் விசா­ரித்து வரும் அரச தலைவர் விசா­ர­ணைக் குழு­வுக்கு என்ன நடக்­கும்?அது கலைக்­கப்­ப­டுமா?

பதில்:எது­வும் நடக்­காது. அந்­தக் குழு தனது பணி­யைச் சிறப்­பா­கச் செய்து வரு­கின்­றது.அத­னால்­தான் ரவியை பதவி விலக்க முடிந்­தது.இன்­னும் பலர் ரவி­யைப்­போல் அடை­யா­ளம் காணப்­ப­டு­வர்.இந்­தக் குழு அமைக்­கப்­பட்­ட­போது மத்­திய வங்கி ஊழலை மூடி மறைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­தான் இந்­தக் குழு அமைப்பு என்று மகிந்த அணி­யும், ஜேவி­பி­யும் கூறின.இப்­போது அவர்­க­ளால் எந்த விமர்­ச­ன­மும் மேற்­கொள்ள முடி­யாது. அந்­தக் குழு சுயா­தீ­ன­மாக இயங்­கு­கின்­றது.

கேள்வி: சட்­டமா அதி­பர் திணைக் க­ளத்தை அரச தலைவர் கையேற்­பாரா?

பதில்:இல்லை.அதை சுயா­தீ­ன­மாக இயங்­கு­வ­தற்கு இடங்­கொ­டுக்­கு­மா­றும், அதை விமர்­சிக்க வேண்­டாம் என்­றும் அரச தலை­வர் எங்­க­ளி­டம் கூறி­யுள்­ளார்.

கேள்வி:அமைச்­சர் ராஜி­த­வுக்கு எதி­ரா­க­வும் நம்­பிக்கை இல்­லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.இது தொடர்­பில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் நிலைப்­பாடு என்ன?

பதில்:இது­வரை நாம் அது குறித்து எந்­த­வொரு முடி­வை­யும் எடுக்­க­வில்லை.எப்­ப­டி­யும் அவ­ருக்கு எதி­ரான நிலைப்­பாட்டை எடுப்­ப­தற்கு வாய்ப்­பில்லை.ஆனால்,அந்­தப் பிரே­ரணை தொடர்­பில் கட்சி விரை­வில் கூடி ஒரு முடிவை எடுக்­கும்.

கடந்த அர­சுத் தலை­வர் தேர்­த­லில் மைத்­தி­ரி­பா­ல­வுக்­காக உழைத்­த­வர் விஜே­தாச

கேள்வி: விஜே­தாச ராஜ­பக்­சவை அர­ச தலை­வர் விரை­வாக நீக்­கி­ விட்­டாரே.அவர் கடந்த அர­சுத் தலை­வர் தேர்­த­லின்­போது மைத்­தி­ரி­பா­ல­வின் வெற்­றிக்­குக் கடு­மை­யாக உழைத்­த­வர் அல்­லவா?.

பதில்:அவர் ஐக்­கிய தேசிய க்கட்சி உறுப்­பி­னர்.அவர் தொடர்­பில் முடி­வெ­ டுக்­கும் உரிமை ஐக்­கிய தேசிய கட்­சிக்கே உண்டு.இந்­தப் பிரச்­சி­னையை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு அரச தலை­வ­ரும் கடும் முயற்சி எடுத்­தார்.இவரை அமைச்­சுப் பத­வி­யில் இருந்து நீக்­கு­மாறு ஐக்­கிய தேசிய கட்­சி­யால் அரச தலை­வ­ரி­டம் கோரிக்கை முன்­வைக் கப்­பட்­ட­து.

விஜே­தாச மீண்­டும் ஒரு தடவை தலைமை அமைச்­ச­ரு­டன் பேசி இருந்­தால் அவர் தப்பி இருப்­பார்.ஆனால், அவர் பின்­னால் செல்­ல­வில்லை.ஒரு­வரை அமைச்­சுப் பத­வி­யில் இருந்து நீக்­கு­மாறு ஐக்­கிய தேசிய கட்­சி­யால் எழுத்­து­மூ­லம் கோரப்பட்டால் அதை அரச தலை­வ­ரால் மீற முடி­யாது.

கேள்வி:2020 ஆம் ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொது வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­ட­ வி­ருப்­ப­வர் விஜே­தாச ராஜ­பக்­சவா?

பதில்:அப்­ப­டி­யா­னால் சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொது­வேட்­பா­ளர் யார்?

கேள்வி:அவ்வாறெனின் வேட்­பா­ளர் யார்?

பதில்:தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­திரி என்­ப­து­தான் எங்­க­ளது திட்­டம்.

கேள்வி:இரண்­டா­வது தடவை போட்­டி­யி­டு­வ­தில்லை என்று அவர் கூறி­யுள்­ளாரே?

பதில்:ஆம்.இருந்­தா­லும்,கட்­சி­யின் தலை­வ­ராக இருந்­து­கொண்டு தனித்து முடிவு எடுக்க முடி­யாது.கட்­சி­யின் தீர்­மா­னத்­துக்கு கட்­டுப்­பட வேண்­டும்.

கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு மகிந்­த­வுக்கு அனு­மதி வழங்க முடி­யாது என்று ஆரம்­பத்­தில் மைத்­திரி கூறி­ய­போ­தி­லும்,அதற்­குக் கட்சி எதிர்ப்­புத் தெரி­வித்­த­தால் அவ­ருக்கு அனு­மதி வழங்­கி­னார்.

அதே­போல்,இந்த விட­யத்­தி­லும் கட்­சி­யின் கோரிக்­கைக்கு அவர் இணங்க வேண்­டும்.அவரை விட்­டால் பொருத்­த­மான வேட்­பா­ளர் ஒரு­வர் சுதந்­தி­ரக் கட்­சி­யில் இல்லை.

கேள்வி:ஏன் ..சிரேஷ்ட உறுப்­பி­னர் நிமல் சிறி­பா­லடி சில்வா உள்­ளார் தானே?

பதில்:மைத்­தி­ரி­பால மறுத்­தால் நிமல் சிறி­பா­லடி சில்வா இதற்­குப் பொருத்­த­மா­ன­வர்­தான்.கட்­சி­யின் வளர்ச்­சிக்­காக அவர் கடும் தியா­கங்­க­ளைச் செய்­துள்­ளார்.

கேள்வி: தற்­போ­தைய கூட்டு அர­சின் ஆயுள்­கா­லம் எது­வரை?

பதில்:இரண்டு தரப்புக்­க­ளும் அர்ப்­ப­ணிப்பு உணர்­வு­டன் தம்­மி­டை­யே­யான முரண்­பா­டு­களைக் களைந்து செயற்­பட்­டால் 2020 வரை பய­ணிக்க முடி­யும்.

கூட்டு ஆட்­சி­யில் பல விட­யங்­களை நிறை­வேற்­றி­னோம்

கேள்வி:அதற்கு அப்­பால் சாத்­தி­ய­மில்­லையா?

பதில்:2020 இல் தனி ஆட்சி அமைப்­ப­து­தான் சுதந்­தி­ரக் கட்­சி­யின் திட்­டம்.கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தனித்து ஆட்சி அமைப்­ப­தற்கு மக்­கள் எந்­த­வொரு கட்­சிக்­கும் ஆணை வழங்­க­ வில்லை.இத­னால் இரண்டு கட்­சி­க­ளும் சேர்ந்து ஆட்சி அமைத்­தோம்.

கூட்டு அரசு முன்னெடுத்த முயற்சிகள் அனைத்­தும் வெற்­றி­பெற்­றன என்று சொல்­ல­மாட்­டோம்.ஓரிரு விட­யங்­களை எம்­மால் நிறை­வேற்ற முடிந்­தது.

தேசிய அரசு உரு­வா­கி­ய­தன் கார­ண­மா­கத்­தான் ஜெனி­வா­வில் இருந்த ஆபத்து நீக்­கப்­பட்­டது.இனி மின்­சா­ரக் கதி­ரை­யும் இல்லை; பன்னாட்டு நீதி­ப­தி­க­ளும் இல்லை;போர்க்குற்ற நீதி­மன்­றங்­க­ளும் இல்லை.அது­பற்­றிய கதையே இனி இல்லை.

அதே­போல்,ஜீஎஸ்பி பிளஸ் தடையை நீக்­கிக்­கொண்­டோம்.தேயிலை ஏற்­று­ம­திக்கு வர­வி­ருந்த தடையை இல்­லாது செய்­தோம்.தேசிய அர­சால் ஈட்­டப்­பட்ட வெற்­றி­கள்­தான் இவை.அதே­போல்,சில விட­யங்­க­ளில் முன்­னேற் றம் காணா­ம­லும் உள்­ளோம்.

கேள்வி:இரண்டு தரப்புக்களையும் ஒன்றிணைக்கும் திட்டத் தின்படி இரு தரப்­புக்­க­ளும் இணைந்­தால் நீங்­கள் வகிக்­கும் ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்பு செய­லா­ளர் பத­வியை விட்­டுக்­கொ­டுக்க வேண்டி வரும் என்று சிலர் கூறு­கின்­றார்­கள்.அதற்கு நீங்­கள் தயாரா?

பதில்: அதற்கு மட்­டு­மல்ல அமைச்­சுப் பத­வி­யைக்­கூட விட்­டுக்­கொ­டுக்க நான் தயார்.எனக்­குத் தேவை, இரண்டு தரப்­பு­க்க­ளும் ஒன்­றி­ணைத்து சுதந்­தி­ரக் கட்­சியை வெற்­றி­பெற்ற பல­மிக்க கட்­சி­யாக மாற்­று­வ­து­தான்–­என்­றார்.

http://newuthayan.com/story/24596.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.