Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது ஒரு ஆரம்பம்

Featured Replies

இது ஒரு ஆரம்பம்

 

இலங்கை இரா­ணு­வத்­தின் தள­ப­தி­யா­க­இ­ருந்­த­வ­ரான லெப்­டி­னன்ட் ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக பிரே­சில் நாட்டு நீதி­மன்­றத்­தில் போர்க்­குற்ற வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. மனித உரி­மை­கள் அமைப்­பு­க­ளால் இந்த வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

வழக்கு தாக்­கல் செய்­யப்­ப­டும்­போது பிரே­சி­லின் தூது­வ­ராக ஜெகத் ஜய­சூ­ரிய இருந்­தார் என்­றா­லும், அவ­ரது பத­விக் காலம் முடிந்து அவர் நாடு திரும்­பி­ விட்­டார் என்று கொழும்பு அரசு அறி­வித்­துள்­ளது.

வன்­னி­யில் இறு­திப் போர் நடை­பெற்­ற­போது வன்­னிப் பிராந்­தி­யக் கட்­ட­ளைத் தள­ப­தி­யாக இருந்­த­வர் ஜென­ரல் ஜெகத். அதன் பின்­னர் இரா­ணு­வத்­தின் தள­ப­தி­யா­க­வும் உயர்ந்­த­வர்.

இறு­திப் போரின் போது மருத்­து­வ­ம­னை­கள் மீதான தாக்­கு­தல்­கள், கொலை­கள், சித்­தி­ர­வ­தை­கள், காணா­மல் ஆக்­கு­தல்­கள் என்­ப­வற்­றைப் புரிந்த படை­ய­ணி­களை மேற்­பார்வை செய்­யும் நப­ராக இருந்­த­வர் என்­ப­தால் அவர் ஒரு போர்க்­குற்­ற­வாளி என்று தெரி­வித்தே இந்த வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

பிரே­சில் நாட்­டுத் தூது­வர் என்­கிற வகை­யில் ஜென­ரல் ஜெகத்­துக்கு வழக்­கி­லி­ருந்து விலக்­குக் கிடைக்­கும். பிரே­சி­லில் மட்­டு­ மல்­லா­மல் கொலம்­பியா, பெரு, சிலி, ஆர்­ஜென்­ரீனா, சூரி­நாம் ஆகிய 5 நாடு­க­ளி­லும்­கூட அவ­ருக்கு இந்த விலக்­குக் கிடைக்­கும். ஏனெ­னில் அந்த நாடு­க­ளுக்­கும் அவரே தூது­வர்.

அத­னால் பிரே­சில் மற்­றும் கொலம்­பி­யா­வில் கடந்த திங்­கட்­கி­ழமை வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. ஏனைய நான்கு நாடு­க­ளி­லும் விரை­வில் தாக்­கல் செய்­யப்­பட உள்­ளது.

ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு தூது­வர் என்ற அடிப்­ப­டை­யில் நீதி விலக்­குக் கிடைக்­கும் என்­றா­லும்­கூட இந்த வழக்­கால் அவ­ரைப் பற்­றிய விசா­ர­ணை­களை இந்த நாடு­கள் ஆரம்­பிக்­கும் என்­றும் அதற்­கூ­டாக அவரை நாட்­டை­விட்டு வெளி­யேற நிர்ப்­பந்­திக்­கும் என்­றும் வழக்­கைத் தாக்­கல் செய்த சட்­ட­வா­ளர் குறிப்­பி­டு­கி­றார்.

அந்­தப் பிரச்­சி­னைக்கு இடமே வைக்­கா­மல் பத­விக் காலம் முடிந்­து­விட்­டது என்று அறி­வித்து அவ­ரைத் திரும்பி அழைத்­து­விட்­டது கொழும்பு.

இந்த வழக்­கைத் தாக்­கல் செய்­யும் பணி­களை ஒருங்­கி­ணைக்­கும் பன்­னாட்டு மனித உரி­மை­கள் சட்­ட­வா­ள­ரான பெர்­னான்­டஸ் இதற்கு முன்­னர் கௌத­மாலா, ஆர்­ஜென்­ரீனா, சிலி ஆகிய நாடு ­க­ளில் நடந்த போர்க்­குற்­றங்­கள் தொடர்­பான பன்­னாட்டு வழக்­கு­க­ளில் பணி­யாற்­றி­ய­வர்.

அவ­ரது வழக்­குக் கார­ண­மாக சிலி­யைச் சேர்ந்த இரா­ணுவ ஜென­ர­லான ஒகஸ்ரோ பினோ­செட் இலங்­கி­லாந்­தில் போர்க் குற்­றங்­க­ளுக்­கா­கக் கைது செய்­யப்­பட்­டார்.

இந்த அச்­சமே ஜென­ரல் ஜெகத் உட­ன­டி­யாக நாடு திரும்­பு­வ­ தற்­கான கார­ண­மா­கக்­கூட இருந்­தி­ருக்­க­லாம். அவர் அப்­படி நாடு திரும்­பி­விட்­டார் என்­ப­தற்­காக இந்த விட­யம் இத்­தோடு முடிந்­து­விட்­டது என்று பொருள் அல்ல.

ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக மட்­டு­மல்ல போரில் பங்­கேற்று மனித உரிமை மீறல் களில் ஈடு­பட்ட படை­க­ளின் தள­ப­தி­க­ளாக இருந்­தார்­கள் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் எந்த ஒரு­வ­ரும் இத்­த­கைய நிலைக்கு இனி­மேல் ஆளா­கக்­கூ­டிய அபா­யம் இருக்­கி­றது.

குறிப்­பாக, போரை வென்­று­கொ­டுத்­தார்­கள் என்று கொண்­டா­டப்­ப­டும் தள­ப­தி­கள் அனை­வ­ருமே இத்­த­கைய ஆபத்தை எதிர்­கொள்­வார்­கள். அதற்­கான கட்­டி­யம்­தான் இந்த வழக்கு.

போர்க்­குற்ற விசா­ர­ணை­களை நடத்­து­கி­றோம் என்று ஐ.நாவில் வாக்­குக்­கொ­டுத்­து­விட்டு அத­னைத் தட்­டிக் கழிக்­கும் போக்­கில் செயற்­ப­டும் கொழும்­புக்கு இது தலை­யில் இறங்­கிய குட்டு.

இது­போன்றே கொழும்பு தொடர்ந்­தும் ஏமாற்றி வரு­மா­னால். அதன் போர்த் தள­ப­தி­கள் எவ­ரும் இலங்­கைக்கு வெளியே நட­மாட முடி­யாத ஒரு சூழல் வரும் என்­பதை இந்த வழக்கு உணர்த்­தி­யி­ருக்­கி­றது.

அரசு பொறுப்­புக்­கூ­றலை இழுத்­த­டித்து வரு­வ­தன் விளை­வு­தான் இந்த வழக்கு என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது. ஆனால், இத­னை­யெல்­லாம் புரிந்­து­கொண்ட மாதிரி கொழும்பு அர­சி­யல் தலை­வர்­க­ளின் கருத்­துக்­கள் இல்லை. இலங்­கை­யின் பாணி­யில் மெது­வா­கவே பொறுப்­புக்­ கூ­றல் நிறை­வேற்­றப்­ப­டும் என்று அரச தலை­வர் கூறி­யி­ருக்­கி ­றார்.

இத­னைப் பார்க்­கும்­போது ஜெகத் ஜய­சூ­ரி­ய­வைத் தொடர்ந்து ஒவ்­வொரு தள­ப­தி­கள் மீதும் போர்க் குற்ற வழக்­கு­கள் தாக்­க­லா­வ­தற்­கான வாய்ப்­பு­கள்­தான் அதி­கம் இருப்­ப­தா­கத் தெரி­கி­றது. இது ஓர் ஆரம்பமாக இருக்கக்கூடும்.

http://newuthayan.com/story/24587.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.