Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்­ப­டை­யு­ட­னான உறவை விரி­வு­ப­டுத்­திக் ­கொண்­டி­ருக்­கின்றோம் : அலிஸ் வெல்ஸ்

Featured Replies

இலங்கை கடற்­ப­டை­யு­ட­னான உறவை விரி­வு­ப­டுத்­திக் ­கொண்­டி­ருக்­கின்றோம் : அலிஸ் வெல்ஸ்

 

 
 

இந்து சமுத்­திர பிராந்­தி­யத்தில் முன் ஒரு­போதும் இல்­லாத வாய்ப்பு கிடைத்­தாலும் பயங்­க­ர­வாதம், நாடு கடந்த குற்­றங்கள், ஆட்­க­டத்­தல்கள் மற்றும் சட்­ட­வி­ரோ­த­மான மருந்­துகள் உட்­பட பல எண்­ணற்ற பாது­காப்புத் தொடர்­பான சவால்­களை எதிர்­கொள்­கின்­றது என தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான பதில் உதவி இரா­ஜாங்கச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ் தெரி­வித்தார்.

Alice-Wells-1.jpg

எனவே, இந்து சமுத்­தி­ரத்தில் உள்ள பங்­கு­தா­ரர்­களின் கட­லோரப் பாது­காப்புப் படை­யி­னரின் மனோ­ப­லத்­தி­னை கட்­டி­யெ­ழுப்ப அமெ­ரிக்கா உறு­தி­ய­ளிக்­கின்­றது. இலங்கைக் கடற்­ப­டை­யி­ன­ருக்கும் அமெ­ரிக்க கடற்­ப­டை­யி­ன­ருக்கும் இடை­யி­லான உற­வினை மேலும் விரி­வு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

இந்து சமுத்­திர மாநாட்டின் இரண்­டா­வது நாள் அமர்­வுகள் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அலரி மாளி­கையில் இடம்­பெற்­றன. இதன் போது உரை­யாற்­று­கை­யி­லேயே  பதில் உதவி இரா­ஜாங்கச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

இந்­திய பசுபிக் பிராந்­தி­யத்தின் சக்­தி­யாக ஐக்­கிய அமெ­ரிக்கா எப்­போதும் இருக்கும்.  ஏழு தசாப்­தங்­க­ளிற்கும் மேலாக, கிழக்கு ஆபி­ரிக்­காவின் கரை­யோ­ரங்­க­ளி­லி­ருந்து அமெ­ரிக்­காவின் மேற்குக் கடற்­கரை வரைக்­கு­மான பரந்த வேறு­பா­டான தனித்­தன்­மை­களை  அமெ­ரிக்கா பொறுப்­பேற்றுக் கொண்­டுள்­ளது. இனி­வரும் தசாப்­தங்­க­ளிலும் இந்த கொள்­கையில் எந்­த­வி­த­மான மாற்­றங்­களும் ஏற்­படப் போவ­தில்லை. 

இந்த ஆற்றல் கொண்ட பிராந்­தி­யத்­திற்கு அமெ­ரிக்­காவின் இணைப்­பா­னது புதிய ஒன்­றல்ல. இரு நூற்­றாண்­டு­க­ளிற்கு முன்னர் புதிய இங்­கி­லாந்­தி­லி­ருந்து கப்­பல்கள் பொஸ்­ட­னுக்கும் கல்­கத்­தா­விற்கும் இடையில் இந்து சமுத்­தி­ரத்தின் வர்த்­தகக் கடல் மார்க்­க­மாக வாச­னைத்­தி­ர­வி­யங்கள், தேயிலை மற்றும் பனிக்­கட்­டி­க­ளையும் எடுத்துக் கொண்டு சென்­றன. 

இன்று இந்த நிலை வேக­மாக முன்­னேற்­ற­ம­டைந்து இந்தப் பிராந்­தி­யத்தில் எமது கூட்­டாண்மை மற்றும் பகி­ரப்­படும் மூலோ­பாய நலன்­களை எப்­போதும் நிரந்­த­ர­மாகக் கொண்­டுள்­ளன. இந்து சமுத்­தி­ரத்தில் அமெ­ரிக்­காவின் ஈடு­பாடு மற்றும் இரா­ஜ­தந்­திரச் செய­லாண்மை குறித்து வெளிப்­ப­டுத்­து­கின்றேன். 

முத­லா­வ­தாக பொரு­ளா­தார வளர்ச்சி, வெளிப்­ப­டை­யான அபி­வி­ருத்தி மற்றும் பிராந்­திய ஒருங்­கி­ணைப்பு ஆகி­ய­வற்­றினை மேம்­ப­டுத்தும் இந்து சமுத்­தி­ரத்­திற்­கான பொது­வான ஒரு தூர­நோக்கு  இருக்­கின்­றது. பிராந்­தி­யத்தின் குடி­மக்­க­ளுக்கும் பொறுப்­பு­டை­மை­க­ளுக்கும் முன்­னு­ரிமை அளித்தல், திறந்த சந்தை, நிலை­யான நன்­மை­களை வழங்­குதல் ஆகிய பிராந்­திய ரீதி­யான முன்­னெ­டுப்­புக்கள் யாவும் மிகவும் நிலை­யா­ன­தாக இருக்கும். 

இரண்­டா­வ­தாக இந்து சமுத்­தி­ரத்தில் பாது­காப்பு அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்­ளவும், அதேபோல் மனி­தா­பி­மான மற்றும் சுற்றுச் சூழல் பேர­ழி­வு­க­ளுக்குப் பதி­ல­ளிப்­ப­தற்கும் நாடுகள் திறம்­படச் செய­லாற்­றக்­கூ­டிய வகையில் இருக்க வேண்டும். மனோ­ப­லத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­த­லுடன்  மற்றும் பயிற்­சியின் மூலம் இந்தச் சிக்­க­லான பிராந்­தி­யத்தில் பாது­காப்புச் சுமையைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

இறு­தி­யாக வழி­ந­டத்தும் சுதந்­திரம் மற்றும் சிக்­கல்­களின் அமை­தி­யான தீர்வு ஆகி­ய­வற்­றினை உள்­ள­டக்கும் சர்­வ­தேச நெறி­மு­றை­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கும் ஒரு கொள்­கை­யான பிராந்­தியக் கட்­டி­டக்­கலை அமைப்­பினை  ஆத­ரிக்க வேண்டும். அனைத்து நாடு­களும் சுதந்­தி­ர­மாகப் பறந்து புறப்­பட்டுச் சென்று சர்­வ­தேசச் சட்டம் அனு­ம­திக்கும் இடங்­களில் செயற்­பட அவற்­றிற்கு உரிமை உண்டு. 

இந்து சமுத்­தி­ர­மா­னது உல­க­ளா­விய வர்த்­தகம் மற்றும் வாணிபம் ஆகி­ய­வற்றின் அடித்­த­ளத்தில் உள்­ள­தனால் இத­னு­டைய கடல் மார்க்­கத்தின் வழி­யாகப் பய­ணிக்கும் வகையில் உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு உலக எண்ணெய் வர்த்­த­கமும் கிட்­டத்­தட்ட உலகின் அரை­வா­சி­யான 90,000 வணிகக் கப்­பல்­களும் பய­ணிக்கும் பாதை­யாக காணப்­ப­டு­கின்­றது.

இந்தப் பிராந்­தி­யத்தில் பூமியில் வேக­மாக வளர்ந்து வரும் பொரு­ளா­தா­ரங்­களில் சிலவும், உலகின் மக்கள் சனத்­தொ­கையில் கால்­வாசிப் பகு­தியும் உள்­ள­துடன், அவர்­களில் ஐந்­நூறு மில்­லியன் பேர் வரையில் இன்னும் நம்­ப­கத்­தன்மை வாய்ந்த அதி­கா­ரத்தைப் பெறாத நிலையில் உள்­ளனர். 

பொரு­ளா­தார ஒத்­து­ழைப்­பினை மேம்­ப­டுத்­துதல் என்­பது நிலை­யான மற்றும் அனைத்தும் உள்­ள­டக்­கிய வளர்ச்­சிக்கு வழி­வ­குக்கும் என்று நாம் நம்­பு­கின்றோம். உள்­நாட்டுப் பிராந்­தி­யங்­க­ளிற்கு இடை­யி­லான வர்த்­தகம் 2030 ஆம் ஆண்­ட­ளவில் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் கிட்­டத்­தட்ட 568 பில்­லியன் டொல­ருக்கு நிக­ராக இருக்கும். 

ஏற்­க­னவே, அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் இப்­ப­குதி முழு­வதும் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றன . குடி­பானப் போத்­தல்­க­ளி­லி­ருந்து விமா­னத்தின் உதிரிப் பாகங்கள் வரைக்­கு­மான ஒவ்­வொன்­றி­னையும் இவை விநி­யோகம் செய்­கின்­றன. இந்­தி­யாவில் மாத்­திரம் 600க்கும் மேற்­பட்ட அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் கடந்த இரண்டு வரு­டங்­களில் வெளி­நாட்டு நேரடி முத­லீ­டுகள் ஐந்­நூறு சத­வீ­தத்­தினால் அதி­க­ரிக்கும் வகையில் பங்­க­ளிப்புச் செய்­துள்­ளது.

நேபா­ளத்தின் போக்­கு­வ­ரத்து மற்றும் எரி­பொருள் வளத்­து­றை­களில் அறு­நூறு மில்­லியன் டொல­ரினை அமெ­ரிக்கா முத­லீடு செய்­கின்­றது. இது இந்து சமுத்­தி­ரத்தில்  வர்த்­தக உற­வுகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றன என்­ப­தற்கு இன்­னு­மொரு அறி­கு­றி­யாக விளங்­கு­கின்­றது. 

வெளிப்­ப­டை­யான வெளி­நாட்டு நேரடி முத­லீட்­டினை ஊக்­கு­வித்தல், எரி­பொருள் வளச்­சக்தி உட்­கட்­ட­மைப்­பினை உரு­வாக்­குதல், வளங்­க­ளு­ட­னான வளர்ந்து வரும் தொழில் முனை­வோர்கள் தமது கருத்­துக்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக அவர்­களை இணைத்தல் ஆகி­ய­வற்­றுடன் சட்­ட­பூர்­வ­மான மற்றும் ஒழுங்கு முறை­யான ஆட்­சியை மேம்­ப­டுத்­து­வ­தற்கு தெற்­கா­சிய நாடு­க­ளுடன் நாம் பங்­கு­தா­ரர்­க­ளாக இருப்போம். 

சட்­ட­வி­ரோ­த­மான அறி­வித்தல் விடுக்­கப்­ப­டாத மற்றும் ஒழுங்­கு­மு­றை­யற்ற விதத்தில் மீன்­பி­டிக்கும் செயற்­பா­டு­களை உள்­ள­டக்கும் வகையில் உல­கெங்­கிலும் உள்ள கடல்சார் பொரு­ளா­தா­ரங்­களை அச்­சு­றுத்தும் சிக்­கல்­களை எதிர்­கொள்­வ­தற்­காக அமெ­ரிக்கா பாது­காப்­பான ஓசோன் வலை­ய­மைப்பு மூலம் தனது பங்­கு­தா­ரர்­களை உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. 

சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­துதல், வன்­செ­யல்­க­ளையும் மீறல்­க­ளையும் கண்­ட­றிதல், சட்­ட­வி­ரோ­ம­தான செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளையும் சம்­பந்­தப்­ப­டு­ப­வர்­க­ளையும் தண்­டித்தல் ஆகிய ஒருங்­கி­ணைந்த நட­வ­டிக்­கை­களை இந்த முயற்சி ஊக்­கு­விக்­கின்­றது. உல­கெங்­கிலும் இருந்து சுமார் நாற்­ப­திற்கும் மேற்­பட்ட பங்­கு­தா­ரர்கள் பாது­காப்­பான ஓசோன் வலை­ய­மைப்பில் இணைந்­துள்­ளனர். 

அத்­துடன் ஒவ்­வொரு நாட்­டி­னையும் இந்தப் பாது­காப்­பான வலை­ய­மைப்பில் சேர்ந்து கொள்­ளு­மாறு  இத்­த­ரு­ணத்தில் அழைப்பு விடுக்­கின்றோம். தெற்­கா­சி­யாவில், எமது பிராந்­தியப் பங்­கு­தா­ரர்கள் தமது பணி­களை செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்­தியா தனது கிழக்குக் கொள்­கையின் மூலம் அத­னு­டைய அயல் நாடு­க­ளுடன் வலு­வான வர்த்­தகம் மற்றும் உட்­கட்­ட­மைப்பு ரீதி­யான உற­வு­களைக் கட்டி எழுப்­பு­கின்­றது.

இப்­பி­ராந்­தி­யத்தில் முன் ஒரு­போதும் இல்­லாத வாய்ப்புக் கிடைத்­தாலும், பயங்­க­ர­வாதம், நாடு கடந்த குற்­றங்கள், ஆட்­க­டத்­தல்கள் மற்றும் சட்­ட­வி­ரோ­த­மான மருந்­துகள் உட்­பட பல எண்­ணற்ற பாது­காப்புத் தொடர்­பான சவால்­களை எதிர்­கொள்­கின்­றது.

இந்தச் சவால்­களை எதிர்த்துப் போரா­டு­வ­தற்கு அமெ­ரிக்கா பிராந்­தியப் பங்­கு­தா­ரர்­க­ளிற்கு இடையில் உள­வுத்­துறை சார்ந்த பகிர்­வு­களை மேம்­ப­டுத்­துதல் மற்றும்  சமூகக் கொள்­கைகள் போன்ற பகு­தி­களில் மனோ­ப­லத்­தினைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தனை மேம்­ப­டுத்­துதல் , போதைப் பொருள் பாவனை எதிர்ப்பு , விமானப் பாது­காப்பு மற்றும் தட­ய­வியல் பகுப்­பாய்வு போன்ற பகு­தி­களில் திறன்­க­ளையும் ஆற்­றல்­க­ளையும் வளர்த்துக் கொள்ளும் செயற்­பா­டுகள் ஆகி­ய­வற்றை  மேம்­ப­டுத்த முயல்­கின்­றது. 

இலங்கைக் கடற்­ப­டை­யி­ன­ருக்கும் அமெ­ரிக்க கடற்­ப­டை­யி­ன­ருக்கும் இடை­யி­லான உற­வினை விரி­வு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்றோம். கடந்த வருடம் ஒக்­ரோபர் மாதத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள முத­லா­வது கடற்­படைப் பயிற்­சியை இதற்கு சிறந்த உதா­ர­ண­மாக குறிப்­பி­டலாம். 

இந்து சமுத்­திர பிராந்­தி­யத்தின் அனைத்துக் கடற்­ப­டை­களும் இணைந்து பயிற்­சியில் கலந்து கொள்­ளவும் கூட்டுத் திறனை வளர்ப்­ப­தற்­கா­கவும் மற்றும் சர்­வ­தேச ரீதி­யான தராதரங்களை நிலைநிறுத்துவதற்காகவும் கடல்சார் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் முடியும் என நம்புகின்றோம். 

தெற்காசியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையில் ஒரு பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இணைப்புகளை ஆதரித்தல். 

அனைத்து இந்து சமுத்திரத்தின் பங்குதாரர்களுக்கும் கடற்படைப் பயிற்சிநெறிகள் மூலம் பிராந்தியத்தின் மனிதாபிமான மற்றும் பேரழிவு நிவாரணத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும், இந்து சமுத்திரப் பொருளாதாரத்தைத் தாராளமயமாக்குதல், போட்டிச் சந்தையை அணுகக்கூடிய மருத்துவம் மற்றும் கல்வி வசதிகளை ஆர்வமாக ஏற்றுக் கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். 

தெற்காசியாவிலும் பரந்துபட்ட இந்திய பசுபிக் பிராந்தியத்திலும் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பகிரப்பட்டுள்ள நோக்கங்களைப் பின்பற்றுவதில் அமெரிக்க உறுதியாக உள்ளது ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தப் கூட்டு முயற்சியில் இங்கு இணைந்து கொள்வதற்காக நாம் ஒவ்வொரு நாட்டினையும் இத்தருணத்தில் அழைக்கின்றோம் என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/23891

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.