Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவ்வளவு காலத்துக்கு பொறுத்துப் போவது?

Featured Replies

எவ்வளவு காலத்துக்கு பொறுத்துப் போவது?

 

நடந்து முடிந்த போர்க் குற்­றங்­கள், மனித உரிமை மீறல்­கள், நீதி மறுப்­புக்­கள் போன்ற விட­யங்­க­ளில் இலங்கை அரசு தனது பொறுப்­பி­லி­ருந்து அதா­வது பொறுப்­புக்­கூ­ற­வேண்­டிய தனது கடப்­பாட்­டில் இருந்து பின்­வாங்­கி­வி­டப்­போ­வ­தில்லை என்று கூறி­யி­ருக்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஆனால் அவை­யெல்­லாம் இலங்­கைக்கே உரிய பாணி­யில் மிக மெது­வா­கவே நிறை­வேற்­றப்­ப­டும் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

புதிய அர­ச­மைப்­புக்­கான முயற்­சி­கள் மந்­த­மா­கி­யி­ருக்­கை­யில், ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னத்­தில் சொல்­லப்­பட்ட பல விட­யங்­கள் நிறை­வேற்­றப்­ப­டா­ம­லேயே இருக்­கும் நிலை­யில், அர­சின் மீது நம்­பிக்­கை­யி­ழந்து மக்­கள் வீதி­க­ளுக்கு இறங்­கிப் பல மாதக் கணக்­கா­கப் போராட்­டங்­களை நடத்தி வரு­கை­யில் நாட்­டின் தலை­வர் சாவ­கா­ச­மாக எல்­லாம் மிக மெது­வாக, பொறு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டும் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

தமி­ழர்­க­ளின் வாக்­கு­க­ளை­யும் ஒட்­டு­மொத்த சிறு­பான்மை மக்­க­ளின் வாக்­கு­க­ளை­யும் பெற்று அரச தலை­வ­ராக வந்­தா­லும்­கூட அவர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு கொழும்­பின் அர­சி­யல் பீடம் கொடுக்­கும் முக்­கி­யத்­து­வத்­திற்­கும், எப்­படி இந்­தப் பிரச்­சி­ னையை அது அணு­கு­கி­றது என்­ப­தற்­கும் மிகச் சிறந்த உதா­ர­ணம் அரச தலை­வ­ரின் இந்­தக் கூற்று.

இந்­தப் பிரச்­சி­னை­கள் எல்­லா­வற்­றை­யும் ஒரே இர­வில் தீர்த்­து­வி­ட­மு­டி­யாது என்­பதை ஒரு பல்­ல­வி­யா­கவே இலங்­கைத் தலை­ வர்­கள் எல்­லோ­ரும் பாடி வரு­கின்­ற­னர். இவர்­கள் மட்­டும் அல் லர், உலக நாடு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளி­ட­மும்­கூட அந்த எண்­ணம் இருக்­கி­றது. திடீ­ரென எல்­லா­வற்­றை­யும் தீர்த்­து­விட முடி­யாது, மெல்ல மெல்­லத்­தான் தீர்க்க முடி­யும் என்­ப­தைத்­தான் அவர் களும் சொல்­லி­வ­ரு­கி­றார்­கள்.

இது தொடர்­பில் தமி­ழர்­க­ளி­டம் உள்ள கேள்வி எல்­லாம், இப்­ப­டியே சொல்­லிக்­கொண்டு காலத்தை நீங்­கள் கடத்­து­வீர்­க­ளா­னால் எப்­போ­து­தான் தீர்வு வரும்? எப்­போ­து­தான் நீதி கிடைக்­கும்? அரச தலை­வர் சொன்ன மாதி­ரியே இலங்­கை­யின் பாணி மிக மெது­வாக நகர்­வ­து­தான்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்­தில் மட்­டும் அது உண்­மை­தான். சிறு­பான்மை இனங்­க­ளுக்கு எதி­ராக என்­றால் மிக விரை­வில் அவர்­க­ளால் இரு அர­ச­மைப்­பு­களை (1972, 1978) உரு­வாக்­கி­விட முடி­யும். ஆனால் அதே சிறு­பான்மை மக்­க­ளுக்­கான தீர்வு விட­யத்­தில் மிக மெது­வா­கத்­தான் செயற்­ப­டு­வார்­கள்.

அது மட்­டும் இலங்­கை­யின் பாணி­யல்ல. மிக மெது­வா­கச் செயற்­பட்டு கடை­சி­யில் எந்த அடை­வுமே இன்றி அத­னைக் குப்­பை­யில் தூக்கி வீசி­வி­டு­வ­து­டன் தமது ஆட்­சிக் காலத்தை முடித்­து­வி­டு­வார்­கள் என்­ப­தும் இலங்­கை­யின் பாணி­தான்.

கடந்த 69 வருட கால­மாக இத­னைத்­தான் தமி­ழர்­கள் பார்க்­கி­றார்­கள். தமி­ழர்­க­ளின் விட­யங்­க­ளில் மட்­டும் மிக மெது­வாக இயங்­கிப் பின்­னர் அதனை முற்­றா­கக் கைவி­டு­வ­து­தான் இலங்­கை­யின் பாணி என்­பது அவர்­க­ளுக்­கும் தெரிந்­தே­தான் இருக்­கி­றது.

இத­னால்­தான் சிங்­கள அர­சு­கள் ஒரு­போ­தும் தாமா­கத் தமி­ழர்­க­ளுக்­குத் தீர்­வைத் தரப்­போ­வ­தில்லை என்­பதை தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் மிக உறு­தி­யாக நம்­பி­னார். பேச்சு மேசை­க­ளில் அந்த அவ­நம்­பிக்­கை­யு­ட­னேயே செயற்­பட்­டார்.

வர­லாறு அவ­ரது நம்­பிக்­கை­யையே உண்­மை­யா­னது என்­ப­தைத் தொடர்ந்­தும் நிரூ­பித்து வரு­கி­றது. இப்­போது மைத்­திரி சொல்­லி­யி­ருப்­ப­தும் அத­னையே நிரூ­பிக்­கி­றது. பொறுக்­கூ­றல் இல்­லா­மல் நிலை­யான நீடித்த அமை­தி­யும் இலங்­கை­யில் ஏற் ப­டப்­போ­வ­தில்லை.

என்ற நிலை­யில் மிக மெது­வா­கச் செயற்­பட்டு ஆட்சி முடி­யும்­போது அதைக் கைவிட்டு அல்­லது அடுத்த ஆட்­சிக்­கும் நீடித்­துச் செல்­வ­தைத் தவிர வேறு எது­வும் உருப் ப­டி­யாக நடக்­கப் போவ­தில்லை என்­கிற அவ­நம்­பிக்­கை­யைத்­தான் மைத்­தி­ரி­யின் கருத்து தந்து நிற்­கி­றது.

ஆங்­கி­லே­யர்­கள் இலங்­கை­யில் இருந்து வெளி­யே­றி­யது முதற்­கொண்டு இந்த நாட்­டில் நீதி­கா­கத் தமிழ் இனம் காத்­துக் கிடக்­கி­றது. அன்று முதல் கொழும்பு தனது பொறுப்­புக்­கூ­றலை நிறை­வேற்­றா­த­தன் கார­ண­மா­கத்­தான் இடை­யில் போரும் பெரும் அழி­வு­க­ளும் வந்து சேர்ந்­தன. அதன் மூலம் மேலும் பொறுப்­கூ­றல்­க­ளைச் சொல்ல வேண்­டிய நில­மைக்கு கொழும்பு அரசு தள்­ளப்­பட்­டது.

இப்­போது கேள்­வி­யெல்­லாம் 69 ஆண்­டு­கள் காத்­தி­ருந்த தமி­ழர்­கள் இன்­னும் எத்­தனை காலம் காத்­தி­ருக்­க­வேண்­டும் இலங்­கை­யின் மிக மெது­வான பாணி­யில் தீர்வை எட்­டு­வ­தற்­காக? மைத்­தி­ரி­பால சிறி­சேன பதில் சொல்­வாரா?

http://newuthayan.com/story/24936.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.