Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 ஆவது திருத்தமும் தமிழ்கூட்டமைப்பும்

Featured Replies

20 ஆவது திருத்தமும் தமிழ்கூட்டமைப்பும்

 

18 ஆவது சீர்­தி­ருத்­தத்தைக் கொண்டு வந்­ததன் மூலம் மஹிந்த ராஜபக் ஷ மக்கள் ஆணையை மீறி­யுள்ளார். ஜன­நா­ய­கத்தை குழி­தோண்டி புதைத்து விட்­டா­ரென்று போர்க்­கொடி தூக்­கி­ய­வர்கள் இன்று 20 ஆவது சீர்­தி­ருத்­தத்தை மாகாண சபை­களில் நிறை­வேற்­று­வ­தற்­காக யாசகம் கேட்கும் நிலை உருவாகியுள்ளது.

வட­மா­காண சபையின் தேர்­தலை நடத்­தாமல் இழுத்­த­டிக்­கிறார் மஹிந்த. இது வட­மா­கா­ணத்­துக்கு செய்யும் ஜன­நா­யகத் துரோகம் என விமர்­சித்­த­வர்கள் மாகாண சபை­களின் ஆயுட் காலத்தை நீடிக்கக் கோரும் 20 ஆவது திருத்­தத்தை ஆத­ரிக்­கவும் அனு­ச­ரித்துப் போகவும் மறை­மு­க­மாக, முன்னிற்­பது எந்­த­வகை ஜன­நா­ய­க­மாகும் என மக்கள் கேள்வி கேட்கும் அள­விற்கு 20 ஆவது திருத்தம் தொடர்­பான வாதப்­பி­ரதி வாதங்கள் வளர்ந்து கொண்­டி­ருக்­கின்றன.

இவ்­வி­வ­காரம் தொடர்பில், சிறு பான்மை கட்­சிகள், சிறு கட்­சிகள், மாகாண சபைகள், பாரா­ளு­மன்றம் எவ்­வகை முடி­வு­களை எடுக்­கப்­போ­கின்­றன என்ற விட­யத்தை அறிந்து கொள்­வ­தற்கு மக்­களும் சர்­வ­தே­சமும் ஆவ­லா­கவும், அவ­ச­ர­மா­கவும் இருக்கும் ஒரு நிலை­யையும் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

மாகாண சபை­களின் நிலை­மை­களைப் பொறுத்­த­வரை இத்­தி­ருத்தம் தொடர்­பாக, மேல் மாகாண சபையில் பெரும் குழப்பம். ஏற்பட்டிருக்கிறது.கிழக்கு மாகாண சபை இது­வி­டயம் தொடர்பில் கருத்துப் பெற 7 ஆம் திகதிக்கு (07.09..2017) ஒத்திவைக்­கப்­பட்­டுள்­ளது. இதேபோன்று சப்­ர­க­முவ மாகா­ணமும் 4 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சர்­வ­சன வாக்­கெ­டுப்பை நடத்­தாமல் 20, ஆவது திருத்த சட்­டத்தை நிறை­வேற்­று­வது தொடர்பில் உச்ச, நீதி­மன்றின் கருத்தைக் கோரி மனுத்­தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. தேர்தல் கண்­கா­ணிப்பு அமைப்­பான பவ்ரல் அமைப்­பினால் (28.08.2017) மனு­தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

மாகாண சபை­களின் அங்­கீ­காரம் இல்­லா­மலே திருத்­தத்தை பாரா­ளு­மன்றில் 2/3 பெரும்­பான்­மை­யினால் நிறை­வேற்ற முடியும். மாகாண சபை­களின் அங்­கீ­காரம் அவ­சி­ய­மற்­ற­தெனக் கூறப்­பட்ட போதும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்கள் 20 ஆவது திருத்தச் சட்­டத்தை நிறை­வேற்­று­வதில் இழு­பறி காணப்­ப­டு­கின்ற நிலையில் முத­ல­மைச்­சர்­க­ளுடன் அவ­சர சந்­திப்­பொன்றை கடந்த 28 ஆம் திகதி நடத்­தி­யுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்ட மூலத்­துக்­கான ஆத­ரவை வழங்கும் விட­யத்தில் மாகாண சபைகள் சர்ச்­சை­களை உண்­டாக்கி வரும் நிலையில் அனைத்து மாகாண சபை முத­ல­மைச்­சர்­க­ளு­டனும் கடந்த 28.08.2017 ஆம் திகதி அவ­சர சந்­திப்­பொன்றை நடத்­தி­ய­து­மன்றி 20 ஆவது திருத்­தத்­துக்­கான மாகாண சபை­களின் அங்­கீ­கா­ரத்தின் முக்­கி­யத்தை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

நாட்டின் அர­சியல் ஸ்திரத்­தன்மை, அர­சியல் சீர்­தி­ருத்தம், ஆயுட்­காலம் நீடிக்­கப்­படும் போதே அதன் நிர்­வாகம் ஆளு­நரின் கீழ் அல்­லாமல் முத­ல­மைச்­சர்­மாரின் கீழ் இருக்கும் போதுதான் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இலக்கை அடை­ய­மு­டியும். அதற்கு அனைத்து மாகா­ண ­ச­பை­களின் முத­ல­மைச்­சர்­களும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டு­மென நய­மா­கவும், பய­மா­கவும் கோரி­யுள்ளார். இந்த ஒன்றுகூடலில் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் கலந்து கொள்­ள­வில்­லை­யென்­பது கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டிய விடயம்.

கிழக்கு மாகாண சபை, வட­மத்­திய மாகா­ண­சபை, சப்­­ர­க­முவ மாகா­ண­சபை ஆகிய மூன்று மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் 2012 ஆம் ஆண்டு நடத்­தப்­பட்­டதன் கார­ண­மாக அவற்றின் ஆயுட்­காலம் செப்­டெம்பர் மாதத்­துடன் (2017) முடி­வ­டை­கின்ற நிலையில் அவற்­றுக்­கான தேர்­தல்­களை இவ்­வ­ருடம் நடாத்­தாமல் 9 மாகாண சபை­களின் தேர்­தல்­க­ளையும் ஒரே நாளில் நடாத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்யும் வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவர்­களால் 20 ஆவது திருத்தம் கடந்த 23.08.2017 பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

இத்­தி­ருத்­தத்­துக்­கான ஆத­ரவை பெறும் விதத்தில் இவை ஒன்­பது மாகா­ண ­ச­பை­க­ளுக்கும் அனுப்­பப்­பட்­டி­ருக்கும் நிலையில் அவற்­றுக்­கான ஆத­ரவைப் பெறும் முயற்­சி­யா­னது மாகா­ண ­ச­பை­களில் சவா­லாக மாறி­யி­ருப்­பதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது.

முதல் முதல் வெள்­ளோட்­ட­மாக இத்­தி­ருத்­த­மா­னது, வட­மத்­திய மாகாண சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போது மேல­திக இரண்டு வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இம்­மா­காண சபையில் அர­சாங்கம் சார்­பான அணி பல­முள்­ள­தாக இருந்த போதிலும் கூட்டு எதி­ர­ணியின் கடு­மை­யான எதிர்ப்­புக்கு மத்­தி­யி­லேயே நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

வட­மத்­திய மாகாண சபையின் முத­ல­மைச்சர் பேஷல ஜய­வர்த்­த­னவால் சபையில் இத்­தி­ருத்தம் சமர்ப்­பிக்­கப்­பட்ட போது, கடு­மை­யான எதிர்ப்பு, கண்­டனம் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. முப்­ப­திற்கு மேற்­பட்ட உறுப்­பி­னர்­களைக் கொண்ட இச்­ச­பையில் இத்­தி­ருத்­தத்­துக்கு ஆத­ர­வாக 15, உறுப்­பி­னர்­களும் எதி­ராக 13 உறுப்­பி­னர்­களும் வாக்­க­ளித்­துள்­ளனர். அர­சாங்கம் எதிர்­பார்த்த அள­வுக்கு ஆத­ரவு கிடைக்­க­வில்­லை­யாயின் முதல் முதல் நிறை­வேற்­றப்­பட்ட பெரு­மையை வட­மத்­திய மாகாண சபை பெற்றுக்கொள்­கி­றது.

இருந்த போதிலும் ஏனைய மாகா­ண­ச­பை­களின் நிலை­மைகள் படு­மோ­ச­மான நிலை­கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு உதா­ர­ண­மாக, ஊவா மாகா­ண­ச­பையில் நிலை­மைகள் சவால் நிறைந்­த­தா­க­வே­யி­ருந்­துள்­ளது. கடந்த (24.08.2017) திக­தி­யன்று இத்­தி­ருத்தம் சமர்ப்­பிக்­கப்­பட்ட போது கடு­மை­யான எதிர்ப்­புக்கு மத்­தியில் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­மா­கா­ண­ ச­பையில் நடாத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்பின் போது, மேற்­படி திருத்­தத்­துக்கு ஆத­ர­வாக 5 உறுப்­பி­னர்­களும், எதி­ராக 12, உறுப்­பி­னர்­களும் வாக்­க­ளித்­துள்­ளனர். 8 உறுப்­பினர்கள் நடு நிலை வகித்­துள்­ளனர்.

இதே­வேளை, 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மேல்­மா­காண சபையில் கடு­மை­யான குழப்ப நிலை­களைத் கொண்டு வந்­துள்­ளது. கடந்த 28 ஆம் திகதி (28.08.2017) இடம் பெற்ற மேல் மாகாண சபையின் விசேட அமர்வில் எதி­ர­ணி­யினர் குழப்பம் விளை­வித்­ததன் கார­ண­மாக சபை நட­வ­டிக்­கைகள் குலைந்­தது மாத்­தி­ர­மின்றி செங்கோல் உடைக்­கப்­பட்­டது.

20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய கால அவ­காசம் வழங்கும் வகையில் கலந்­து­ரை­யாடல் ஒத்தி வைப்­புக்­கான பிரே­ர­ணையை முத­ல­மைச்சர் சபைக்கு சமர்ப்­பித்த வேளை இதனை எதிர்த்த பொது எதி­ரணி சார்­பான ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் குறித்த குழு­வினர் விவாதம் இன்று இடம்­பெற வேண்டும். ஒத்தி போட முடி­யாத என அடம்­பி­டித்­தனர்.

 முத­ல­மைச்­சரின் பிரே­ரணை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது பிரே­ரணை 10 மேல­திக வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்கு முத­ல­மைச்சர், அமைச்­சர்கள் மற்றும் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐ.தே.கட்சி, ஜாதி­க­ஹெல உறு­மய, முஸ்லிம் காங்­கிரஸ், ஜன­நா­யக மக்கள் முன்­னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர். இங்கு கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்­டிய விடயம் இத்­தி­ருத்தம் தொடர்பில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வான அணி­யி­ன­ருக்கும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவுக்கு ஆத­ர­வான அணி­யி­ன­ருக்கும், இடையில் ஏற்­பட்ட முரண்­பா­டு­களே மாகா­ண­ச­பையின் நட­வ­டிக்­கை­களை சீர்­கு­லைய வைத்­தது. இதன் கார­ண­மா­கவே கூட்டத் தொடரை பிறி­தொரு தினத்­துக்கு ஒத்­தி­வைத்து (04.09.2017) அன்­றைய தினம் குறித்த சட்ட மூலம் தொடர்­பான வாக்­கெ­டுப்பு நடாத்­தப்­ப­டு­மென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய குழப்­ப­நி­லைகள், தோற்­க­டிப்­புக்கள், வாதப்­பி­ர­தி­வா­தங்கள் மூலம் தெரிந்து கொள்­ளக்­கூ­டிய விடயம் யாதெனில், 20 ஆவது திருத்த விவ­கா­ர­மென்­பது ஜன­நா­யக மர­புகள் மக்கள் ஆணை என்­பன­வற்­றுக்கு சவா­லாக இருக்­கி­றது என்­ப­வற்­றுக்கு அப்பால், ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இன்னும் சிறு­பான்மை கட்சி என்­ப­வற்றின் ஆத­ர­வுடன் நடத்­தப்­பட்டு வரும் நல்­லாட்­சிக்கு எதி­ராக பூதா­க­ர­மான ஒரு எதி­ரணி அல்­லது எதிர்ப்­போ­ராட்டம் வளர்ந்து கொண்டு வரு­கின்­றது என்ற நிதர்­ச­னத்­தையும் யதார்த்­தத்­தையும் புரிந்து கொள்­ளக்­கூ­டிய சம்­ப­வங்­க­ளா­கவே இவை அவ­தா­னிக்­கப்­ப­ட­வேண்டும். தென்­னி­லங்கை நிலை­மைகள் இவ்­வாறு இருக்­கின்­ற­போது, வட­கி­ழக்கின் நிலை­மைகள் எவ்­வாறு நோக்­கப்­ப­டு­கி­ற­தென்­பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வடக்கு மாகா­ண­ச­பையின் நிலை­மைகள் குறித்து கருத்துத் தெரி­வித்­தி­ருந்த முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் 20 ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ரவு அளிப்­ப­தற்கு வாய்ப்­பில்லை. இவ்­வ­ரைபின் மூலம் மாகா­ண­ச­பை­களின் அதி­கா­ரங்­களைப் பறித்து பாராளு­மன்­றத்­திடம் ஒப்­ப­டைக்கும் முயற்­சி­யி­லேயே அரசு ஈடுபடுகின்றது. எனவே மக்­க­ளு­டனும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடி அதன் பின்பே 20 ஆவது, சீர்­தி­ருத்தம் குறித்து முடிவு எடுக்க மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கான விஷேட அமர்வு 04.09.2017 அன்று நடை­பெ­ற­வுள்­ளது என்ற கருத்தைத் தெரி­வித்­தி­ருந்தார். வட­மா­கா­ண­சபை மேற்­படி திருத்­தத்­துக்கு அங்­கீ­காரம் வழங்­குமா இல்­லையா என்­ப­தற்கு அப்பால் அங்­கீ­காரம் வழங்­கு­வ­தற்­கு­ரிய சாத்­திய நிலைகள் கூடி­ய­வரை இல்­லை­யென்ற சூழ்­நி­லையே காணப்­ப­டு­கி­றது.

20 ஆவது திருத்தம் தொடர்பில் அவர்­களின் கருத்து யாதெனில், ஏலவே முத­ல­மைச்சர் அவர்கள் குறிப்­பிட்­டது போல, மேற்­படி சட்ட மூல­மா­னது மாகா­ண­ ச­பை­க­ளுக்­கு­ரிய அதி­கா­ரங்­களை மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திடம் ஒப்­ப­டைக்கும் சூழ்ச்­சியே இடம்பெற­வி­ருக்­கி­றது. இதற்கு எந்த சந்­தர்ப்­பத்­திலும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்­லை­யென அமைச்­சர்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் காட்­ட­மாக கருத்தை முன்­வைத்­துள்­ளனர்.

13 ஆவது திருத்­த சட்­டத்­துக்கு அப்பால் சென்று மாகா­ண­ச­பை­களின் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும். உருப்­ப­டி­யான எந்த அதி­கா­ரமும் கொண்­ட­தாக மாகா­ண­ ச­பைகள் இயங்­க­வில்­லை­யென தமது அதி­ருப்­தி­களைத் தெரி­வித்­து­வரும் வட­மா­கா­ண­ச­பை­யினர் இதற்கு தமது ஆத­ரவை வழங்கப் போவ­து­மில்லை. வழங்­கவும் முடி­யாது.

இதே­வேளை வட­மா­காண சபையில் அண்­மைக்­கா­ல­மாக, நில­வி­வரும் குழப்­ப­நி­லைகள் கொந்­த­ளிப்­புக்கள் இன்னும் சில வரு­டங்­க­ளுக்கு மாகாண சபையின் கால எல்­லையை நீடித்து, ஒரே நாளில் பாரா­ளு­மன்ற தேர்தல் போல் நடத்­தப்­பட வேண்­டு­மென்ற சட்ட மூலத்­துக்கு ஆத­ரவு நல்­கப்­ப­டு­மென்று எதிர்­பார்ப்­பது அறிவு பூர்­வ­மான ஒரு எதிர்­பார்ப்­பாக இருக்க முடி­யாது.

அது­வு­மின்றி வட­மா­காண சபையின் போக்கில் காணப்­ப­டு­கின்ற சம­மற்ற தன்மை அச்­ச­பையைக் கலைத்து விரைவில் புதி­ய­தொரு சபையை உரு­வாக்க வேண்­டு­மென்ற எண்­ணப்­பா­டு­களும் கருத்­து­களும் மக்கள் மத்­தி­யிலும், புத்தி ஜீவிகள் மத்­தி­யிலும் வேக­மாக வளர்ந்து வரு­கிற நிலையில் வரைபின் மூலம் மாகாண சபையின் கால எல்­லையை 2019 ஆம் ஆண்­டு­வரை நீடிக்கும் திருத்­தத்தை எந்­த­ளவு ஆத­ரிக்க முடி­யு­மென்­பது கேள்­விக்­கு­றி­யான விட­யமே.

கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் மலை­யக கட்­சிகள் அனைத்­துமே ஆயுட்­கால நீடிப்பை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 20 ஆவது திருத்­தத்தை நாம் ஆத­ரிக்கப் போவ­தில்­லை­யென தமது கருத்­து­களை வெளிப்­ப­டை­யா­கவே முன்­வைத்­துள்­ளனர். அண்­மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரி­விக்­கையில், 20 ஆவது திருத்தம் தவிர்க்­கப்­பட வேண்டும். தேர்தல் காலத்தை பின் போடு­வதை நாம் விரும்­ப­வில்லை. உரிய காலத்தில் தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்று, கூறி­யுள்ளார். அது­மட்­டுன்றி நடை­பெ­ற­வுள்ள தேர்தல் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய திட்­டங்கள் செயற்­பா­டுகள் வேட்­பாளர் தெரிவு மற்றும் தேர்தல் உபா­யங்கள் பற்றி முஸ்லிம் காங்­கிரஸ் தமது உச்ச அள­வி­லான ஆலோ­சனைக் கூட்­டங்­க­ளையும் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் நடத்திக் கொண்­டி­ருப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

முஸ்லிம் காங்­கி­ரஸைப் பொறுத்­த­வரை அது எதிர்­கொள்ள வேண்­டிய சவால்கள் தொடர்­பிலும் தேர்தல் உபா­யங்கள் தொடர்­பா­கவும் கவ­ன­மான தீர்­மா­னங்­க­ளையும், முடி­வு­க­ளையும் எடுக்க வேண்­டு­மென கட்­சியின் தலைவர் தெரி­வித்­தி­ருப்­பது கவ­னப்­பாடு கொண்ட விட­ய­மாகும். இருந்­த­போ­திலும் 20 ஆவது திருத்தம் தொடர்பில் கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்­துக்கும் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் கூறி­யுள்ள கருத்­துக்­கு­மி­டையில் சிறிய சிறிய மாற்­று­மு­னைப்­புக்கள் காணப்­ப­டு­வதும் தெரியவரு­கி­றது. அண்­மையில் மட்­டக்­க­ளப்­பி­லுள்ள மத்­திய வல­யப்­பா­ட­சா­லை­யொன்றில் உரை­யாற்­றி­ய­போது, 20 ஆவது திருத்தச் சட்­ட­மூலம் மாகாண சபை ஆட்­சியை நீடிப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுத் தரு­மென திருத்­தத்­துக்கு ஆத­ர­வாக கூறி­யுள்ளார் என்ற கருத்து சிலரால் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

கிழக்கு மாகா­ண­ ச­பையை பொறுத்­த­வரை 20 ஆவது திருத்தம் தொடர்பில் மாகா­ண­சபை ஆத­ரவு தரப்­போ­கி­றதா இல்­லையா என்­ப­தற்கு அப்பால் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் இது தொடர்பில் என்ன தீர்­மா­னத்தை மேற்­கொள்­ள­வி­ருக்­கி­றார்கள் என்­ப­தையே மக்­களும் சர்­வ­தே­சமும் உன்­னிப்­பாக அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இதில் கூட்­ட­மைப்பு எடுக்கப் போகிற முடிவு, வடக்கு மாகாண சபையின் நிலைப்­பாடு எவ்­வாறு இருக்­கப்­போ­கி­றது. கிழக்கு மாகாண சபை­யி­லுள்ள தமிழ்க் கூட்டமைப்பை பிரதிநிதித்­து­வப்­ப­டுத்தும் 11 உறுப்­பி­னர்­களும் என்ன முடி­வுக்கு வரு­வார்கள் என்­ப­துதான் எதிர்­பார்க்­கப்­படும் விட­ய­மாகும்.

கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வரை தலைவர் இரா.சம்­பந்தன் இத்­தி­ருத்­தத்தை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்­லை­யென வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். அதே­நேரம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரனும் தமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இதில் சங்­க­டத்­துக்­கு­ரிய விவ­கா­ர­மாக இருக்­கப்­போ­வது, வட­மா­காண சபை எடுக்­கப்­போகும் தீர்­மா­னத்­துக்கு அமை­வான ஒத்த தீர்­மா­னத்தை கிழக்கின் உறுப்­பி­னர்கள் எடுப்­பார்­களா என்­பதே பாரிய கேள்­வி­யாக மாறி­யுள்­ளது. வடக்கு மாகாண சபைக்கு ஒத்த தீர்­மா­னத்தை கிழக்கு மாகாண கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் எடுக்­க­வில்லை யாயின், கூட்­ட­மைப்­புக்குள் ஒரு நேரொத்த தன்மை காணப்­ப­ட­வில்­லை­யென்ற விமர்­சனம் முன்­வைக்­கப்­ப­டலாம். இதில் கூடிய கவ­னத்­துக்­குள்­ளாக்­கப்­பட்­டி­ருக்கும் விட­ய­மாக கிழக்கு மாகாண சபை­யி­லுள்ள கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் 11 பேரும் திருத்தம் தொடர்பில் என்ன தீர்­மா­னத்தை எடுக்கப் போகி­றார்கள் என்ற எதிர்­பார்ப்பே இன்­றைய நிலையில் அதிக கவனம் கொண்ட செய்­தி­யாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

வட­மா­கா­ண­ ச­பையில் இத்­தி­ருத்தம் தொடர்பில் எதிர்­வரும் 4 ஆம் திகதி (04.09.2017) முடிவு எடுக்­கப்­ப­டு­மென முத­ல­மைச்சர் அறி­வித்­தி­ருக்கும் அதே­வேளை கிழக்கு மாகாண சபையில் இது தொடர்­பான விஷேட அமர்வு எதிர்­வரும் 7 ஆம் திகதி (07.09.2017) இடம்­பெ­ற­வுள்­ளது.

ஏற்­க­னவே, கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தம் தொடர்­பாக ஆராய்ந்து முடி­வெ­டுப்­ப­தற்கு அவ­சர கூட்­ட­மொன்று கடந்த 25 ஆம் திகதி (25.08.2017) கூட்டப்பட்டிருந்தபோதும் அது திடீரென ரத்துச் செய்யப்பட்டு, கடந்த 29 ஆம் திகதி அமர்வின் போது 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க 7 ஆம் திகதி (07.09.2017) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே 20 ஆவது திருத்த சட்டம் தொடர்பில்,மாகாணசபைகளில் அரசாங்கம் தோல்விகளையே கண்டு கொண்டிருப்பதற்கு இன்னுமொரு உதாரணம்தான் தென்மாகாண சபையில் கடந்த 29 ஆம் திகதி குறித்த சட்ட மூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பில் தென்மாகாண சபையில் கடந்த 29.08.2017 அன்று விசேட அமர்வொன்று நடத்தப்பட்டது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலமான வாக்கெடுப்பு சபையின் அடுத்த அமர்வில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டபோதும் கூட்டு எதிரணி ஆதரவு உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டினர். இதன் காரணமாக தீர்மானம் வாபஸ் பெறப்பட்டு சட்ட மூலத்துக்கு அனுமதி பெறும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக எந்தவொரு உறுப்பினரும் வாக்களிக்காத நிலையில் எதிராக 27 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் சட்டமூலவாக்கெடுப்பு தோல்வி கண்டது.

நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களின் அடிப்படையில் பார்க்கின்றபோது, நடத்தப்படவுள்ள எந்தவொரு மாகாணசபையிலும் இச்சட்டமூலம் வெற்றிபெறாத சூழ்நிலைகளே, உருவாகி வருகின்றன. எவ்வாறு இருந்த போதிலும் வட– கிழக்கு மக்களின் பார்வையில் இந்த திருத்தம் தொடர்பில் கூட்டமைப்பு என்ன முடிவுக்கு வரப்போகிறது, வடக்கு என்ன செய்யப்போகிறது. கிழக்கு மாகாணசபை கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்ன முடிவுக்கு வரவிருக்கிறார்கள் என்பதுதான் இன்றுள்ள கேள்வியாகும்.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-02#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.