Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 337 பேர் பாதிப்பு

Featured Replies

தொடரும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 337 பேர் பாதிப்பு

 

 
 

நாட்டில் நிலவும் சீரற்ற கால­நி­லையின் விளை­வாக கடந்த சில தினங்­க­ளாக அதிக மழை­வீழ்ச்சி பதி­வாகி வரு­கின்ற கார­ணத்­தினால் இது­வ­ரையில் ஐந்து மாவட்­டங்­களை சேர்ந்த 899 குடும்­பங்­களைச் சேர்ந்த 3 ஆயி­ரத்து 337 பேர் பாதி­க்கப்­பட்­டுள்­ளனர். மேலும் 374 வீடு கள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 

Image result for தொடரும் கடும் மழை virakesari

மேலும் தென் மற்றும் மேல் மாகா­ணத்தில் பல பகு­தி­க­ளிலும் நேற்றும் தொடர்ச்­சி­யாக பெய்த கடும் மழையின் கார­ண­மாக குறித்த பகுதியில் வாழும் மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அத­ன­டிப்­ப­டையில் கொழும்பு உள்­ளிட்ட நாட்டின் பல பகு­தி­க­ளிலும் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு முதல் தொடர்ச்­சி­யாக கடும் மழை பெய்தது. இதனால் மக்­களின் வழ­மை­யான செயற்­பா­டு­களில் தடை­யேற்­பட்­ட­துடன் இய ல்பு வாழ்க்­கைக்கு பாரி­ய­ளவில் பாதிப்­பேற்­பட்­டி­ருந்­தது.

நாட்டில் நிலவும் சீரற்ற கால­நி­லையின் விளை­வாக கடந்த சில தினங்­க­ளாக அதிக மழை­வீழ்ச்சி பதி­வாகி வரு­கின்­றது. 

இது­வ­ரை­யில் காலி, களுத்­துறை, வவு­னியா, குரு­ணா­கல், பொல­ன­றுவை உள்­ளிட்ட ஐந்து மாவட்­டங்­களில் 899 குடும்­பங்­களைச் சேர்ந்த 3 ஆயி­ரத்து 337 பேர் பாதி­க்கப்­பட்­டுள்­ளனர். மேலும் 374 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

நீர்த்­தேக்­கங்­களின் நீர்­மட்டம் அதி­க­ரிப்பு

குறிப்­பாக மலை­யகம் உள்­ளிட்ட பகு­தி­களில் தொடர்ச்­சி­யாக மழை­வீழ்ச்சி கிடைக்­கப்­பெற்­றுள்­ளதால் நாட்டின் பிர­தான நீர்த்­தேக்­கங்­களின் நீர்­மட்­டங்கள் அதி­க­ரித்­­துள்­ள­துடன் அதனை அண்­டிய பிர­தே­சங்­க­ளிலும் பாரிய வெள்ளம் ஏற்­படும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. 

இதே­வேளை களு­கங்­கையின் நீர்­மட்­ட­மா­னது 115.7 மில்­லி­மீற்றர் அதி­க­ரித்­த­மை­யினால் இரத்­தி­ன­புரி மாவட்டம் மற்றும் அதனை அண்­மித்த பல பிர­தே­சங்கள் நீரில் மூழ்­கி­யுள்­ளன. வெள்ளம் பெருக்­கெ­டுத்­ததால் அந்த பகு­தியில் வசிக்கும் பெரு­மளவிலான மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

மேலும் லக்­ஸ­பான நீர்த்­தேக்­கத்தின் மூன்று வான் ­க­த­வுகள் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளதால் கள­னி­ கங்­கையின் நீர்­மட்­டமும் 37 மில்­லி­மீற்ற­ரினால் அதி­க­ரித்­துள்­ளது.  

தொடர்ந்தும் மழை­வீழ்ச்சி பதி­வாகும் பட்­சத்தில் மேல­தி­க­மாக நீர்­மட்டம் அதி­க­ரித்தால் பாரிய அனர்த்­தத்­திற்கு அப்­ப­கு­திகள் முகங்­கொ­டுக்க நேரிடும். இதனை தவிர ஜின் கங்கை, நில்­வ­ள கங்­கை­யி­னது நீர்­மட்­டமும்  அதி­க­ரித்­துள்­ளது. 

இந்­நி­லையில் குக்­கு­லே ­கங்­கையின் ஒரு வான் கதவு ஏற்­க­னவே திறக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நேற்­றை­ய­தினம் மூன்று வான்­க­த­வுகள் திறந்­து­வி­டப்­பட்­டன. இதனால் குக்­கு­லே ­கங்­கையை அண்மித்து அதன் தாழ்­நில பிர­தே­சங்­களில் வசித்­த­வர்­களை அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளியேற்­று­வ­தற்கு நட­வ­டி க்கை எடுக்­கப்­பட்­டது. 

பாரிய வாகன நெரிசல், 

வியா­பா­ரமும் பாதிப்பு

கொழும்பில் நேற்­றைய தினம் அதி­ காலை முதல் பெய்த கடும் மழையின் கார­ண­மாக கொழும்பின் பிரதான நகரங்களில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டதுடன் மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தி ருந்தனர். 

கொழும்பு புறக்கோட்டை பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள் தமது வியா பாரத்தை கைவிடவேண்டிய நிலையில் இருந்தமையும் அவர்களது வியாபாரத் துக்கு மழையினால் பாரிய தடையும் ஏற்பட்டிருந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.

http://www.virakesari.lk/article/24133

  • தொடங்கியவர்

இரத்­தி­ன­புரியில் வெள்ளம், மண்சரிவு அபாயம்

 

 
 

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் தொடர்ச்­சி­யாக பெய்து வரும் அடை மழை கார­ண­மாக இரத்­தி­ன­புரி நகரை அண்­மித்த சில பிர­தே­சங்­க­ளிலும் குரு­விட்ட, எஹ­லி­ய­ கொட, கரங்­கொட, திமி­யாவ, தம்­பு­லு­வன, காஹவத்த, எல­பாத்த, காங்­கம ஆகிய பிர­தே­சங்­களில் தாழ் நில பகு­திகள் வெள்ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.

இரத்­தி­ன­புரி மாவட்டத்தில் வெள் ளம், மண்­ச­ரிவு அபாயம் இருப்­பதால் மக்கள் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறு இரத்­தி­ன­புரி மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.

மாவட்­டத்தில் சீரற்ற கால­நிலை தொட­ரு­மாயின் இரத்­தி­ன­புரி, பெல்­ம­துளை, கலவான, கிரி­யெல்ல. நிவித்­தி­கல, குரு­விட்ட, எஹ­லி­ய­கொட, அய­கம, எல­பாத்த பிர­தேச செய­லக பிரி­வு­களில் மண்­ச­ரிவு அபாய பிர­தே­சங்­க­ளிலும் மலை பிர­தே­சங்­க­ளிலும் வாழும் மக்கள் அவ்­வி­டத்தை விட்டு பாது­காப்­பான இடங்­க­ளுக்கு செல்­லு­மாறு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி மாவட்­டத்தில் தொடர்ச்­சி­யாக நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக  நேற்று இரத்­தி­ன­புரிமாவட்­டத்தில் பெரும்பா­லான அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்கள், திணைக்­க­ளங்களில் சேவை­யா­ளர்­களின் வருகை குறை­வ­டைந்து காணப்­பட்­ட­துடன் பாட­சா­லை­க­ளிலும் ஆசி­ரியர் மாண­வர்­களின் வருகை குறை­வ­டைந்து காணப்­பட்­ட­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது.

கடும் மழை கார­ண­மாக இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் அனைத்து பாட­சா­லை­களும் சப்­ர­க­முவ மாகாண கல்வி அமைச்சின் செய­லாளர் மஹிந்த எஸ்.வீர­சூ­ரி­யவின் அனு­ம­திக்­கி­ணங்க நேற்று நண் பகல் 12 மணி­யுடன் மூடப்­பட்­ட­துடன் அர­ச மற்றும் தனியார் நிறு­வ­னங்கள், திணைக்­க­ளங்­களில் கட­மை­யாற்றும் சேவை­யா­ளர்கள், ஊழி­யர்கள் நேர­கா­லத்­துடன் வீடு திரும்பி­ய­மையும்  குறிப்­பி­டத்­தக்­கது.

களு­கங்­கையின் நீர் மட்டம் தற்­போது 6.45 அடிக்கு அதி­க­ரித்து வரு­வதால் அப்­பி­ர­தே­சங்­களில் வாழும் மக்கள் அவ­தா­னத்­துடன் இருக்­­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். 

அத்­தோடு இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் தொடர்ந்து மழை பெய்­யு­மானால் வெ ள்ளம் ஏற்­பட கூடும் எனவே மக்கள் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை அவி­சா­வளை புவக்­பிட்­டிய மற்றும் தல்­துவ, பர­க­டுவ ஆகிய பிர­தே­சங்­களில் வெள்ளம் கார­ண­மாக இரத்­தி­ன­புரி கொழும்பு மற்றும் இரத்தினபுரி  – கேகாலை வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு நிவித்திகல, களவான உட்பட பல பிரதேசங்க ளில் சிறியளவான  மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் இதில் எவ ருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/24131

  • தொடங்கியவர்

அக்கரபத்தனையில் 5 வீடுகள் தாழிறக்கம் 5 குடும்பங்களைச் சேரந்த 20 பேர் வெளியேற்றம்

Published by RasmilaD on 2017-09-08 12:55:08

 
 

அக்கரபத்தனை - டொரிங்டன் தோட்டத்திற்கு சொந்தமான கல்மதுரை பிரிவில் 06 இலக்க தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் 5 வீடுகள் தாழிறங்கியுள்ளதால் அங்கு வாழ்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் அருகிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று மாலை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

DSC08961.jpg

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அங்கு வசிக்கும் 22 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 95 பேர் அவதான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்தில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

இக்குடியிருப்புக்களில் உள்ள சுமார் 05ற்கும் மேற்பட்ட வீடுகளில் பாரியளவில் வெடிப்புக்கள் ஏற்பட்டதன் காரணமாக  இவ் 5 குடும்பங்களை வெளியேறுமாறு தோட்ட நிர்வாகமும், கிராம சேவகரும் அறிவித்ததாக இம் மக்கள் தெரிவித்தனர்.

DSC09035.jpg

வெளியேற்றப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் கிராம சேவகர் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளன.

1926 ஆண்டு கட்டப்பட்ட இக்குடியிருப்பு கடந்த காலங்களில் எவ்வித புனர்நிர்மானமும் செய்யப்படாத நிலையில் காணப்படுவாகவும், இதனால் மழைக்காலங்களில் வீட்டினுள் கூரையிலிருந்தும், பூமியிலிருந்து மழை நீர் கசிந்து வருவதாகவும், மழைநீர் காரணமாக தூக்கமின்றி பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருவதாகவும்,  இந்த மழைநீர் மற்றும் நீர் கசிவு காரணமாக இக்குடியிருப்பு தாழ்ந்துள்ளதாகவும் இத்தாழ்வு காரணமாக தமது குடியிருப்புக்களுக்கும், உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்து எற்பட்டுள்ளதாகவும் இக்குடியிருப்புக்களில் வாழ்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

DSC08980.jpg

இது குறித்து தோட்டத் நிர்வாகத்திடமும் அரசியல் வாதிகளிடமும் தெரிவித்த போதிலும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆபத்தான நிலையில் உள்ள தமது உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்ற உதவுமாறும் இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

DSC08982.jpg

தாழிறக்கம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் தங்க வைக்கபட்டுள்ள இடத்தில் மின்சார வசதியோ, மலசல கூட வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. இதனால் கை குழந்தைகளுடனும் உள்ள தாய்மார்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை தொடர முடியாது மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே இது குறித்து உரியவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

http://www.virakesari.lk/article/24152

கடும் மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Photo__1_.png

நாட்டில் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Photo__2_.png

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி இரத்தினபுரி, எலபாத்தை, எஹலியகொட, குருவிட்ட மற்றும் அயகம கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

Photo__5_.png

இரத்தினபுரியில்  தொடர்ந்து பெய்துவரும்  அடை மழை காரணமாக,   இரத்தினபுரி நகரை அண்மித்த முந்துவ, கெடங்கம, வெரலுப்ப உட்பட மேலும்  சில பகுதிகளிலுள்ள தாழ்நிலங்கள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில்,  குருவிட்ட இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர், இரத்தினபுரி நகரை வந்தடைந்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/24151

  • தொடங்கியவர்
இரத்தினபுரி மாவட்டத்தில் 1,911 குடும்பங்களை சேர்ந்த 7,590 பேர் பாதிப்பு
 

சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த புதன்கிழமை(6) முதல் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை 1911 குடும்பங்களை சேர்ந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேற்படி மாவட்டத்தில் இரத்தினபுரி, கிரியெல்ல, எஹலியகொடை, அயகம, எலபாத்த, குருவிட்ட, நிவித்திகல ஆகிய ஏழு பிரதேச செயலகப்பிரிவுகளிளேயே இவ்வாறு வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக 1911 குடும்பங்களை சோந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 196 குடும்பங்களை சேர்ந்த 721 பேர் 18 பொது இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 304 குடும்பங்களை சேர்ந்த 1420 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று பொது இடங்களில் 22 குடும்பங்களை சேர்ந்த 88 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிரியெல்ல பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 596 குடும்பங்களை சேர்ந்த 2,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று பொது இடங்களில் 11 குடும்பங்களை சேர்ந்த 48 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எஹலியகொடை பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 531 குடும்பங்களை சேர்ந்த 2119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன,; ஆறு பொது இடங்களில் 90 குடும்பங்களை சேர்ந்த 343 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அயகம பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 267 குடும்பங்களை சேர்ந்த 878 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பொது இடங்களில் 60 குடும்பங்களை சேர்ந்த 199 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எலபாத்த பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 165 குடும்பங்களை சேர்ந்த 555 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பொது இடங்களில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிவித்திகள பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 7 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குருவிட்ட பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 41 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில், இரத்தினபுரி, எஹலியகொடை, குருவிட்ட, அயகம, எலபாத்த ஆகிய ஐந்து பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

சீரற்ற வானிலை தொடருமாயின் இரத்தினபுரி, பெல்மதுளை, களவான, கிரியெல்ல. நிவித்திகல, குருவிட்ட, எஹலியகொட, அயகம, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரத்தினபுரி நகரின் சில் இடங்களில் வெள்ள நீர் வடிந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. இருப்பினும் இரத்தினபுரி பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ள நீர் இன்னும் முழுமையாக குறைவடையவில்லை.

இரத்தினபுரி மாவட்டத்தில் அபுகஸ்த்தன்ன வேவல்கெட்டிய, களவான, நிவித்திகல உட்பட பல பிரதேசங்களில் வீதியில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் வீதிகள் சேதமடைந்து காணப்படுவதோடு வீதிகளில் போக்குவரத்து சேவையும் ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகின்றது. அத்தோடு வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு இப்பகுதிகளில் மக்களின் இயல்புநிலை முற்றாக பாதிப்படைந்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இரத்தினபுரி-மாவட்டத்தில்-1-911-குடும்பங்களை-சேர்ந்த-7-590-பேர்-பாதிப்பு/150-203439

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.