Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர்த் திருவிழாவில் யாழ். மாநகர சபைக்கு ரூபா 2 கோடி வருமானம்

Featured Replies

நல்லூர்த் திருவிழாவில் யாழ். மாநகர சபைக்கு ரூபா 2 கோடி வருமானம்

கடந்த வருடத்தையும்விட இம்முறை அதிகரிப்பு

 

நல்­லூர் கந்­த­சு­வாமி ஆலய வரு­டாந்­தத் திரு­வி­ழா­வில் இம்­முறை யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்கு 2 கோடியே 5 லட்­சம் ரூபா வரு­மா­ன­மா­கக் கிடைத்­துள்­ள­தாக அதன் ஆணை­யா­ளர் பொ.வாகீ­சன் அறி­வித்­தார்.

இது­தொ­டர்­பில் அவர் அனுப்­பிய செய்­திக்­கு­றிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:
2017ஆம் ஆண்டு நல்­லூர் திரு­வி­ழா­வின் போது கடை­கள், விளம்­ப­ரப் பதாகை, சித்த மருந்து விற்­பனை, சஞ்­சிகை விற்­பனை, சேதன உர விற்­பனை மற்­றும் நன்­கொடை மூலம் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குக் கிடைக்­கப்­பெற்ற மொத்த வரு­மா­னம் வரி­கள் உள்­ள­டங்­க­லாக 2 கோடியே 5 லட்­சத்து 8ஆயி­ரத்து 880 ரூபா 94 சத­மா­கும்.

திரு­வி­ழா­வின்­போது வழங்கு பொருள்­கள், பயன்­பாட்­டுச் சேவை­க­ளுக்­கான கொடுப்­ப­னவு,மேல­திக நேரக் கொடுப்­ப­னவு உள்­பட மொத்­த­மாக 68 லட்­சத்து 37 ஆயி­ரத்து 717 ரூபா 63 சதம் செலவு செய்­யப்­பட்­டது. செல­வி­லும் கூடிய வரு­மா­ன­மாக ஒரு கோடியே 37 லட்­சத்து 34 ஆயி­ரத்து 163 ரூபா 31 சத­மா­வும் காணப்­ப­டு­கி­றது.

நல்­லூர் திரு­வி­ழா­வின்­போது வெளி வீதி கண்­கா­ணிப்­புக்­காக ஒரு லட்­சத்து 36 ஆயி­ரத்து 92 ரூபா­வுக்கு சி.சி.ரீ.வி கமரா கொள்­வ­னவு செய்­யப்­பட்­டது.

சென்ற வரு­டத்­து­டன் ஒப்­பி­டும்­போது வரு­மா­ன­மா­னது இந்த வரு­டம் ரூபா 12 லட்­சத்து 90 ஆயி­ரத்து 205 ஆல் அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கின்­றது. இது சென்ற வரு­டத்­து­டன் ஒப்­பி­டும்­போது 6.7% அதி­க­ரிப்­பா­கும். செல­வா­னது ரூபா 7 லட்­சத்து 19 ஆயி­ரத்து 599ஆல் குறை­வ­டைந்­துள்­ளது.

சென்ற வரு­டத்­து­டன் ஒப்­பி­டும்­போது செல­வி­ன­மா­னது 9.5% ஆல் குறை­வ­டைந்­துள்­ளது. செல­வி­லும் கூடிய வரு­மா­ன­மா­னது நகர அபி­வி­ருத்­திக்­கும், இதர சேவை வழங்­க­லுக்­கும் பயன்­ப­டுத்­தப்­ப­டும்.

நல்­லூர் திரு­வி­ழா­வின்­போது சகல கடை­க­ளும் பத்­தி­ரிகை வாயி­லா­கக் கேள்வி கோரியே வழங் கப்­பட்­டன. சகல கடை­க­ளுக்­கு­மான குறைந்த பட்ச கேள்­வித் தொகை சென்ற வரு­டத்­தில் நிர்­ண­யிக்­கப்­பட்ட விலையே இந்த ஆண்­டுக்­கும் அடிப்­படை விலை­யாக நிர்­ண­யிக்­கப்­பட் டது.

குறிப்­பாக கச்­சான் கடை மற்­றும் இனிப்­புக் கடை­க­ளுக்கு இந்த ஆண்டு எந்­த­வித அதி­க­ரிப்­பும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. எனி­னும் கேள்­வி­தா­ரர்­க­ளி­டை­யே­யான போட்டி கார­ண­மாக அவர்­க­ளால் கூடிய கேள்­வித் தொகையே குறிப்­பி­டப்­பட்­ட­மை­யால் உயர்ந்த தொகை குறிப்­பிட்ட கேள்­வி­தா­ர­ருக்கு கடை­கள் வழங்­கப்­பட்­ட­ன-­என்­றுள்­ளது.

http://newuthayan.com/story/26678.html

  • தொடங்கியவர்

வந்தாரை வாழவைத்து சொந்த நாட்டானைச் சுரண்டும் யாழ்ப்பாண மாநகர சபை!

 
வந்தாரை வாழவைத்து சொந்த நாட்டானைச் சுரண்டும் யாழ்ப்பாண மாநகர சபை!

நல்லூர் பெருந்திருவிழாக் காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குக் கிடைத்த வருமானம் இரண்டரைக்கோடி ரூபா என்றும் அதில் ஒருகோடியே முப்பத்தியேழு இலட்சத்து நாற்பத்துமூவாயிரத்து நூற்றியறுபது ரூபா இலாபமாக எஞ்சியுள்ளது என்றும் மாநகர ஆணையாளர் பெருமியம் கொள்கிறார்.

உண்மையில் இதில் பெருமைப்பட என்னதான் இருக்கிறது என்று விளங்கவில்லை. மாறாக யாழ்ப்பாணம் மாநகர சபை ஏழை மக்களின் வயிற்றில் அடித்துத்தான் இவ்வளவு பெரும்பணத்தை வறுகி எடுத்துள்ளது என்றே சொல்லமுடியும்.

இன்றைக்கு கச்சான் தொழிலையே நம்பி எத்தனையோ குடும்பங்கள் சீவித்துக்கொண்டிருக்கின்றன. வருடத்தில் அவ்வப்போது வரும் பெரிய கோவில்களின் திருவிழாக்கள்தான் இந்தக் குடும்பங்களின் உயிர்நிலையைத் தாங்கிப் பிடிக்கின்றன. இந்தக் காலங்களில் சேர்க்கின்ற பணம்தான் பல குடும்பங்களின் பலநாள் பட்டினியைப் போக்குகின்றன.

ஆனால், உள்ளூராட்சி மன்றங்கள் எனப்படும் பிரதேசசபை, மாநகர சபை என்பன மலையளவு வரி இறுப்பனவுகளைச் செய்து பல குடும்பங்களின் வயிற்றிலடிக்கின்றன.

நல்லூர் திருவிழாக் காலத்தில் கச்சான் கடை உள்ளிட்ட இதர சில்லறைக் கடைகளை ஆலய வளாகத்தில் அமைக்கவேண்டுமாயின் மாநகரசபைக்கு குறிப்பிட்டதொகைப் பணம் வரியாகக் கொடுக்கவேண்டும் என்பது விதி.

இந்த விதி எத்தனையோ ஏழை வியாபாரிகளின் விதியை அந்தோ கதியாக்கியிருக்கிறது என்பதை யாராவது மக்கள் பிரதிநிதிகளோ ஊடகத்தாரோ பேசியிருக்கின்றார்களா?

ஏழை வியாபாரிகளிடம் ஐம்பதிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேலே வரி அறவிடும் இவர்கள் அதன்மூலம் சேர்ந்த பணத்தினை வைத்துப் பெருமைப்படுமளவுக்கு என்ன சாதனை கண்டார்கள்?

உண்மையில் இலட்சக்கணக்குவரை வரி ஏறுவதற்கு வியாபாரிகளும் ஒரு காரணியாக இருக்கின்றார்கள்தான். ஏட்டிக்குப் போட்டியாக வரி இறுப்பனவை ஏலம்போட்டு இலட்சக்கணக்குவரை ஏற்றிவிடுவதில் அவர்களிடம் ஏதாவதொரு நம்பிக்கை இருந்திருக்கும். எப்படியாவது அவ்வளவு பணத்தினையும் சம்பாதித்துவிடலாம் என்ற வைராக்கியம் இருந்திருக்கும்.

ஆனால் நினைத்த இலக்கை அடையமுடியாமல் பெரும் சோகத்தோடு நல்லைக் கந்தனிடம் பழிபோட்டுவிட்டு மீண்ட எத்தனையோ கச்சான் வியாபாரிகள் சாட்சிகளாகவுள்ளனர். உண்மையில், இலட்சக்கணக்கில் வரி கொடுத்து ஆலய வளாகத்தினுள் இருந்த உள்ளூர் கச்சான் வியாபாரிகளைவிட வரி ஏதுமே கொடுக்காது ஆலயத்தின் வளாக எல்லைக்கு அப்பால் நின்று கைப் பொதிகளில் விற்பனை செய்த தென்னிலங்கை வியாபாரிகளுக்கு இலாபம் அதிகமே.

அதே வெளி எல்லையில் வீதியோரமாக இருந்து கச்சான் விற்ற உள்ளூர் வியாபாரிகளிடமும் ஆயிரம் இரண்டாயிரம் என அறவிடப்பட்டிருக்கிறது.

ஏழை மக்களின் வயிற்றிலடித்துச் சேர்த்த பணத்தை நகர அபிவிருத்திக்கும் ஏனைய சேவைகளுக்கும் பயன்படுத்தப்போவதாக ஆணையாளர் கூறியிருக்கிறார்.

நகர அபிவிருத்தியை அரசாங்கம் பார்த்துக்கொள்ளட்டுமே, வருடா வருடம் ஒரு தொகைப் பணத்தை மீண்டும் திறைசேரிக்கே அனுப்பிக்கொண்டிருக்கும் மாகாணசபை பார்த்துக்கொள்ளலாமே. மக்கள் பணத்தை நம்பித்தான் நகர அபிவிருத்தி இருக்கிறதா?

சம்பவம் ஒன்று நடத்துவிட்டது, அதனோடு எல்லாம் முடிந்துவிட்டதென்று அனைத்தையும் கடந்துசெல்லும் கண்மூடித்தனமான மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் அதற்குப் பின்னரான சம்பவங்கள் எப்படிச் சென்றுகொண்டிருக்கின்றன, எப்படியெல்லாம் இருட்டடிக்கப்படுகின்றன என்பதை நாம் யாருமே சிந்திப்பதில்லை.

நல்லூர் திருவிழாக் காலத்தில் கிடைத்த வருமானத்தில் பாதிப் பங்கையேனும் தம்மால் பாதிக்கப்பட்ட எங்கள் அப்பு ஆச்சியர்க்கு மாநகரசபை பகிர்ந்தளிக்கவேண்டும். இனிவரும் காலங்களில் இதற்கு முறையான ஒரு வழிமுறையைப் பின்பற்றி யாருக்கும் பாதிப்பற்ற-எல்லை தாண்டாத ஒரு வரி இறுப்பனவை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் கந்தனின் புண்ணியம் எல்லோருக்கும் கிடைக்கும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழராகிய நாம் சொந்த நாட்டானைச் சுரண்டிக்கொண்டு இலாப நட்டங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது கேவலத்திலும் கேவலமான செயலாகும்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Jaffna-municipal-council-nallur-festival

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.