Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியின் மனைவியை எச்சரிக்கிறார் மகிந்த

Featured Replies

மைத்திரியின் மனைவியை எச்சரிக்கிறார் மகிந்த

 

தற்­போ­தைய முதல் பெண்­மணி மீதும் கூட சில் துணி­களை விநி­யோ­கம் செய்­வ­தைப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தார் என்று வழக்கு தொடுக்­கப்­ப­ட­லாம். இவ்வாறு முன்­னாள் ஆட்­சி­யா­ளர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
சில நாள்­க­ளுக்கு முன்­னர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன சில் துணி­களை விநி­யோ­கித்­தி­ருந் ­தார். அத­னைப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தார் என்று தற்­போ­தைய முதல் பெண்­மணி மீதும் வழக்­குத் தொடுக்­கப்­ப­ட­லாம்.

3 ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட் ­டுள்ள லலித் வீர­துங்­கவைச் சிறைச்­சா­லைக்­குச் சென்று பார்­வை­யி­ட­வுள்­ளேன் – என்­றார்.

2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லின் போது, தொலைத் ­தொ­டர்பு ஒழுங்­க­மைப்பு ஆணைக்­கு­ழு­வின் 600 மில்­லி­யன் ரூபா நிதியைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்தி, சில் துணி­களை விநி­யோ­கித்­தார்­கள் என்று லலித் வீர­துங்க மற்­றும் அனுஷ் பெல்­பிட்ட ஆகி­யோர் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­பட்­டுள்­ள­னர்.

இந்த நிலை­யி­லேயே, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் இணைந்து சில் துணி­களை வழங்­கிய அவ­ரது துணை­வி­யா­ருக்கு மகிந்த ராஜ­பக்ச மறை­முக எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளார்.

http://newuthayan.com/story/27432.html

  • தொடங்கியவர்

எனது உத்தரவுக்கு அமைய செயற்பட்டதனாலேயே லலித்துக்கு இந்த நிலை.!

லலித் வீர­துங்­க­வுக்கு எதி­ராக வழங்­கப்­பட்ட தீர்ப்­பா­னது அர­சியல் பழி­வாங்­க­லாகும். எனது உத்­த­ர­வுக்கு அமைய செயற்­பட்­ட­த­னா­லேயே இந்த நிலை ஏற்­பட்­டது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். 

Image result for மஹிந்த ராஜபக்ஷ virakesari

அத்­துடன் அர­சாங்­கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் சிலர் கூட்டு எதிர்க்­கட்­சியில் இணைந்­து­கொள்­வ­தாக தெரி­வித்­துள்­ளனர் எனவும்  அவர் தெரி­வித்தார். குரு­ணா­க­லையில் நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில் அரச அதி­கா­ரிகள் மிகவும் அவ­தா­ன­மாக நடந்­து­கொள்­ள­ வேண்டும்.  அரச கொள்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே   சில் துணி வழங்­கப்­பட்­டது. மாறாக தேர்தல் பிர­சா­ரத்­துக்­காக வழங்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும், அதனை பாது­காக்­க­வேண்டும் என தெளி­வாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதன் பிர­கா­ரமே விகா­ரைக்கு வரு­ப­வர்­க­ளுக்கு சில் ஆடை வழங்கி மதத்தை போஷிக்க எனது அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தது. அதனைய தவறு என்று யாரும் கூற­மாட்­டார்கள். 

மேலும் அர­சாங்­கத்தின் கொள்­கையை நிறை­வேற்­று­மாறு அதி­கா­ரிக்கு தெரி­விப்­பது எனது கடமை. அத­னையே லலித் வீர­துங்­க­விடம் நான் தெரி­வித்தேன். என்னால் வழங்­கப்­பட்ட உத்­த­ரவை செயற்­ப­டுத்­தி­ய­த­னா­லேயே  அவர் கைது ­செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்ளார். அதனால் அவரின் கைதா­னது அர­சியல் பழி­வாங்கும் நோக்­கத்தில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தொன்­றாகும்.

அத்­துடன் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்­கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர். அதனால் அவர்களில் ஒரு பிரிவினர் எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளனர். அதற்கான உறுதியை அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள் என்றார்.

http://www.virakesari.lk/article/24251

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.