Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டிப் பெரஹரா: நன்றிசெலுத்தி நலம்நாடும் ஊர்விழா

Featured Replies

main.jpg

புனித சின்னம், தலதா மாளிகை நிலமேயிடம் கையளிப்பதற்காக மகிமையுடன் எடுத்து வரப்படுகின்றது

கண்டிப் பெரஹரா முன்னாயத்தங்களும் அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமாய் அமைந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும்


எழுத்து: சுகந்தி சங்கர்


அன்று தொட்டு இன்றுவரை, கண்டி மண்ணினுடைய அனைத்து இன மக்களும் அன்னியோன்னியமாக வாழ்ந்துவந்து கொண்டிருக்கின்றார்கள். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பேகர்கள் என இன அடையாளங்களுடன் வாழும் இவர்கள், தாம் ஒருதாய் மக்கள் என்பதை மறப்பதில்லை. சகோதர இனத்தவர்களின் மதம், கலாசாரம், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள், பண்டிகைகள் போன்றவற்றினை பரஸ்பரம் மதித்தும் இடைஞ்சல்கள் ஏற்படுத்தாது கௌரவித்தும் ஒன்றுகூடி வாழ்ந்திருந்தார்கள்; இப்பொழுதும் வாழ்ந்து வந்துகொண்டிருக்கின்றார்கள்.


இவர்கள், பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைப் பின்பற்றுகின்றார்கள். இலங்கை வரலாற்றின்படி, கிறிஸ்தவம் கி.பி. 1500 களின் முற்பகுதியில் நிகழ்ந்த மேற்கத்தேய நாட்டவரின், ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்னர் மக்களினால் பின்பற்றப்பட்டுவந்த, பௌத்;தம், இந்து சமயங்களின் பண்டிகைகள், வழிபாட்டு முறைமைகள் ஒன்றையொன்று பரஸ்பரம் சிறப்பித்தும் மேன்மைப்படுத்தியும் மகிமைப்படுத்தியும் வந்துள்ளன.


இவற்றினை வலியுறுத்தும் வகையில், கண்டி மண்ணில் பின்பற்றப்பட்டு ஒரு சிறப்பான பாரம்பரியமாகக் காணப்படுவதே, கண்டிப் பெரஹரா ஆகும். தலதா மாளிகையினுடைய பௌத்த பாரம்பரியச் சிறப்புகளை மகிமைப்படுத்தும் வகையிலும் சூழவுள்ள இந்து மத ஆலயங்களின் மதஅனுட்டானங்களை உள்வாங்கிச் சிறப்பித்தும் காணப்படுவதே கண்டிப் பெரஹரா ஆகும்.


கண்டிப் பெரஹராவுடன் தொடர்புபட்டதாக நான்கு இந்துமத கோவில்கள் காணப்படுகின்றன. அவையாவன: தலதா மாளிகையின் அயல்களில், அமையப் பெற்றிருக்கும் கதரகம தெய்யோ தேவாலய (முருகன் கோவில்), விஷ்னு கோவில், நாக கோவில், பத்தினி தேவாலய (கண்ணகி கோவில்) ஆகிய கோவில்களில் இடம்பெறும், கண்டிப்பெரஹரா நிகழ்வுகளுடன் தொடர்புபட்ட சடங்குகளும் சம்பிரதாயங்களும் கூட, கண்டிப்பெரஹராவை உலக அளவில் பேசவைக்கின்றது. அந்த நிகழ்வுகளை நேரில் கண்டுகளிப்பதற்கு உல்லாசப் பயணிகள் பெருமளவில் திரள்வதும் இதனுடைய தனித்துவத்துக்கான சான்றுகளாகும்.


இந்தக் கண்டிப் பெரஹரா, ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோவினால் உலகில் பாதுகாக்கப்படவேண்டிய, மரபுரிமை, பாரம்பரியம், பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட நிகழ்வுகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சிறப்பிக்கப்படுகின்றது.


மிகவும் ஆசாரபூவர்வமாகவும் நெறிமுறை தவறாமலும் வருடம்தோறும் ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்தில் வரும் நிகினி பௌர்ணமி தினத்தில் கண்டிப்பெரஹரா நடந்தேறுகின்றது. ஆனால், அதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே, பெரஹரா நிகழ்வுகளுக்குத் வேண்டிய ஆயத்தங்களை ஆரம்பித்து விடுவார்கள்.


இந்தக் கண்டிப்பெரஹரா நிகழ்வுகளுக்கு உலக அளவில் தனித்துவத்தைக் கொடுக்கும் ஓர் அணிவகுப்பாக யானைகளின் அலங்காரமான ஊர்வலத்தைக் குறிப்பிடமுடியும். அந்த யானைகளை பெரஹராவில் பங்குபற்ற வைப்பதற்கு என்றொரு விதிமுறையும் சம்பிரதாயமும் உண்டு. அதன்படியே, நெறிமுறை தவறாது, பரம்பரை பரம்பரையாகவும் பாரம்பரியமாகவும் கைக்கொள்ளப்பட்டுத் தொடர்கின்றது.


அதிகளவான யானைகள் இந்தப் பெரஹராவில் பங்குபற்றுவதனால் ஒவ்வொரு யானைப்பாகனையும் தேடிச்சென்று வெற்றிலை கொடுத்து கௌரவத்துடன் முறைப்படி அழைப்பது மரபு.


இவ்வாறே, பெரஹரா ஊர்வலத்தில் அணிவகுக்கும் சவுக்குவெடி வெடிப்போர், பதாதைகள் - கொடிகள் மற்றும் அதனை ஏந்திச் செல்வோர், நடனமாடுவோர், இசைக்கருவிகள் இசைப்போர், நெருப்புப் பந்தம் சுழற்றுவோர், விளக்கு ஏந்துவோர் என இவர்கள் யாவரையும் கௌரவப்படுத்தியே அழைத்து, வரவழைக்கப்படுகின்றார்கள்.


நடனமாடுவோர், இசைக்கருவிகள் இசைப்போர், சவுக்குவெடி வெடிப்போர் போன்ற சேவைகளை, கண்டிப் பெரஹராவின்போது வழங்குபவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட காலமாக, பாரம்பரியத்துடன் தலதா மாளிகையுடன் தொடர்புகளைப் பேணிவருகின்றார்கள். பெரஹரா சிறப்பாக நடைபெற, பரம்பரை பரம்பரையாக அர்ப்பணித்து வருவது இக்குலத்தினரின் சிறப்பாகும்.


மே மாதத்தில் வெசாக்தினம் நிறைவுபெற்றதன் பின்னர், நிறைவான நாளில் நிலமே, கப்புராளைகள், சுபநேரம் கணிப்பவர்கள், அதிகாரிகள் ஒன்றுகூடும் ~முதற்கூட்டம்| நடைபெறும். இக்கூட்டத்தில், பெரஹரா ஆரம்பிக்கும் முகூர்த்த நேரம் கணிக்கப்பட்டு, நடைமுறைகளில் மாற்றமில்லாமல் நிகழ்வுகள் திட்டமிடப்படும்.


அரசாங்கத்துக்கு குறித்த தினத்தில் பெரஹரா நடைபெறும் என்பது தெரியப்படுத்தப்பட்டு, அனுமதி பெற்றுக்கொள்ளப்படும். சுபமுகூர்த்தத்துக்கு ஏற்ப, பெரஹராவில் அணிவகுத்துச் செல்லப்படும், ஆலவட்டங்கள், கொடிகள், பதாதைகள் யாவும் ஒதுக்கவேண்டியவை ஒதுக்கப்பட்டு, திருத்தவேண்டியவைகள் திருத்தப்பட்டு, புதிதாகச் செய்யவேண்டியவை களுக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். மின்சாரம், நீர், சுகாதார வைத்திய, போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற நிறுவனங்களின் சேவையை பெரஹராவின் போது வழங்குமாறு ஓலை அனுப்பப்பட்டு வேண்டுகோள் விடப்படும்.


அதன் பின்னர், பெரஹரா நிகழ்வு குறித்த விபரங்கள் அடங்கிய ~பத்திரம்| அச்;சடித்து விநியோகிக்கப்படும். தொடர்ந்து, சுபமுகூர்த்த நேரத்தில் வெள்ளையடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு, துப்பரவு செய்யப்படும். மஞ்சள் நீரினால் தலதா மாளிகை முழுவதும் கழுவப்பட்டு, சுபமுகூர்த்த நேரத்தில் மலர்களினால் அலங்கரித்தல் ஆரம்பமாகும். சிறியபெரிய பௌத்த கொடிகளினாலும் மின்குமிழ்களினாலும் அலங்காரங்கள் அமைந்திருக்கும்.


பெரஹரா செல்லும் வீதிகளும் மஞ்சள் நீரினால் சுத்தம் செய்யப்படும். சதுர தேவாலய கொண்டாட்டம், அளுத்நுவர தேவாலயத்தில் ஆரம்பமாகும். இங்கு ஆண் பலாமரக் கன்றொன்றைத் தெரிவுசெய்து, அதனையும் சூழலையும் துப்பரவு செய்த பின்னர், மலர்களால் அலங்கரித்து, ஸ்தோத்திரம் பாடி, நல்ல முகூர்த்த நேரத்தில் நான்காக வெட்டி, வெள்ளைத்துணியினால் சுற்றி, நாக, முருகன், பத்தினி, விஷ்னு கோவில்களின் கப்புறாளைகளுக்கு நிலமே யானைகளின் மேல்சென்று கையளிப்பார்.


கண்டிப் பெரஹராவில் பங்குகொள்ளும் எவரொருவரின் குடும்பத்தில், இரத்த உறவில் மூன்று மாதத்துக்குட்பட்ட காலப்பகுதியில் மரணம் நிகழ்ந்திருப்பின், அவர் பெரஹராவில் பங்குபற்ற முடியாது.


இத்தகைய ஒழுங்கு, விதிமுறைகளுடன் கூடிய, சரித்திரமும் சம்பிரதாயமும் வாய்க்கப்பெற்ற கண்டிப்பெரஹரா நிகழ்வு, 1,707 வருடகாலமாக, புதிய சம்பிரதாயங்கள் என்று எதையும் உள்வாங்கிக் கொள்ளாமல் விதிமுறைப்படி நடாத்தப்பட்டு வருகிறது.

Dalada Perahera or Kandy Esala Perahera is an ancient and grand cultural tradition. Held from July to August it is organised by the Dalada Maligawa (Temple). Before the Sacred Tooth Relic of the Supreme Buddha is taken in grand procession across Kandy many rituals are observed. Preparations such as cleansing the Temple and perahera route begin five months ahead. Festivities dedicated to deities Natha, Vishnu, Kataragama and Pattini are performed at the Temple.

image01

சடங்காசார முறைப்படி தேவாலயத்துக்கான அபிஷேகப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

 

image01

கதரகம| தேவாலயத்தில் இடம்பெறும் பெரஹரா ஆரம்பச்சடங்குகள்

 

image01

ஆண்பலாமரக் கன்றின் பாகம், கப்புறாளையிடம் கையளிக்கும் வண்ணம் நிலமேயினால் பவனியாக எடுத்துவரப்படுகிறது.

 

image01

தேவாலயத்தில் சம்பிரதாயங்கள் மாறாமல் நடைபெறும் பூஜைகள்.

 

image01

பெரஹராவில் பங்குபற்றும் யானைகள், முத்து, மணிகள் இழைக்கப்பட்ட பட்டுத்துணிகளினால் அலங்காரம் செய்யப்படுகிறது.

 

http://www.serendib.btoptions.lk/tamilshow.php?issue=93&id=2104#page

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.