Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

நம்பினார் கெடுவதில்லை.. நான்கு மறை தீர்ப்பு..!

நாலுவேலி நிலம்(1959) படத்தில் வரும் இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் பால்ய வயது நினைவுகளும், சிறுவயதில் இலங்கை வானொலி எப்படி எம்மை இனிமையான பாடல்களால் வசீகரித்தது என்ற எண்ணமும் மேலோங்கும்..

யாழ் களத்தில் 1955 முன் பிறந்தவர்களின் நினைவில் இப்பாடல் நிச்சயம் குடிகொண்டிருக்கும்..!

என்ன இனிமையான நாட்கள் அவை..!

 

 

 

"இந்த மாநிலத்தை பாராய் மகனே..!  உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே.!!"

 

 

Edited by ராசவன்னியன்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சமீப மாதங்களில் ரஷ்யா கிழக்கு யுக்ரேன் பிராந்தியத்தில் நிலையாக முன்னேறி வருகிறது எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி செய்திகள் இந்த 2024-ஆம் ஆண்டு முடியப்போகிறது. குளிர் காலமும் வந்துவிட்ட நிலையில், ரஷ்யப் படைகள் யுக்ரேன் படைகளைப் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளி சண்டையிட்டு வருகிறது. மொத்தமாக, கிழக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 2,350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது மற்றும் மீட்டுள்ளது இதில் பயங்கரமான உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. "நவம்பரில், 45,680 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரி 2022 இல் போர் தொடங்கியதிலிருந்து எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு ரஷ்யா சந்தித்த அதிகபட்ச உயிரிழப்பு இது" என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. பிரிட்டன் பாதுகாப்பு உளவுத்துறையின் கணக்குப்படி, ரஷ்யாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,523 ஆண்கள் கொல்லப்படுகின்றனர் மற்றும் காயம் அடைகின்றனர். நவம்பர் 28 அன்று, ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட ஆண்களை ரஷ்யா இழந்தது. இவ்வளவு பெரிய இழப்பு நடப்பது இதுவே முதல் முறையாகும்.   "ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆனால் அதற்கு அந்த நாடு கொடுக்கும் விலை அதிகமானது" என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார். இறந்த அல்லது காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களைப் பொது தரவுகளில் இருந்து பெறப்பட்டதாகவும், ரகசிய தரவுகளோடு அது ஒப்பிடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒட்டு மொத்தமாக, ரஷ்யா தனது இலையுதிர் கால ( செப்டம்பர் முதல் நவம்பர் வரை) தாக்குதல்களின் போது சுமார் 125,800 வீரர்களை இழந்துள்ளதாக, வாஷிங்டனை தளமாகக் கொண்ட போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது. "ரஷ்யாவின் 'மீட் - க்ரிண்டர்' என்ற ராணுவ உத்தியின் மூலம், அவர்கள் கைப்பற்றும் ஒவ்வொரு சதுர கிலோமீட்டர் பரப்பிற்கு 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யா இழக்கிறது" என்று போர் ஆய்வு நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK யுக்ரேன் படைக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? யுக்ரேன் தனது வீரர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்பதை வெளியிட அனுமதிக்கவில்லை. எனவே கடந்த சில மாதங்களாக நடைபெற்ற தாக்குதலில் இறந்து போன யுக்ரேன் ராணுவ வீரர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. குர்ஸ்க் பகுதியில் மட்டும் 38,000 யுக்ரேனிய வீரர்கள் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று ரஷ்யா கூறுகிறது. இருப்பினும், இது உறுதிப்படுத்தப்படாத தகவல். நல்ல தொடர்புகளை கொண்ட அதே சமயம் சர்ச்சைக்குரிய யுக்ரேன் போர் செய்தியாளரான யூரி புடுசோவ், பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு துவங்கி இதுவரை 70 ஆயிரம் யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 35 ஆயிரம் பேர் காணவில்லை என்கிறார். அமெரிக்க ஊடகங்கள், 80 ஆயிரம் யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வெளியிட்ட செய்தியை மறுத்துள்ளார் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறினார். ஆனாலும் அவர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை கொடுக்கவில்லை. குர்ஸ்க் மற்றும் யுக்ரேனின் கிழக்குப் பகுதிகளில் நடக்கும் சண்டையின் தீவிரத்தை, உயிரிழப்பு எண்ணிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் தாக்குதலால் யுக்ரேனில் ஏற்பட்ட சேதம் "இந்த நிலை மாறுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை" என்று மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தச் சண்டை நீண்ட காலத்திற்கு தொடரும் என்று மேற்கத்திய அதிகாரிகள் நம்புகின்றனர். ' ரஷ்யா இப்போது முன்பை விட வேகமாக நகர்கிறது. ஆனால் போர் தொடங்கிய போது இருந்த வேகத்தைப் போல் அல்ல. யுக்ரேன் அனுப்பிய ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு காலத்தில் ரஷ்யாவால் 13 குண்டுகளைத் திருப்பிச் சுட முடிந்த நிலையில், இப்போது அந்த விகிதம் 1.5 முதல் 1 வரை குறைந்து உள்ளது. இப்போது யுக்ரேனால் ரஷ்யாவிற்கு எதிராக திறம்பட எதிர்த்துப் போராட முடிகிறது. இதற்கு உள்நாட்டு ஆயுத உற்பத்தியும், ரஷ்ய மற்றும் வட கொரிய ஆயுத கிடங்குகள் மீது அவர்கள் நடத்திய தாக்குதலும் ஒரு காரணம். போரில் பீரங்கி முக்கியமானது என்றாலும், அது முன்பு இருந்த முக்கியத்துவதோடு இப்போது இல்லை. ''கிளைடு குண்டுகளின் பயன்பாட்டை கடந்த ஆண்டை விட 10 மடங்கு ரஷ்யா அதிகரித்துள்ளது'' என்று ஒரு மேற்கத்திய அதிகாரி கூறினார். இந்த குண்டுகள் ரஷ்ய பிரதேசத்தில் பறக்கும் விமானங்களில் இருந்து ஏவப்பட்டு யுக்ரேனைச் சென்றடைந்து, அங்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்துகின்றன. கிளைடு குண்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போரில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. இரு தரப்பினரும் , தொடர்ந்து புதிய ஆயுதங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்கி மோதலில் ஆதாயம் பெறுகின்றனர். பாரம்பரிய காலாட்படை சண்டையின் முக்கியத்துவத்தை, ஆளில்லா விமானங்கள் குறைத்துவிட்டதாக, போரின் முன் கள வீரரான செர்ஹி வாட்சப்பில் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிளைடு குண்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போரில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகின்றன ராணுவ பணிசேர்ப்பு தொடர்பாக இரு நாடுகளும் சந்திக்கும் பிரச்னைகள் ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரண்டு நாடுகளும் போர் வீரர்களைப் பயன்படுத்துவதில் வெவ்வேறு வகையான சவால்களை எதிர்கொள்கின்றன. தன்னார்வத்தோடு வருபவர்களைத் தவிர, 18-24 வயதுடைய இளைஞர்களைப் போருக்குப் பயன்படுத்த வேண்டாம் என யுக்ரேன் முடிவு செய்துள்ளது. வீரர்கள் பற்றாக்குறையை யுக்ரேன் எதிர்கொண்டாலும், ரஷ்யாவால் அப்பாற்றாக்குறையை ஈடுசெய்ய முடிகிறது. ஆனாலும், பல காரணங்களால் ராணுவ வீரர்கள் அணிதிரட்டலுக்கு மற்றொரு சுற்று அழைப்பு விடுக்க அதிபர் புதின் தயங்குகிறார். அதிக பணவீக்கம், நிரம்பிய மருத்துவமனைகள், இறந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை அவரின் தயக்கத்துக்கு காரணமாக இருக்கலாம். அதிகளவு தன்னார்வலர்களை ஈர்க்க, சில ரஷ்ய பிராந்தியங்கள் மூன்று மில்லியன் ரூபிள் வரை ஊக்கத்தொகை வழங்குகின்றன. "ரஷ்யப் பொருளாதாரம் முற்றிலுமாக வீழும் நிலையில் இல்லை என்றாலும், குறிப்பிட்டளவு சிரமங்களை எதிர்கொள்கிறது. பொருளாதார அழுத்தம் அங்கு உள்ளது" என்று ஒர் அதிகாரி கூறுகிறார். சிரியாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் சண்டைகள் ரஷ்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் தற்போதைய போக்கு, அதன் எதிர்கால முன்னுரிமையைத் தீர்மானிப்பதில் கடினமான சவால்களை ஏற்படுத்தக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwydd188lwwo
    • ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் வெளியான தகவல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதேவேளை, இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/313470
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • நானும்  அப்பிடித்தான்  நினைக்கிறன்.உந்த பெருமாளுக்கு தேவை இல்லாத வேலை 😎 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.