Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

 

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தி சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் இன்றைய தினம் காலை இடம்பெற்றது.

சமத்துவத்திற்கான பிரஜைகளின் நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய இயக்கத்தின் இணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன், புரவெசி பலய அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் காமினி வியங்கொட, சர்வ மதத் தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

புதிய அரசமைப்பை நிறைவேற்றி சமத்துவத்தை உறுதிப்படுத்துவோம், அதிகாரத்தை பரவலாக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம், ஊழல் மோசடியளார்களை காப்பாற்ற வேண்டாம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்க போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தினிடையே ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, யார் என்ன கூறினாலும், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கி நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

“கேஜ் என்ற அமைப்பு ஆரம்பித்த இந்த நடவடிக்கையுடன் இணைவதற்கு வணக்கத்திற்குரிய மதத் தலைவர்களுடன் நாங்கள் இங்கே வந்துள்ளோம். அரசியலமைப்புச் சபையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்து, ஜனநாயக அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்குதல் மற்றும் அதிகாரத்தைப் பரவலாக்கல், காணி, பொலிஸ் உரிமையுடன் மாகாண சபைகளை உருவாக்கல், தேர்தல் முறையை மாற்றுதல் போன்ற ஜனநாயகவாத யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கெதிராகவும் பலர் எழுந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு ஆதரவு வழங்குகின்ற நிலையில் சுதந்திரக் கட்சியிலுள்ள சிலர் இதனை எதிர்க்கின்றனர். குறிப்பாக நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதை எதிர்க்கின்றனர். மஹிந்த ராஜபக்சவின் குழுவும் அதிகாரப் பரவலை எதிர்க்கின்றனர். இப்படியான பல யோசனைகள் காணப்படுகின்றன. இதற்கெதிராக குரல் கொடுப்பதோடு மற்றும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இவ்வாறான ஜனநாயக அரசியலமைப்பை முன்கொண்டுசென்று, சர்வஜன வாக்கெடுப்பில் விட்டு நிறைவேற்றும்படி வலியுறுத்தவுமே நாங்கள் இவ்விடத்திற்கு வந்துள்ளோம். இதுவொரு ஆரம்பநடவடிக்கை. நாடு முழுவதும் இதனை முன்னெடுக்கவுள்ளோம்” என்றார்.

இதேவேளை இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மனித உரிமை செயற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன், 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றி தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

https://news.ibctamil.com/ta/internal-affairs/wickramabahu-protest-in-colombo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.