Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவகத்தில் பனைவளம் அற்றுப்போகும் அபாயம்

Featured Replies

தீவகத்தில் பனைவளம் அற்றுப்போகும் அபாயம்

பாதுகாக்குமாறு வலி­யு­றுத்­தல்

 

தீவகப்பகுதியில் பனைமரங்கள் நாளாந்தம் தறிக்கப்படுவதால் அப்பகுதியில் பனைவளம் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தீவகப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுதொடர்பில் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
தீவகப்பகுதியில் முன்னொரு காலத்தில் பனைவளம் செழித்துக் காணப்பட்டது. ஆனால் தற்பொழுது அவை தறிக்கப்பட்டு வருவதால் பனைவளம் அருகிவிட்டது.

அதிலும் நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளாந்தம் பனை மரங்கள் தறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நெடுந்தீவு மக்களுக்காக வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அது எமது மக்களுக்கு அத்தியாவசியமான திட்டம். ஆனால் வீடுகள் புதிதாக கட்டப்படும்போது வீட்டுக் கூரைகளுக்காக பனைமரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஏராளமான பனைகள் தறிக்கப்படுகின்றன.

வீட்டுத்திட்டங்கள் வழங்கும்போது பனைமரங்கள் பாவிப்பதைத் தவிர்த்து வேறு மரங்களைப் பயன்படுத்த முன்வரவேண்டும்.

அத்துடன் மரக் கொள்வனவுக்கு வீட்டுத்திட்டத்தின் உதவியுடன் சிறுதொகையும் வழங்கினால் பயனாளிகள் பனைமரங்களைத் தறிப்பதை தவிர்த்து விட்டு, வேறு மரங்களைப் பயன்படுத்துவார்கள் இதனால் பனை வளத்தை ஓரளவு பாதுகாக்க முடியும்.

எமது பிரதேசத்தில் பனை மாதிரித் தோட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அங்கு பனங்கன்றுகள் அழிந்து காணப்படுகின்றன. பனம் விதைகளை நடும்போது பாதுகாப்பு வேலிகளை அடைக்காமையினால் கால்நடைகள் அவற்றைத் தின்று விடுகின்றன.

இதனால் மாதிரித் தோட்டத்தில் பனம்கன்றுகள் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கன்றுகளை நடும்போது நாகதாளி போன்ற முட்கள் கொண்ட மரங்களையும் நடவேண்டும். இதன்மூலம் கால்நடைகள் பனம் கன்றுகளை சேதப்படுத்துவதில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.

அத்துடன் 5௦ ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுமரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் சீரமைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. அத்துடன் அதனைப் பராமரிப்பதற்கு இருவரை அமர்த்தினால் மரங்களைப் பாதுகாக்க முடியும் – என்றனர்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த பனை தென்னை அபிவிருத்தி திணைக்கள அதிகாரி,
நெடுந்தீவு பிரதேசத்திற்கென பனை தென்னை கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தை உருவாக்க முயற்சி எடுத்து வருகின்றோம்.

ஆனால் அது தற்போதுதான் கூடிவருகின்றது. பனங்கட்டி தொழிற்சாலை அமைப்பதற்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ஆனால் அதற்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன.

ஏனெனில் அங்குள்ளவர்கள் பனாட்டுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். அவர்கள் பனம்கட்டியில் நாட்டம் காட்டுவதில்லை.

பனை வளங்களைப் பாதுகாக்கும் வகையில் மாதிரித் தோட்டங்களை உருவாக்கி வருகின்றோம். இங்குள்ளவர்கள் கேட்டதுபோல பாதுகாப்பு வேலிகள் அமைப்பது தொடர்பில் ஆராய்கின்றோம்.

காட்டுமரக் காணியின் வேலிகளை சீரமைப்பதற்கும், அங்கு பராமரிப்பாளர்களை ஈடுபடுத்துவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

 

http://newuthayan.com/story/30712.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.