Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய நாடாக இலங்கை இருக்க வேண்டும்: அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரை

Featured Replies

ஐக்கிய நாடாக இலங்கை இருக்க வேண்டும்: அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரை

 


ஐக்கிய நாடாக இலங்கை இருக்க வேண்டும்: அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரை
 

மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டு, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஒருமித்த (ஐக்கிய) நாடாக இலங்கை இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரைத்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி அரசியலமைப்பு சபை ஏகமனதாக ஸ்தாபிக்கப்பட்டது.

21 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குகின்றார்.

இந்தக் குழுவில் அமைச்சர்களான, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், லக்ஷ்மன் கிரியெல்ல, ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, டி.எம்.சுவாமிநாதன், மனோ கணேசன், மலிக் சமரவிக்கிரம, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, அனுரகுமார திசாநாயக்க, விஜயதாச ராஜபக்ஸ, பிமல் ரத்நாயக்க, எம்.ஏ.சுமந்திரன், பிரசன்ன ரணதுங்க, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, டொக்டர் துசித்தா விஜேமான்ன ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஒருமித்த நாடாக இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராட்சியம் அல்லது ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு எனும் பொருளுடையதாகும் எனவும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பகிர்வு கோட்பாடுகள் தொடர்பிலும் இடைக்கால அறிக்கையில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதிகாரப் பகிர்வின் முதல்நிலை அலகாக மாகாணங்கள் இருக்க வேண்டும் என்ற முன்மொழிவை வழிநடத்தல் குழு ஏற்றுக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரயிலமைப்பின் பிரகாரம் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் அதேபோன்று பிரதான ஆட்புலத்தின் புவியியல் பரப்பு ஆகியவற்றை அடையாளம் காண வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாகாணங்களை இணைத்தல் தொடர்பிலான ஏற்பாடுகளுக்கு வழிப்படுத்தும் குழுவின் மேலதிக பரிசீலனை தேவைப்படுவதாக அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் மூன்று தெரிவுகள் யோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய,

01. இரண்டு அல்லது அதிகமான மாகாணங்கள் தனி அலகை உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக அரசியலமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகள் (உறுப்புரை 154அ(3)) உரிய மாகாணங்களின் மக்கள் தீர்ப்பொன்றும் அவசியப்படும் என்ற மேலதிக தேவையுடன் வைத்திருக்கும் யோசனையை வழிப்படுத்தும் குழு கவனத்திற் கொண்டுள்ளது.

02. மாகாணங்களின் இணைப்பிற்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்தலாகாது என்பது இரண்டாவது தெரிவாகும்.

03 வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனியொரு மாகாணமாக புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கும் என்ற தெரிவும் யோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு மாகாண சபை அல்லது ஏனைய அதிகார சபை இலங்கையின் ஆட்புலத்தின் எந்தவொரு பகுதியையும் தனி நாடொன்றாகப் பிரகடனப்படுத்தவோ அல்லது எந்தவொரு மாகாணத்தையோ அல்லது அதன் பகுதியையோ இலங்கையிலிருந்து பிரித்துத் தனியாக்குவதற்காக ஆதரித்து வாதிடவோ அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது என அரசியல் அமைப்பில் குறிப்பிட்டுக் கூறுதல் வேண்டும் எனவும் அதில் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியை பாராளுமன்றம் ஊடாக தெரிவு செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரைத் தெரிவு செய்வதற்கான மூன்று முறைமைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வாக்கெடுப்பின் மூலம் நேரடியாகத் தெரிவு செய்தல், ஏற்கனவே பெயரிட்டு தெரிவு செய்தல் மற்றும் வெஸ்ட் மின்ஸ்டர் நடைமுறையைப் பின்பற்றுதல் ஆகியன வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

http://newsfirst.lk/tamil/2017/09/111278/

  • தொடங்கியவர்

வழிகாட்டல் குழுவின் அறிக்கையில் ஒற்றையாட்சி. தீர்வுக்கு ஏற்பாடு இல்லை

 

புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக உள்ளடக்கம் செய்யபட்டிருந்த காணி, பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன் பிரிவினைக்கு எதிரான வாசகங்கள் பரிந்துரையின் முக்கியமான பகுதிகளில் தெளிவாகவும் எச்சரிக்கையுடனும் கூறப்பட்டுள்ளதாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை மூன்று மொழிகளிலும் வெளிவந்துள்ளது. அதன் பிரதிகள் இன்று நாடாளுமன்ற செய்தியாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

ஒற்றையாட்சித் தன்மை மாறுபடதா நிலையில் அதிகாரங்களை நிர்வாக மட்டத்தில் பரவலாக்கம் செய்வது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் காணி அதிகாரங்கள் மத்திய அரசிடமும் மாகாணங்களில் உள்ள அரச காணிகளை நிர்வகிக்கும் பொறுப்பும் நாடாளுமன்றத்தின் ஊடான சபை ஒன்றிடம் இருத்தல் அவசியம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. (அதிகாரப் பங்கீடு என்ற வாசகங்கள் அல்லது இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற பிரத்தியேக சொல்லாடல்கள் எதுவும் அறிக்கையில் இல்லை)

மாகாணங்களின் ஒற்றுமை அல்லது இணைந்து பணியாற்றுதல் போன்ற விடயங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் மாகாணங்களுக்கான நிதி விடயங்கள் மற்றும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய தெளிவான விதப்புரைகள் எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

அதேவேளை 13 ஆவது 16 ஆவது திருத்தச்சட்டம் அப்படியே புதிய யாப்பிலும் விதந்துரைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் பரிந்துரையின் முக்கிய வாசகங்களில் காணி, பொலிஸ், மற்றும் நிதியை தீர்மானித்தல் போன்ற விடங்கள் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு என்பதும் அதன் முக்கிய உள்ளடக்கமாகும்.

அதேவேளை நாடாளுமன்றத்தின் முதல் சபைக்கு 245 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் பற்றிய மீள் பார்வைக்கு இரண்டாம் சபை நியமிக்கப்படும். அதில் 18 சிங்களவர்கள், ஆறு இலங்கைத் தமிழர் மேலும் 6 மலையகத் தமிழர் ஆறு முஸ்லிம்கள் பதவி வகிப்பர் என கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டாம் சபையில் மொத்தம் 36 உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.

உப ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் இரண்டாம் சபையின் தலைவராக இருப்பார். ஆனால் அந்த உப ஜனாதிபதி தமிழரா முஸ்லிமா என்று கூறப்படவில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாம் குடியரசு யாப்பில் கூறப்பட்டுள்ள முன்றில் இரண்டு பகுதி புதிய யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/politics/Co

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.