Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் குறித்தும் சிந்தித்தால் என்ன?

Featured Replies

மக்கள் குறித்தும் சிந்தித்தால் என்ன?

 

வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் தொடர்­பாக அவைத் தலை­வர் சீ.வீ.கே.சிவ­ஞா­னம் தெரி­வித்த கருத்­துக்­கள் சிந்­திக்­கத் தக் கவை.

“மாகாண சபைக்கு, தமிழ் மக்­கள் உறுப்­பி­னர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து அனுப்பி வைத்­தமை, மாலை மரி­யாதை பெறு­வ­தற்கோ, நாடா­வெட்­டிக் கட்டடத்தைத் திறந்து வைப்­ப­தற்கோ அல்ல.

தமக்கு நல்­ல­வற்­றைச் செய்ய வேண்­டும், தமது பிரச்­சி­னை­க­ ளுக்­குத் தீர்வு பெற்­றுத் தர வேண்­டும் என்­ப­தற்­கா­கவே எம்­மைத் தெரிவு செய்து அனுப்பி வைத்­துள்­ள­னர்.

இவற்­றைச் சரி­வ­ரக் கடைப்­பி­டிக்­கின் றோமா? என்­பதை நாம் ஒரு கணம் சிந்­திக்­கப் பார்க்க வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகா­ண­ச­பை­யின் அவைத் தலை­வர் இடித்­து­ரைத்­தி­ருக்­கி­றார்.

மாகாண சபை உறுப்­பி­னர்­கள் பொறுப்பு உணர்ந்து  செயற்­ப­ட­வில்லை  எனக் குற்­றச்­சாட்டு

அவ­ரது கருத்­துக்­கள் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் சக­ல­ரது காது­க­ளிலும் ஏறுமா என்­பது சந்­தே­கமே. ஆனால் மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­கள் என்ற வகை­யில் அவைத் தலை­வ­ரின் கருத்­துக்­களை அவர்­கள் செவி­ம­டுத்தே தீர­வேண்­டும்.

சபை உறுப்­பி­னர்­கள் வருகை தரா­த­தால் வடக்கு மாகா­ண­ச­பை­யின் அமர்வு இடம்­பெ­றா­மல் போனமை வெறுப்­பூட்­டும் ஒன்­றா­கும். சபை அமர்வு ஒன்­றுக்கு ஆறு இலட்­சம் ரூபா செலவு செய்­யப்­ப­டும் நிலை­யில், உறுப்­பி­னர்­க­ளின் இத்த கைய அலட்­சி­யப் போக்கை மக்­கள் மன்­னிக்­கவே மாட்­டார்­கள்.

நாட்­டின் ஏனைய மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களை விட வடக்கு மாகா­ண­ சபை உறுப்­பி­னர்­க­ளுக்­குப் பொறுப்­புக்­கள் அதி­க­மா­க­வுள்­ளன. போரால் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் என்ற வகை­யில் தமது பொறுப்­புக்­களை உணர்ந்து இவர்­கள் செயற்­பட வேண்­டிய தரு­ணம் இது­தான்.

வடக்கு மக்­கள் தமது சொத்­துச்சுகங்­கள் சக­ல­தை­யும் இழந்து நிர்க்­க­தி­யான நிலை­யில் வாழ்ந்து வரு­கின்­ற­னர். மேலோட்­ட­மா­கப் பார்க்­கும்போது, அவர்­கள் மகிழ்ச்­சி­யாக இருப்பதாகத் தெரிந்­தா­லும், அவர்­கள் எதிர்­கொள்­கின்ற வேத­னை­கள் அவர்­க­ளுக்­குத் தான் தெரி­யும்.

வாராது வந்த மாமணி போன்று வடக்கு மாகா­ண­சபை உரு­வா­கிய போது வடக்கு மக்­கள் ஆனந்­தத்­தின் உச்­சிக்கே சென்று விட்­ட­னர். தமது பிரச்­சி­னை­க­ளுக்­கும், துய­ரங்­க­ளுக் கும் இனி­மேல் விடிவு கிடைத்து விடு­மென அவர்­கள் நம்­பி­னார்­கள்.

பல்­வேறு எதிர்ப்­புக்­கள், இடை­யூ­று­க­ளுக்கு மத்­தி­யில் மாகாண சபைத் தேர்­த­லில் வடக்கு வாழ் மக்­கள் ஆர்­வத்­து­டன் பங்­கு­பற்­றி­னர். வேட்­பா­ளர்­க­ளும் மூலைக்­கொரு மேடை­போட்டு அதைச் செய்­வோம், இதைச் செய்­வோ­மென வீர முழக்­க­மிட்­ட­னர்.

இதைக் கேட்டு மக்­கள் புல்­ல­ரித்­துப் போய் விட்­ட­னர். தேர்­த­லும் வந்­தது. தமிழ்த்
தே­சி­யக் கூட்­ட­மைப்பு மிகப்­பெ­ரும் பான்­மை­யான ஆச­னங்­க­ளைப் பெற்று அமோக வெற்­றி­பெற்­றது.

வேட்­பா­ளர்­க­ளின் தெரி­வின்போது சில கச­மு­சாக்­கள் இருந்த போதி­லும், மக்­கள் அவற்றைக் கவ­னத்­தில் கொள்­ள­வில்லை. பின்­னர் அமைச்­சர்­களை நிய­மிக்­கும் போது தான் சாயம் வெளுக்க ஆரம்­பித்­தது.

பத­வி­க­ளுக்­காக தமக்­குள் மோதிக் கொண்ட  கூட்­ட­மைப்­பின்  பங்காளிக் கட்­சி­கள்

கூட்­ட­மைப்­பின் கூடா­ரத்­தி­னுள்ளே கூக்­கு­ரல்­கள் எழத்­தொ­டங்­கின. தம்­பிக்கு இந்த அமைச்­சுப் பத­வி­யைக் கொடுங்­கள்; மச்­சா­னுக்கு அமைச்­சர் பதவி நிச்­ச­யம் வேண்­டும்; எமது மாவட்­டத்­தில் அமைச்­சர் ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்டே ஆக வேண்­டும்; எனக்கு அந்த அமைச்­சுப்­ப­தவி தான் வேண்­டும்; இவ்­வா­றெல்­லாம் குரல்­கள் எழத்­தொ­டங்­கின.

வாக்­க­ளித்த மக்­கள் அப்­போதுதான் விழிப்­ப­டை­யத் தொடங்­கி­னர்­கள். தாம் ஏமாற்­றப்­பட்­ட­தை­யும் தெரிந்து கொண்­டார்­கள்.

வடக்கு மாகா­ண­சபை செயற்­ப­டத் தொடங்­கிய நாளில் இருந்து தற்­போது வரை­யான காலப்­ப­கு­தி­யில் அங்கு என்ன நடந்து கொண்­டி­ருக்­கின்­றது என்­பதை எவ­ரும் சொல்­லித்­தான் தெரிந்துகொள்ள வேண்­டும் என்­ப­தில்லை. மக்­க­ளுக்­குச் சேவை செய்யப் போகின்றோம் எனக் கூறிக்­கொண்டு கிளம்­பி­ய­வர்­கள், தமக்கு வழங்­கப்­ப­டு­கின்ற வேத­னம் போதா­தெ­னப் போர்க்­கொடி தூக்­கி­னர்.

பின்­னர் தீர்­வை­யற்ற, வரி விலக்­குப்­பெற்ற வாக­னங்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான சலுகை தமக்­கும் வேண்­டு­மெனக் கோரிக்கை விடுத்­த­னர். அது­வும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்டு வாக­னங்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்­க­ளும் இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. இவற்றை வாகன இறக்­கு­ம­தி­யா­ளர்­க­ளி­டம் கொடுத்து மில்­லி­யன் கணக்­கில் பணத்­தைச் சம்­பா­தித்­தார்­கள்.

தாம் சார்ந்த கட்­சிக்கே துரோ­க­மி­ழைத்த உறுப்­பி­னர்­கள்
குறிப்­பிட்ட கட்­சி­யின் சார்­பில் நின்று போட்­டி­யிட்டு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளா­கிய சிலர், இன்று அந்­தக் கட்சிக்­குத் துரோ­கம் செய்­துள்­ள­னர். முத­
ல­மைச்­ச­ருக்­குப் பின்­னால் சென்று அமைச்­சர் பத­வி­யை­யும் பெற்று பத­விச் சுகத்தை அனு­ப­விக்­கின்­ற­னர்.

பணத்­தை­யும், பத­வி­யை­யும் பெற்று இவர்­கள் சுக­மாக வாழ்­வ­தற்­கா­கவா மக்­கள் இவர்­க­ளுக்கு வாக்­க­ளித்­த­னர்? கடந்த நான்கு வரு­டங்­க­ளி்ல் ஆறு தட­வை­கள் அமைச்­ச­ர­வை­யில் மாற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதி­லும் பெரும் இழு­பறி நிலையே காணப்­பட்­டது.

முத­ல­மைச்­ச­ருக்­குச் சார்­பா­ன­வர்­க­ளுக்­குச் சலு­கை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அவ­ரு­டன் முரண்­பட்டு நிற்­ப­வர்­கள் புற­மொ­துக்­கப்­பட்டு நிற்­கின்­ற­ னர்.

இந்த மாகா­ண­ச­பைக்­குச் செல­ வ­ழிக்­கின்ற பணத்­தைக்­கொண்டு ஒரு சிறிய தொழிற்­சா­லையை அமைத்­தால் குறிப்­பிட்­ட­தொரு தொகை­யி­னர் வேலை வாய்ப்­பைப் பெற்று வாழ­மு­டி­யு­மென மக்­கள் தமக்­குள் பேசிக் கொள்­ளும் அள­வுக்கு வடக்கு மாகாண சபை­யின் நிலை மாறி­விட்­டது.

வடக்கு மாகா­ண­சபை வாழ்­வ­தும், தாழ்­வ­தும் உறுப்­பி­னர்­க­ளின் கரங்­க­ளி­லேயே தங்­கி­யுள்­ளது.

கடந்த நான்கு வரு­டங்­க­ளாக நாம் என்ன செய்­தோம் என்­பதை அவர்­கள் ஒரு கணம் இரை மீட்­டுப் பார்க்க வேண்­டும்.

தொடர்ந்­தும் இவர்­கள் மக்­களை மறந்து மெத்­த­ன­மாக இருப்­பது மனச்­சாட்­சிக்கு விரோ­த­மான செய­லா­கும்.

அவைத்­த­லை­வர் சுட்­டிக் காட்­டும் அள­வுக்கு இவர்­கள் கீழ்­நி­லைக்கு இறங்­கிச் சென்­றமை எவ­ரா­லும் மன்­னிக்க முடி­யாத ஒன்­றா­கும்.

http://newuthayan.com/story/30587.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.