Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.தே.க - சுதந்திரக் கட்சி இணங்கும் அரசியல் யாப்புக்கு கூட்டமைப்பு இணங்குமாம்

Featured Replies

ஐ.தே.க - சுதந்திரக் கட்சி இணங்கும் அரசியல் யாப்புக்கு கூட்டமைப்பு இணங்குமாம்

 

புதிய அரசியல் யாப்புக்காக ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் கூட்டாக இணக்கம் தெரிவிக்குமானால் அதற்கு இணங்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது.

புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூடட்டமைப்பின் இந்த இணக்கப்பாடு இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்காத பாரிய முன்னேற்றமாக அடையாளப்படுத்தினார்.

ஐ.தே.க - சுதந்திரக் கட்சி இணங்கும் அரசியல் யாப்புக்கு கூட்டமைப்பு இணங்குமாம்

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் நேற்றைய தினம் காலை 9.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய நிலையில் 9.30 அளவில்  ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவரது தலைமையிலான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார்.

இதனையடுத்து அங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதற்கு முன்னர் வெளியிட்டிருக்காத மிகவும் முன்னேற்றகரமான மாற்றத்தை இந்த அறிக்கை தொடர்பில் வெளியிட்டிருப்பதாக பெருமிதம் வெளியிட்டார்.

நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் இதிலுள்ள நிபந்தனைகளுக்கு தாமும் இணக்கம் தெரிவிப்பதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் அரிய சந்தர்ப்பமாகவும் ஸ்ரீலங்கா பிரதமர் குறிப்பிட்டார்.

பிளவுபடாத பிரிக்க முடியாத ஒரு நாடாக ஸ்ரீலங்கா தொடர்ந்தும் பேணப்படும் என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள இந்த இடைக்கால அறிக்கையில் அதிகாரப்பரவலாக்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

அதிகாரப்பரவலாக்களின் போது மாகாண சபைகளின் முதலமைச்சர்களின் பரிந்துரைகளையும் உள்வாங்கிக்கொள்ளப்படும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணக்கம் காண்பதற்கு அமைய நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பல தசாப்தகாலமாக நிலவிய யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகள், மற்றும் பிளவுகளையும், முரண்பாடுகளையும் புறந்தள்ளிய நிலையில் துண்டாட முடியாத ஸ்ரீலங்காவை உறுதிப்படுத்துவதற்கான சரத்துக்களை புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கவும் அனைத்துத் தரப்பினரும் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

அதனால் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்றும் ஸ்ரீலங்கா பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து நாடாளுமன்றில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

ஐ.தே.க - சுதந்திரக் கட்சி இணங்கும் அரசியல் யாப்புக்கு கூட்டமைப்பு இணங்குமாம்

ஐ.தே.க - சுதந்திரக் கட்சி இணங்கும் அரசியல் யாப்புக்கு கூட்டமைப்பு இணங்குமாம்

கடந்த காலங்களில் நிலவிய பிரிவினைவாத அச்சுறுத்தல்களிலிருந்து முழுமையாக விலகி எதிர்காலம் குறித்த பயணத்தில் அர்ப்பணிப்புடன் பயணிப்பதே புதிய அரசியல் யாப்பின் பிரதான நோக்கம் என எதிர்கட்சித்தலைவர் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் ஐக்கிய பிரிக்கப்பட முடியாத பிளவுபடாத ஸ்ரீலங்காவை வலுப்படுத்துவதற்கான கட்டமைப்புக்களின் ஊடாகவே நிறைவேற்ற முடியும் என்றும் வழிநடத்தல் குழுவின் உறுப்பினரான கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் அணைத்துத் தரப்பினரினதும் இணக்கப்பாட்டுடன் முன்மொழியப்பட்ட யோசனைகள் எதுவும் இதுவரை சட்டமாக்கப்படவில்வை என்பதை சுட்டிக்காட்டிய சம்பந்தன் தமிழ் மக்களையும் இணைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கமொன்றின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள தற்போதே அரிய சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்த அரிய வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நாட்டின் அதி உச்ச சட்டமான அரசியல் யாப்பை நிறைவேற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/prime-minister-and-sambanthan-speech

  • தொடங்கியவர்

தீர்­வொன்­றின் அடிப்­ப­டை­யி­லேயே இடைக்­கால அறிக்கை முன்­வைப்பு

தலைமை அமைச்­சர் ரணில் உரை

 

“புதிய அர­ச­மைப்­பின் ஊடாக பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ ரிமை பாது­காக்­கப்­ப­டும். பிரச்­சி­னை­ க­ளைத் தோற்­று­வித்து, பொரு­ளா­தா­ரத்தை சீர்­கு­லைத்து மக்­க­ளி­டையே பிரி­வி­னை­வா­தத்­தைத் தோற்­று­விக்க நாங்­கள் இட­ம­ளிக்­க­மாட்­டோம்.

தீர்­வொன்­றின் அடிப்­ப­டை­யி­லேயே இன்று (நேற்று) நாங்­கள் இந்த இடைக்­கால அறிக்­கையை சமர்ப்­பிக்­கின்­றோம்” இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று அறி­வித்­தார்.

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கையை அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யான நாடா­ளு­மன்­றில் நேற்று முன்­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
இனம், மதம், மொழி என்­ப­வற்­றைத் துறந்து அனை­வ­ரும் இலங்­கை­யர்­க­ளாக வாழும் வகை­யில் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் நோக்­கில் இடைக்­கால அறிக்கை முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

அர­ச­மைப்பு உரு­வாக்­கும் பணி தொட­ரும்

பொரு­ளா­தார வளர்ச்­சியை அனைத்து சமூ­கங்­க­ளும் அனு­ப­விக்­கும் வகை­யில் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. சன­நா­ய­கத்தை விரி­வு­ப­டுத்தி அமைதி மற்­றும் உறு­திப்­பாட்டை பேணு­வதே இதன் முதன்மை இலக்­கா­கும்.

மூன்று பத்­தாண்டு கால போரால் பாதிக்­கப்­பட்ட எமக்கு இது­போன்­ற­தொரு அர­ச­மைப்பு கட்­டா­யம் தேவை. அர­சி­யல் ரீதி­யாக மோதிக்­கொண்ட எமக்கு இன்று சிறந்த சந்­தர்ப்­ப­மொன்று கிட்­டி­யுள்­ளது.

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யா­னது நாட்­டில் அனைத்து மட்­டங்­க­ளி­லும் கருத்­தா­டல்­கள் இடம்­பெ­றும் வகை­யில் இன்று (நேற்று) சபை­யில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்­றது.

வழி­ந­டத்­தல் குழு­வில் அனைத்­துக் கட்­சி­க­ளின் பொது இணக்­கப்­பாட்­டு­டன் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள இந்த இடைக்­கால அறிக்­கை­யைத் தொடர்ந்து கருத்­தா­டல்­க­ளு­டன் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் பணியை முன்­னெ­டுத்­துச் செல்­ல­வுள்­ளோம்.

கூட்­ட­மைப்­பின்  நிலைப்­பாடு

இடைக்­கால அறிக்­கை­யில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள உடன்­பா­டு­கள் தொடர்­பில் தேசிய அர­சின் இரண்டு முதன்­மைக் கட்­சி­க­ளும் இணங்­கி­னால் தாங்­க­ளும் அதற்கு இணங்­கு­கின்­றோம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூறி­யுள்­ளது.

அறிக்­கை­யின் முத­லா­வது அத்­தி­யா­யத்­தில் இலங்கை ஒரு­மித்த நாடா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டும் என்று கூறப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கம் முதன்மை அம்­ச­மாக உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­கா­ரப் பர­வ­லாக்­க­லில் எமக்­குள் எவ்­வாறு பொது இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் இணைந்து கலந்­து­ரை­யா­டித் தீர்­மா­னிக்க வேண்­டி­யுள்­ளது.

அதி­கா­ரப் பர­வ­லாக்­கல் தொடர்­பில் நாங்­கள் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளும் இணக்­கப்­பாட்­டி­லேயே இந்த நாட்­டின் எதிர்­கா­ல­மும் தங்­கி­யுள்­ளது.

வர­லாற்­றுக் காலந்­தொட்டு நில­வி­வ­ரும் பிரி­வி­னை­வா­தங்­க­ளை­யும் வைராக்­கி­யங்­க­ளை­யும் மறந்து ஒரு­மித்த நாட்­டுக்­குள் அதி­கா­ரப் பர­வ­லாக்­கலை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள அனைத்து இலங்­கை­யர்­க­ளும் தயார்.

அதே­போல் அதி­யுச்ச அதி­கா­ரப்­ப­கிர்­வை­யும் வழங்­கத் தயா­ரா­க­வுள்­ள­னர். அதன் அர்த்­த­மா­வது அனைத்து இலங்­கை­யர்­க­ளும் அமை­தி­யு­டன் ஒன்­றி­ணைந்து வாழ்­வ­தா­கும்.

சந்­தர்­ப்பத்தை தவ­ற­வி­டக்­கூ­டாது

வர­லாற்­றில் இருந்த பிரி­வி­னை­ வா­தத்­தி­லி­ருந்து விலகி எதிர்­கா­லத்தை நோக்­கிய புதிய திசைக்­குப் பய­ணிப்­பதே புதிய அர­ச­மைப்­பின் நோக்­க­மா­கும்.

மூன்று பத்­தாண்­டு­கா­லம் நாங்­கள் கன­வி­லும் நினைக்­காத அள­வுக்­குப் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுக்க நேரிட்­டது. தற்­போது முன்­னோக்­கிப் பய­ணிக்­கப் பொது மேடை­யொன்று கிடைத் துள்­ளது.

அமைதி மற்­றும் அர­சி­யல் உறு­திப்­பாட்டை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளச் செய்­யப்­ப­டும் இந்த அர்ப்­ப­ணிப்­பு­க­ளில் இலங்­கை­யின் எதிர்­கால சந்­த­தி­யி­னர் அமை­தி­யு­டன் வாழ்­வ­தற்­கான வழி ஏற்­ப­டும்.

இந்­தப் பெறு­ம­தி­வாய்ந்த சந்­தர்ப்­பத்தை நழு­வ­வி­டக்­கூ­டாது. எமது சன­நா­ய­கத்­தில் வைராக்­கி­யத்­துக்கு ஒரு­போ­தும் இட­ம­ளிக்­க­மாட்­டோம். அதே­போல் எதிர்­கா­லத்­தி­லும் இதற்­குச் சந்­தர்ப்­ப­ம­ளிக்­கக்­கூ­டாது.

பௌத்த மதத்­துக்கு  முன்­னு­ரிமை

புதிய அர­ச­மைப்­பின் ஊடாக பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ ரிமை பாது­காக்­கப்­ப­டும். பிரச்­சி­னை­ க­ளைத் தோற்­று­வித்து, பொரு­ளா­தா­ரத்தை சீர்­கு­லைத்து மக்­க­ளி­டையே பிரி­வி­னை­வா­தத்­தைத் தோற்­று­விக்க நாங்­கள் இட­ம­ளிக்­க­மாட்­டோம்.

தீர்­வொன்­றின் அடிப்­ப­டை­யி­லேயே இன்று (நேற்று) நாங்­கள் இந்த இடைக்­கால அறிக்­கையை சமர்ப்­பிக்­கின்­றோம்.

பொரு­ளா­தார ரீதி­யில் பிர­தே­சங்­கள் அபி­வி­ருத்­தி­ய­டை­வ­தில் அதி­கா­ரப்­ப­கிர்வு முன்­னிலை பெறு­கின்­றது.

அதி­கா­ரப்­ப­கிர்வை மேற்­கொள்ள அனைத்து மாகா­ணங்­க­ளும் இணக்­கத்தை வெளி­யிட்­டுள்­ளன. இடைக்­கால அறிக்­கை­யில் உள்­ளூ­ராட்சி சபை­கள் அரச ஆட்­சி­யில் மூன்­றா­வது அங்­க­மா­கக் கணிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூ­லம் அரச சேவை ­களை மேலும் இல­கு­வில் பெற்­றுக்­கொள்ள வழி­வ­குக்கமுடி­யும்.

எனி­னும், நிறை­வேற்று அதி­கார முறை­மை­யில் இணக்­கப்­பாட்­டுக்கு வரக்­கூ­டிய பல விட­யங்­கள் மற்­றும் அதன் அர்த்­தங்­களை விளக்­கப் ப­டுத்­து­வ­தில் இன்­னும் பல்­வேறு விட­யங்­க­ளைக் கலந்­து­ரை­யா­ட­வேண்­டி­யுள்­ளது. அரச தலை­வ­ரின் ஆசி­யு­ட­னேயே இவை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இடைக்­கால அறிக்­கை­யில் சுயா­தீன குழுக்­க­ளில் பல மாதங்­க­ளாக விவா­தத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட விட­யங்­கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­து­டன், அரச தலை­வ­ரின் முழு­மை­யான ஆசி­யும் இதற்­குக் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

இது வர­லாற்­றுச் சந்­தர்ப்­ப­மா­கும். பேதங்­க­ளு­ட­னும் வைராக்­கி­யங்­க­ளு­ட­னும் வாழ்ந்த சமூ­கங்­க­ளுக்­கி­டை­யில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த அர­சும் எதிர்க்­கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்­துள்­ளன.

அனை­வ­ருக்­கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யை­யும் அமை­தி­யை­யும் பெற்­றுக்­கொ­டுக்­கும் எண்­ணம் இணக்­கப்­பா­டாக எட்­டப்­பட்­டுள்­ளது.

ஆறு உப­கு­ழுக்­க­ளின் அறிக்­கை­யும், இடைக்­கால அறிக்­கை­யும் விவா­தத்­துக்கு எடுக்­கப்­ப­டு­கின்­றன. இறு­தி­யில் முழு நாட்­டுக்­கும் ஏற்­பு­டைய புதிய அர­ச­மைப்­பொன்று உரு­வாக்­கப்­ப­டும்.

உச்­சப்­பட்ச அதி­கா­ரப் பகிர்வு

பிரி­வி­னை­வா­தத்­து­ட­னும் சர்­வா­தி­கா­ரத்­து­ட­னும் முன்­னெ­டுத்த ஆட்­சி­யின் கார­ண­மாக எமது நாடு பார­தூ­ர­மான பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுக்க நேரிட்­டது.

பிரி­வி­னை­வா­தத்­துக்கு வித்­திட்­ட­தால் பன்­னாட்டு ரீதி­யில் இலங்­கைக்கு இருந்த நற்­பெ­ய­ரும் இல்­லா­து­போ­னது.

ஆனால், மீண்­டும் நாங்­கள் சன­நா­ய­கத்தை மறு­சீ­ர­மைத்து மக்­க­ளுக்கு சுதந்­தி­ரத்தை வழங்­கி­ய­து­டன், ஊட­கச் சுதந்­தி­ரத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­னோம்.

தற்­போ­தைய அரசு இலங்­கை­யின் அனைத்து மக்­க­ளும் பயனை அனு­ப­விக்­கும் வகை­யில் வெளிப்­ப­டை­யான அதி­கா­ரப்­ப­கிர்வை வழங்­கும்.

ஐக்­கி­யத்­து­டன் அனை­வ­ரும் அமை­தி­யாக வாழும் வகை­யில் புதிய அர­ச­மைப்­பின் ஊடாக உச்­ச­பட்ச அதி­கா­ரப்­ப­கிர்வு வழங்­கப்­ப­டும். இதற்­குச் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் இணங்­கி­யுள்­ளது -– என்­றார்.

 

http://newuthayan.com/story/30818.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.