Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக சுமந்­திரன் மீண்டும் வழக்கு பதிவு

Featured Replies

பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக சுமந்­திரன் மீண்டும் வழக்கு பதிவு

 

 

தமிழர் தாய­கப்­ப­கு­தியில் முதற்­கட்­ட­மாக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள 6ஆயிரம் பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக மீளவும் உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ.சுமந்­திரன் இவ்­வாறு மீளவும் வழக்குத் தாக்கல் செய்­துள்ளார்.

sumanthiran.jpg

சுமந்­திரன் தாக்கல் செய்­துள்ள மனுவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்­சர்கள், சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு, மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மிநாதன், சட்­டமா அதிபர், ஆர்­சிலோன் மிட்டல் நிறு­வனம், ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் வடக்கு, கிழக்­கிற்கு பொருத்து வீட்­டுத்­திட்டம் சற்­றேனும் பொருத்­த­மில்லை. அங்­குள்ள கால­நி­லைக்கு இந்த வீட்­டுத்­திட்டம் பொருத்­த­மா­ன­தாக இல்லை. மேலும் 65 ஆயிரம் பொருத்து வீட்­டுத்­திட்­டத்தின் கேள்வி மனுக்­கோ­ரலின் அடிப்­படையில் முதற்­கட்­ட­மாக 6 ஆயிரம் பொருத்து வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­காக அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது.  

ஆகவே பொருத்து வீடு தொடர்­பாக எந்­த­வொரு நட­வ­டிக்­கையையும் முன்­னெ­டுப்­ப­தற்கு உயர் நீதி­மன்றம் உடன் தடை விதிக்க வேண்­டு­மென அம்­ம­னுவில் சுட்­டு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக எம்.ஏ.சுமந்­திரன், அமைச்சர் சுவா­மி­நாதன், ஆர்­சிலோன் மிட்டல் நிறு­வனம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகி­யோரை பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பிட்டு வழக்கு தாக்கல் செய்­தி­ருந்தார். அவ்­வ­ழக்கு ஆகஸ்ட் 31ஆம் திகதி விசா­ர­ணைக்கு வந்­த­போது  அமைச்­ச­ரவை தீர்­மானம் மேற்­கொண்­டுள்­ளது. 

ஆகவே மனு­தா­ரரின் வழக்­கினை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என அமைச்சர் சுவா­மி­நாதன் தரப்பில் ஆஜரான ஜனா­தி பதி சட்­டத்­த­ரணி உபுல் ஜய­சூ­ரிய தலை­மை­யி­லான குழுவினர் வாதிட்டனர். இதனையடுத்து பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக மீளவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்ற உரிமத்தினை வைத்துக்கொண்டு அவ்வழக்கினை மீளப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/24825

  • தொடங்கியவர்

பொருத்து வீட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மீள வழக்கு

ஒட்டுமொத்த அமைச்சரவையும் உள்ளடக்கி

 
 
பொருத்து வீட்டுக்கு எதிராக  உயர்நீதிமன்றில் மீள வழக்கு
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சர வையையும் மேலதிகமாக பிரதிவாதிகளாகச் சேர்த்து பொருத்து வீட்டுத் திட் டத்தை வடக்கு – கிழக்கில் நடைமுறைப்படுத்து வதற்கு எதிரான மனு உயர் நீதிமன்றில் நேற்று மீண் டும் தாக்கல் செய்யப்பட் டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த வழக்கை மீளவும் தாக்கல் செய்தார்.

‘பொருத்து வீடு வடக்கு – கிழக்கு காலநிலைக்குப் பொருத்தமில்லை. 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு கேள்வி – கோரல் நடத்தியதன் அடிப்படையிலேயே 6 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது பிழையான நடவடிக்கை’ என்று மனுவில் குறிப்பிட்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு உயர் நீதிமன்றில் ஜூலை மாதம் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மீள்குடியேற்ற அமைச்சின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, அமைச்சரவையின் பொருளாதார உபகுழு ஆர்சிலோன் மிட்டல் நிறுவனத்துக்கே பொருத்து வீடு அமைக்க ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையிலேயே அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சின் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தனக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினரும், அரச தலைவர் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வழக்கை உயர் நீதிமன்றில் நேற்று மீளவும் தாக்கல் செய்துள்ளார். இதில் பிரதிவாதிகளாக முன்னர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஆர்சிலோன் மிட்டல் நிறுவனத்துக்கு மேலதிகமாக அரச தலைவர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையையும் அவர் உள்ளடக்கியுள்ளார்.

http://newuthayan.com/story/31124.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.