Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்நீதிமன்றின் தீர்ப்பும் அரசாங்கத்தின் அச்சமும்

Featured Replies

உயர்நீதிமன்றின் தீர்ப்பும் அரசாங்கத்தின் அச்சமும்

 

தேசிய அர­சாங்­க­மா­னது பத­விக்கு வந்த காலத்­தி­லி­ருந்து எந்­த­வொரு தேர்­த­லையும் நடத்த முன்­வ­ர­வில்லை. உதா­ர­ண­மாக இலங்­கை­யி­லுள்ள 335 உள்­ளூ­ராட்சி அமைப்­பு­க­ளுக்­கான தேர்தல் நடத்­தப்­பட வேண்­டிய காலம் இரண்டு வருட காலத்­துக்கு மேலா­கியும் அவற்றை நடத்­து­வ­தற்­கான எந்­த­வி­த­மான முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. ஏன் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்க இந்த அரசு தயங்­கு­கின்­றது என்ற சூட்­சுமம் இன்னும் புரி­யாத புதி­ரா­கவே இருக்­கின்­றது. 

 

“நீதித்­து­றை­யா­னது 20 ஆவது திருத்தம் தொடர்­பாக தமது கட­மையை உச்­ச­ளவில் செய்­துள்­ளது. இது இலங்கை நீதித்­துறை வர­லாற்றில் உச்­ச­ள­வி­லான பதி­வா­கவும், தீர்ப்­பா­கவும் மதிக்­கப்­படும்” இவ்­வா­றா­ன­தொரு கருத்தை பல அர­சியல் தலை­வர்கள் வெளி­யிட்­டுள்­ளனர்.

20 ஆவது சட்ட மூலத்தின் செயற்­பாட்டு சரத்­துக்கள் அனைத்தும் அர­சியல் அமைப்­புக்கு முர­ணா­னது. இச் ­சட்ட மூலம் சட்­ட­மாக்­கப்­ப­ட­வேண்­டு­மெனில் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெறப்­ப­ட­வேண்டும். அது மட்­டு­மின்றி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றில் மக்­களால் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் என்ற உயர் நீதி­மன்ற தீர்ப்பு 20 ஆவது சட்ட திருத்தம் தொடர்பில் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

உயர் நீதி­மன்றின் இந்த தீர்ப்பை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளுக்கு அறி­வித்­தி­ருந்தார். உயர் நீதி­மன்றின் இத் தீர்ப்­பா­னது இலங்கை நீதி­மன்ற வர­லாற்றில் ஜன­நா­ய­கத்­துக்கு மதிப்­ப­ளித்த அதி உயர்ந்த தீர்ப்­பாக இருக்­கு­மென்று கரு­தப்­ப­டு­கி­றது.

அனைத்து மாகாண சபை­க­ளுக்கும் ஒரே தினத்தில் தேர்­தலை நடத்­துதல், முன்­கூட்­டியே கலைக்­கப்­படும் மாகாண சபை­யொன்றின் அதி­கா­ரங்­க­ளா­னது ஏனைய அனைத்து மாகாண சபை­களும் கலைப்­ப­தற்கு குறித்­து­ரைக்­கப்­படும் திக­தி ­வரை பாரா­ளு­மன்­றத்­தினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படல் உள்­ளிட்ட ஏற்­பா­டு­களைக் கொண்ட அர­சியல் அமைப்­புக்­கான 20 ஆவது திருத்தம் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட நிலையில், இச் ­சட்ட மூலத்­துக்கு பாரிய எதிர்ப்­புகள் உரு­வா­கி­யது. எதிர்ப்­பு­களும் சர்ச்­சை­களும் உரு­வா­கி­ய­ போதும் இச்­ சட்ட மூலத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்றில் கடந்த 23.08.2017 இல் சமர்ப்­பித்­தி­ருந்தார்.

பிர­தமர் ரணில் இச்­சட்ட மூலத்தை சமர்ப்­பித்­த­போது கிழக்கு மாகாண சபை, வட மத்­திய மாகாண சபை, சப்­­ர­க­முவ மாகாண சபை ஆகிய மூன்று மாகாண சபை­க­ளுக்­கான ஆயுட்­காலம் செப்­டெம்பர் மாதத்­துடன் முடி­வ­டையும் நிலையில் அவற்­றுக்­கான தேர்­தலை நடத்­தாமல் 9 மாகாண சபை­களின் தேர்­தல்­க­ளையும் ஒரே நாளில் நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்யும் வகையில் மேற்­படி 20 ஆவது சட்­ட ­தி­ருத்தம் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

இச்­சட்ட மூலம் தொடர்பில் பாரிய எதிர்ப்­ப­லைகள் கண்­ட­னங்கள், எழுந்­த­துடன் எதி­ர­ணி­யினர் மற்றும் அமைப்­புகள் தங்கள் கடு­மை­யான எதிர்ப்பை காட்­டி­யி­ருந்­தனர். அது மட்­டு­மின்றி ஆளும் த ரப்­பி­னர்­க­ளுக்கு இடை­யேயும் கருத்து முரண்­பா­டுகள் தோன்றி இருந்­தன. இந்த விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும் இடையில் நேர்த்­தி­யான உடன்­பாடு காணப்­ப­ட­வில்­லை­யென்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தனது சுய முடி­வா­கவும் தீர்­மா­ன­மா­கவும் இத்­தி­ருத்­தத்தை கொண்டு வந்­தி­ருப்­ப­துடன் தனது செல்­வாக்கை பரி­சீ­லிக்கும் ஒரு முயற்­சி­யா­கவே இச்­சட்ட மூலத்தை கொண்டு வந்­துள்ளார் என்ற மறை­மு­க­மான விமர்­ச­னங்­களும் வெளி­வந்து கொண்­டி­ருந்­தன.

இவை­யொரு புற­மி­ருக்க மாகாண சபை­களின் முழு­மை­யான ஆத­ரவை பெற்று விடலாம், அது­வு­மின்றி சிறு­பான்மை கட்­சி­களின் செல்­வாக்கும் ஆத­ரவும் தமக்கு கிடைக்­கு­மென்ற அதீத நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே பிர­தமரால் இச்­சட்ட மூலம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

எது எதிர்­பார்க்­கப்­பட்­டதோ அதற்கு எதிர்­மா­றாக மாகாண சபை­களில் பல­மான எதிர்ப்­பு ­காட்­டப்­பட்­டது. பல மாகாண சபை­களில் இத்­தி­ருத்­த­மா­னது தோற்­க­டிக்­கப்­பட்ட நிலையில் அனைத்து மாகா­ண­சபை முத­ல­மைச்­சர்­க­ளையும் அழைத்து ஜனா­தி­ப­தி­ய­வர்கள் இத்­தி­ருத்தம் தொடர்­பான முக்­கி­யத்­து­வத்தை விளக்­கி­யதன் கார­ண­மா­கவே நிறை­வேற்றித் தரும்­படி ஜனா­தி­ப­தியால் விடுக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு அமை­வாக சில மாகா­ண­ச­பை­களில் இத்­ தி­ருத்­த­மா­னது மீண்டும் சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது.

இதே­வேளை வட கிழக்கு மாகாண சபை­களில் அதிலும் குறிப்­பாக கிழக்கு மாகாண சபையில் இத்­தி­ருத்தம் தொடர்பில் முன்­னுக்குப் பின் முர­ணான சம்­ப­வங்கள் இடம் பெற்­றுள்­ளன.

 

வடக்கு மாகாண சபை­யா­னது இத்­தி­ருத்தம் தொடர்பில் கடு­மை­யான நிபந்­த­னை­களை பின்­பற்ற முற்­பட்­டது. கூடிய வரை 20 ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தில்­லை­யென்ற நிலைப்­பாட்­டி­லேயே வட­மா­காண சபை இருந்­துள்­ளது. அவ்­வாறு இல்­லாத போதிலும் சட்­டமா அதிபர் அலு­வ­ல­கத்­தினால் மேல் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் திருத்தம் ஏற்றுக் கொள்­ளப்­பட்டு, அந்த திருத்­த­மா­னது சாத­க­மான ஜன­நா­யக தன்­மை­களைக் கொண்­டி­ருக்­கு­மாயின் அது பற்றி வட­மா­காண சபை மீள் பரி­சீ­லனை செய்­ய ­த­யா­ராக விருக்­கி­றது என வட­மா­காண முத­ல­மைச்சர் தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால் கிழக்கு மாகாண நிலை­மை­களை பொறுத்­த­வரை 20 ஆவது திருத்தம் தொடர்பில் தெளி­வான தன்­மை­யுடன் முடி­வெ­டுக்க தவ­றி­விட்­டார்கள் என்ற விமர்­சனம் கிழக்கு மாகாண சபை மீது இன்றும் வீசப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

கிழக்கு மாகாண சபையில் இத்­தி­ருத்தம் தொடர்பில் கொண்டு வரப்­பட்ட பிரே­ரணை (11.09.2017) 16 மேல­திக வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­ட­போது அதற்கு ஆர­வ­ளித்த ஆளுங்­கட்­சி­யி­ன­ரான ஐ.ம.சு., ஐ.தே.க., த.தே. கூ. அமைப்பு மற்றும் முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சியை சார்ந்த அனை­வரும் 20 ஆவது திருத்­தத்தின் திருத்­தத்­துக்கு ஆத­ர­வ­ளித்து வாக்­க­ளித்­துள்ளோம். முன்­னைய திருத்­தத்­துக்கு நாங்கள் ஆத­ர­வ­ளிக்­க­வில்லை. திருத்­தத்தின் திருத்­தத்­துக்கே ஆத­ர­வ­ளித்­துள்ளோம் என தெரி­வித்­தார்கள். இது தொடர்­பாக முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் ஒரு­வ­ரிடம் விசா­ரிக்­கப்­பட்­டது. அவர் அளித்த பதி­லா­னது இப்­ப­டி­யி­ருந்­தது.

சட்ட அதி­ப­ரினால் சமர்ப்­பிக்­கப்­படும் திருத்­த­மா­னது மேல் நீதி­மன்­றினால் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். ஏற்றுக் கொள்­ளப்­ப­டும்­பட்­சத்தில் திருத்தம் வரும் என்ற நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் வாக்­க­ளித்­துள்­ளோ­மென விளக்­க­ம­ளித்தார். இவ்­வி­ளக்­கத்­தையே ஏனை­ய­வர்­களும் தெரி­வித்­தார்கள். உண்­மையில் நடந்­த­தென்ன, சட்­டமா அதி­ப­ரினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட திருத்­தமும் மேல் நீதி­மன்­றினால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அது வழங்­கிய தீர்ப்பும் நாம் ஒன்று நினைக்­க­வோ­றொன்­றா­கவே நடந்து முடிந்­து­விட்­டது.

இந்த தீர்ப்­பா­னது தனிப்­பட்ட வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் முயற்­சிக்கும் முன்­னெ­டுப்­புக்கும் விடுக்­கப்­பட்ட சவால் என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, பாரா­ளு­மன்ற பாரம்­ப­ரி­யங்­க­ளுக்கும் அர­சியல் சாச­னத்­துக்கும் நீதி­மன்றால் கொடுக்­கப்­பட்­டி­ருக்கும் உச்ச மதிப்­பா­கவே கரு­தப்­பட இட­முண்டு.

தேர்­தல்­களை ஒத்தி வைத்தல், இல்­லாமல் செய்தல், நீண்ட ஆட்சி செய்­த­லென்­பது, ஜன­நா­ய­கத்­துக்கும் மக்­க­ளா­ணைக்கும் விடுக்கும் ஒரு சவால் என்­ப­தற்கு மாற்­றுக்­க­ருத்து இருக்கப் போவ­தில்லை. இலங்கைப் பாரா­ளு­மன்ற வர­லாற்றில் பாரா­ளு­மன்ற ஆட்சி நீடித்த காலங்­க­ளுண்டு. அவ்­வாறு நீடித்த காலத்­தி­லெல்லாம் அவ்­வாட்­சிக்­கெ­தி­ரான கண்­ட­னங்­களும் எதிர்ப்­ப­லை­களும் மிக மோச­மாக இருந்­துள்­ள­தையும், இலங்கை மக்கள் பாட­மாக கற்­றுள்­ளார்கள். உதா­ர­ண­மாக 1970 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த பிர­தமர் திரு­மதி. ஸ்ரீ மாவோ பண்­டா­ர­நா­யக்க, பாரா­ளு­மன்றின் ஆட்சிக் காலத்தை இரண்டு வரு­டங்கள் நீடித்தார். (1970– 1977) அப்­போது எதிக்­கட்­சி­யாக இருந்த ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது உரிய காலத்தில் தேர்­தலை நடத்­தும்­படி பல போராட்­டங்­களை நடத்­தி­யது.

1977 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த ஜே.ஆர். ஜெய­வர்­தன தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக்­கட்சி பாரா­ளு­மன்றின் ஆயுட்­காலம் 1982 ஆகஸ்ட் 3 ஆம் திக­தி­யுடன் (03.08.1982) முடி­வுற இருந்த நிலையில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றை (22.12.1982) நடத்தி பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்­தினை ஜே.ஆர். தக்க வைத்து கொண்டார்.

6 ஆவது திருத்த சட்­டத்­தினை நிறை­வேற்றி எதிர்க்­கட்­சி­யி­னரின் பத­வி­யினை இல்­லா­தொ­ழித்து 1989 ஆம் ஆண்­டு­வரை சுமார் 12 வரு­டங்­க­ளாக ஐ.தே.கட்­சியின் ஆட்­சி­யினை ஜே.ஆர். நடத்­தி­யி­ருந்தார்.

உயர் நீதி­மன்றின் தீர்ப்பின் பிர­காரம் அர­சியல் அமைப்பின் 20 ஆவது திருத்த சட்ட மூலத்தின் மூன்று சரத்­துக்கள் அர­சியல் அமைப்­புக்கு முர­ணா­ன­வை­யாகும். இதன் பிர­காரம் குறித்த சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மாயின், பாரா­ளு­மன்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் மக்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெறும் வகையில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்று நடத்­தப்­பட வேண்­டு­மென்ற தீர்ப்பை உயர் நீதி­மன்றம் அளித்­துள்­ளது.

இத்­தீர்ப்பின் பிர­காரம் இரு­வித சவால்­க­ளுக்கு அர­சாங்கம் முகங்­கொ­டுக்க வேண்டும். ஒன்று பாரா­ளு­மன்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை வேண்­டு­மென்­பது, மற்­றை­யது சர்­வ­சன வாக்­கெ­டுப்­பொன்றில் மக்கள் ஆணையைப் பெறு­வது. தற்­போ­தைய சூழ்­நி­லையில் இன்னும் வெளிப்­ப­டை­யாகக் கூறு­வ­தானால் பாரா­ளு­மன்றில் 2/3 பெரும்­பான்­மையை இச்­சட்ட மூலம் தொடர்பில் பெறு­வது என்­பது பாரிய சவா­லா­கவே அமையும். காரணம் ஆளும் தரப்­பென்று கூறப்­ப­டு­கின்ற தேசிய அர­சாங்­கத்­துக்குள் ஒரு நேர்த்­தி­யான ஒரு­மைப்­பாடு காணப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி ஒரு திசையில் பய­ணிப்­ப­வ­ரா­கவும், பிர­தமர் மாற்றுப் போக்குக் கொண்­ட­வ­ரா­கவும் செயற்­பட்டு வரு­கின்­றார்கள் என்ற கருத்து வெகு­ஜன அபிப்­பி­ரா­ய­மாகக் காணப்­ப­டு­கி­றது. அது­வு­மின்றி கட்சி சார்ந்த மூத்த உறுப்­பி­னர்­க­ளி­டமே முரண்­பா­டு­களும் அபிப்­பி­ராய பேதங்­களும் இருந்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

இன்­னொரு புறம் பார்ப்பின் சிறு­பான்மை கட்­சிகள் அர­சாங்­கத்தின் மீதுள்ள நம்­பிக்­கையின் பேரில் ஆத­ரவு தர ஆரம்­பத்தில் தயா­ராக இருந்­த­போ­திலும் தற்­போது மக்கள் மத்­தியில் எழுந்­துள்ள சீற்ற நிலை கார­ண­மாக சிறு­பான்மை கட்­சிகள் பின்­வாங்க வேண்­டிய சூழ்­நி­லை­யொன்றே உரு­வாகி வரு­கி­றது. த.தே. கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வரை அர­சியல் தீர்வு நகர்­வுக்கு இத்­தி­ருத்­தத்தை ஆத­ரிப்­பது உத­வி­யாக இருக்­கு­மென்று எதிர்­பார்த்­த­போதும் இத்­தி­ருத்த ஆத­ரவு தொடர்பில் வட கிழக்கில் எழுந்­துள்ள உணர்­வ­லைகள் கார­ண­மாக மீள் பார்வை செலுத்த வேண்­டிய தேவை ஏற்­ப­டலாம். இதை விட சங்­க­ட­மான சூழ்­நி­லைக்குள் முஸ்லிம் காங்­கிரஸ் அகப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது என்­பது தெரி­ய­வ­ரு­கி­றது.

இந்த நிலையில்தான் 20 ஆவது திருத்தத்தை கைவிட்டு அரசாங்கமானது மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளது. மாகாகண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் வகையிலேயே இந்த திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது.

இவற்­றை­யெல்லாம் வேக­மா­கவும், விரை­வா­கவும் செய்ய முற்­படும் இன்­றைய தேசிய அர­சாங்­க­மா­னது பத­விக்கு வந்த காலத்­தி­லி­ருந்து எந்­த­வொரு தேர்­த­லையும் நடத்த முன்­வ­ர­வில்லை. உதா­ர­ண­மாக இலங்­கை­யி­லுள்ள 335 உள்­ளூ­ராட்சி அமைப்­பு­க­ளுக்­கான தேர்தல் நடத்­தப்­பட வேண்­டிய காலம் இரண்டு வருட காலத்­துக்கு மேலா­கியும் அவற்றை நடத்­து­வ­தற்­கான எந்­த­வி­த­மான முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை.

ஏன் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்க இந்த அரசு தயங்­கு­கின்­றது என்ற சூட்­சுமம் இன்னும் புரி­யாத புதி­ரா­கவே இருக்­கின்­றது. தேர்தல் முறை மாற்றம், வட்­டார மற்றும் தொகு­தி­வாரி மாற்­ற­மென்­றெல்லாம் சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்தும் முயற்­சியில் மிக நுட்­ப­மாக காலத்தைக் கடத்­து­வ­தா­கவே இந்த அர­சாங்­கத்தின் மீது கடு­மை­யான விமர்­ச­னங்கள் வைக்­கப்­ப­டு­கி­ற­போதும் அவை பற்றி அது பொருட்­ப­டுத்­து­வ­தா­க­வில்லை.

எதி­ர­ணி­யினர் ஆட்­சியைக் கைப்­பற்றி விடு­வார்கள் என்ற பயப்­பாட்டின் கார­ண­மா­கவே உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்­தா­மலும், மாகாண சபை­களின் தேர்­தல்­களை ஒத்திவைக்கவும் அர­சாங்கம் கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தாக சாதா­ரண ஒரு பாம­ரனின் அபிப்­பி­ரா­யங்கள் கூட இன்­றைய அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­கவே மாறிக்­கொண்­டி­ருக்­கி­றது.

அர­சாங்கம் தேர்­தலை நடத்­தா­மைக்கு இன்­னு­மொரு கார­ண­மாக கூட்­ட­ர­சாங்கம் நடத்தும் ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும், மாவட்­டங்­க­ளையும், மாகா­ணங்­க­ளையும், பிர­தே­சங்­க­ளையும் பங்கு போடு­வதில் சிக்கல் ஏற்­பட்டு விடும் என்ற கார­ணத்­தினால் மட்­டு­மின்றி ஐக்­கிய தேசி­யக்­கட்சி பலம் கொண்­ட­தாக இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கு மக்கள் செல்­வாக்கு வளர்ந்­தி­ருக்­கி­றதா என்ற பலப்­ப­ரீட்­சையில் தாங்கள் தோற்­று­வி­டு­வோமோ என்ற பயம் சந்­தே­கத்தின் கார­ண­மாக தேர்­தல்­களை நடத்­து­வதில் அர­சாங்கம் தயக்கம் காட்­டு­வ­துடன் எதி­ர­ணியின் செல்­வாக்கும் சவாலும் வளர்ந்து கொண்டே போகி­றது என்ற உண்மை நிலையும் கார­ண­மாக இருக்­கலாம். இதே­வேளை, கடந்த புதன்­கி­ழமை (20.09.2017) மாகாண சபை தேர்­தல்கள் திருத்த சட்ட மூலம் மீதான விவாதம் பாரா­ளு­மன்றில் இடம்­பெற இருந்த நேரம் பொது எதி­ர­ணியின் தரப்பில் கடும் எதிர்ப்பு காட்­டப்பட்டதுடன் இது தொடர்பில் குழப்­பமும் கூச்­சலும் இடம்­பெற்­றுள்­ளது. அரசின் கடு­மை­யான முயற்­சிக்குப் பின் 20 ஆவது திருத்த சட்ட மூல­மா­னது பாரா­ளு­மன்றில் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யினால் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. சட்ட மூலத்­துக்கு ஆத­ர­வாக 159 வாக்­கு­களும், எதி­ராக 34 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு அமைய, சகல உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபை­களின் தேர்­தல்கள் மார்ச்சில் நடத்­தப்­ப­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­துள்ளார்.

159 வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்கும் மேற்­படி சட்ட மூலத்­துக்கு ஆதரவாக சிறுபான்மை கட்சிகளான த.தே. கூ. அமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஜே.வி.பி. போன்ற கட்சிகள் பலத்த ஆதரவை நல்கியுள்ளது.

பாராளுமன்றில் 27, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதுப்பித்த மாகாண சபை தேர்தல் திருத்த சட்ட மூலமானது பின்வரும் முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 30 ஆக உறுதி செய்யப்படுவதுடன் கலப்பு முறை சார்ந்த தேர்தல் முறையொன்றுக்கே எதிர்காலத்தில் இலங்கை செல்லவிருக்கின்றது என்ற அடிப்படையில் தொகுதி முறையில் 50 வீதமாகவும், விகிதாசார வகையில் 50 வீதமான அங்கத்தவர்கள் மாகாண சபைகளுக்கு எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படுவது இந்த சட்ட மூல நிறைவேற்றத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தொகுதிவாரியான தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் சகல மாவட்டங்களிலும் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இந்த எல்லை நிர்ணயம் எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படுமென்ற உத்தரவாதத்தை பிரதமர் சபையில் அறிவித்திருப்பதுடன் எதிர்வரும் மார்ச் மாதம் முடிவடைவதற்கு முன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்கள் நடத்தப்படும் என்ற தகவலை பிரதமர் அறிவித்துள்ளார்.

பல சர்ச்சைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் 27, திருத்தங்களுடன் மேற்படி சட்ட மூலத்தை அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியிருக்கின்றபோதும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்குக்கு ஆப்பு வைத்து ஜனநாயக பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்துள்ளது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாகும்.

திருமலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-23#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.