Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பயணத்தை பின்நோக்கி நகர்த்தியுள்ளது....முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விசனம்

Featured Replies

தமிழ் மக்களின் பயணத்தை பின்நோக்கி நகர்த்தியுள்ளது

p24-25fe4cafe263d0d14eb19556327b586eeab04878.jpg

 

இடைக்கால அறிக்கை குறித்து வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விசனம்
(நமது நிருபர்)

புதிய அர­சியல் அமைப்­புக்­கான இடைக்கால அறிக்­கை­யா­னது சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அதி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்­கை­களை முற்­றாக நிரா­க­ரித்­துள்­ளது.

ஒற்­றை­யாட்சி முறை­மை­யினை தக்­க­வைக்கும்  
பொருட்டு வார்த்தைப் பிர­யோ­கங்­களில் ஏமாற்ற முற்­பட்­டுள்­ளமை அரு­வ­ருப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. ஏகி­ய­ரட்ட என்ற சொற்­பதம் பாவிக்­கப்­பட்­டமை அறிக்­கையை தயா­ரித்­தோரின் கப­டத்­த­னத்தை வெ ளிக்­காட்­டு­கின்­றது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் விசனம் தெரி­வித்­துள்ளார். 

இடைக்­கால அறிக்­கை­யா­னது தமிழ் மக்­க­ளுக்கு மிகுந்த ஏமாற்­றத்­தையும் அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சிங்­கள பௌத்த மேலா­திக்­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தா­கவே இந்த அறிக்­கை­யுள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

புதிய அர­சி­யல்­யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­தொ­டர்பில் ஊடகவியலாளர்கள் நேற்று கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;

கேள்வி: உத்­தே­ச­அ­ர­சி­ய­ல­மைப்­பு­தி­ருத்­தத்­துக்­கான இடைக்­கா­ல­அ­றிக்­கை­ வெளிவந்­துள்­ள ­நி­லையில் தமிழர் தரப்­பி­லி­ருந்­து­ ப­ர­வ­லா­ன­அ­தி­ருப்­தியும் எதிர்ப்பும் கிளம்­பி­யுள்­ள­தை ­அ­வ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­உள்­ளது. இது­தொ­டர்பில் தங்­க­ள­து­நி­லைப்­பா­டு­என்ன?

பதில்: - முழு­மை­யா­க­கு­றித்­த­ஆ­வ­ணத்தைப் பரி­சீ­லிக்­க­எ­னக்­கு­நேரம் போத­வில்லை. மருத்­து­வ­ம­னைக்குச் செல்லும் தறு­வாயில் என­து­மே­லெ­ழுந்­த­க­ருத்­துக்­க­ளை­ வௌி­யி­ட­வி­ரும்­பு­கின்றேன்.

என­து­ அ­வ­தானம் பின்­வ­ரு­மாறு -

ஒருவர் நோயுற்­றி­ருந்தால் அவரின் அந்­த நோய் என்­ன­ என்­று­ மு­தலில் அறிந்­து­கொள்­ள­வேண்டும். அதன்பின் அந்­த­நோய்க்­கு­ எவ்­வா­றா­ன­ சி­கிச்­சை­அ­ளிக்­க­வேண்டும் என்­று­ ஆ­ரா­ய­வேண்டும். அந்­த­ ஆ­ராய்வின் முடிவில் சிகிச்­சை­ ஆ­ரம்­பிக்­கப்­பட்­டு ­நோயைத் தீர்க்­க­மு­யற்­சிக்­க­ வேண்டும்.

நாம் இப்­போ­து­ எ­ம­து­நோயை சரி­யாகப் புரிந்­து­கொள்­ள­வில்­லை ­என்­ப­தே­ எ­ன­து­க­ருத்தாகும். நோயைப் புரிந்­து­கொள்­ளா­து­ ஒவ்­வொ­ரு­வரும் பனடோல் கொடுப்போம், கசாயம் கொடுப்போம்,பனடீன் கொடுப்போம்,எண்­ணை­தேய்ப்போம் என்­று­ கூறிக்கொண்­டி­ருக்­கின்றோம். நோயைப் புரிந்­து­கொள்­ளா­து­ ம­ருந்­து­களை பற்­றி­ய­சர்ச்­சையில் ஈடு­பட்­டுள்ளோம். நோயைப் புரிந்­து­கொள்­ள­நோயின் சரித்­திரம் மிக­அ­வ­சியம். எவ்­வா­றா­ன­ பின்­புலம் இன்­றை­ய­ நோ­யை­ ஏற்­ப­டுத்­தி­ய­து­ என்­று­ அ­றிந்தால் தான் உரி­ய­சி­கிச்­சையைப் பரிந்­து­ரைக்­கலாம். நோயைப் புரிந்­து­கொள்­ளா­து­சி­கிச்­சையில் நாம் ஈடு­பட்­டுள்ளோம் என்­ப­தே­எ­ன­து­அ­வ­தானமாகும்.

இடைக்­கா­ல ­அ­றிக்­கை­நோ­யை ­அ­றிந்­த­தா­கவோ ,தீர்க்கப் போது­மா­ன­தா­க­வோ­தென்­ப­ட­வில்லை. நோயை­அ­றி­யா­த­சி­கிச்­சை­தோல்­வியில் முடியும்.

இடைக்­கா­ல­அ­றிக்­கை­ த­மி­ழர்­க­ளுக்­கு­ மி­குந்­த­ஏ­மாற்­றத்­தையும் அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்தும் என்­ப­து ­திண்ணம். சிங்­க­ள­பௌத்­த­மே­லா­திக்­கத்­தி­னை­உ­று­திப்­ப­டுத்­து­வ­தா­க­வே ­கு­றித்­த­ அ­றிக்­கை­ உள்­ளது. எதனைப் புறக்­க­ணித்­து நாம் எழு­ப­து­வ­ரு­டங்­க­ளுக்­கு­ மே­லாகப் போரா­டி­வந்­தோ­மோ­அ­த­னை­வ­லி­யு­றுத்­து­வ­தா­க­வே­அ­றிக்­கை­அ­மைந்­துள்­ளது. அதனால் தான் நான்ன் நோயை­அ­றி­யாமல் மருந்­து­பற்­றி­சம்­பாஷணைகள் நடந்­துள்­ள­ன­என்று கூறுகின்றேன். ­எ­மக்கு இனப் பிரச்­ச­னை ­ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­ முக்­கி­ய­கா­ர­ண­மாக இருந்­த­விடயங்களையே நோய் என்­றுநான் குறிப்­பி­டு­கின்றேன். சிங்­களத் தலை­வர்கள் அர­சியல் அதி­கா­ரத்தைத் தம்­வசம் எடுத்துக் கொண்­டுதாம் செய்­த­தே­ ச­ரி­யென்­ற­ அ­டிப்­ப­டையில் இது­வ­ரை­கா­லமும் நடந்­து­கொண்­ட­தே ­எ­ம­து­அ­ர­சியல் நோய்க்கு மூல காரணமாகும்.

குறித்­த­த­லை­வர்­களின் இது­வ­ரை­யி­லா­ன­ செ­யற்­பாடும் நோக்கும் கண்­டிக்­கப்­பட்­டு ­அ­தற்­கா­ன­மாற்­றத்­தி­னை நாம் முன் வைக்­க­முன்­வ­ர­வேண்டும். அப்­போ­துதான் நோய்க்­கு நாம் பரி­காரம் தேடலாம்.

ஒற்­றை­ ஆட்­சி­யி­னை ­நி­ரா­க­ரித்­து­ த­மக்­கு­ரி­ய­அ­ர­சியல் தீர்­வா­க­ ச­மஷ்டிக் கோரிக்­கை­யி­னை­த­மி­ழர்கள் முன்­வைத்­துள்­ள­நி­லையில் தொடர்ந்தும் ஒற்­றை­ஆட்­சி­மு­றை­மை­யி­னை­தக்­க­வைக்கும் பொருட்­டு­ வார்த்தைப் பிர­யோ­கங்­களில் ஏமாற்­ற­முற்­பட்­டுள்­ள­மை­ அ­ரு­வ­ருப்­பை­ஏற்­ப­டுத்­து­கின்­றது.

ஒரு­நாட்­டி­னு­டை­ய ­ஆட்சிக் கட்­ட­மைப்­பி­னை­ கு­றிக்கப் பயன்­ப­டுத்­தப்­படும் சர்­வ­தே­ச­ரீ­தியில் ஏற்றுக் கொள்­ளப்­படக் கூடி­ய­ ஒ­ரு­பொ­ருத்­த­மா­ன­வார்த்­தை­யினைப் பயன்­ப­டுத்­தா­து­ ஏ­கி­ய­ர­ட்ட­ என்­கின்­ற­ சிங்­க­ள­ சொற்­ப­தத்­தி­னை ­ப­யன்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். எக்­சத்­ என்­ற­ ப­தத்தைப் பாவிக்­கா­து ­ஏ­கி­ய­ரட்ட ­என்று கூறி­ய­மை­ அ­றிக்­கை­ ஆக்­கி­யோரின் கபடத் தனத்­தை­ வெளிக்­காட்­டு­கின்­றது. தமிழ் மக்­களின் சுய­நிர்­ண­ய­உ­ரி­மை­அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இணைந்­த­வ­டக்­கு­கி­ழக்கில் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லா­ன­அ­தி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்­கின்­ற ­தமிழ் மக்­களின் கோரிக்கை இந்த இடைக்­கா­ல­ அ­றிக்­கையில் முற்­றா­க­நி­ரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வே­க­ரு­த­மு­டியும்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பு­தேர்தல் காலத்தில் வாக்­கு­று­தி­அ­ளித்­த­வா­று­ வ­டக்­கு­ கி­ழக்கு இணைப்­பு­பற்­றி­யும் ­ஐக்­கிய இலங்கை, மாகா­ணங்­களின் ஒன்­றி­ணைப்­பு­பற்­றியும் பின்­னி­ணைப்பில் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தே ­அ­து­பற்­றி­தாங்கள் என்­ன­நி­னைக்­கி­றீர்கள்?

அறிக்­கையின் ஆங்­கிலப் பிர­தி­யினைப் பார்த்­தீர்­க­ளானால் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பு­ ஏ­றத்­தாழ 70 வரு­டங்­க­ளா­க­த­ம­து­உ­ரி­மை­க­ளுக்­கா­க­போ­ராடிக் கொண்­டி­ருக்கும் எமது இனத்தின் கோரிக்­கை­க­ளை­வெறும் ஒன்­றேகால் பக்­கத்­துக்குள் அடக்­கி­யி­ருக்­கின்­ற­து­என்­ப­து­தெ­ரி­ய­வ­ரு­கின்­றது. வேறுஅறிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளதே தவிர திடமாகத் தமக்கு வேண்டி யவற்றைக் கூறத் தவறியுள்ளது. வடமாகாண சபையும் தமிழ் மக்கள் பேரவையும் போதுமான விபரங்களுடன் தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தன.

மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் எனக் கூறப்படுகின்றதே தவிரஎன்னென்னஅதிகாரங்கள் மாநிலத்துக்கு ஒதுக்கப்படவேண்டும் என்பன பரிந்துரைசெய்யப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் இவ் இடைக்கால அறிக்கையானது தமிழரின் இனப் பிரச்சனைதொடர்பானபயணத்தினைபின்னோக்கிநகர்த்தியுள்ளதாகவேகருதலாம்.

கேள்வி: இந் தஇடைக்காலஅறிக்கைக்குநீங்கள் ஆதரவு வழங்குவீர்களா?

பதில்: நோய்க்குமருந்துகொடுக்காவிட்டால் நோய் தீராது. தொடரப் போகும் நோய்க்கு ஆதரவுவழங்கச் சொல்கிறீர்களா? அரைகுறைத் தீர்வுஒருபோதும் நோய்க்குமருந்தாகாது. தொடர்ந்துபோராடவேண்டியநிர்ப்பந்தத்தையே இந்த இடைக்கால அறிக்கை எமக்கு நல்கியுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.