Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்னம் என்ன என்பதை விட எண்ணமே முக்கியம் கண்டியில் அமைச்சர் மனோ கணேசன்

Featured Replies

சின்னம் என்ன என்பதை விட எண்ணமே முக்கியம்

manno-ea0c1ef3bf10f198e565cdb5a2ae67be2a966b10.jpg

 

கண்டியில் அமைச்சர் மனோ கணேசன்
(கண்டி, வத்­து­காமம் நிரு­பர்கள்)

விரைவில் பல தேர்­தல்­களை எதிர்­நோக்கி  உள்­ள­வர்கள் தமது சின்னம் எது என்­பதை விட, தமது எண்ணம் எது என்­பதை முக்­கி­ய­மா­ன­தாக்கிக் கொள்ள வேண்டும் என்று இன நல்­லி­ணக்க கலந்­து­ரை­யாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரி­வித்தார்.  

கண்டி ஸ்ரீ புஷ்­ப­தான மண்­ட­பத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­தா­வது-

ஒரு குழந்­தையை வளர்த்து பெரி­ய­வ­னாக்கி அவன் மூலம் ஒரு தந்தை அடையும் மகிழ்ச்­சியை விட நான் இன்று அடைந்­துள்ள மகிழ்ச்சி இரட்­டிப்­பா­னது.

ஏனெனில் 15 வரு­ட­கா­ல­மாக கண்டி மாவட்­டத்தில் இழக்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்ற தமிழ் பிர­தி­நி­தித்­து­வத்தை மீளப் பெற்று அத­னூ­டாக மேற்­கொண்ட சேவை­களை கண்­கூ­டாகக் காணும் பாக்­கியம் இன்று கிடைத்­தது. எனவே எனது மகிழ்ச்சி இரட்­டிப்பு என்று அதனைக் குறிப்­பிட்­டாக வேண்டும்.

கடந்த 15 வருடம் பற்றிப் பேசு­வ­துடன் கடந்த இரண்டு வரு­டங்­களில் என்ன மேற்­கொள்­ளப்­பட்­டது, அடுத்த மூன்று வரு­டங்­களில் என்ன செய்­யப்­போ­கிறோம் என்ற விட­யங்கள் எமக்கு மிக முக்­கி­ய­மா­ன­தாகும். அர­சியல் ரீதி­யாக மலை­யக மக்கள் கடந்த காலங்­களில் இழந்­தவை எண்­ணி­ல­டங்­காது.

வெறு­மனே நாம் எமது பிரச்­சி­னை­களை அர­சியல் மேடை­களில் பேசு­வதில் பலன் குறைவு. ஆனால் தர்க்­க­ரீ­தியில் அவற்றை உரிய இடத்தில் முன்­வைக்க வேண்டும். அந்த வகையில் கண்டி மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வேலு­குமார் அர­சியல் கருத்­துக்­களை தர்க்­க­ரீ­தியில் முன்­வைப்­பதில் வல்­லவர். இன்று கண்டி மாவட்­டத்துச் வேவைகள் பட்­டியல் படுத்­தப்­பட்­டுக்­காட்­டப்­பட்­டன. ஆனால் அதற்கு மூல­கர்த்­த­வாக வேலு­குமர் உள்ளார் என்­பதே உண்­மை­யாகும். வேறு வகையில் கூறு­வ­தாயின் 2010ஆம் ஆண்டு நான் கண்­டியில் விதைத்த வித்­துதான் இன்று வேலு கும­ராக வளர்ந்து பயன் தரும் விருட்­ச­மாகி உள்­ளது.

இன்று அர­சியல் அதி­காரம் இன்றி ஏதும் இல­கு­வாக நக­ராது. எனவே பாராளு மன்றம் மட்­டு­மல்ல மாகாண சபை, நகர சபை, பிர­தேச சபை என அனைத்து அமைப்­புக்­க­ளிலும் மலை­யக மக்கள் குரல் ஒலிக்க வேண்டும். நாம் அடுத்­த­டுத்து பல தேர்­த­லை­களை சந்­திக்க உள்ளோம். அவை­ய­னைத்­திலும் நூற்றுக் கணக்­கான பிரதி நிதி­களை உள்­வாங்க வேண்டும். அதற்­காக திட்டம் அமைக்­கப்­பட வேண்டும்.

அர­சியல் ஒரு சாக்­கடை என்று கூறிக் கொண்டு நல்­ல­வர்கள் அத­னை­விட்டு ஓடு­கின்­றனர். இதன் விளைவு என்­ன­வென்றால் மேலும் சாக்­க­டை­கள்தான் வந்து குவி­கின்­றன. இதனால் ஏற்­க­னவே உள்ள சாக்­க­டையில் மேலும் மேலும் சாக்­கடை குவி­கி­றது. நல்­ல­வர்கள் வந்து சேர்ந்தால் மட்­டுமே அதனைத் தூய்­மைப்­படுத் முடியும். எனவே நல்­ல­வர்கள் பலரும் அர­சி­யலில் இணைய வேண்டும் எனக் கேட்­டுக்­கொள்­கிறேன்.

நல்­ல­வர்­க­ளாக மட்டும் இருந்தால் போதாது அவர்கள் வல்­ல­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும். அர­சி­யிலில் எமக்­குள்ள பங்கை நாம் பெற்­றாக வேண்டும். அதனை பேச்சு வார்த்தை மூலமும் பெறுவோம். பேசிப்­பே­சியும் பெறுவோம். சிரித்­துக்­கொண்டும் பெறுவோம். அழு­து­கொண்டும் பெறுவோம். சண்டை பிடித்துக் கொண்டும் பெறுவோம். போராட்டம் நடத்­தியும் பெறுவோம். எந்த அடிப்­ப­டை­யி­லா­வது எமது நியா­ய­மான உரி­மை­களை வென்­றெ­டுத்­தாக வேண்டும். அந்த அடிப்­ப­டையில் தேசிய நீரோட்­டத்தில் மலை­யக தமிழ் சமூ­கத்தை கொண்டு வந்து சேர்த்­துள்ளோம்.

இந்­திய வம்­சா­வளித் தமி­ழர்கள் நாட்டின் பல பாகங்­க­ளிலும் பரந்து விரிந்து வாழ்­கின்­றனர். மத்­திய மலை­நாடு மட்­டு­மல்­லாது கண்டி, மாத்­தளை, கொழும்பு, அவி­வ­சா­வளை, களுத்­துறை, மொன­ரா­கலை, இரத்­தி­ன­புரி, மத்­து­கம, நீர்­கொ­ழும்பு, பம்­ப­ல­பிட்டி, கொழும்பு என்­றெல்­லாம பட்­டியல் போடலாம். ஆனால் இதில் ஒரு வியப்பு தோட்டத் தொழி­லா­ள­ராக வாழும் ஒரு சிறு பகு­தி­யி­னரே பல்­வேறு வகை­யிலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆனால் ஏனை­ய­வர்கள் தங்கள் சுய முயற்­சியால் வேறு­வ­கை­யான தொழில்­களைச் செய்து ஓர­ளவு மரி­யா­தை­யுடன் வாழ்­கின்­றனர். ஆனால் தோட்­டத்­து­றையில் தொழி­லா­ளர்­க­ளாக இருப்­ப­வர்­கள்தான் இன்னும் தமது நிலை­மை­களை மாற்றிக் கொள்­ள­வில்லை.

நாட்டில் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் எங்கு வாழ்ந்­தாலும் அவர்கள் மலை­ய­கத்­த­வர்கள் என்ற அடிப்­ப­டையில் செயல்­பட்டு எமது விடி­வுக்­காக ஒத்­து­ழைக்க வேண்டும். 1977 முதல் இன்று வரை சுமார் 40 வரு­டங்கள் கட்சி மாறி மாறி அர­சி­யலில் அமைச்சுப் பத­வி­களில் பலர் அலங்­க­ரித்­தனர். அந்த 40 ஆண்­டு­களில் நடத்த முடி­யாத இமா­லய சாத­னை­களை கடந்த 2 வரு­டங்­களில் செய்­துள்ளோம் என்றால் அது வியப்­பாக இருக்கும்.

எவ­ரது காணி­யி­லா­வது வீட்­டுக்கு மேல் வீட்­டைக்­கட்டி அடுத்­தவன் காணியில் மாடி­வீ­டு­கட்டி வாழும் வாழ்­கை­யல்ல நாம் கேட்­டது. சொந்தக் காணியில் தனி வீடு என்ற போராட்­ட­மாகும். அது தற்­போது வெற்­றி­ய­டைந்­துள்­ளது. அமைச்­ச­ரவைப் பத்­திரம் மூலம் வீடு­கட்ட 7 பெர்ச்சஸ் காணி வழங்கும் திட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட உள்­ளது. அதே­நேரம் தனி வீடுகள் மலை­ய­கத்தில் பர­வ­லாக அமைக்­கப்­பட்டு வரு­கி­றன. இது தவிர 7 பேர்ச் கோசத்தை விட வித்­தி­யா­ச­மான ஒன்று தான் சுய தொழில் அல்­லது தன்­னிச்­சை­யாக உற்­பத்தி செய்ய குடும்பம் ஒன்­றுக்­கான ஒரு ஏக்­க­ரிலும் குறை­யாத நிலம். இதுவும் கூடிய கதியில் கைகூட உள்­ளது.

இன்று வடக்கு, கிழக்கில் உள்­ள­வர்கள் கூட தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியில் வளர்ச்­சி­கண்டு வியப்­ப­டைந்­துள்­ளனர். எம்மைப் பற்றி யார் குறை­கூ­றி­னாலும் பர­வா­யில்லை நாம் செய்­வதை முன் எடுப்போம். எமது திட்­டங்­களில் அதி­க­மா­னவை கண்­டியை மைய­மாகக் கொண்ட அரச பெருந்­தோட்­ட­யாக்கம், எல்­க­டுவ பிலாண்­டேசன், மக்கள் தோட்ட அபி­வி­ருத்திக் கூட்­டுத்­தா­பனம். (ஜன­வ­சம) ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முதலில் நடை­முறைப் படுத்­தப்­ப­டு­கி­றது. இதனால் கண்­டிக்கும் கண்­டியை அண்­மித்த கார­ணத்தால் மாத்­த­ளைக்கும் அதிஷ்ட்டம் காத்­துள்­ளது.

அடுத்த தேர்­தலில் எமது சின்னம் என்ன என்று கேட்­கி­றார்கள். சின்­னத்தை விட எண்ணம் முக்­கியம் என்­பதை மறக்க வேண்டாம். தற்­போ­தைய அரசு கொண்டு வந்­துள்ள புதிய அர­சில்­அ­மைப்பு தொடர்­பாக சிலர் தவ­றான விளக்கம் வழங்­கு­கின்­றனர். சமஷ்டி என்றும் வடக்கு, கிழக்கு இணையும் என்றும் மலை­யகம் கூறு போடப்­படும் என்­றெல்லாம் கூட்டு எதி­ரணி பிர­சாரம் செய்து அவ்­வாறு எதிர்­பார்த்­தனர். அப்­படி ஏதும் இல்­லாத நிலையில் தற்­போது வாய் அடைத்து போயுள்­ளனர். 60 ற்கு 40 என்ற கலப்பு முறை தேர்­த­லுக்குச் செல்ல நாம் தயா­ராகி வரு­கிறோம்.

ரஞ்சன் ராம­நா­யக்கா பற்றி சட்­டத்­த­ர­ணிகள் போர்­கொடி ஏந்­தி­யுள்­ளனர். எல்லாத்துறைகளிலும் ஊழல் பேர்வழிகள் உள்ளனர். அவ்வாறு ஒருசில விரல் விட்டு எண்ணக் கூடிய ஊழல் காரர்கள் சட்டத்தரணியாகவும் உள்ளனர். வியாபாரியை வியாபாரி என்றுதான் அழைப்போம். பொலிஸ்காரனை பொலிஸ் என்றுதான் அழைப்போம். எனவே திருடனை திருடன் என்று அழைப்பதில் தவறில்லை. எனவே குறிப்பிட்ட துறைகளில் உள்ளவர்கள் அத்துறையில் உள்ளவர்களை திருத்திய பின் ரஞ்சன் ராமநாயக்கா போன்றவர்களைத் திருத்த முன்வரலாம். மதகுருமாரும் ஏனையவர்களும் எமக்கு வழகாட்டிகளாக இருக்க வேண்டும். கள்ளவர்களைப் பாதுகாக்காது இருந்தால் போதுமானதாகும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.