Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த மக்களே இன்று பிக்குமார்களை அவமதிக்கின்றனர்; மஹிந்த கவலை

Featured Replies

பௌத்த மக்களே இன்று பிக்குமார்களை அவமதிக்கின்றனர்; மஹிந்த கவலை

 

பௌத்த மக்களே இன்று பிக்குமார்களை அவமதிக்கின்றனர்; மஹிந்த கவலை

வெறும் அரசியல் இலாபத்திற்காக பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களே பௌத்த பிக்குகளை தரங்குறைவாகப் பேசி அவமதிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிரிக்கின்ற முதலாவது முயற்சியை நல்லாட்சி அரசாங்கம் எடுத்துவிட்டதாக கூறிய அவர், இதற்கு ஆதரவாக பௌத்த மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

பதுளை – வெல்லவாய கெஹலிய ரஜமகா விகாரையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட அதிதியாக கலந்துகொண்டார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித பேருகொட, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச “பிக்குமார்களை அவமதிக்கின்றனர். இப்படி அவமதிக்கின்ற யுகமொன்று இதற்கு முதல் இருந்ததில்லை. பிச்சைப்பாத்திரம் ஏந்திச் சென்ற பிக்குமார்களுக்கு   இவ்வாறு கவனித்தது பௌத்தர்கள் அல்லாத பிறமதத்தினர் அல்லர். பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர்தான் இதனைச் செய்தனர். வெறும் பெயருக்கு மட்டும் அவர்கள் பௌத்தம். இதனால் விளங்கிக்கொள்வது என்ன? இவ்வாறான குறுகிய அரசியல் நோக்கத்தை அடைந்துகொள்ள இன்று நாட்டு மக்களில் சில குழுவினர் ஆயத்தமாக இருக்கின்றனர். பிச்சைக்காரர்கள் எனக்கூறி அவமானப்படுத்துகின்றனர். இது யாருக்கு? பௌத்த பிக்குகளுக்கு இப்படிச் சொல்கிறார்கள். இந்த சூழ்நிலை நாட்டில் ஏற்படுவதற்கு இவர்களுக்கு தலைவர்களிடம் இருந்து உதவி கிடைக்காவிட்டால் எப்போதுமே அவர்களால் அந்த செயற்பாட்டில் ஈடுபடமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கீழ்த்தரமாக செயற்படுவதன் காரணம், அவர்களை தலைவர்கள் தங்களது தலைக்கு மேல் வைத்திருப்பதால்தான். இந்த நிலைமை மட்டுமல்ல, இன்று காணிக்கை பெட்டி மீதும் வரி விதிக்கின்றனர். காணிக்கைப் பெட்டியை பலாத்காரமாக எடுத்துச் செல்லும் யுகமும் உருவாகிவிட்டது. பௌத்த மக்களுக்கு இப்படியான கீழ்த்தரமான காலம் உருவாக்கிக்கொடுக்கப்பட்டுள்ளது. வருடக்கணக்காக அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு இருந்த பிரிவுகளும் இன்று மாற்றப்பட்டுள்ளன. மதமே அற்ற நாடு என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரைத்துள்ளதை கண்டேன். இதற்காகவே அரசியலமைப்பு மாற்றப்படுகிறது. இதற்காகவா பௌத்த மக்கள் வாக்களிக்கப் போகின்றார்கள்? யாருமே அரசியலமைப்பை மாற்றுவதற்கு கேட்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றுங்கள் என மட்டுமே கேட்டனர். ஆனால் முழு அரசியலமைப்பையும் மாற்றி நாட்டைப் பிளவுபடச்செய்து, ஜனாதிபதியின் அதிகாரங்களை முதலமைச்சர்களுக்கு வழங்கி வடக்கு, கிழக்கை இணைத்து, நாட்டைப் பிரிக்கும் முதலாவது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். எனவே நாங்கள் கொடுத்த பரிந்துரைகள் கணக்கில் எடுக்கப்படவில்லை. ஆகவே இதற்கு நாங்கள் எதிராக செயற்படுவோம்” என்றார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Buddhist-people-insult-Buddhist-Monks-Mahinda

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.