Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படை முகாமுக்கு 617 ஏக்கர் காணிகள் சுவீகரிப்பு

Featured Replies

கடற்படை முகாமுக்கு 617 ஏக்கர் காணிகள் சுவீகரிப்பு

 
 
கடற்படை முகாமுக்கு 617 ஏக்கர் காணிகள் சுவீகரிப்பு
 4
  •  
  •  
  •  
  •  
  •  

முல்­லைத்­தீவு – முள்­ளி­வாய்க்­கால் கிழக்கு வட்­டு­வா­கல் பகு­தி­யில் கடற்­ப­டை­யி­ன­ரால் அப­ரிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 617 ஏக்­கர் காணி­கள் நிரந்­த­ர­மா­கவே சுவீ­க­ரிக்­கப் படு­வ­தான வர்த்­த­மானி அறி­வித்­தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

காணி உரி­மை­யா­ளர்­க­ளு­டைய ஆட்­சே­ப­னை­யை­யும் மீறி இந்­தக் காணி­கள் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது மக்­க­ளி­டத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. காணி சுவீ­க­ரிப்­புச் சட்­டப் (அத்­தி­யா­யம் 460) பிரி­வின் கீழான அறி­வித்­த­தில் 2030ஃ44ஆம் இலக்க 2017.8.4ஆம் திகதி பிரசு ரிக்கப்பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லி­லேயே குறித்த காணி­கள் சுவீ­ க­ரிக்­கப்­பட்­டுள்­ளன என அரசு அறி­வித்­துள்­ளது. இந்த அறி­வித்­தல் அடங்­கிய கடி­தங்­கள் கரை­து­ரைப்­பற்றுப் பிர­தேச செய­லா­ளர் குண­பா­ல­னால் காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இறு­திப்­போ­ரின் பின்­னர் முல்­லைத் தீவு, வட்­டு­வா­கல் பிர­தே­சத்­தில் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 617 ஏக்­கர் காணி­கள் கடற்­ப­டை­யி­னரால் அப­க­ரிக்­கப்­பட்­டன. அங்கு கடற்­ப­டை­யி­னர் பாரிய கடற்­ப­டைத் தளத்தை அமைத்து நிலை­கொண்­ட­னர். மக்­க­ளு­டைய மீள்­கு­டி­ய­மர்­வின்­போது கடற்­ப­டை­யி­ன­ரால் அப­கரிக்­கப்­பட்ட குறித்த காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. மக்­கள் நிர்க்­க­தி­யா­கி­னர்.

இது­தொ­டர்­பாக அர­சி­யல் தலை­வர்­க­ளுக்­கும், அரச அதி­கா­ரி­க­ளுக்­கும் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. மக்­கள் பி்ரதி­நி­தி ­ க­ளுக்­கும், அர­சுக்கு­மி­டை­யில் பல பேச்­சு­கள் இடம்­பெற்­றன. எனி­னும் காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­ வில்லை. கடற்­ப­டை­மு­காமை அகற்றி தமது நிலங்­களை விடு­விக்­கு­மாறு கோரி மக்­கள் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­ட­னர். இந்­தப் போராட்­டங்­கள் நீண்­ட­கா­ல­மாக இடம்­பெற்­றன.

ஆனால் அரசு பாரா­மு­க­மா­கவே இருந்­தது. சுவீ­க­ரிப்­புக்­கா­கக் காணி­களை அள­வி­டும் முயற்­சி­யில் கடற்­ப­டை­யி­னர் இரண்டு தட­வை­கள் ஈடு­பட்­ட­னர். அந்த முயற்­சி­கள் மக்­க­ளால் தடுத்து நிறுத்­தப்­பட்­டன.

இது­தொ­டர்­பில், பாது­காப்பு அமைச்­சின் உப­செ­ய­லா­ளர் தல­மை­யில் கடந்­த­ வ­ரு­டம் ஜன­வரி 16ஆம்­தி­கதி மற்­றும் 24ஆம் திக­தி­க­ளில் மாவட்­டச் செய­ல­கத்­தில் மாவட்­டச் செய­லா­ளர் தல­மை­யில் கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெற்­றன.

இதன்­போது தமது நிலம் மீளக் கைய­ளிக்­கப்­ப­ட­வேண்­டும் என்று காணி உரி­மை­யா­ளர்­கள் உறு­தி­யா­கக் கோரி­னர். இவை அனைத்­தை­யும் தாண்டி கடற்­ப­டை­யி­னர் அடாத்­தாக மேற்­படி பிர­தே­சத்­தினை அப­க­ரிக்­கும் நோக்­கில் அள­வீடு செய்ய முயன்­ற­னர்.

எனி­னும் காணி உரி­மை­யா­ளர்­கள், மக்­கள், மீன­வர்­கள் மற்றும் அர­சி­யல் தலை­வர்­கள் என அனை­வ­ரும் வீதி­ ம­றி­ய­லில் ஈடு­பட்­ட­னர். வட்­டு­வா­கல் பாலம் மறிக்­கப்­பட்­டது. போக்­கு­வ­ரத்­து­கள் தடைப்­பட்­டி­ருந்­தன. அங்கு பெரும் ஆர்ப்­பாட்­டம் நடந்தது.

சம்­பவ இடத்­திற்கு வந்த மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­கள் மக்­க­ளுக்­குச் சாத­க­மாக வாக்­கு­று­தி­களை வழங்­கி­னர். காணி­களை விடு­விப்­ப­தற்கு தாம் நட­வ­டிக்­கை­கள் எடுப்­ப­தாக உறு­தி­ய­ளித்­த­னர். அந்த வாக்­கு­று­தி­களை ஏற்று போராட்­டம் கைவி­டப்­பட்­டது.

இந்­த­வி­ட­யம் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழு­வின் கவ­னத்­திற்­கும் கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் அந்­தப் பிர­தே­சத்தை எந்­தக் கார­ணம் கொண்­டும் கடற்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­க­மு­டி­யாது என்று தீர்­மா­ன­ மும் நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்குப் பின்­னரே வட்­டு­வா­கல் கடற்­ப­டைத் தளத்­தின் சுற்­றுக் காவ­ல­ரண்­கள் அனைத்­தும் நிரந்­த­ர­மாக சீமெந்­தி­ னால் கட்­டி­ய­மைக்­கப்­பட்­டன.

இத­னை­ய­டுத்து கடந்த ஏப்­ரல் மா­தம் மீண்­டும் மக்­கள் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். எனி­னும், காணி­கள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக அரசு அறி­வித்­தது.

இது­தொ­டர்­பாக ஆட்­சே­பனை இருப்­பின் தெரி­யப்­ப­டுத்­து­மா­றும் கோரி­யது. தமது சொந்த நிலங்­க­ளைத் தங்­க­ளி­டம் கைய­ளித்­து­விட்டு கடற்­ப­டை­யி­னர் அவர்­க­ளுக்­குப் பொருத்­த­மான இடங்­க­ளுக்­குச் செல்­ல­வேண்­டும் என மக்­கள் தமது ஆட்­சே­ப­னைக் கடி­தங்­க­ளில் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இவை எல்­லா­வற்­றை­யும் மீறி தற்­போது அரசு அந்­தக் காணி­கள் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன என அறி­வித்­தமை மக்­கள் மத்­தி­யில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால் மக்­கள் அதி­ருப்தி அடைந்­துள்­ள­னர்.

அந்­தக் காணி­க­ளில் கடற்­ப­டை­யி­னர் நிரந்­த­ர­மாக் குடி­கொள்­வார்­க­ளே­ ஆனால் மாவட்­டத்­தைச் சேர்ந்த மீன­வர்­கள் பலர் பாதிப்­ப­டை­யும் நிலை உரு­வா­கும் – என அவர்­கள் தங்­க­ளு­டைய ஆதங்­கங்­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

http://newuthayan.com/story/32583.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.