Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முப்­பது வரு­ட­கா­லப் போரி­னால் 3 தலை­மு­றை­களை இழந்­தோம் வடக்கு கல்­வி­ய­மைச்­சர் ஆதங்­கம்

Featured Replies

முப்­பது வரு­ட­கா­லப் போரி­னால் 3 தலை­மு­றை­களை இழந்­தோம்

வடக்கு கல்­வி­ய­மைச்­சர் ஆதங்­கம்

 
 
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

முப்­ப­து­வ­ருட காலப் போரில் மூன்று தலை­முறைப் பிள்­ளை­களை இழந்­தோம். மாகாண ரீதி யில் பொரு­ளா­தா­ரம் மற்­றும் கல்­வி­யி­லும் பின் நிற்­கி­றோம் – என்று வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் தெரி­வித்­தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அக்கினிச் சிறகுகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது­பற்றி மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ணம் அனைத்து விளை­யாட்­டுத் துறை­க­ளி­லும் சிறப்­பாக செயற்­பட வேண்­டும். அதற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
மாகாண கால்­பந்­தாட்ட அணி தற்­போது சிறப்­பாக உள்­ளது. தேசிய மட்­டப் போட்­டி­க­ளில் 3ஆம் இடத்தை பெற்­றுள்­ளது. கடந்த ஆண்டு 12 பதக்­கங்­க­ளை­யும், நடப்பு ஆண்­டில் இது­வரை 19 பதக்­கங்­க­ளை­யும் பெற்­றுள்­ளது. அத்­து­டன் தாச்சி மறித்­தல் எமது பாரம்­ப­ரிய விளை­யாட்டு. அது பாட­சாலைகளி­லும், ஏனைய விளை­யாட்டு நிகழ்­வு­க­ளி­லும் இடம்­பெற நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன. வடக்­கிலே 140க்கும் அதி­க­மான தாச்சி விளை­யாட்­டுக் குழுக்­கள் உள்­ளன. அவற்­றை­யும் வளர்த்­தெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

இப்­போது அதி­க­ரித்­துள்ள சமூ­க­வி­ரோத செயல் க­ளுக்கு அக்­கி­னிச் சிற­கு­கள் நல்­ல­தொரு வழி­யைக் காட்­டும் என நம்­பு­கின்­றேன். 30 வரு­டங்­க­ளாக தனி­நாடு, தனித்­து­வம், எமது சமூ­கம் என்ற கோட்­பாட்டை வலி­யு­றுத்தி போரா­டி­ய­வர்­கள் நாம். இதனை இந்த நூல் தெளி­வாக வெளிப்­ப­டுத்­து­கின்­றது. ஆயு­தப் போராட்­டத்­தில் தோல்வி அடைந்­தா­லும் கூட எமது புகழ் இன்­ன­மும் சில விட­யங்­க­ளில் மங்­க­வில்லை. 70ஆம், 80ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் கல்­வி­யில் மேல்­மா­கா­ணத்துக்கு அடுத்­த­தாக நாம் இருந்­தோம். அத்­து­டன் பொரு­ளா­தா­ரம் என்று பார்க்­கும்­போது எமது விவ­சா­யம், மீன்­பிடி மற்­றும் அரச தொழி­லில் நாம் முத ன் மை­யாக இருந்­தோம்.

ஆனால் இன்று மிக­வும் பின்­தங்­கிய நிலை­யில் உள்­ளோம். விவ­சா­யம் இல்­லா­மல் போகின்­றது. விவ­சா­யம் செய்­த­வர்­கள் இடம்­பெ­யர்ந்­துள்­ள­னர் அல்­லது தொடர்ந்து விவ­சா­யம் செய்ய முடி­யாத நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர். அதி­க­மான காய்­க­றி­களை தந்த நிலங்­கள் இன்று கட்­ட­டங்­களைச் சுமந்து நிற்­கின்­றன. மீன்­பி­டி­யா­ னது இந்­திய மீனவர்களின் செயற்பாட்டினாலும், தென்­னி­லங்கை மீன வர்­க­ளின் ஆக்­கி­ர­மிப்­பி­னா­லும் பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யில் உள்­ளது.

ஆசி­ரி­யர் சேவை தவிர்ந்த ஏனைய அர­ச­வே­லை­க­ளில் 30 சத­வீ­த­மா­ன­வர்­கள் தமி­ழர்­கள் இருக்­கின்­றார்­கள். அவர்­க­ளில் அநே­கர் வேறு மாவட்­டங்­க­ளில் பணி புரி­கின்­றார்­கள்.

இத­னால் வடக்­கில் சிறிய வேலைக்­குக்­கூட தமி­ழர்­கள் இல்­லா­த­நிலை காணப்­ப­டு­கி­றது. வடக்கு மாகா­ணத்­தில் அதி­க­ள­வான வெற்­றி­டங்­கள் இருக்­கின்­றன. ஆனால் தகுதி வாய்ந்­த­வர்­கள் இல்லை. இத­னால் முக்­கி­ய­மான இடங்­க­ளில் பெரும்­பான்­மை­யி­னர் பணி­யில் உள்­ள­னர்.

எமது மாகா­ணத்­தில் 5 அமைச்­சு­க­ளின் ஊடாக 37 விடயங்களின் செயற்பாடு கள் நடை­பெற்று வரு­கின்­றன. கல்­வி­யிலே நாம் வெற்­றி­பெற வேண்­டும். அதற்­காக நாம் விசேட திட்­டம் ஒன்றை பாட­சா­லை­க­ளில் நடத்தி வரு­கின்­றோம். பாட­சா­லை­யில் உயர்­த­ரத்­திற்கு எத்­தனை மாண­வர்­கள் தகுதி பெறு­வார்­கள், தகு­தி­பெ­றா­த­வர்­கள் எந்த மட்­டத்­தில் உள்­ளார்­கள் போன்ற 12 விட­யங்­களை ஆராய்ந்து வரு­கின்­றோம். நாட்­டிலே ஏற்­பட்ட போர் கார­ண­மாக மக்­கள் பெரும் பொரு­ளா­தார இழப்­பு­களை சந்­தித்­த­னர். இடம் பெயர்ந்­தி­ருக்­கி­றார்­கள், பலர் கொல்­லப்­பட்­டார்­கள்.

போரின் போது எமது இனத்­தினை விருத்தி செய்­யும் 18- தொடக்கம் 45 வய­துப் பிரி­வி­னரை இழந்­தி­ருக்­கின்­றோம். இத­னால் எமது 3 தலை­மு­றையை இழந்­துள்­ளோம். கல்­வி­யில் 35 மாண­வர்­க­ளுக்கு ஒரு ஆசி­ரி­யர் என்று இருந்த காலத்­தில் எமது கல்வி 2ஆம் இடத்­தில் இருந்­தது. ஆனால் இப்­போது 14 மாணவர்­க­ளுக்கு ஒரு ஆசி­ரி­யர் என்ற நிலை உண்டு. ஆனால் நாம் பின்­தள்­ளப்­ப ட்­டுள்­ளோம். இதற்கு என்ன கார­ணம். ஆகவே எல்­லா­வற்­றி­லும் நாம் முன்­னுக்கு வரு­வ­தற்கு அனைத்து முயற்­சி­க­ளும் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன – என்­றார்.

http://newuthayan.com/story/32575.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.