Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பின் ஆதரவுடன் வடக்கில் சுற்றுலா மையங்கள் அமைப்பு

Featured Replies

கொழும்பின் ஆதரவுடன் வடக்கில் சுற்றுலா மையங்கள் அமைப்பு

 
 
கொழும்பின் ஆதரவுடன் வடக்கில் சுற்றுலா மையங்கள் அமைப்பு
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

வடக்கு மாகாணத்தின் சுற்­றுலா நட­வ­டிக்­கை­கள், சுற்று லாத்துறை­­யுடன் சம்­பந்­தப்­ப­டாத பாது­காப்புத் தரப்­புக்­கள் மற்றும் வெளி­யில் இருந்து வந்­துள்ள தனி­யார் எனப் பல­ரின் கைக­ளில் இப்­போது தவழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. இத­னால் எமது சுற்­றுலா வரு­மா­னங்­கள் குறிப்­பிட்ட சில­ரின் கைக­ளுக்கு அல்­லது வேறு பிரி­வி ­னருக்கு மேல­திக வரு­மா­ன­மா­கப் போய்ச் சேரும் நிலை யே காணப்­ப­டு­கின்­றது என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

உலக சுற்­றுலா தினத்தை முன்­னிட்டு யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த திங்­கள் திங்கட்கிழமை நடை­பெற்ற வடக்கு மா­காண சபை­யின் சுற்­றுலா மா­நாடு குறித்து முதல்வர் அனுப்­பி­ வைத்த அறிக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்­ளார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது, சுற்­று­லாப் பய­ணி­களை மிக­வும் கவ­ரக் கூடிய மணற்­பாங்­கான பல கடற் க­ரை­கள், சுற்­றுலா மையங்­கள் கவ­னிப்­பார் அற்று புதர் மண்­டிக் கிடக்­கின்­றன. சுற்­று­லாத் துறையை முறை­யா­கச் சீர­மைத்து சுற்­று­லாப் பய­ணி­க­ளைக் கவ­ரக் கூடிய மீள் கட்­டு­மா­னங்­க­ளு­டன் சுற்­றுலா மையங்­களை மீள் பொலி­வு­றச் செய்­வ­தன் மூலம் வடக்கு மாகா­ணத்­தின் சுற்­று­லாத்­துறை வரு­மா­னத்தை உயர்த்­து­வ­து­டன் அத­னோ­டி­ணைந்த உள்­ளூர் உற்­பத்­தி­யா­ளர்­க­ளின் உற்­பத்­தி­க­ளுக்­கான சந்தை வாய்ப்­புக்­களை அதி­க­ரிக்­கச் செய்­ய­லாம்.

உப தயா­ரிப்­புக்­க­ளான உணவு வகை­கள், உள்­ளூர் இனிப்பு வகை­கள் மற்­றும் வட­ப­கு­திக்கே உரித்­தான ஒடி­யல், பனாட்டு போன்ற பனை உற்­பத்­தி­கள் ஆகி­ய­வற்­றுக்கு நல்ல கிராய்க்கி ஏற்­ப­டக்கூடிய வாய்ப்­புக்­கள் உண்டு. எமது கட­லு­ண­வு­கள் அவற்­றின் சுவை­யின் நிமித்­தம் பிர­சித்தி பெற்­றுள்­ளன. வடக்கு மாகா­ண­சபை ஆரம்­பிக்­கப்­பட்ட பின்­னர் கடந்த 3 ஆண்­டு­ க­ளில் சுற்­றுலா தொடர்­பான பல வேலைத் திட்­டங்­களை அங்­கொன்­றும் இங்­கொன்­று­மாக முன்­னெடுத்திருக்கின் றோம்.

எனி­னும் இத் துறையை சீராக முறை­யான தந்­தி­ரோ­பா­யத் திட்­டங்­க­ளு­டன் முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்கு நிதிப் பற்­றாக்­குறை ஒரு பெரும் பிரச்சி­னை­ யாக எம்­மி­டையே காணப்­ப­டு­கின்­றது.

எமது பிராந்­தி­யத்­தில் இருக்­கும் மர­பு­ரி­மைப் பொருள்கள் பல சூறை­யா­டப்­பட்டு வரு­கின்­றன. கோயிற் சிலை­கள் காணா­மல் போவதை வெறும் களவு என்று கொள்ள முடி­யா­தி­ருக்­கின்­றது.இச் சிலை­கள் கடத்­தப்­பட்டு பல கோடி ரூபாய்­க­ளுக்­குக் கள­வாக விற்­கப்­பட்டு வரு­கின்­றன. எனவே எமது கோயில் சொத்­துக்­கள், சிலை­கள், மர­பு­ரி­மைப் பொருள்­கள் பாது­காக்­கப்­பட வேண்­டும். இதற்­கான சட்ட திட்­டங்­களை இயற்றி வரு­கின்­றோம்.

பலாலி விமா­னத் தளம், காங்­கே­சன்­துறை கடற்­ப­டைத்­த­ளம் ஆகி­யன சுற்­று­லா­வின் பொருட்டு சீர­மைக்­கப்­பட்டு அத னூடாக வான், கடல் வழிப் போக்­கு­வ­ரத்­து திறக்­கப்­பட வேண்­டிய அவ­சி­யத்தை அறிந்து அது சம்­பந்­த­மா­க­வும் நட­வ­டிக்­கை­கள் எடுத்து வரு­கின்­றோம்.

கொழும்பு அர­சின் உத­வி­யு­டன் எமக்­குத் தெரி­யா­மல் சுற்­றுலா மையங்­களை அமைக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மக்­கள் அவ­தா­ன­மாக இருத்­தல் அவ­சி­யம். எனவேதான் எமது பகு­தி­க­ளின் பாரம்­ப­ரி­யத்துக்கும் சூழ­லுக்­கும் கலை கலா­சா­ரத்துக்கும் ஏற்­ற­வாறு புதிய சுற்­று­லாக் கலாசா­ரம் ஒன்றை உரு­வாக்க வேண்­டிய அவ­சி­யம் எழுந்­துள்­ளது. இதற்கு ஐக்­கிய நாடு­க­ளின் நிலை­யான அபி­வி­ருத்­திக்­கான நோக்­கு­கள் பற்­றிய ஆவ­ணம் உறு­து­ணை­யாக நிற்­கு­மென நம்­பு­கின்­றோம் என்­றார்.

 

http://newuthayan.com/story/32840.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.