Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவில் அந்த ஏழு நாட்கள்

Featured Replies

சீனாவில் அந்த ஏழு நாட்கள்

 

லியோ நிரோச தர்ஷன்

இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர்கள் குழு கடந்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்தது. இதனை கொழும்பில் உள்ள சீன தூதரகம் ஒழுங்குபடுத்தியிருந்தது. முற்றிலும் மாறுபட்ட சூழல், உணவு மற்றும் மனிதர்கள் என பல்வேறு வேறுபாடுகளுக்கு மத்தியில் புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இந்த விஜயம் அமைந்திருந்தது.

குறிப்பாக உணவு விடயத்தில் கிடைத்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகவே அங்கு சென்ற தமிழ் ஊடகவியலாளர்களுக்கு காணப்பட்டது. எவ்வாறாயினும் சீன அரசின் நோக்கம் அந்த நாட்டின் பல்துறைசார் வளர்ச்சியை எமக்கு காண்பிப்பதாகும். அதனடிப்படையில் மெய்சிலிர்க்க கூடிய பல கட்டுமானங்கள் எம்மை ஆச்சரியப்படுத்தியது மாத்திரமல்லாது தனது தேசத்திற்கான சீனர்களின் உழைப்பு எம்மை சிந்திக்க வைத்தது.

அந்த விஜயம் தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்குவதற்கு முன்னர் சீனா தொடர்பாக மேலான பார்வைக்கு செல்வோம்...

உலக பொருளாதாரத்தின் முக்கிய பங்குதாரராக வளர்ந்துள்ள சீனா கிழக்காசியாவின் முக்கிய நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். அதே போன்று சீனா உலகில் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் இயலுமை மற்றும் தொன்மையின் அடையாளமாக காணப்படுகின்றது.

நவீன உலகின் சவால்களை எதிர்கொண்டு தொழில்நுட்பம், கட்டட நிர்மாணம் மற்றும் துறைமுக அபிவிருத்தி என பல துறைகளில் இன்று சீனா விரைவான வளர்ச்சியை தொட்டுள்ளது. இந்நிலையில் அனைத்துலகத்திற்கும் தமது முன்னேற்றங்களை அறிவிக்கவும் சீனா தொடர்பான எதிர்மறையான கருத்துகளை நாடுகளில் தம்பக்க நியாயத்தை அந்த நாடுகளின் தாய்மொழியில் தெளிவுபடுத்த சீனா மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் முக்கியமானவையாகும்.

உலக நாடுகளுடனான சீனாவின் தற்போதைய அணுகு முறைகள் பண்டைய காலத்தின் நிலைகளில் இருந்து வேறுபட்டு தற்போது புதிய கோணங்களில் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் இலங்கையுடனான சீனாவின் உறவுகள் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. எவ்வாறாயினும் சீனா இலங்கை தொடர்பில் அதீத விட்டுக்கொடுப்புடன் செயற்படுவது குறித்து பூகோள அரசியலில் பல்வேறு கருத்தாடல்கள் காணப்படுகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் இதுவரை காலமும் இலங்கையின் சிங்கள அரசியல் மற்றும் சிவில் தரப்புகளுடன் தொடர்புகளை பேணி வந்த சீனா தற்போது தமிழின தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என சிறுபான்மையின நலன்கள் குறித்தும் அக்கறை காட்டி வருகின்றது. இதன் வெளிப்பாடாக கடந்த வாரத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் குழு ஒன்று சீனாவிற்கு சென்றிருந்தது. இலங்கையின் முன்னணி ஊடகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் ஊடகவியலாளர்களை மாத்திரம் அழைத்து செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகவே காணப்பட்டது.

இந்த விஜயத்தில் சீனாவின் முன்னேற்றங்கள் குறித்து தமிழ் ஊடகவியலாளர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. சீனாவை பொறுத்த வரையில் தலைநகராக பீஜிங் நகரமும் வணிக தலைநகராக சாங்காயும் உள்ளன.

உலகின் மிகப் பழைமையான நாகரீகங்களில் ஒன்றாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய சீன நாகரிகம் வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. 1911 ஆம் ஆண்டில் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டது. இன்று மக்கள் சீனக் குடியரசு உலகின் மிக முக்கியமான நாடாகும். அதேபோன்று உலக பொருளாதாரத்தின் முக்கிய பங்காளியாக வளர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிலையான உறுப்புரிமையை சீனா கொண்டுள்ளதுடன் உலக வணிக நிறுவனம், ஆசியா – -பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம், கிழக்காசிய உச்சிமாநாடு மற்றும் சாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது.

உலகின் மிகப்பெரிய நிலையான பாதுகாப்புப் படையை சீனா கொண்டுள்ளது. பாதுகாப்புக்கான செலவினத்தைப் பொறுத்தவரை உலகில் நான்காவது இடத்தை வகிக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் சீனாவும் முக்கியமானதொன்று. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சீனா உலகில் நான்காவது இடத்திலும், வாங்கு திறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

அத்துடன் உலகின் ஏற்றுமதி அளவில் இரண்டாவது இடத்திலும், இறக்குமதியில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு உள்ளது. 1978 ஆம் ஆண்டில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் 53வீதமாக காணப்பட்ட சீனாவின் வறுமை வீதம் 2001 ஆம் ஆண்டில் 8 வீதமாக ஆகக் குறைந்துள்ளது. இதன் பின்னரான பொருளாதாரத் திட்டங்களும் பன்னாடுகளுடனான இரு தரப்பு ஒத்துழைப்புகளும் சீனாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் செதுக்கியுள்ளது.

இதன் வெளிப்பாடாக உலக பொருளாதாரத்தில் கடந்தாண்டு சீனாவின் பங்களிப்பு 35 வீதமாக பதிவாகியதாக கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவு பிரிவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறு பல கோணங்களில் தனது துரித முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வரும் சீனா, தன்னுடன் நண்பனாகுமாறு அனைத்து உலகிற்கு திறந்த அழைப்பை விடுத்துள்ளது. இவ்வாறானதொரு பரந்தளவிலான அனைத்து இன நட்புறவை வளர்ப்பதற்காக சீனா இலங்கையில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே தான் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் முன்னேற்றங்கள் குறித்தும் தமிழர் ஒத்துழைப்பு குறித்தும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றது.

 

செங்டூ நகரம்

இலங்கையில் இருந்து அழைத்துச் சென்ற தமிழ் ஊடகவியலாளர்கள் குழுவிற்கு சீனா காண்பித்த முதலாவது நகரம் செங்டூவாகும். செங்டூ சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இது மேற்கு சீனாவின் முதன்மையான பொருளாதார, போக்குவரத்து, தொடர்பு மையங்களில் ஒன்றாகும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதக் குடியேற்றம் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சிச்சுவான் பல்கலைக்கழகம் இந்நகரத்தில் அமைந்துள்ளது.

சுற்றுலா துறையின் முக்கிய பகுதியாகவும் செங்டூ நகரம் காணப்படுகின்றது. உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள பெண்டா கரடிகளின் சரணாலயம் செங்டூ நகரிலேயே அமைந்துள்ளது. இன்னும் பத்து ஆண்டுகளில் பாரிய வளர்ச்சியை செங்டூ நகரம் அடையும் என அங்குள்ள சீன அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

செங்டூ நகரிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பெண்டா கரடிகளின் சரணாலயத்தில் சுமார் 140 இற்கும் மேற்பட்ட கரடிகள் உள்ளன. இந்த பெண்டா கரடிகள் இயற்கையின் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவே சீனர்கள் கருதுகின்றனர். இதனால் மிகவும் அதிக செலவில் பெண்டா கரடிகளின் சரணாலயம் பராமரிக்கப்படுவதுடன் 24 மணித்தியாலமும் கண்காணிப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. செங்டூ நகரின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக இந்த சரணாலயம் காணப்படுகின்றது.

மிகவும் பாரம்பரியமான இடங்களும் செங்டூ நகரின் சிறப்பிற்கு காரணமாகியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பதாக எவ்விதமான வசதிகளும் இல்லாமல் காணப்பட்ட இந்த நகரத்தை சீன அரசு அனைவரின் உள்ளங்களையும் கவரக்கூடிய இடமாக மாற்றியுள்ளது....

(படப்பிடிப்பு : எம். நியூட்டன்)

(பயணம் தொடரும்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-30#page-7

  • தொடங்கியவர்

சீனாவி்ல் அந்த ஏழு நாட்கள்

 

லியோ நிரோச தர்ஷன்

 

இலங்­கையின் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் குழுவின் சீன விஜ­யத்தில் முக்­கி­ய­மான சந்­திப்­பாக சீன வானொ­லியின் தமிழ் பிரி­வு­ட­னான சந்­திப்­பினை குறிப்­பி­டலாம். ஆங்­கில மொழியின் ஆதிக்­கத்­திற்குள் தமிழ் மொழி படும்­பா­டு­களை புதி­தாக சொல்ல வேண்­டி­ய­தில்லை. ஒரு ஆங்­கில சொல் கூட இல்­லாது தூய தமிழில் பேசு­ப­வர்­களை எமது நாட்டில் அடை­யாளம் காண முடி­யுமா? என்றால் அதுவும் சந்­தேகம் தான்.

இவ்­வா­றா­ன­தொரு காலக்­கட்­டத்தில் தூய தமிழில் பேசும் சீனர்கள் சிலரை சீன வானொ­லியின் தமிழ் பிரிவில் சந்­தித்து மெய்­சி­லிர்த்து போனோம். அவர்­களின் பெயர் தூய தமிழ் பெயர்கள். பேசும் மொழியும் கலப்­ப­ட­மற்­றது. சீனாவின் பாரம்­ப­ரியம் மற்றும் கொள்­கை­களை அனைத்­து­லக நாடு­க­ளுக்கும் அந்த நாடு­களின் தாய்­மொ­ழி­களில் கூறு­வதே சீன வானொ­லியின் பன்­னாட்டு சேவையின் நோக்­க­மாகும்.

அதே போன்று உலகில் வாழும் பல இலட்சம் தமி­ழர்கள் சீன வானொ­லியின் தமிழ் பிரி­விற்கு அனுப்பி வைத்­துள்ள வாழ்த்து அட்­டைகள் நிலை­யத்தின் நடுப்­ப­கு­தியில் உலக படத்­தி­லான பாரிய குவ­லைக்குள் வைக்­கப்­பட்­டுள்­ளது. அனைத்­து­லக ரசி­கர்கள் மீதான அக்­க­றையை வெளிப்­ப­டுத்தும் வகையில் இந்த செயற்­பாடு காணப்­பட்­டது.

சீன வானொ­லியின் வர­லாற்றை சற்று நோக்கும் போது ..சீன சர்­வ­தேச வானொலி நிலை­யத்தின் தமிழ்ச் சேவையே சீன வானொலி நிலையம் ஆகும். 1941 ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட உல­க­ளா­விய ஒலி­ப­ரப்புச் சேவை ஆகும். இது தற்­போது 64 மொழி­களில் ஒலி­ப­ரப்பு செய்­கி­றது. அவற்றுள் தமிழும் ஒன்று. சீன வானொ­லியின் தமிழ்ப் பிரிவு, 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சீனா­வுக்கும் உலக நாடு­களின் மக்­க­ளுக்கும் புரிந்­து­ணர்வை வளர்ப்­ப­தற்­காக இந்த வானொலிச் சேவை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. செய்தி, அர­சியல், பொரு­ளா­தாரம், பண்­பாடு, அறி­வியல் மற்றும் தொழில்­நுட்பம் என பல துறை சார் தக­வல்­களைப் பன்­னா­டு­க­ளுக்கும் பரப்பி வரு­கின்­றது.

சீன வானொ­லியின் தமிழ்­பி­ரிவு தலை­வ­ராக தற்­போது கலை­மகள் என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்ற சாவோ ஜியாங் செய­ற் ப­டு­கின்றார். சீன வானொ­லியின் தமிழ்ப் பிரிவு, 2013 ஆம் ஆண்டு பொன்­ வி­ழா வைக் கொண்­டா­டி­ய­தாக எம்­முடன் கலந்­து­ரை­யாடி போது தமிழ்ப்­ பி­ரிவு தலைவர் கலை­மகள் தெரி­வித்தார்.

சீனப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஒரு பகு­தி­யாக, பெய்ஜிங் ஒலி­ப­ரப்புக் கல்­லூ­ரியும் இருக்­கி­றது. தமிழ் பட்­டப்­ப­டி ப்பு 1960- இல் தொடங்­கப்­பட்­டது. முதல் கட்­டத்தில் 20 மாண­வர்­களும் அதன் பின் 1963 -இல் 20 மாண­வர்­களும் சேர்ந்து படிக்கத் தொடங்­கினர்.

அந்தச் சம­யத்தில் அவர்­க­ளுக்குத் தமிழைக் கற்­றுத்­தர இலங்­கையில் இருந்து மாகறல் கந்­த­சாமி என்ற தமி­ழ­றிஞர் சென்றார். இவரை அடுத்து சின்­னத்­தம்பி, சாரதா சர்மா, முனைவர் ந. கடி ­கா­சலம், ராஜாராம் மற்றும் கிளீட்டஸ் போன்­ற­வர்கள் பணி­பு­ரிந்­துள்­ளனர்.

ஆரம்ப காலத்தில் சீனப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தமிழ் கற்ற மாண­வர்­களைக் கொண்டே முதல் தமிழ் ஒலி­ப­ரப்பு தொடங்­கப்­பட்­டுள்­ளது. அப்­போது அதன் பெயர் பீஜிங் வானொ­லி­யாகும். இன்று சீன வானொலி என்று தமிழில் அழைக்­கப்­ப­டு­கின்­றது.

சீனத் தமிழ் வானொலி நிகழ்ச்­சிகள் நல்ல வர­வேற்பைப் பெற்று வரு­கின்­றன. ஆரம்­ப­கா­லத்தில் அரை மணி நேர­மாக இருந்த தமிழ்ச் சேவை 2004 ஆம் ஆண்­டுக்கு பின்னர் ஒரு மணி நேரச் சேவை­யாக உயர்வு கண்­டது. தற்­போது இரண்டு மணி நேரம் வரையில் விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

சீன வர­லாற்றுச் சுவ­டுகள், சீன உணவு வகைகள், சீனாவில் இனிய பயணம், சீனப் பண்­பாடு, சீனக் கதைகள், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர் நலன்கள், சீன இசை நிகழ்ச்சி போன்­றவை சீனாவின் கலை கலா­சா­ரங்­களை வெளி உல­கிற்கு அறிய செய்யும் வகையில் நிகழ்ச்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணி­யாற்றும் சீனர்கள் அனை­வரும் தங்­க­ளு­டைய பெயர்­களைத் தூய தமிழில் மாற்றிக் கொண்­டுள்­ளனர்.அவர்­களின் பெயர்கள் கலை­மகள், கலை­மணி , நிலானி மற்றும் பூங்­கோதை என்று அழைக்­கப்­ப­டு­கின்­றனர். இவ்­வ­கை­யான தமிழ்ப் பெயர்கள் இந்த காலக்கட்டத்தில் கேட்பது அரிதாகும்.

இவ்வாறு சீன வானொ லியில் பல தரப்பட்ட பலந்துரையாடல்கள் மற்றும் நேர்காணல்கள் மற்றும் சந்திப்புகள் என இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் மும்முரமாக இருக்கையில் நினைவு பரிசில்கள் பரிமாறப்பட்டன. அத்துடன் அடுத்த சந்திப்பிற்கு செல்வதற்காக நாம் தயாரானோம்....

(படப்பிடிப்பு : எம். நியூட்டன்)

 

(பயணம் தொடரும்)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-07#page-9

  • தொடங்கியவர்

சீனாவி்ல் அந்த ஏழு நாட்கள்

 

லியோ நிரோச தர்ஷன்
(படப்பிடிப்பு : எம். நியூட்டன்)

இலங்கை தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் சீன விஜ­யத்தின் மற்­று­மொரு சந்­திப்­பாக அந்­நாட்டு அரச விமான சேவை நிறு­வ­னத்­தி­னருடன் காணப்­பட்­டது. சீன நிறு­வ­னத்தின் தென்­மேற்கு பிராந்­தி­யத்தின் தலை­மை­ய­லு­வ­லகம் செங்­குடு நகரில் அமைந்­துள்­ளது. அந்த பிராந்­தி­யத்தின் துணை தலைவர் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் எம்மை வர­வேற்று எயார் சீன நிறு­வ­னத்தின் செயற்­பா­டுகள் மற்றும் சேவைகள் தொடர்பில் தெளிவுப­டுத்­தி­னார்கள்.

சீன தேசிய விமான சேவை நிறு­வ­ன­மானது அந்­நாட்டின் மிக பெரிய அரச நிறு­வ­னங்­களில் ஒன்­றாகும். சீன அரச தலைவர் வெளிநாட்டு பய­ணங்­களை மேற்­கொள்­வ­தற்கு இந்த நிறு­வ­னத்­தையே பயன்­ப­டுத்­தினார். 628 விமா­னங்­களை எயார் சீன நிறு­வனம் கொண்­டுள்­ளது. உலக அளவில் 408 சேவை­களை வழங்கி வரு­கின்­றது.

ஆறு கண்­டங்­க­ளிலும் ஏயார் சீன நிறு­வனம் சேவை விஸ்­த­ரிப்பு மேற்­கொண்­டுள்­ளமை முக்­கிய விட­யமாகும். 39 நாடு­க­ளுக்கு நேர­டி­யாக செல்லக் கூடிய வாய்ப்­பு­களும் அந்த நாடு­களில் காணப்­ப­டு­கின்றன 184 சர்­வ­தேச விமான நிலை­யங்­களில் சேவை விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஏயார் சீன நிறு­வ­னத்தின் தென்­மேற்கு பிராந்­தி­யத்தின் துணைத் தலை வர் சுஹு யூ தெரி­வித்தார்.

எயார் சீன நிறு­வ­னமும் முகவும் வலி­மை­யான கட்­ட­மைப்பை கொண்­டுள்­ளது. உலகில் சிவில் விமான துறையில் முக்­கிய பங்­கா­ள­ராக காணப்­ப­டு­கின்ற அதேசமயம் உலக தர­வ­ரி­சையில் மேலும் முன்­னேறி முதலாம் இடத்­திற்கு செல்ல வேண்டும் என்­பதே எயார் சீன நிறு­வ­னத்­திற்கு இலக்­காக உள்­ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் செங்­குடு சுயாங்­லியு சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து கொழும்பை நோக்­கிய விமான சேவைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. ஆரம்பித்து ஒன்­றரை வரு­டத்­திற்குள் சுமார் 1 இலட்­சத்து 80 ஆயிரம் பேர் இந்த விமான சேவையை பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

மேலும் எயார் சீன நிறு­வ­னத்தின் கொழும்பு மற்றும் செங்­குடு இடை­யி­லான விமான சேவையை பயன்­ப­டுத்தும் போது அங்­கி­ருந்து வேறு பகு­தி­க­ளுக்கு செல்­வ­தாயின் அதற்­கான ஒழுங்­களை சீன விமான சேவை நிறு­வனம் வழங்­கு­வ­துடன் அனைத்து அடிப்­படை வச­தி­க­ளையும் கொண்ட தங்­கு­மி­டங்­களை பய­ணி­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கு­கின்­றது. வாரத்­திற்கு நான்கு முறை இந்த இரு விமான நிலை­யங்­க­ளுக்கும் இடை­யி­லான சேவை காணப்­ப­டு­கின்­றது. இந்த சேவையை பயன்­ப­டுத்தும் பய­ணி­களின் எண்­ணிக்கை 5 வீதத்தால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் இந்த துறையில் போட்டி தன்­மைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. எனவே முன்­னோக்கி செல்லும் போது ஏற்­பட கூடிய சவால்­களை எயார் சீன நிறு­வனம் சிறந்த முகா­மைத்து கட்­ட­மைப்பை கொண்டு எதிர்­கொள்­கின்­றது. இதன் கார­ண­மா­கவே பய­ணி­களின் எண்­ணிக்கை வீதமும் அதி­க­ரித்­துள்­ளது.

குறிப்­பாக இந்த ஆண்டில் இலங்கை பய­ணி­களின் எண்­ணிக்கை 10 வீதத்தால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது ஒரு சிறந்த முன்­னேற்­ற­மாகும்.

சீனாவில் தற்­போது காணப்­ப­டு­கின்ற பொரு­ளா­தார முன்­னேற்­றங்கள் மற்றும் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற சீன திட்­டங்கள் தொழில் நிறு­வ­னங்­களின் அதி­க­ரிப்பின் கார­ண­மாக எதிர்­வரும் காலங்­களில் வர்த்­த­கர்­களின் விஜ­யங்­களும் அதி­க­ரிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

அந்த வகையில் சீன விமான நிறு­வ­னத்தின் வர­லாற்­றினை அவ­தா­னத்தில் கொள்ளும் போது ,சீன தேசிய விமான சேவை நிறு­வ­ன­மான எயார் சீன நிறு­வனம் சீன அர­சாங்­கத்தின் நிறு­வ­ன­மாகும். 1949 ஆம் ஆண்டில் சீன மக்கள் குடி­ய­ரசு அமைக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக இதுவே சீனக் குடி­ய­ரசின் முதன்மை வான்­வழிப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­ன­மா­கவும் விளங்­கி­யது. இதன் தலைமை அலு­வ­லகம் பெய்­ஜிங்கில் அமைந்­துள்­ளது. எயார் சீனா விமான சேவைகள் பெய்ஜிங் சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து இயக்­கப்­ப­டு­கின்­றன. உலகின் மிகக் கூடு­த­லான வானூர்தித் தொகு­தியைக் கொண்ட நிறு­வ­னங்­களில் பத்­தா­வ­தாக சீன விமான சேவைகள் நிறு­வனம் உள்­ளது.

இந்த நிறு­வ­னத்தின் சின்­ன­மான கலை­ம­ய­மான பீனிக்ஸ் பறவை வடி­வத்தை முன்னாள் தேசியத் தலை­வ­ரான டங் சியா­வுபிங் உரு­வாக்­கினார். எயார் சீன நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­னங்­க­ளாக எயார் சீன சரக்கு சேவை, எயார் மக்­காவு, பெய்ஜிங் எயார்லைன், டாலியன் எயா­ரர்லைன், ஷான்டோங் எயா­ரர்லைன் , ஷென்ஷென் எயார்லைன் மற்றும் திபெத் எயார்லைன் ஆகி­யன காணப்­ப­டு­கின்­றன.

இதன் சேவை மையங்­க­ளாக பெய்ஜிங் சர்­வ­தேச விமான நிலையம், செங்­குடு சுயாங்­லியு சர்­வ­தேச விமான நிலையம் மற்றும் சாங்கை புதோங் சர்­வ­தேச விமான நிலையம் உள்­ளிட்ட சீனாவின் முக்­கிய நக­ரங்­க­ளாக கருதக் கூடிய அங்க் ஷோ சியோஷன் சர்­வ­தேச விமான நிலையம் ,சோங்கிங் ஜியாங்பே சர்­வ­தேச விமான நிலையம், டியான்ஜின் பின்ஹைய் சர்­வ­தேச விமான நிலையம் மற்றும் உஹான் தியான்ஹே சர்­வ­தேச விமான நிலையம் ஆகியன காணப்­ப­டு­கின்­றன.

எயார் சீன நிறு­வனம் இலங்­கை­யுடன் நெருங்­கிய பரந்­த­ள­வி­லான உற­வு­களை கொண்­டுள்­ளது. இதன் ஊடாக இரு தரப்பு சுற்றுலா பயணிகள் ஊக்குவிக்க முடியும். அதேபோன்று எயார் சீன நிறுவனத்தின் பரந்துபட்ட சேவைகள் தொடர்பாக இலங்கையில் மக்கள் மத்தியில் புரிதலை ஏற்படுத்த அந்நாட்டு ஊடகங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததா கும். 

எனவே தமிழ் ஊடகங்கள் 

(பயணம் தொடரும்)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-14#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.