Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மான்மியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் பின் வாங்கிய பிறகும் ப்ளீஸ் வன்னி மைந்தன் கவிதை எழுதி என்னைக் கொல்ல வேணாம். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்க..

என்னாது? :lol: வன்னி மைந்தன் கவிதை எழுதுகின்றாரா? எங்கே! படிக்க ஆவலாக உள்ளேன் :lol:

  • Replies 120
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தக்கொம்பன் போனாலும் பறுவாயில்லை வன்னியை தாக்கிறதுக்கு நாம் முடிவெடுத்துவிட்டோம் இனி கன்காணிப்பு குழு மூட்டை முடிச்சுக்களுடன்வெளியேறட்ட

எந்தக்கொம்பன் போனாலும் பறுவாயில்லை வன்னியை தாக்கிறதுக்கு நாம் முடிவெடுத்துவிட்டோம் இனி கன்காணிப்பு குழு மூட்டை முடிச்சுக்களுடன்வெளியேறட்ட

என்னாது? :D வன்னி மைந்தன் கவிதை எழுதுகின்றாரா? எங்கே! படிக்க ஆவலாக உள்ளேன் :lol:

கவியாய் வந்து

கவியொன்றை தந்து

கவிதை எதுவென்று

கவிதையாய் கேள்...

கவிதை எதுவென்று

கவிதையால் சொல்வோம்

காலம் கழியவில்லை

கவியோடு வா...

இந்த

அலங்கார வார்த்தைகளால்

உனக்கு ஆவதோ ஏதுமில்லை

என்றாலும்

சொல்லாதிருந்தால்- என்

சுமை குறைவ தெவ்வாறு..

''உன்னுடைய

பரந்த மனதுக்கு

எங்கள் பாரட்டு...!!''

இது எப்படீ தூயவா...??? கவிதயாய் இல்லை...??

:P :P :P :P :P :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் கவிதை என்றால் என்ன? புரியாமல் எழுதுவதா? அல்லது அர்த்தம் இல்லாமல் எழுதுவதா? கவிதைகள் பற்றிய விமர்சனங்கள் இல்லாதபடியால் தான், பலர் கண்மண் தெரியாமல் எழுதுகின்றார்கள் என்று தோன்றுகின்றது.

வெறுமனே ஊக்குவிப்பை மட்டுமே, கொடுப்பதால் தான் கவிதைக்கான இலக்கணம் சிதைகின்றது. எனிவரும் காலங்களில் கவிதைகளின் பொருளையும் எழுதியவர் சொல்லும்படி வைக்க வேண்டும், அப்படியில்லையென்றால், வரும் விமர்சனங்களையும் சந்திக்கத் தெரிய வேண்டும்.

குயில் கூவுறதற்கும், மயில் ஆடுவதற்கும் எவ்வாறு இக்கவிஞர் பொருத்தம் காணுகின்றார். நடைமுறையில் குயில் கூவுவது தனிச் செயற்பாடு, மயில் ஆடுவது தனிச் செயற்பாடு. இரண்டுக்கும் தொடர்பே இல்லை.

இப்படி எழுதலாம் என்றால், காகம் கரைய மயில் ஆடும், மாடு கத்த மயில் ஆடும் என்று பொருத்தமற்ற செயற்பாடுகளைத் தொடர்வுபடுத்தி கதைக்கலாம்.

கவிதை என்பதன் வரம்பு அழிக்கப்படுவதற்கு ஊக்குவிப்பு என்று நாமும் துணை போகின்றாமா?

புலம்பல்கள் எல்லாம் கவிதைகளாகிவிட்ட கலிகாலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னாது? :D வன்னி மைந்தன் கவிதை எழுதுகின்றாரா? எங்கே! படிக்க ஆவலாக உள்ளேன் :lol:

என்ன புதினம் எந்த இணையத்தளத்தில வன்னிமைந்தன் கவிதை எழுதுகிறார் நல்ல சொன்னீர்கள் தூயவன்

Edited by thamilanpu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவியாய் வந்து

கவியொன்றை தந்து

கவிதை எதுவென்று

கவிதையாய் கேள்...

கவிதை எதுவென்று

கவிதையால் சொல்வோம்

காலம் கழியவில்லை

கவியோடு வா...

இந்த

அலங்கார வார்த்தைகளால்

உனக்கு ஆவதோ ஏதுமில்லை

என்றாலும்

சொல்லாதிருந்தால்- என்

சுமை குறைவ தெவ்வாறு..

''உன்னுடைய

பரந்த மனதுக்கு

எங்கள் பாரட்டு...!!''

இது எப்படீ தூயவா...??? கவிதயாய் இல்லை...??

:P :P :P :P :P :lol:

தமிழாய் வந்தேன்

கவியொன்று தந்தேன்

இதமாய் வந்து- சுடும்

தணலான் நின்றேன்

கவியென்றவனே-உன்

கரு அது என்னவோ?

புலம்பல் எல்லாம்

அலம்பலாச்சா?

தமிழே நீயும்- இன்று

தலை ஏன் கவிழ்ந்தாய்

நாயென்றால் குலைக்கும்

சேயென்றால் அழும்

விட்டுவிடு....

தூயவா நீயும் விட்டுவிடு உன்னையும் சொறி பிடித்துவிடும்

நரி ஊருக்கும் நுளைவதே தப்பு அதுவும் ஊளையிட்டு வந்ததாலை எனக்கு கவிதை வந்திடுச்சு அப்ப நான் போட்டுவரட்ட மச்சி

Edited by thamilanpu

என்ன புதினம் எந்த இணையத்தளத்தில வன்னிமைந்தன் கவிதை எழுதுகிறார் நல்ல சொன்னீர்கள் தூயவன்

கற்றதை வைத்து

கற்பனை திரட்டி

கவியாய் சமைத்து

கவியாய் தாவேன்..

நற்றவர் உற்றவர்

நால்வரும் பகிர

நலமுடை கவியொன்றை

நலமுடன் படையேன்...

வெற்று கோசத்தை

வெளியதில் எறிந்து

கண் முன்னே கண்டவை

கவியாய் தாவேன்....

சுவரிடை பந்தை

சுழட்டியே எறிந்தால்

வருவது யாரிடை

என்று நீ அறிவாய்..??

புரிந்தத புரிந்தது

உடைந்தே புன்னகை

என் முன் விழுந்தது...!!

:P :P :P :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்றதை வைத்து

கற்பனை திரட்டி

கவியாய் சமைத்து

கவியாய் தாவேன்..

நற்றவர் உற்றவர்

நால்வரும் பகிர

நலமுடை கவியொன்றை

நலமுடன் படையேன்...

வெற்று கோசத்தை

வெளியதில் எறிந்து

கண் முன்னே கண்டவை

கவியாய் தாவேன்....

சுவரிடை பந்தை

சுழட்டியே எறிந்தால்

வருவது யாரிடை

என்று நீ அறிவாய்..??

புரிந்தத புரிந்தது

உடைந்தே புன்னகை

என் முன் விழுந்தது...!!

:P :P :P :P :lol:

கற்றது எல்லாம்

கசிப்பு அடிக்க

கவிதை எல்லாம்

கண்களில் தூவ

கற்றவர் உற்றவர்

முன் நான் நயமாய்

நாடகம் நடிப்பேன்

நயமாய் சிரிப்பேன்

கோசங்கள் கண்டு

என் வேசம் கலைத்தேன்

கண்முன் கண்டதை

கவ்வியே செல்வேன்

கட்டிய கோவணம்

கழற்றி எறிந்தால்

வருவது யார்- என

யாழ்க்களம் அறியுமே

புரிந்தது உன் நிலை

கவிழ்ந்தது தன் நிலை

:D:icon_mrgreen::icon_mrgreen:

நானும் மைந்தன் மாதிரி எழுதுகிறேனா சொல்லுங்கள் என் திறமைகளை வெளிப்படுத்த இது களமாகட்டும்

Edited by thamilanpu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடிதன் வழி

காவடி ஆடியே

கருத்துக்கள்

தந்தனன்

காவிய நாயகன்

பாதயில் நீயது

காவியே வந்தாயா

அட்சய பாத்திரம்

கண்டது உன் விழி

செய்தது காமடி

போனது அவன் மடி

விழுந்த்து கசையடி

நொந்தது என் மனம்

கொண்டது கடும் சினம்

வந்தது கவி வெள்ளம்

குறையுது என் கணம்

:D:icon_mrgreen::lol: :P

மைந்தன் மாதிரி எழுதுகிறேனா அப்பு ஆச்சிமார் வந்து சொல்லுங்கோவேன்

Edited by thamilanpu

தமிழாய் வந்தேன்

கவியொன்று தந்தேன்

இதமாய் வந்து- சுடும்

தணலான் நின்றேன்

கவியென்றவனே-உன்

கரு அது என்னவோ?

புலம்பல் எல்லாம்

அலம்பலாச்சா?

தமிழே நீயும்- இன்று

தலை ஏன் கவிழ்ந்தாய்

நாயென்றால் குலைக்கும்

சேயென்றால் அழும்

விட்டுவிடு....

தூயவா நீயும் விட்டுவிடு உன்னையும் சொறி பிடித்துவிடும்

நரி ஊருக்கும் நுளைவதே தப்பு அதுவும் ஊளையிட்டு வந்ததாலை எனக்கு கவிதை வந்திடுச்சு அப்ப நான் போட்டுவரட்ட மச்சி

நீ

கருவென அறிந்த

கருவினை சொல்லு

எதுவென அறிந்தாய்

எழுத்திடை சொல்லு...

பாம்பென்றால் சீறும்- நீ

படமதா எடுப்பாய்

கம்பை எடுத்து

களைத்தேயடியேன்...

குறுக்கே நின்றேன்

கூட்டத்தை வைத்து

வெட்டியாய் நின்றேன்

வேடிக்கை பார்த்தாய்...??

என்ன அறிந்தின்று

எழுதிட வந்தாய்..?

அறியாமல் வந்தென்ன

அலம்பியே போனாய்...??

:P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படையெடுத்த சிங்களத்தின்

பற்களுக்கு தமிழன் இறையாகிறான்

பசியெடுத்தால் புசித்திடது

பச்சிழம் பாலகர் சாகிறர்

பத்திரமாய் போற்றிவந்த -பெண்ணின்

கற்பை சுறையாடுறான்

பள்ளிபோன பிள்ளையங்கு

இயந்திரப்பறவைக்கு இரையாகிறான்

பைந்தமிழ் புலவர்களே ஒன்று கூடுங்கள்

பாட்டெடுந்து அந்த அவலம் பாடுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்று கோசத்தை

வெளியதில் எறிந்து

கண் முன்னே கண்டவை

கவியாய் தாவேன்....

இதை யார் யாருக்கு சொல்லுறார் பாருங்கோ.. காலமடா சாமி

  • கருத்துக்கள உறவுகள்

அம்ஸ்ரர்டாம்..

அடித்து மூடியே

ஆண்டுகள் பலவாம்...

ஜயா உமக்கு ஆது கூட

தெரியலையோ..?

திருப்பங்கள் தந்திடும்

தேர்தல் வந்ததால்

திருப்பங்கள் திருப்பங்கள்

திருப்பமாய் நடந்திற்று...

கடைசியாய் வந்தபோதும் இருந்ததே.. ராத்திரி ராத்திரியாய் அடித்து மூடிவிட்டாங்களோ.. இனி கிழக்கைரோப்பியாப் பக்கமாகப் போகவேண்டியதுதான்.

எப்படி எப்படி

இவையெல்லாம் அறிந்தீர்...??

இல்லத்து நாயகி

இங்கில்லை போலும்...?

இருந்தால் இப்படி எல்லாம் "அனுபவிக்க" முடியுமா? வாத்ஸாயனம் படிப்பிக்க வெளிக்கிட்டவரே இப்படிக் கேட்டால் எங்கு போய் அடைக்கலம் தேடுவது?

கட்டியால் மனையுடன்

கனவுடன் இருக்க

கணவா நீயேன்

கழிவிடை சென்றாய்...???

யார் கட்டிய மனைவி? நாங்கள் இராவணன் பரம்பரை.. தூக்கிக் கொண்டு வந்தாலும் விருப்பம் வரும்வரை காத்திருக்கும் பண்பு கொண்டவர்கள்!

கஞ்சா அடித்தா

கலவி பகிர்ந்தாய்..??- நீ

அக்கம் நின்றால்- உனை

அடித்தே உதைப்பேன்...

கஞ்சா அடிக்காமல் ஹொலண்டில் வாழும் நற்பிரஜையே.. நம்ம கையில் அகப்பட்டால் சுண்டெலிதான்..

கலவரம் மூட்டும்

காமம் அதனால்

கழிவிடை சென்றேன்

உயிர் கொள்ளி பிடித்தாய்...??

கொள்ளிவாய் பிசாசு என்று ஏன் பயமுறுத்துகின்றீர்.. கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்தபின்பும் பொய் சொல்லக்கூடாது பாப்பா..

உண்ண வளியின்றி

உன் பிள்ளை அலையுது

இங்கு வந்து

நீ என்ன செய்தாய்...??

அடச்சீ.. சென்ரிமென்ரா தாக்கிற பிளானா? நமக்கு நோ சென்ரிமென்ற்.. நோ அற்றாச்மென்ற்..

ஏனடா மனிதா

நீ இன்னும் திருந்தல...?

கட்டயாள் அழுவதை

கண்திறந்து பாரடா...!!

:lol::D:icon_mrgreen::icon_mrgreen:

பல மனிசர் மனிசராகத்தான் இருக்கின்றாம்.. ஆனால் சிலர்தான் குரங்காக மாறி மப்பில திரியுதுகள்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழைப் படிக்கத் தெரிந்ததற்காக இவ்வளவுகாலமும் தாழ்வு மனப்பான்மை கொள்ளவில்லை.. ஆனால் கவிதை என்று சொல்லி எதையோ எழுதி என்னைக் கொல்ல முன்னம், நானே ஓட்டைச் சிரட்டைக்குள் நஞ்சூத்திக் குடிச்சுச் சாகலாம் என்று யோசிக்கின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்

40000 தென் தமிழீழ மக்கள் இடம்பெயர்ந்ததை வைத்து ஒரு சோகம் பிழியும் கவிதையையும், அநுராதபுர சிங்கள இராணுவக் கட்டளைத்தளபதி கொல்லப்பட்டதை வைத்து ஓர் ஆனந்தம் ததுப்பும் கவிதையும், கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்களை நினைத்து நெக்குருகும் கவிதை ஒன்றையும் ஹொலண்ட் மைந்தன் எழுதவேண்டும் என்பது எனது அவா. மூன்று கவிதைகள் எழுத நேரம் இல்லையெனின், மூன்றையும் ஒன்றாக்கி கதம்பமாக ஒரு கவிதை எழுதிவிட்டாலும் நன்றே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசன்ங்களை கவிதையாக சொல்லும் நண்பர் வன்னி மைந்தன் கொஞ்சம் திர்ருந்துவாரா நீர் எழுதுவது கவியல்ல கவிக்கொலை

வசன்ங்களை கவிதையாக சொல்லும் நண்பர் வன்னி மைந்தன் கொஞ்சம் திர்ருந்துவாரா நீர் எழுதுவது கவியல்ல கவிக்கொலை

கிருபன் சொன்னதை

கிறுக்கியே வந்திடு- நீ

கவிஞன் என்றால்

கவியாக்கி தந்திடு...

சந்தியில் நின்றென்ன

போடுறாய் சத்தம்..?

பந்தியிட்டதை

பாங்கை பகிர்ந்திடு...

வெற்று கோசத்தை

வெளியினில் எறிந்திட்டு

நல்ல மொழிகளை

நாவிற்கு ஊட்டிடு...

எத்தனை கவியிங்கு

ஏறியே வந்தீர்

ஆயினும் யாரிங்கு

தமிழரை பாடினீர்...??

யுத்த களத்து

சோகங்கள் தாங்கி

எத்தனை கவிகள்

எவரிங்கே படைத்தீர்...??

தேம்பியே அழுகின்ற - எம்

தேசத்தை காண

காதல் கவிகளை

கட்டாக வரைந்தீர்...

''இல்லை கவியென்று

இங்கிதை உரைப்பவர்

ஏனொரு கவியதை

எழுதிடலாமே...''

நாள் தோறும்

நாடதில் நரபலி நடக்குது

எவரிங்கே வந்தந்த

இன்னல்கள் படைத்தார்...???

கூடியே வந்திங்கு

கூப்பாடு போட்டவர்

கூடவே ஏனொரு

கவியதை புணையல...??

சண்டைக்கு வந்திட்ட

சண்டிய ராஜா

சாக்கடை களவர

நிலவரம் பாடும்...

காகம் போலிங்கு

கரைந்ததை நிறுத்தி

கூயிலினம் போலே

கூவியே பாடும்...!!!

:P :P :P :P :unsure::D

40000 தென் தமிழீழ மக்கள் இடம்பெயர்ந்ததை வைத்து ஒரு சோகம் பிழியும் கவிதையையும், அநுராதபுர சிங்கள இராணுவக் கட்டளைத்தளபதி கொல்லப்பட்டதை வைத்து ஓர் ஆனந்தம் ததுப்பும் கவிதையும், கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்களை நினைத்து நெக்குருகும் கவிதை ஒன்றையும் ஹொலண்ட் மைந்தன் எழுதவேண்டும் என்பது எனது அவா. மூன்று கவிதைகள் எழுத நேரம் இல்லையெனின், மூன்றையும் ஒன்றாக்கி கதம்பமாக ஒரு கவிதை எழுதிவிட்டாலும் நன்றே!

இல்லை கவியென்று

இங்கிதை உரைத்தால்

எங்கே ஒரு கவி

எமக்காய தந்திடு...

பதிலுக்கு பதிலாய்

பா வொன்றை புணைந்திடு- நாம்

கற்று தேர்ந்திட

கவியாய் இருந்திடு...

வஞ்சம் இல்லை

உன்னிட என்றால்

பஞ்சம் போக்கிடும்

பாவொன்றை தந்திடு...

நெஞ்சம் உருகி

நிலயது குலைந்திட

கவியோனாய் வந்தொரு

கவியதை தந்திடு...

கிறுக்கில்லை உனக்கென்றால்

கிறுக்கியே வந்திடு

இந்த- கிண்டல் கேலியை

இன்றுடன் விட்டிட்டு....!!! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லுங்க.. இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை..?

அங்கை நாட்டில தினம் எத்தனை பேர் சாகினம் எண்டு தெரியுமோ..? உயிர் வாழ எத்தனை கஸ்டம் என்று தெரியுமோ.. அதுதுகளை பற்றி யோசித்து பாத்திருக்கிறியளோ..

சும்மா அறிவிலித்தனமா சண்டை பிடிக்கிறியள். இப்ப ஆரும் வந்து உங்கடை கவிதை திறமையை காட்டச் சொல்லிக் கேட்டவையோ.. ஏன் ஆளாளுக்கு புடுங்குப் படுறியள்.

வன்னி மைந்தன். ஒத்துக் கொள்ளுறம் நீர் ஒர பெரிய கவிஞர் தான். இனியாவது உம்மடை சொல்லடுக்கை நிறுத்திறீரோ..

சொல்லிட்டன். திரும்பவும் என்னை வர வைக்க வேணாம். வந்தனென்டால்..

சொல்லுங்க.. இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை..?

அங்கை நாட்டில தினம் எத்தனை பேர் சாகினம் எண்டு தெரியுமோ..? உயிர் வாழ எத்தனை கஸ்டம் என்று தெரியுமோ.. அதுதுகளை பற்றி யோசித்து பாத்திருக்கிறியளோ..

சும்மா அறிவிலித்தனமா சண்டை பிடிக்கிறியள். இப்ப ஆரும் வந்து உங்கடை கவிதை திறமையை காட்டச் சொல்லிக் கேட்டவையோ.. ஏன் ஆளாளுக்கு புடுங்குப் படுறியள்.

வன்னி மைந்தன். ஒத்துக் கொள்ளுறம் நீர் ஒர பெரிய கவிஞர் தான். இனியாவது உம்மடை சொல்லடுக்கை நிறுத்திறீரோ..

சொல்லிட்டன். திரும்பவும் என்னை வர வைக்க வேணாம். வந்தனென்டால்..

தேசமதின் இன்னல்களை

தேடியெடுத்து வந்தவரே

கண்ணு முன்னே கண்டவற்றை

காதோரம் சொல்லிவிடு...

கூடி நின்ற எம்முறவு

கூட்டமாக உள்ளனவோ...??

அற்றம் கரை ஓரமது

ஆலமரம் உள்ளதுவோ...??

வானுயர்ந்த தென்னை .பனை

வானை முட்டி விட்டதுவோ...??

எங்கள் ஈழ வன்னி நிலம்

ஏற்றமது கண்டதுவோ...??

சாலையோர சோலையெல்லாம்

சாகமல் உள்ளதுவோ...??

கூன் விழுந்த வீதியெல்லாம்

கூனாமல் உள்ளதுவோ...??

கட்டுடைத்த பாய்ந்த நதி

கட்டுக்கள்ளே வந்ததுவா...??

ஆடை மாற்றி வந்த நிலா

அப்படியே உள்ளதுவா...??

குடிபெயர்ந்த எம் தமிழர்

குடிமனைகள் வந்தனரா...??

அகதியாகி அலைந்தவர்கள்

அமைதியாக வாழ்ந்தனரா...???

சிங்களத்து சிறைகளிலே

சிறகொடிந்த எம் தமிழர்

கூடுடைத்து வெளியினிலே

கூண்டோடு பறந்தனரா...??

குடி கொண்ட இருளகற்றி- எம்

தேசத்து தெருவெல்லாம்

மின்னொளி தானேற்றி

மின்னல் அடிக்கிறதா...???

ஆண்டாண்டாய் எம் நிலத்தை

ஆண்டுவந்த பகைகலெல்லாம்

எம் மண்ணை விட்டகன்று

இன்றோடி விட்டனவா...???

கறை படிந்த குருதிகளை

கண்ணீர் ஆறின்று

கழுவி போனதுவோ...??

உடைந்து விழுந்த புன்னைகைகள்

உயிர்த்தெழுந்து தேசத்தில்

புதிய மாளிகைளை

புதிதாக கட்டினவா...???

என்னவென்று புரியவில்லை

ஏது மெனக்கு தெரியவில்லை

யாவும் அறிந்து வந்தவரே

யாவருக்கும் சொல்லிவிடும்....

என்ன அங்கு நடந்ததுவோ..??

எடுத்தெமெக்கு சொல்லிவிடும்...!!

:P :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.