Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தடை பல தாண்டி... தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலீஸ் உறுதி!” ‘தேனாண்டாள்’ முரளி

Featured Replies

“தடை பல தாண்டி... தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலீஸ் உறுதி!” ‘தேனாண்டாள்’ முரளி

 
 
 

‘தெறி’ படத்தைத் தொடர்ந்து விஜய்யுடன் அட்லி மீண்டும் இணையும் படம், தேனாண்டாள் நிறுவனத்தின் 100 வது தயாரிப்பு... இப்படி ஏகப்பட்ட பரபரப்புடன் தயாராகிவரும் ‘மெர்சல்’ படத்துக்கு அது தொடங்கிய நாளிலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்பபு. காளை மாட்டுடன் விஜய் இருக்கும் புகைப்படம், படத்தின் முதல் பார்வையாக வெளியானபோது எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது. தொடர்ந்து ‘ஆளப்போறான் தமிழன்’ பாட்டு வெளியானபோது, ‘கமர்ஷியலில் இது வேறு லெவல் சினிமா’ என்ற எண்ணம் உருவானது.

மெர்சல்

 

இப்படிப் படிப்படியாக எகிறிக்கொண்டு இருந்த ‘மெர்சல்’ படத்தின் எதிர்பார்ப்பை இறக்கும் வகையில் வழக்குடன் வந்தார் தயாரிப்பாளர் ராஜேந்திரன். இவர் ஏற்கெனவே ‘மெர்சலாகிட்டேன்’ என்ற தலைப்பில் படம் தயாரித்து வருகிறார். ‘அவர்களுக்கு முன் நான்தான் ‘மெர்சலாகிட்டேன்’ தலைப்பை பதிவு பண்ணினேன். அதனால் ‘மெர்சல்’ என்ற தலைப்பைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அக்டோபர் 6ம் தேதி வெளியாகிறது. 

இந்தநிலையில், ‘மெர்சல்’ படத்தில் விஜய் நடிக்கும் மூன்று கேரக்டர்களில் ஜல்லிக்கட்டு வீரராக வரும் சீனியர் விஜய், எப்படி மாடுபிடிக்கிறார் என்ற காட்சியைக் காளைமாடுகளை வைத்து படமாக்கியுள்ளார்கள். இதுதவிர சீனியர் விஜயின் மகன்களில் ஒருவரான மேஜிக் கலைஞர், பல்வேறு விதமான விலங்குகளை வைத்து வித்தைகள் காட்டும் காட்சிகள் சென்னை பின்னிமில்லில் படமாக்கப்பட்டு இருக்கின்றன.

மெர்சல்

இப்படி விலங்குகளை பயன்படுத்தி படம்பிடிக்கும்போது விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் ‘மெர்சல்’ படக்குழு அப்படி மருத்துவர்களை வைத்து படம்பிடிக்கவில்லை. அதனால் அவர்களிடமிருந்து தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அந்தச் சான்றுடன்தான் படத்தை சென்சாருக்கு அனுப்புவது வழக்கம் என்பதால் படத்தை சென்சாருக்கு அனுப்புவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் தீபாவளிக்கு இன்னும் 12 தினங்களே உள்ள நிலையில் அக்டோபர் 18 அன்று படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்றும் செய்தி வெளியானது. 

இந்தத் தகவல்களை ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி ராமசாமியிடம் கூறினோம். அதற்கு அவர் சொன்ன பதில் வருமாறு:

“எங்கள் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு, விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் இல்லாமல் நடந்தது என்று சொல்வது தவறான செய்தி. விலங்குகளைப் பயன்படுத்தி எடுக்கப்படும் காட்சிகளைப் படம்பிடிக்கும்போது கால்நடை மருத்துவர்கள் அருகாமையில் இருக்க அவர்கள் துணையோடுதான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது 'மெர்சல்' படத்துக்கான அனுமதி சான்றிதழை விலங்குகள் நல வாரியம் கொடுத்துவிட்டது. அடுத்து படத்தை சென்சாருக்கு சமர்பிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறோம். 

மெர்சல்

மெர்சல்’, ‘மெர்சலாகிட்டேன்’ தலைப்பு விஷயத்தில் சில விவரங்களை நினைவுகூற விரும்புகிறேன். 1948-ம் ஆண்டில் 'ஞானசுந்தரி' என்கிற ஒரே பெயரில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. அடுத்து பிரசாந்த் நடித்த 'தமிழ்' படமும், விஜய் நடித்த 'தமிழன்' படமும் ஒரே நேரத்தில் வெளியாகின. இந்த நிகழ்வுகளை மனதில் வைத்து பார்க்கையில், 'மெர்சல்' படத்தலைப்பு எங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்கிற சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். 

 

'மெர்சல்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்  பரபரப்பாக நடந்து வருகின்றன. அந்தப் பணிகள் விரைவில் முடிந்துவிடும். அதனால் விஜய்சார் ரசிகர்கள் கவலைப்படவேண்டாம். ’மெர்சல்' திரைப்படம், தீபாவளி விருந்தாக 'நிச்சயம் ரிலீஸாகும்."

http://cinema.vikatan.com/tamil-cinema/news/104128-mersal-will-come-in-diwali-says-murali-ramasamy.html

  • தொடங்கியவர்

புதிய சாதனை படைத்த `மெர்சல்' டீசர்

Published on 2017-10-05 15:40:25

 

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது.

DLXcDnpUMAEy5Mr.jpg

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படமான 'மெர்சல்' வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. 

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் புதிய சாதனையை படைத்திருந்தது என்பது நாம் அறிந்ததே. 

முதல் வாரத்திலேயே 20 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு இந்திய அளவில் புதிய சாதனையை படைந்திருந்த 'மெர்சல்' படத்தின் டீசர் தற்போது புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. அதாவது கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி வெளியாகிய 'மெர்சல்' டீசரை இதுவரை (312 மணிநேரங்களில்) 2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் இது ஒரு புதிய மைல்கல்லாக அமைகிறது. அதேபோல், 9 லட்சத்து 37 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர். 

DLXdcYQUIAAlBng.jpg

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாளை 'மெர்சல்' படக்குழுவில் இருந்து விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

DLXdi-OVAAAB1mL.jpg

http://www.virakesari.lk/article/25359

  • தொடங்கியவர்

'மெர்சல்' படத்துக்கான தடையை நீக்கியது உயர் நீதிமன்றம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் 'மெர்சல்'. மூன்று வேடங்களில் முதல் முறையாக விஜய் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என விஜய்க்கு இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள். மேலும் முக்கியமான வில்லன் கேரக்டரில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. 

 

 

மெர்சல்

 


இந்நிலையில் 'மெர்சலை' தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடப் படக்குழு முடிவு செய்திருக்கும் நிலையில், ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 'மெர்சல்' என்ற படத்தின் பெயரில் படத்தை வெளியிட வழக்கு கோரியிருந்தார். 
ஏனென்றால்,  2014-ம் ஆண்டு ஏ.ஆர் ஃபிலிம்  ஃபேக்டரி எனும் நிறுவனம் `மெர்சல் ஆயிட்டேன்’ என்ற தலைப்பைப் பதிவு செய்ததால் `மெர்சல்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அப்போது மெர்சல் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனால் தடை நீங்கும் வரை படம் குறித்து விளம்பரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றம் 'மெர்சல்'  படத்துக்கான இடைகாலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. 'மெர்சல்' படத்தை வெளியிடவும் விளம்பரப் படுத்தவும் இருந்த தடை இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது. அதனால், 'மெர்சல்' ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/104224-the-supreme-court-has-dismissed-the-ban-on-mersal.html

  • தொடங்கியவர்

'மெர்சல்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!

 
 

Mersal Poster

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவித்திருந்த 'மெர்சல்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விலங்குகள் பயன்படுத்திருப்பதால், விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டுமாம். ஆனால், இன்னும் விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெறாததால், திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக, திரைப்படத்தில் புறாக்கள் வரும் காட்சிகள் கிராபிக்ஸ் என்பதற்கான எந்த சான்றிதழையும் படக் குழுவினர் சமர்பிக்கவில்லையாம். இதனால்தான் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக திரைப்பட வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

http://www.vikatan.com/news/cinema/104868-another-hurdle-in-releasing-vijays-mersal.html

  • தொடங்கியவர்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமகன் வழிதான் இனிமேல் எல்லாமே

Published by RasmilaD on 2017-10-14 11:25:20

 

மெர்சல் படத்தில் விஜய் முதலில் அறிமுகமாகும் காட்சியின் பின்னணி யில் ஒலிக்கும் “ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமகன் வழிதான் இனிமேல் எல்லாமே!” என்ற பாடல் வரிகள் தமிழக அரசியலில் மெர்சலாகியிருக்கின்றது. விஜய்யின் அடுத்த திட்டம் பாய்ச்சல் என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு படபடக்கத் தொடங்கியுள்ள காலகட்டம் இது. சினிமாவில் விஜய்க்குமே இது முக்கியமான காலகட்டம் தான். 100 கோடியை தாண்டிய பட்ஜெட் பட்டியலில் விஜய்யை முதன்முறையாக இணைத்துள்ளது மெர்சல் படம்.  ஒரு கதாநாயகனுக்கு பெரிய முதலீடே உடல்தான். அதனை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது மிக முக்கியம். அந்த வகையில் அப்போ பார்த்த விஜய்தான் இப்பவும் இப்போ பார்க்கும் விஜய்தான் எப்பவும் என்பதுபோன்ற இளமைத் தோற்றத்தில் மெர்சல் ஸ்டில்களில் ஈர்க்கிறார். 

Mersal_vijay.JPG

மெர்சல் விஜய்க்கு 61 ஆவது படம். படத்தின் டைட்டில் டிசைனே 61 என்று வருமாறும் ஆங்கில டைட்டிலை தலைகீழாகப் பார்த்தால் விஜய் என்ற எழுத்து தெரியுமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெர்சலில் விஜய்க்கு மூன்று முகம் அந்தத் தோற்றங்கள் பற்றி படத்தின் இயக்குநர் அட்லி ரகசியம் காத்தாலும் விஜய்யின் உழைப்பை வானுயரத்துக்கு உயர்த்திப் பேசுகிறார். 

தெறி படத்தில் ஐந்தாறு ஆக் ஷன் பிளாக் இருந்தால் மெர்சலில் 15 ஆக் ஷன் பிளாக் இருக்கிறது. ராஜஸ்தானில் ஒரு திறந்த வெளி மைதானத்தில் மூவாயிரம் பேருக்கு மத்தியில் ஒரு சீன் ஷூட் பண்ணிணோம். அப்போ அங்கே 55 டிகிரி வெப்பம் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் கஷ்டப்பட்டு நடித்துக்கொடுத்தார் விஜய். என் வாழ்நாளில் இது போன்ற நடிகரை இனி நான் பார்க்கப்போவதேயில்லை. சிலபேர் பற்றி ஆத்மார்த்தமாகச் சொல்லும்போது கண்ணெல்லாம் கலங்கும். நமக்காக, ரசிகர்களுக்காக இப்படி கஷ்டப்படுகிறாரே என்று நினைக்கும்போது என் கண் கலங்கும்.

விஜய் சேர் நினைச்சா மாஸா ஒரு வசனம் பேசிட்டு போயிடலாம். அதுக்குக் கைதட்டல் கிடைக்கும். ஆனால் அதைத்தாண்டி ஏதாவது பண்ணணும் ரசிகர்களைத்திருப்திப்படுத்தியே ஆகணும் என்கிற நினைப்பு அவர் ரத்தத்தில் இருந்து கொண்டே இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன் என்று விஜய்யின் டெடிகேஷன் பற்றி சொல்லி நெகிழ்கிறார் இயக்குநர் அட்லீ. இந்தப் புகழ் வார்த்தைகளும் பாராட்டுகளும் விஜய்க்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அப்பா எனக்கு படிப்பு வரல. நடிக்க வர்றேன் என்று விஜய் சொன்னபோது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கே நடிகனாக மகன் ஜெயிப்பாள் என்று நம்பிக்கை இருந்திருக்காது. அன்று விஜய் தன் மீதான நம்பிக்கையில் உறுதியாக இருந்ததே இன்று அவரை இளைய தளபதியாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றது. 

மூஞ்சியும் சரியில்லை. நடிப்பும் இல்லை என்ற விமர்சன உளிகள் விஜய்யைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கியது. தனக்கு நன்றாக வந்த நடனத்தில் ஈர்த்து ஈர்த்து ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்தவர். நடிப்பிலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார். இன்று விஜய்யின் புகழ் தமிழ்நாட்டில் பற்றிப் படர்ந்ததற்கு அவரது அயராத உழைப்பும் அசராத நம்பிக்கையுமே காரணம். 

Mersallll.jpg

விஜய் எந்த மேடையில் பேசினாலும் என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே என்று நன்றி மறவாமல் குறிப்பிடுவார். அட்லீ சொன்னதுபோல் விஜய்யின் மனசுக்குள் இருந்து வருவது ஆத்மார்த்தமான வார்த்தைகளா என்று அலசினால் அது உண்மை என்பது தெரியவரும். 

ஸ்டார் அந்தஸ்து இல்லாத ஹிரோவாக இருந்ததிலிருந்தே ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவிகளைச் செய்து வருகிறார் விஜய். நடிப்பதுடன் நம்ம வேலை முடிந்தது என்று நினைக்கும் ரகம் இல்லை விஜய். அவர் நடிக்கும் படத்தின் புரமோஷன்களில் தவறாமல் கலந்துகொள்கிறார், பேட்டிகள் கொடுக்கிறார்.  ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தானும் தமிழனாய்க் கலந்துகொண்டு அதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அரியலூர் மாணவி அனிதாவின் வீட்டுக்கே சென்று அனிதாவின் அண்ணன் ஸ்தானத்தில் தரையில் அமர்ந்து துயரங்களைப் பகிர்ந்துகொண்டு ஆறுதல் தெரிவித்தார். இப்படி உணர்வுகளை உடனடியாக வெளிப்படுத்த ஒருபோதும் விஜய் தயங்கியதில்லை. 

ஸ்டார் அந்தஸ்தை மாட்டிக்கொண்டு அலையாமல் அவ்வப்போது சமூகப் பங்களிப்பில் எளிமையாக ஈடுபடுத்திக்கொள்வது விஜய்யின் இயல்பாகிவிட்டது. இந்த இயல்பும் உணர்வும் விஜய்யை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் இல்லை. 

சமீபத்தில் நடந்த மெர்சல் படப் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது அரங்கமே அதிர்ந்தது. அடுத்துப்பேச வந்த எஸ்.ஜே.சூர்யா,  ஆளப்போறான் தமிழன் பாட்டு வரிகள் உண்மையாக வேண்டும். விஜய்சார் பேசும்போது இங்கு கூடியிருப்பவர்களிடம் பெரிய எனர்ஜியைப் பார்க்க முடிந்தது. இந்த எனர்ஜி வீணாகிவிடக்கூடாது என்று சொன்னபோது மீண்டும் அதிர்ந்தது அரங்கம். 

எதை மனதில் வைத்துக்கொண்டு அப்படிப் பேசினீர்கள் என்று எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டபோது அணையைத் திறந்ததும் ஆர்ப்பரித்து வரும் தண்ணீர் ஒரு எனர்ஜி. தண்ணீர் விவசாயத்துக்குத்தான். ஆனாலும் அதிலிருந்து மின்சாரம் எடுப்பதில்லையா-? அது மாதிரி விஜய்க்குச் சினிமாவும் இருக்கட்டும். அதில் கிடைக்கும் புகழ் நல்ல பெயர் போன்ற எனர்ஜி நல்ல விஷயத்துக்கும் பயன்படட்டும் என்ற அர்த்தத்தில்தான் பேசினேன். நான் பார்த்தவகையில் 25 வருடமாக சின்சியாரிட்டியும் நல்ல மனசும் மாறாத மனிதராக விஜய் இருக்கிறார். அதில் நடிப்பு இல்லை. இருபத்தைந்து வருடங்களாக ஒருவர் நல்லவராக நடித்துக்கொண்டிருக்க முடியாது என்றார். 

விஜய் அரசியலுக்கு வரணும் என்று சொல்றீங்களா? என்று கேட்டதற்கு,

அரசியலுக்கு வருபவர்களுக்குச் சின்சியாரிட்டி இருக்கணும். என்ன அந்த சின்சியாரிட்டி என்னவென்று கேட்டால் சொன்னா சொன்ன நேரத்துக்கு வரணும். சொன்னதைச் செய்யணும். நாலு பேருக்கு நல்லது செய்யணும் என்ற எண்ணம் இருக்கணும். வலிகள் வரும்போது தாங்கிக்கொண்டு அதையும் தாண்டி வளரணும் என்கிற நம்பிக்கை இருக்கணும் இது எல்லாமே விஜய்யிடம் இருக்கு. 

நான் அரசியல் பேச வரல நாளைக்கே வாங்க. நாளைக்கே மாநாடு நடத்துங்க ஊர்வலம் போங்கன்னு சொல்லல. அவர் மூலமாக நல்ல விஷயம் நடக்கணும் என்று தோணிச்சு பேசினேன். விஜய்க்காக எழும் குரல்களின் ஒலி ஏன் நல்ல விஷயமாக மாறக்கூடாது. என்ற கேள்வியுடன் முடித்தார் எஸ்.ஜே.சூர்யா. ஆளப்போறான் தமிழன் என்ற பாடலுடன் வெளிவரும் மெர்சல் படம் என்ன கதை? அரசியல் இருக்கிறதா? என்று இயக்குநர் அட்லீயிடம் கேட்டபோது, 20 வருடங்களுக்கு முன்பு உப்பையும் அடுப்புக் கரியையும் வச்சுப் பல் துலக்கினோம். இன்றைக்கு வரும் விளம்பரங்கள் உன் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா கரி இருக்கான்னு கேட்குது. ஆரம்பக் காலங்களில் நாம் எப்படியிருந்தோம், இடைப்பட்ட காலத்தில் எப்படி இருந்தோம். இப்போது என்னனென்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதைப்பற்றிய கதைதான் மெர்சல் என்றார். 

விஜய்யின் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் கொடுக்கும் எனர்ஜி அவருக்குள் அரசியல் ஆர்வத்தை எப்போதோ விதைத்திருக்கலாம். இனி அது முளைக்கலாம். இது எல்லாவற்றுக்குமான பதில் விஜய்யின் நெஞ்சுக்குள்ளேயே

http://www.virakesari.lk/article/25767

  • தொடங்கியவர்

‘மெர்சல்’ மாயோன் பாடல் உருவான கதை சொல்லும் விவேக்!

 

தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரவிருக்கும் 'மெர்சல்' படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா என மூன்று கதாநாயகிகள் மற்றும் வடிவேல், சத்யன், யோகி பாபு என்று காமெடி பட்டாளமே நடித்திருக்கிறது 'மெர்சல்' படத்தில். அப்பா விஜய், டாக்டர், மேஜிக் மேன் என மூன்று ரோலில் விஜய்யை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாகயிருப்பது 'மெர்சல்' படத்தின் ஆடியோ லான்ச் விழாவிலேயே பலருக்கும் தெரிந்திருக்கும். 

மெர்சல்

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பாடலாசிரியர் விவேக் வரிகளில் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் வாங்கிய நிலையில் தற்போது மேலும் ஒரு பாட்டுக்கான வரிகளை அமைதியாக எழுதி முடித்திருக்கிறார் பாடலாசிரியர் விவேக். இந்தப் பாட்டில் இருக்கும் ஸ்பெஷலான விஷயம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விவேக்யிடம் பேசினோம். 

“மெர்சல் படத்தில் எல்லாப் பாடல்களும் நான் எழுதியிருப்பது எனக்குப் பெரிய மகிழ்ச்சி .'மாயோன்' பாடல் வரிகளை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தேன். அதற்கு ரசிகர்களிடம் நிறைய ரெஸ்பான்ஸ். பாட்டின் வரிகள் வித்தியாசமாக இருப்பதாகப் பலரும் தெரிவித்தனர். பாட்டின் வரிகள் வித்தியாசமாக இருப்பதற்குக் காரணங்கள் இருக்கிறது. இந்தப் பாட்டின் வரிகளை விஜய் நடித்த மேஜிக் மேன் கேரக்டருக்காகதான் எழுதினேன். 

முதலில் அந்த கேரக்டருக்கு பேக் க்ரவுண்ட் மியூசிக் வைப்பதாகத்தான் இருந்தது. அதன் பிறகுதான் பேக் க்ரவுண்ட் மியூசிக் பதிலாக பாடலாக இருந்தால் நல்லாயிருக்கும் என்று அட்லி ஃபீல் பண்ணினார். என்னிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். அதற்காகத்தான் 'மாயோன்' வரிகளை எழுதினேன். 

மேஜிக் அப்படிக்குற கான்செப்ட் எடுத்துத்தான் பாடலில் வரிகளாகச் சேர்த்தேன். அதாவது ஒரு மேஜிக் மேன்  தனது இடது கையில் மேஜிக் செய்து கொண்டிருக்கும் போது, நமது கவனம் முழுவதையும் அதில்தான் வைத்திருப்போம். ஆனால், நம்ம யாரும் கவனிக்காத வண்ணம் அவருடைய வலது கையிலும் எதாவது ஒரு மேஜிக் செய்து அதையும் நம்மிடம் காட்டிவிடுவார். நம்ம கவனம் இடது கையில் மட்டும்தான் இருந்திருக்கும். வலது கைக்கு சென்றிருக்காது. அந்த கான்செப்டைதான் பாடல் வரிகளில் பயன்படுத்தினேன். 

ரசிகர்களின் கவனத்தை வரிகளில் வைத்து, இப்போது இதுதான் நடந்திருக்குனு சொல்லி, அதற்குள் இன்னொரு விஷயமும் இருக்கு அதை நீங்கள் கவனிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறேன் 'மாயோன்' வரிகளில். அதாவது, வரிகள் எப்படியிருக்குனா, 

'வலை இல்ல காத்தப் புடிச்சு வர 

அடித் தளம் இரும்பில் பார்க்காத உரசி

தடையின் தடயம் உடைய உருக 

அழிக்க நெனைச்சா ரெண்டா வருவானே..

இந்த வரிகளில் கடைசி எழுத்துகள் எல்லாம் சேர்த்தால் 'ரசிகனே' அப்படினு வரும். அதே மாதிரி டைனமிக்காக பார்த்தால் 'வலை தளம் உடைய வருவானே' அப்படினு வரும். அதாவது 'மெர்சல்' இண்டர்நெட் எல்லாத்தையும் பிரேக் பண்ணியது இல்லையா அதனால் இந்த வரிகள். 

மேஜிக் மேன் கேர்க்டருக்கு இந்தப் பாட்டு அப்படிங்குறனால எப்படி மேஜிக்கை பாட்டுக்குள்ளே கொண்டு வரமுடியும்னு யோசித்து இந்த வரிகளைக் கொண்டு வந்தேன். இந்த கேரக்டருக்கு ஆரம்பித்திலேயே ஒரு பாடல் எழுதலாம் என்றொரு எண்ணமிருந்தது. ஆனால் கரெக்டான ஒரு பாடல் அதற்கு அமையவில்லை. இப்போது பேக் க்ரவுண்ட் ஸ்கோரில் ஒரு பாட்டு எழுதி அந்தக் குறையை போக்கியாச்சு. 

மெர்சல்

 

முதலில் இந்தப் பாட்டின் ஐடியாவை அட்லியிடம் சொன்னவுடன். ’ஐடியா நல்லாயிருக்கு பண்ணலாம்’னு சொன்னார். அப்புறம்தான் வரிகள் எழுதினேன். அதன்பிறகுதான் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ட்யூன் போட்டார். எப்படி போட்டாருனே தெரியவில்லை. பாட்டை எழுதிக் கொடுத்துவிட்டு நான் வந்துவிட்டேன். இன்னும் முழுமையான பாடலை கேட்கவில்லை. 'மாயோன்' பாடலைக் கேட்க வெயிட்டிங்’’ என்று சிரிக்கிறார் பாடலாசிரியர் விவேக்.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/104947-lyricist-vivek-speaks-about-mersal-mayoon-song.html

  • தொடங்கியவர்

மெர்சல்' சிக்கல் தீர்ந்தது: விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியது

 

 
mersal1jpg

விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, 'மெர்சல்' படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்தது.

கேளிக்கை வரி குறைப்பு, திரையரங்க டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட பிரச்சினை முடிவுற்றதால் 'மெர்சல்' வெளியீடு உறுதிசெய்யப்பட்டது. ஆனால், தணிக்கைக் குழுவினருக்கு விலங்குகள் நல வாரியத்தின் கடிதத்தால் 'மெர்சல்' மீண்டும் வெளியீட்டு பிரச்சினையில் சிக்கியது. இதனால் முன்னணி திரையரங்குகள் எதிலுமே 'மெர்சல்' டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது.

'மெர்சல்' படக்குழுவினரோடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகளின் அவசர ஆலோசனை சென்னையில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்றது. அப்போது 'மெர்சல்' திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. அப்போது விலங்குகள் நல வாரியம் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் படக்குழுவினர் பதிலளித்தார்கள். இதற்காக டெல்லியிலிருந்து விலங்குகள் நல வாரிய அதிகாரி சென்னை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'மெர்சல்' படத்திற்கு எவ்வித தடையுமில்லை என்று விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முறையான அறிவிப்பை இன்னும் சில நிமிடங்களில் விலங்குகள் நல வாரியத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.

தற்போது, தணிக்கைப் பணிகளை இறுதி செய்ய படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. விரைவில் அப்பணிகளும் முடிவுற்று இன்று மாலையே வெளியீடு உறுதி செய்யப்பட இருக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19870495.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.