Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 ஆம் திகதி நடந்தது என்ன ?

Featured Replies

20 ஆம் திகதி நடந்தது என்ன ?

 

அர­சி­யலில் பல்­வேறு காய்­ந­கர்த்­தல்­களும் நகர்­வு­களும் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் இடம்­பெற்றுக்கொண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அர­சியல் கட்­சிகள் தமது எதிர்­கால அர­சியல் செயற்­பா­டுகள் தொடர்பில் காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. தமது அர­சியல் வெற்­றியை நோக்கி கட்­சிகள் காய்­களை நகர்த்­து­கின்ற நிலையில் ஒரு­சில செயற்­பா­டுகள் அவ்­வப்­போது சூடு­பி­டிக்­கின்­றன. அவ்­வப்­போது சூடு பிடிப்­பது மட்­டு­மன்றி அவை சில மக்கள் பிரி­வி­னரை அநீ­திக்கு உட்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைந்­து­வி­டு­கின்­றன.

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­ட­மூலம் கடந்த செப்­டெம்பர் மாதம் 20 ஆம் திகதி நிறை­வேற்­றப்­பட இருந்த நிலையில் இறு­தியில் அந்த முயற்சி கைவி­டப்­பட்­டது. அதா­வது மாகாண சபைத் தேர்­தல்கள் அனைத்­தையும் ஒரே தினத்தில் நடத்­து­வ­தற்கு ஏது­வாகும் வகையில் இந்த 20 ஆவது சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வி­ருந்­தது. இதன் கார­ண­மாக ஒரு­சில மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கால­தா­ம­த­மாகும் நிலைமை காணப்­பட்­டது.

இதனால் இந்தச் சட்­ட­மூ­லத்­திற்கு கடும் எதிர்ப்பும் வெளியி­டப்­பட்டு வந்­தது. ஒரு­சில மாகாண சபை­களில் 20 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் இறு­தியில் அது நிறை­வேற்­றப்­ப­டாமல் போனது. எல்­லா­வற்­றுக்கும் மேலாக இந்தச் சட்­ட­மூலம் தொடர்­பான உயர்­நீ­தி­மன்­றத்தின் வியாக்­கி­யா­னமே இதன் பின்­ன­டை­வுக்கு கார­ண­மாக அமைந்­தது.

இந்தச் சட்­ட­மூ­லத்தை ஆராய்ந்த உயர்­நீ­தி­மன்றம் 20 ஆவது திருத்தச் சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்ற வேண்­டு­மாயின் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் நடத்­தப்­பட வேண்டும் என அறி­வித்­தி­ருந்­தது.

இவ்­வா­றான பின்­ன­ணியில் இறு­தியில் அந்தச் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தின் வாக்­கெ­டுப்­புக்கு வராமல் மீளப்­பெ­றப்­பட்­டது. ஆனால் அன்­றைய 20ஆம் திக­தியே மாகாண சபைகள் தொடர்­பான மற்­று­மொரு சட்­ட­மூ­லத்தை அர­சாங்கம் நிறை­வேற்றிக் கொண்­டுள்­ளது. அந்தச் சட்­ட­மூ­லமும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மைப் பலத்­துடன் நிறை­வேற்­றப்­பட்­டமை இங்கு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

அந்தச் சட்­ட­மூ­லத்­தில்தான் கடும் சிக்­கல்­களும் நெருக்­க­டி­களும் ஏற்­பட்­டி­ருந்­தன. அதா­வது மாகாண சபைத் தேர்­தல்­களை புதிய முறை­மையில் நடத்த வேண்டும் என்ற சட்­டமே கடந்த 20 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. ஆரம்­பத்தில் இது தொடர்பில் சற்று குழப்­ப­மான நிலை தோன்­றி­யது. அதா­வது அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக ஒரு கருத்து நில­வி­யது.

ஆனால் உண்­மையில் 20 ஆவது திருத்தச் சட்­ட­மூலம் மீளப்­பெ­றப்­பட்ட பின்னர் மாகாண சபைகள் தேர்­தல்கள் தொடர்­பான சட்­ட­மூ­லமே நிறை­வேற்­றப்­பட்­டது. இதில் ஒரு விசேடம் என்­ன­வெனில் 20 ஆவது திருத்தச் சட்­ட­மூ­லத்­திற்கு பதி­லாக அர­சாங்கம் அவ­ச­ர­மாக கொண்­டு­வந்த இந்தச் சட்­ட­மூலம் 20 ஆம் திக­தியே நிறை­வேற்­றப்­பட்­டது.

அர­சாங்கம் 20 ஆவது திருத்தச் சட்­டத்தை மீளப்­பெற்ற நிலையில் கட்­டா­ய­மாக ஒரு சட்­டத்தை நிறை­வேற்ற வேண்டும் என்ற நிலைக்குத் தள்­ளப்­பட்­டதோ தெரி­ய­வில்லை மிகவும் அவ­ச­ர­மா­கவே இந்த மாகாண சபைத் தேர்தல் சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இனி 20 ஆம் திகதி என்ன நடந்­தது என்று பார்ப்போம். 20 ஆவது திருத்தச்சட்டமூலம் பின்வாங்கப்பட்டதையடுத்து 19 ஆம் திகதி மாலை மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூலத்தை கொண்டுவருவது தொடர்பில் அரசாங்க மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இதில் சிறுபான்மைக்கட்சிகளும் பங்குபற்றியிருந்தன. இதன்போது இந்த சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும் என முக்கிய சிறுபான்மை கட்சிகள் முடிவெடுத்திருந்தன. 

இந்நிலையில் 20 ஆம் திகதி காலை வேளை­யி­லேயே இந்த மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்­டத்தின் நகல் பிர­திகள் பாரா­ளு­மன்­றத்தில் எம்.பி.க்களி­டையே பகி­ரப்­பட்­டி­ருந்­தன. இது உண்­மை­யி­லேயே ஒரு ஆரோக்­கி­ய­மான விடயம் அல்ல. ஒரு சட்­ட­மூ­லத்தை வாசித்து அது தொடர்­பாக ஒரு முடி­வுக்கு வரு­வ­தற்கு போது­மான கால அவகாசம் வழங்­கப்­பட வேண்டும்.

ஆனால் இந்தச் சட்­ட­மூல விட­யத்தில் அவ்­வாறு போது­மான கால அவ­காசம் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதே உண்­மை­யாகும். 20 ஆம் திகதி காலை வேளை­யி­லேயே இந்தச் சட்­ட­மூ­லத்தின் நகல் பிர­திகள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு 

20ஆம் திகதி காலை

 வேளை­யி­லேயே

 மாகாண சபைகள்

 தேர்தல் திருத்தச் சட்ட

மூ­லத்தின் பிர­திகள்

 எம்.பி.க்களுக்கு

வழங் ­கப்­பட்­டுள்­ளன.  

விநி­யோ­கிக்­கப்­பட்­டன. இந்­நி­லையில் நகல் பிர­தி­களை வாசித்த சிறு­பான்மை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்  அதன் பின்­னரே 19 சிறு­பான்மை பாரா­ளு­ மன்ற உறுப்­பி­னர்கள் இணைந்து பிரதமர் தரப்­புடன் பேச்­சு­ வார்த்தை நடத்தி சில திருத்­தங்­களை முன்­ வைத்­தனர். 

சற்று விழித்துக் கொண்­டனர் எனக் கூறலாம்.

அதா­வது சிறு­பான்மை மக்­க­ளுக்கு நன்மை பயக்­காத வகை­யி­லேயே இந்த மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­த­மையை உணர்ந்த சிறு­பான்மை கட்­சிகள் உட­ன­டி­யாக ஒன்­று­கூடி நிலை­மையை ஆராயத் தொடங்­கின.

 அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் 6 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்சர் ஹக்கீம் தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 7 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் 5 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ள­டங்­க­லான 18 எம்.பி.க்களும் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் கூடி இந்தச் சட்­ட­மூலம் குறித்து ஆராய்ந்­தனர்.

இதன்­போது ஒரு கட்­டத்தில் பிர­தி­ய­மைச்சர் ஹிஸ்­புல்­லாவும் இவர்­க­ளுடன் இணைந்­து­கொண்­டதை அடுத்து மொத்­த­மாக 19 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இணைந்து இந்த மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தில் செய்­யப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பாக ஆராய்ந்­தனர்.

அதன்­படி பல விட­யங்கள் தொடர்பில் இந்த 19 பேரும் இணைந்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். இதன்­போது இந்தச் சட்­ட­மூ­லத்தை முழு­மை­யாக நிரா­க­ரித்து விடுவோம் என்ற நிலைப்­பாட்டில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் கருத்து வெளியிட்­டி­ருந்தார். எனினும் அமைச்சர் மனோ கணேசன் சட்­ட­மூ­லத்தை எதிர்ப்­பது சாணக்­கியம் அல்ல என்றும் எதிர்ப்­ப­தற்குப் பதி­லாக சட்­ட­மூ­லத்தின் ஊடாக சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முயற்­சிப்­பதே மேல் என்­றும் எடுத்­து­ரைத்­தி­ருக்­கிறார். இது தொடர்பில் குறிப்­பிட்ட நேரம் ஆராய்ந்த 19 சிறு­பான்மை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சில திருத்­தங்­களை அர­சாங்­கத்­திடம் முன்­வைப்­ப­தற்கு தீர்­மா­னித்­தனர்.

அதன்­படி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான குழு­வி­ன­ருடன் இந்த 19 சிறு­பான்­மை­யின பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மாலை வரை தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இதன்­போது பல திருத்­தங்கள் சிறு­பான்மை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்­டன. அதா­வது மாகாண சபை தேர்­தல்­க­ளுக்­கான எல்­லை­களை நிய­மிப்­ப­தற்கு எல்லை நிர்­ணயக் குழு நிய­மிக்­கப்­பட வேண்டும் என்றும் அந்தக் குழுவில் மூவினப் பிர­தி­நி­தி­களும் இடம்­பெற வேண்டும் என்­றும குறிப்­பாக வடக்கு, கிழக்கு, மலை­யக தமிழ்ப் பிர­தி­நி­திகள் இடம்­பெற வேண்டும் என்றும் திருத்தம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த திருத்தம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. அதன் பின்னர் புதிய தேர்தல் முறை­மை­யா­னது ஐம்­பது வீதம் தொகுதி முறை­மை­யிலும் ஐம்­பது வீதம் பிர­தே­ச­வாரி முறை­மை­யிலும் இடம்­பெற வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தக் கோரிக்­கைக்­கா­கவே 19 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அதிகம் போராட வேண்­டி­யி­ருந்­தது.

அதா­வது சிறு­பான்மை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 19 பேரும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­ட­னேயே பேச்­சு­வார்த்தை நட­த்­தி­யி­ருந்­தனர். பிர­தமர் தரப்பில் அமைச்சர் கபிர் ஹாசிம், மஹிந்த அம­ர­வீர மற்றும் மலிக் சம­ர­விக்­கி­ரம ஆகியோர் இடம்­பெற்­றி­ருந்­தனர். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்­னவும் இதில் இடம்­பெற்­றி­ருந்தார். அந்த வகையில் பிர­தமர் தலை­மை­யி­லான குழு­வினர் ஐம்­ப­துக்கு ஐம்­பது என்ற கோரிக்­கையை முதலில் ஏற்­க­வில்லை.

எனினும் சிறு­பான்மை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தொடர்ச்­சி­யான வலி­யு­றுத்­தலை தொடர்ந்து ஐம்­ப­துக்கு ஐம்­பது என்ற கோரிக்­கையும் ஏற்­கப்­பட்­டது. ( இந்த வலி­யு­றுத்­தலை மேற்­கொண்­டதன் மூலம் சிறு­பான்மை பிர­தி­நி­திகள் நன்­ம­திப்பை இழந்­து­விட்­டனர் என்று ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது) அது­மட்­டு­மன்றி எல்லை நிர்­ணய முடிவின் பின்னர் குறித்த சட்­ட­மூலம் ஏகமனதாக ஏற்கப்படாவிடின் பிர­தமர் தலை­மையில் மற்­று­மொரு குழு நிய­மிக்­கப்­பட்டு அது தொடர்பில் ஆரா­யப்­பட வேண்டும் என்ற திருத்­தமும் ஏற்­கப்­பட்­டது. அது தொடர்­பான மீளாய்வுக் குழு­விலும் சிங்­கள, முஸ்லிம், வடக்கு கிழக்கு மற்றும் மலை­யகத் தமிழ் பிர­தி­நி­திகள் இடம்­பெற வேண்டும் என்ற கோரிக்­கையும் ஏற்­கப்­பட்­டது. அத்­துடன் பல் அங்­கத்­தவர் தொகுதி ஏற்­பாடும் சரி­யான முறையில் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்ற சிறு­பான்மை மக்கள் பிர­தி­நி­தி­களின் கோரிக்­கையும் ஏற்­கப்­பட்­டது.

இவ்­வாறு 19 சிறு­பான்மை எம்.பி.க்­களின் பிர­தமர் தரப்­பி­ன­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தையின் போது திடீ­ரென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் எம்.பி. ஒருவர் மாய­மா­ன­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

மாகாண சபை

தேர்தல் முறை மாற்றம்

என்­பது சிறு­பான்மை

மக்­களின் தலை­வி­தியை

தீர்­மா­னிக்கும் விட­ய­மாகும். 

எனவே இந்த விட­யத்தில்

சிறு­பான்மை கட்­சிகள் 

 இணைந்து பொறுப்­பு­ டனும்

 புரிந்­து­ணர்­வு­டனும் 

செயற்­ப­டு­வது கட்­டாயம். 

அனைத்துத் தரப்­பி­னரும்

 இணைந்து 

இந்த விட ­யத்தில் 

கூட்­டாக குரல் 

கொடுக்க வேண்­டி­யது

அவ­சி­ய­மா­கி­றது.

சிறு­பான்மைக் கட் ­சிகள்

 இந்தப் பொறுப்பை உணர்ந்து

 செயற்­பட

வேண்­டி­யது

அவ­சி­ய­மாகும்.   

 எப்­ப­டி­யி­ருப்­பினும் நீண்ட பேச்­சு­வார்த்­தைகள் கலந்­து­ரை­யா­டல்­களின் பின்னர் திருத்­தங்­க­ளுடன் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது.

தற்­போது ஜனா­தி­ப­தி­யினால் எல்லை நிர்­ணய ஆணைக்­குழு நிறு­வப்­பட்­டுள்­ளது. எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் நீண்ட அனு­பவம் கொண்­ட­வ­ரான தவ­லிங்கம் என்­ப­வரின் தலை­மை­யி­லேயே ஐவர் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இந்தக் குழு தற்­போது எல்லை நிர்­ணய பணி­களை முன்­னெ­டுத்து அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்­ளது. அதன் பின்னர் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும்.

இங்கு முக்­கி­ய­மான விடயம் என்­ன­வெனில், சிறு­பான்மை கட்­சிகள் இந்த எல்லை நிர்­ணயப் பணி­களின் போது ஒற்­று­மை­யுடன் செயற்­பட வேண்­டிய தன்மை காணப்­ப­டு­கி­றது. தற்­போது அமுலில் இருக்­கின்ற பிர­தே­ச­வாரி தேர்தல் முறை­மை­யா­னது சிறு­பான்மை மக்­க­ளுக்கு நன்­மை­ப­யக்கும் ஒன்­றா­கவே இருக்­கி­றது. அதா­வது மக்­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள் சரி­யான முறையில் பிர­தி­ப­லிப்­ப­தாக தற்­போ­தைய பிர­தே­ச­வாரி தேர்தல் முறைமை காணப்­ப­டு­கி­றது.

எனவே தேர்தல் முறை மாற்­ற­மடை­யும்­போது அத­னூ­டாக தமிழ் பேசும் சிறு­பான்மை மக்­களின் உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளுக்கு இழப்­புகள் ஏற்­ப­டா­த­வாறு புதிய தேர்தல் முறைமை அமைய வேண்டும். இந்த விட­யத்தில் சிறு­பான்மை கட்­சிகள் மிகவும் ஆழ­மான கவ­னத்­துடன் செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இது தொடர்பில் எம்­மிடம் கருத்து வெளியிட்ட தமிழ் முற்­போக்­குக்­கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் குறிப்­பி­டு­கையில் தற்­போது அமுலில் இருக்­கின்ற தேர்தல் முறைமை சிறு­பான்மை மக்­க­ளுக்கு சாத­க­மாக இருக்­கின்­றது. எனவே புதிய தேர்தல் முறை­மையை நாம் நிரா­க­ரிக்­கலாம். ஆனால் முழு நாடும் தேர்தல் முறைமை மாற்­றப்­பட வேண்டும் என கூறி வரு­வதால் நாம் மட்டும் அதனை எதிர்க்க முடி­யாது. முஸ்லிம் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் வடக்கு,கிழக்­குக்கு வெளியே 65 வீதம் வாழு­கின்­றனர்.

தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரை­யிலும் 50 வீத­மானோர் வடக்கு கிழக்­குக்கு வெளியே வாழ்­கின்­றனர். அப்­படிப் பார்க்­கின்­ற­போது 60 வீத­மான தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்­குக்கு வெ ளியே இருக்­கின்­றனர். அவர்­களின் உரி­மை­யையும் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளையும் பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். எனவே புதிய தேர்தல் முறை­மையை நிரா­க­ரிக்­காமல் அத­னூ­டாக எமது உரி­மை­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முயற்­சிப்­பதே சாணக்­கி­யத்­த­ன­மாகும்.

இங்கு ஒரு விட­யத்தை குறிப்­பிட்டுக் கூற வேண்­டிய விடயம் என்­ன­வெனில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது வடக்கு, கிழக்­கு இணை­யாத சமஷ்டி கிடைக்­காத பொலிஸ் காணி அதி­கா­ரங்கள் இல்­லாத ஒரு தீர்­வையே பெற்­றுக்­கொ­டுக்கப் போவ­தாக தெரி­கி­றது. இது ஒரு­வ­கையில் மக்­க­ளுக்கு ஏமாற்­றம்தான். அவ்­வாறு எது­வு­மில்­லாத தீர்­வை முழு­மை­யாக வழங்­கு­வ­தற்கு தென்­னி­லங்கை தயா­ராக இல்லை. அதிலும் முட்­டுக்­கட்­டைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் அவ்­வா­றா­ன­தொரு நிலை­மையில் தேர்தல் முறை­மை­யிலும் அநீதி இழைக்­கப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அதற்கு நாங்கள் இட­ம­ளிக்­க­மாட்டோம்.

எனவே இந்த விட­யத்­துக்­காக நாங்கள் தொடர்ந்து பேரா­டுவோம். அர­சாங்­கத்­திற்குள் இருந்­து­கொண்டே போரா­டுவோம். அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­ய­வர்­களும் நாங்கள்தான். அதனை பாது­காப்­ப­வர்­களும் நாங்கள் தான். அதே­நேரம் எமது மக்­களின் உரி­மைக்­காக அர­சாங்­கத்­திற்­குள்­ளேயே போரா­டு­ப­வர்­களும் நாங்கள் தான் என்று விளக்­க­ம­ளித்தார்.

அந்­த­வ­கையில் தற்­போது மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. அதன் ஊடாக தற்­போது புதிய தேர்தல் முறை உரு­வாக்­கப்­பட்டு மீண்டும் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட வேண்­டி­யுள்­ளது. சிறு­பான்மை கட்­சிகள் பல்­வேறு விட­யங்­களில் பிரிந்து செயற்­ப­டு­வதை நாம் காண்­கின்றோம். பல்­வேறு முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் சிறு­பான்மை கட்­சிகள் பிரிந்து செயற்­ப­டு­கின்­றன. ஆனால் இந்த தேர்தல் முறைமை விட­யத்தில் அனைத்து சிறு­பான்மை கட்­சி­களும் இணக்­கப்­பாட்­டு­டனும் ஒரு புரிந்­து­ணர்­வு­டனும் இங்கு செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.

இவ்­வாறு ஒன்­றாக இணைந்து செயற்­ப­டு­வதன் மூலமே தமிழ் பேசும் மக்­களின் உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். தற்­போது கூட ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காரங்­கி­ரஸும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் தமிழர் முற்­போக்குக் கூட்­ட­ணியும் இணைந்து பேரம்­பே­சி­யதன் கார­ண­மா­கவே ஐம்பதுக்கு ஐம்பது என்ற முக்கியமான திருத்தத்தை சட்டத்தில் உள்வாங்க முடியுமாகியது.

அதேபோன்றே தற்போதும் இந்த தேர்தல் திருத்தச் சட்டமூலம் முழுமையாக்கப்பட்டு நிறைவேற்றப்படும் வரை சிறுபான்மை கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதுடன் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

தேர்தல் என்பது மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் ஒரு ஜனநாயக ஊடகமாகும். அவ்வாறு தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவே மக்களின் பிரச்சினைகள் எடுத்துச் செல்லப்பட்டு அவற்றுக்கு தீர்வுகள் பெறப்படுகின்றன. அதுவும் மாகாண சபை என்பது மக்களுடன் இணைந்து செயற்படும் கட்டமைப்பாகும். அதுமட்டுமன்றி மாகாண சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை 160 தொகுதிகள் ஏற்கனவே காணப்படுகின்றன. ஆனால் தற்போது மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்யும்போது புதிதாக எல்லை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது. எனவே இது தொடர்பில் கட்சிகள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். ஏதாவது சிக்கல்கள் குளறுபடிகள் எல்லைநிர்ணயத்தில் இடம்பெறுமாயின் அது தொடர்பில் குரல் எழுப்புவதற்கு சிறுபான்மைக் கட்சிகள் தயங்கக்கூடாது.

எனவே அனைத்துத் தரப்பினரும் இணைந்து இந்த விடயத்தில் கூட்டாக குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. சிறுபான்மைக் கட்சிகள் இந்தப் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் இணைந்து ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுகின்றார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

ரொபட் அன்­டனி

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-07#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.