Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர்கொழும்பில் கடத்தப்பட்ட சிறுமி நேற்றிரவு வீட்டின் அருகில் விடுவிப்பு

Featured Replies

நீர்கொழும்பில் கடத்தப்பட்ட சிறுமி நேற்றிரவு வீட்டின் அருகில் விடுவிப்பு

[08 - March - 2007] [Font Size - A - A - A]

நீர்கொழும்பு, மென்ஸன் பிளேஸில் வைத்து பெருந்தொகை கப்பம் கோரி கடந்த திங்கட்கிழமை இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட சிறுமி நேற்று புதன்கிழமை இரவு விடுவிக்கப்பட்டுள்ளார்.

கப்பப் பணம் எதுவுமே வழங்கப்படாத நிலையிலேயே இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் இந்தச் சிறுமியும் இவரது ஒன்றுவிட்ட சகோதரியும் வீட்டின் அருகிலுள்ள வீடொன்றுக்குச் சென்றபோது ஆட்டோ ஒன்றுடன் காத்திருந்த சிலர் இந்தச் சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.

40 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக வழங்கினால் மட்டுமே இவரை விடுவிப்போமென கடத்தல்காரர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியதுடன் பணம் கிடைக்காவிடின் சிறுமியின் உயிருக்கு ஆபத்தேற்படுமென்றும் எச்சரித்திருந்தனர்.

இது குறித்து, வீட்டிலுள்ளவர்கள் நீர்கொழும்பு பொலிஸாருக்கு அறிவிக்கவே அவர்களும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்தச் சிறுமி கடத்தப்பட்ட மறுநாளான நேற்று முன்தினம் கடத்தல்காரர்கள் வீட்டுக்காரருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு 30 இலட்சம் ரூபா வழங்க வேண்டுமென மிரட்டியிருந்தனர்.

மீண்டும் அவர்கள் நேற்றுக் காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதுடன் சிறுமியை விடுவிக்க வேண்டுமாயின் குறைந்தது 20 இலட்சம் ரூபா பணமாவது வழங்கவேண்டுமென மிரட்டினர்.

அதேநேரம், சிறுமியை வீட்டுக்காரர்களுடன் தொலைபேசி மூலம் கதைக்கவும் அனுமதித்திருந்தனர்.

எனினும், மூன்று தடவைகள் கதைத்த கடத்தல்காரர்களுடன் வீட்டுக்காரர்கள் தங்கள் நிலைமை பற்றி விளக்கிக் கூறியதுடன், சிறிதளவு பணத்தைக் கூட கப்பமாக வழங்குமளவிற்கு இந்தச் சிறுமியின் பெற்றோர்கள் இல்லையென்பதை தெளிவாகக் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு 9.30 மணியளவில் இந்தச் சிறுமி வீட்டிற்கு அருகில் வைத்து கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டார்.

ஆட்டோ ஒன்றில் சிறுமியை ஏற்றிவந்தவர்கள் வீட்டிற்கு அருகில் சிறுமியை இறக்கிவிட்டுச் செல்லவே சிறுமியும் வீடு வந்து சேர்ந்துள்ளார்.

கப்பப் பணம் எதுவுமே வழங்கப்படாது சிறுமி விடுவிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இவர் விடுவிக்கப்பட்டது குறித்து பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது. கடத்தப்பட்ட சிறுமி யாழ்ப்பாணம், காரைநகர் பலுகாட்டைச் சேர்ந்த மோகனதாஸ் தனுஷா (5 வயது) ஆவார்.

http://www.thinakkural.com/news/2007/3/8/i...s_page22875.htm

  • கருத்துக்கள உறவுகள்

Kidnap drama ends with no ransom paid and little girl freed

By Isuri Kaviratne

“I was not afraid, they gave me toys to play with and there was a malli and an aunty to keep me company,” says five-year-old Danusha, back at home, 56 hours after being abducted, close to her home in Manson Place, Negombo, on Monday, (March 5).

Recalling her saga, Danusha said the kidnappers had dropped her off at the junction close to her home and asked her whether she could go home on her own. “I said my home was closeby and I could go on my own.”

Mohandas Danusha was born in Kilinochchi, where her parents and siblings live. However she has been staying with her grandmother since she was an year old, in Negombo. Although her parents were informed about the kidnapping they couldn’t come to Negombo due to security reasons and lack of money to make the journey.

The kidnappers had allowed Danusha to talk to her family over the phone on Wednesday morning. “Danusha is not a child who gets scared easily,” said her grandmother Shanmuganathan Shivamanoravi. “She didn’t even cry when she spoke to me over the phone. She asked me not to cry because she’ll be coming home that evening. The people who had kidnapped her had taken good care of her as well. They spoke to me and complained that she wasn’t eating enough. However when I asked why they had kidnapped Danusha they didn’t answer.”

Though Danusha had assured her grandmother that she would be returning that day they didn’t expect her since it was getting late. “However at about 10.30 Dhanusha’s grandmother heard her calling out to her from the gate,” said Danusha’s uncle Subramanium Thavaragasingham.

He said the police had searched the whole area once they had informed them of the kidnapping while some policemen in civvies were stationed in the area in case of an emergency.

He said the kidnappers had initially asked for Rs. Three to four million but had then brought it down to Rs. Two million. He said whenever the phone rang Shivamanoravi answered because initially whenever the kidnappers heard a male voice they would cut the line.

“Shivamanoravi agreed to pay Rs.500, 000 but the kidnappers said that wasn’t enough. However, they finally released Danusha without taking any money,” Thavaragasingham said.

Meanwhile, Negombo OIC W. Silva said they will continue with their investigations to find out the culprits behind the kidnapping.

http://www.sundaytimes.lk/070311/News/114news.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.