Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்பு இன்று சபை ஒத்தி­வைப்பு வேளை பிரே­ரணை

Featured Replies

‘அரசியல் கைதிகள் விவகாரம் சட்டமா அதிபருக்கு மாத்திரமல்ல’
 

 

அரசியல் கைதிகளின் விடயத்தில், அரசியல் அடையாளங்களும் காணப்படும் நிலையில், இவர்கள் தொடர்பான வழக்குகள், சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானவையாகக் கருதப்பட முடியாது என, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ள சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையின் வலியுறுத்தவுள்ளார். 

இப்பிரேரரணை சமர்ப்பிக்கப்படுமென, ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில், பிரேரணையின் உள்ளடக்கங்கள், நேற்று (16) வெளியிட்பட்டுள்ளன. 

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள் அனைவரும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டார்கள் என்பதுடன், அவர்களுக்கு எதிரான சகல நடவடிக்கைகளும் அச்சட்டத்தின் கீழேயே மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சட்டம் கொடூரமான, வெறுக்கத்தக்க ஒரு சட்டம் என்பதும், அது காலத்துக்குப் பொருத்தமற்றதென்பதும், இலங்கை அரசாங்கத்தால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக உள்நாட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்கப் போவதாக, உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் உறுதி வழங்கியிருந்தது.  

“இந்த உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டை, இலங்கை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும், இதன்மூலம் குறித்த சட்டம், சட்டப் புத்தகங்களில் தொடர்ந்திருக்க மாட்டாதென்ற இலங்கை அரசாங்கத்தின் உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டிலிருந்து தவற முடியாது” எனக் குறிப்பிடுவார். 

தொடர்ந்து அவர், கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியினர் போன்று, இக்கைதிகளும் ஏன் மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட முடியாதவர்களாக உள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலிருப்பதாக, சபையில் தெரிவிப்பார். 

மேலும், இக்கைதிகள் விடயத்தில், அரசியல் தலையீட்டையும் அவர் வலியுறுத்தவுள்ளார். “இந்த வழக்குகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில் முழுமையாக உள்ளவையென்பதாகக் கருத முடியாது. இவ்வழக்குகள், அரசியல் அடையாளங்களைக் கொண்டிருப்பதனால், இவை முழுமையாகச் சட்டம் சம்பந்தப்பட்டவையென்று கருதிவிட முடியாது. இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்பட்டிருந்தால், கைதிகளாக உள்ளவர்களில் அநேகமானவர்களுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டிருக்க மாட்டாதென்பதும், அவர்கள் பயனுள்ள பிரஜைகளாக இருந்திருப்பார்கள் என்று கூறுவதில் நியாயமிருப்பதைத் தெரிவிக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில், தாங்கள் இந்த விடயத்தை அரசியல் ரீதியாகவும் நோக்க வேண்டிய கடப்பாட்டை உருவாக்கியுள்ளது. இந்த விடயம், அரசியல் ரீதியாகக் கையாளப்படாமலிருப்பது இன இணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நன்மதிப்பையும் அமைதி நிலைமையையும் மீள ஏற்படுத்துவதிலும் வலுவான தடையாகவே அமையும்” என்று அவர் குறிப்பிடுவார். 

தவிர, இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடயங்களுக்காக, இவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் போது அனுபவிக்கும் சிறைத்தண்டனையை விட அதிக காலம், ஏற்கெனவே இவர்கள் சிறையில் காணப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டவுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இவர்களின் குடும்பங்கள், இவர்களின்றி வேதனையில் வாடுவதையும் குறிப்பிடுவார். 

தவிர, வவுனியாவிலிருந்து அநுராதபுரத்துக்கு வழக்கு மாற்றப்படுவதற்கு, சாட்சிகளின் பாதுகாப்பே காரணமாகக் கூறப்படும் நிலையில், சாட்சிகளுக்குப் பாதுகாப்புப் பிரச்சினை எனில், வழக்குகளை இடமாற்றாமல், சாட்சிகளுக்கான பாதுகாப்பை அதிகரித்திருக்க முடியும் எனக் கூறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர், வழக்குகள் இடமாற்றப்பட்டமையால், சந்தேகநபர்களுக்கு ஏற்பட்டுள்ள மொழிப்பிரச்சினை குறித்தும், சபையின் கவனத்துக்குக் கொண்டுவரவுள்ளார். 

இறுதியாக அவர், “வழக்கு இடமாற்றத்துக்கு எதிராகக் கைதிகள், தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலைமையானது, அவசரமான அடிப்படையில் கையாளப்பட வேண்டியதாகும். அத்துடன் மேற்குறிப்பிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இக் கைதிகள் எவ்வித தாமதமுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்பதை நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன்” என்று வலியுறுத்தவுள்ளார்.   

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசியல்-கைதிகள்-விவகாரம்-சட்டமா-அதிபருக்கு-மாத்திரமல்ல/175-205684

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கூட்­ட­மைப்பு இன்று சபை ஒத்தி­வைப்பு வேளை பிரே­ரணை

 

 

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தொடர் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் கோரிக்­கையை நிறை­வேற்­று­மாறு வலி­யு­றுத்­தியும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை வாக்­கு­றுதி அளித்­ததன் பிர­காரம் நீக்­கு­மாறு கோரியும் இன்­றைய தின பாரா­ளு­மன்ற அமர்வில் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணைையை முன்­வைக்­க­வுள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனால் சமர்ப்­பி­கிக்­கப்­ப­ட­வுள்ள குறித்த ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில்,  

பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் கீழ் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ள இந்தக் கைதிகள், தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவோ, குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளா­கவோ அல்­லது இன்­னமும் குற்­றச்­சாட்­டுக்கள் வழங்­கப்­ப­டா­த­வர்­க­ளா­கவோ இருந்­தாலும் அவர்கள் அனை­வரும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழேயே கைது செய்­யப்­பட்­டார்கள் என்­ப­துடன், அவர்­க­ளுக்கு எதி­ரான சகல நட­வ­டிக்­கை­களும் அச்­சட்­டத்தின் கீழேயே மேற்­கொள்­ளப்­பட்­டன.

இந்தப் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் கொடூ­ர­மான, வெறுக்­கத்­தக்க ஒரு சட்டம் என்­பதும் அது காலத்­துக்குப் பொருத்­த­மற்­றது என்­பது் இலங்கை அர­சினால் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.  இந்தச் சட்­டத்தை நீக்­கி­விட்டு அதற்குப் பதி­லாக உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு  ஏற்­பு­டைய வகையில் புதிய சட்­ட­மொன்றை உரு­வாக்கப் போவ­தாக உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் அர­சாங்கம் உறுதி வழங்­கி­யி­ருந்­தது.

இந்த உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட கடப்­பாட்டை இலங்கை அரசு இன்­னமும் நிறை­வேற்­ற­வில்லை.  ஆனாலும், இதன்­மூலம் குறித்த சட்டம், சட்டப் புத்­த­கங்­களில் தொடர்ந்­தி­ருக்க மாட்­டா­தென்ற இலங்கை அரசின் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட கடப்­பாட்­டி­லி­ருந்து தவற முடி­யாது. 

இந்த நபர்­களில் அனே­க­மா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக இருக்கும் ஒரே­யொரு சான்று அவர்­களின் விருப்­பத்­துக்கு மாறாகப் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் பெறப்­பட்ட குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் மட்­டுமே என்­ப­தோடு, அது சாதா­ர­ண­மான நீதி­மன்­றத்தில் அவர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­ய­மாக ஏற்­கப்­பட மாட்­டாது.  இதனால் வழக்குத் தொடு­நர்­க­ளிடம் போதிய சாட்­சி­யங்கள் இல்­லாமை கார­ண­மாக அனேக வழக்­குகள் ஒத்­தி­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அனே­க­மாக இவர்கள் எல்­லோ­ருமே அவர்கள் கைது செய்­யப்­பட்­ட­வுடன் குற்றத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருந்தால் சிறை­வாசம் அனு­ப­விக்க வேண்­டிய காலத்தைப் போன்ற நீண்ட காலத்­திற்குத் தடுப்­புக்­காவல் கைதி­க­ளா­கவே இருக்­கின்­றனர்.

தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ள இவர்­களின் குடும்­பங்கள் அவர்­களின் உழைப்­பா­ளி­களின் ஆத­ரவு இல்­லாமல், நீண்­ட­கா­ல­மாக வேத­னையில் வாடு­கின்­றன.  மிகவும் காத்­தி­ர­மான இம் முக்­கிய விட­யத்­திற்கு இது­வரை கவனம் செலுத்­தப்­ப­ட­வில்லை.

பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் தீய அம்­சங்­க­ளுக்கும் புறம்­பாக, மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர்  கிளர்ச்­சி­களை மேற்­கொண்ட வேளையில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் யாவரும் மன்­னிப்­ப­ளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டனர்.  இதே­போன்ற ஒரு கொள்­கையை தற்­போ­துள்ள இந்தக் கைதிகள் விட­யத்­திலும் செயற்­ப­டுத்த முடி­யா­ம­லி­ருப்­பது ஏன் என்­பதை விளங்கிக் கொள்ள முடி­யா­துள்­ளது. 

இந்த வழக்­குகள் முழு­மை­யாகச் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் பொறுப்பில் உள்­ள­வை­யென்­ப­தாகக் கருத முடி­யாது.  அரசின் முதன்மைச் சட்ட ஆலோ­சகர் என்ற வகையில் சட்­டமா அதி­ப­ருக்­கு­ரிய கௌர­வத்தை வழங்கும் அதே­வேளை, இவ்­வ­ழக்­குகள் அர­சியல் அடை­யா­ளங்­க­ளையும் கொண்­டி­ருப்­ப­தனால் இவை முழு­மை­யாகச் சட்டம் சம்­பந்­தப்­பட்­ட­வை­யென்று கரு­தி­விட முடி­யாது.

இலங்­கையின் தேசியப் பிரச்­சி­னைக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்­பட்­டி­ருந்தால், கைதி­க­ளாக உள்­ள­வர்­களில் அனே­க­மா­ன­வர்­க­ளுக்கு தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலைமை ஏற்­பட்­டி­ருக்க மாட்­டா­தென்­பதும் அவர்கள் பய­னுள்ள பிர­ஜை­க­ளாக இருந்­தி­ருப்­பார்கள் என்று கூறு­வதில் நியா­ய­மி­ருப்­பதைத் தொிவிக்க முடியும்.

இத்­த­கைய  சூழ்­நி­லையில்,  தாங்கள் இந்த விட­யத்தை அர­சியல் ரீதி­யா­கவும் நோக்க வேண்­டிய கடப்­பாட்டை உரு­வாக்­கி­யுள்­ளது.  இந்த விடயம் அர­சியல் ரீதி­யாகக் கையா­ளப்­ப­டா­ம­லி­ருப்­பது இன இணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­திலும், நன்­ம­திப்­பையும் அமைதி நிலை­மை­யையும் மீள ஏற்­ப­டுத்­து­வ­திலும் வலு­வான தடை­யா­கவே அமையும்.

சில வழக்­குகள் வவு­னி­யாவில் இருந்து அனு­ரா­த­பு­ரத்­திற்கு இட­மாற்­றப்­பட்­டதன் மூலம் சில தேவை­யற்ற முரண்­பா­டுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  சாட்­சி­க­ளுக்குப் பாது­காப்பு அவ­சி­ய­மாயின் வழக்­கு­களை இட­மாற்றம் செய்­யாமல்,  சாட்­சி­க­ளுக்­கான பாது­காப்­புக்­களை வழங்­கி­யி­ருக்க முடியும்.

குற்­றஞ்­சாட்­டப்­பட்ட கைதிகள் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ்­மொழி பேசு­ப­வர்கள் என்­ப­துடன், மற்ற நிர்­வாக நீதி­மன்றப் பாவ­னையில் உள்ள சிங்­கள மொழியில் பாண்­டித்­தியம் இல்­லா­த­வர்­க­ளாக இருக்­கின்­றனர்.   இந­நி­லையில் , தமிழ்­மொழிப் பாவ­னையில் உள்ள வவு­னியா நீதி­மன்­றத்தில் இருந்து சிங்­கள மொழிப் பாவ­னையில் உள்ள அனு­தா­ர­புர நீதி­மன்­றத்­திற்கு அவர்­க­ளு­டைய வழக்­குகள் மாற்­றப்­ப­டு­கின்­ற­போது, அவர்­களால் புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய மொழியில் வழக்­குகள் விசா­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யான அவர்­க­ளது உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­கின்­றன. 

ஒரு குற்­ற­வியல் வழக்கில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வரின் உரிமை என்­பது அடிப்­ப­டை­யா­னது.  அவ­ருக்­கெ­தி­ராக முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள வழக்­கையும் சாட்­சி­யங்­க­ளையும் முழு­மை­யாகக் கேட்­ப­தற்கும் அறிந்து கொள்­வ­தற்கும் அவ­ருக்குப் புரண உரிமை உள்­ளது.  

இவ்­வா­றாக வழக்கு இடம் மாற்­றப்­ப­டு­வ­தா­னது குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வ­ருக்கு தனது விருப்­பத்தின் அடிப்படையில் சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்ற அதேவேளை, இது உள்ளடங்கலான ஏனைய அம்சங்களும் நீதியான ஒரு விசாரணை இடம்பெறுவதனை மறுதலிப்பதாக அமையும்.

முன்மொழியப்பட்டுள்ள இந்த வழக்கு இடமாற்றமானது குற்றஞ்சாட்டப்பட்ட நபரது அடிப்படை உரிமை சம்பந்தமாக எந்தவொரு அவதானிப்பையும் கருத்திற் கொள்ளவில்லை என்பதையே பிரதிபலிக்கின்றது.  குறித்த  இடமாற்றத்திற்கு எதிராக கைதிகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.  இந்த நிலைமையானது அவசரமான அடிப்படையில் கையாளப்பட வேண்டியதாகும்.

இத்தகைய காரணங்களைக் அடிப்படையாகக் கொண்டு அக் கைதிகள் எவ்வித தாமதமுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்பதை நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன் என்றுள்ளது. 

http://www.virakesari.lk/article/25879

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.