Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பில் சமஷ்­டியை உள்ளடக்க பின்கதவால் கடும் முயற்சி

Featured Replies

இடைக்கால அறிக்கைக்கு மஹிந்த எதிர்ப்பு
 

 

அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரைவு அறிக்கையின் பல்வேறான விடயங்களுக்கு, தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

இடைக்கால அறிக்கை தொடர்பாக, அறிக்கையொன்றை நேற்று (16) வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்துக்கு, தேர்தல் முறைமையை மாற்றவும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் மாத்திரமே மக்களாணை கிடைத்தது எனவும், இருக்கின்ற அரசமைப்பை இல்லாது செய்து, புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கு ஆணை கிடைத்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் தன்மை தொடர்பில், ஒற்றையாட்சி என்பதை நீக்கி, “ஒருமித்த நாடு/ஏகிய இராஜ்ஜிய” என்ற என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு வெளியிட்ட அவர், சர்வதேச அளவில், ஒற்றையாட்சியைக் கைவிட்ட நாடாக, இலங்கை கருதப்படுமெனத் தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசமைப்பில், இலங்கையின் ஆள்புலம் பற்றிய உறுப்புரையில், 25 மாவட்டங்கள் உள்ளடங்கிய நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், இடைக்கால அறிக்கையில், எண்ணிக்கை குறிப்பிடப்படாத மாகாணங்களாக அவை மாற்றப்பட்டுள்ளமை, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கான முயற்சி என, அவர் குற்றஞ்சாட்டினார். 

செனட் சபை போன்று, புதிய நாடாளுமன்றச் சபையொன்றை அமைத்து, அரசமைப்பை மாற்றுவதற்கு, அச்சபையின் மூன்றிலிரண்டு பங்கு ஆதரவு தேவை என்ற முன்மொழிவைக் கடுமையாக எதிர்த்துள்ளார். 

அந்தச் சபையின் 55 உறுப்பினர்களில் 45 பேர், மாகாண சபைகளிலிருந்து தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தைத் தாண்டி, மாகாண சபை உறுப்பினர்களுக்கு வீற்றோ அதிகாரம் வழங்குவதே இதன் நோக்கமென, அவர் குற்றஞ்சாட்டினார். 

தவிர, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை, சிறுபான்மையினக் கட்சிகளுக்குச் சார்பானது என வர்ணித்த அவர், அம்முறை மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி, போர் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்றோருக்காக, வட மாகாணத்துக்கு மேலதிக ஆசனங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன, மத அடிப்படையிலான அரசியலை ஊக்குவிப்பதற்கு, தேர்தல் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது, பயன்தராது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மாகாண சபை ஆளுநர்களுக்கான அதிகாரங்களைக் குறைத்தல்; மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள காணி அதிகாரங்களை, மாகாண சபைக்கு வழங்குதல்; அரசமைப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும், அவர் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். 

அவரது அறிக்கையின் முக்கியமான பகுதியாக, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான உறுப்புரையில் மாற்றம் ஏற்படுத்தப்பட முன்மொழியப்பட்டுள்ள மாற்றத்தை, அரசாங்கம் கைவிடுமென, அவர் எதிர்வுகூறியுள்ளமை அமைகின்றது. இறுதி நேரத்தில், மகா சங்கத்தினரைச் சமாளிப்பதற்காக, இந்த ஏற்பாட்டைக் கைவிட்டுவிட்டு, மாற்றம் செய்ததாக அரசாங்கம் காட்டிக் கொள்ளுமென அவர் தெரிவித்துள்ளார். தமிழில் தேசிய கீதம் என்ற விடயமும், இதே நிலையையே எதிர்கொள்ளுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

http://www.tamilmirror.lk/செய்திகள்/இடைக்கால-அறிக்கைக்கு-மஹிந்த-எதிர்ப்பு/175-205683

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புதிய அரசியலமைப்பில் சமஷ்­டியை உள்ளடக்க பின்கதவால் கடும் முயற்சி

VD161017-PG01-R1-4198ed7d9384350e8b6329e62a06cc871f36f55c.jpg

 

அழி­வுக்கு இட்டுச் செல்லும் அறிக்­கையை கைவி­டுங்கள் என்­கிறார் மஹிந்த
(ஆர்.யசி)

இலங்­கையின் கட்­ட­மைப்பை ஒற்­றை­யாட்சி மற்றும் யுனிட்­டரி என்ற அடிப்­ப­டையில் இருந்து சமஷ்டி என்ற அடிப்­ப­டையை நோக்கி நகர்த்­து­வது மட்­டுமே நல்­லாட்­சி­யா­ளர்­களின் நோக்­க­மாக இருக்­கின்­றது என்­பதை எம்மால் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. இன­வாத ரீதியில் ஆட்சி அல­கு­களைப் பிரிப்­ப­தற்கும் அவற்­றுக்­கான விரி­வான அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கும் ஒரு­போதும்

 இட­ம­ளிக்க முடி­யாது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

எனவே இந்த அழி­வுக்கு இட்டுச் செல்­லக்­கூ­டிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான யோச­னை­களை கைவிட்டு மக்­க­ளுக்கு வாக்­க­ளித்­த­வாறு அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை மட்டும் செய்­வ­தற்­கான யோச­னை­களை முன்­வைக்­கு­மாறு நான் அர­சாங்­கத்தை கோரு­கின்றேன் எனவும் மஹிந்த ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்கை தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் இடைக்­கால அறிக்­கை­யொன்று பாரா­ளு­மன்­றத்­தினால் அர­சாங்­கத்­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம்­தி­க­திக்கு முன்­ன­தாக தேர்தல் முறை­மையை மாற்றி ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தா­கவே நல்­லாட்சி அர­சாங்கம் ஜனா­தி­பதி தேர்­தலில் வாக்­கு­றுத அளித்­தி­ருந்­தது. முழு அர­சி­ய­ல­மைப்­பையும் மாற்­று­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு ஆணை கிடைக்­க­வில்லை. இந்த இடைக்­கால அறிக்­கையில் காணப்­படும் கீழ் வரும் விட­யங்­க­ளுக்கு நாம் ஒரு­போதும் இணக்கம் தெரி­விக்க மாட்டோம் என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கின்றோம்.

1. சிங்­கள மொழியில் ஏக்­கிய என்ற சொற்­பி­ர­யோ­கத்தை தொடர்ந்தும் பயன்­ப­டுத்­து­வ­தா­கவும், யுனிட்­டரி என்ற ஆங்­கில வார்த்­தையை நீக்­கு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத­னூ­டாக பெரும்­பான்மை மக்கள் இலங்­கையை ஒற்­றை­யாட்சி நாடாக கரு­தி­னாலும் சர்­வ­தே­சத்தின் முன்­பாக இலங்கை ஒற்­றை­யாட்சி நாடாக இருக்க முடி­யாது. மக்­களை ஏமாற்­று­வ­தற்கு கொண்­டு­வந்­துள்ள தந்­தி­ர­மான யோச­னையை நாங்கள் கண்­டிக்­கின்றோம்.

2. இந்த இடைக்­கால அறிக்­கையின் நான்­கா­வது பக்­கத்தில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை ஒரு அல­காக ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டு­மென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் ஐந்­தா­வது பிரி­வின்­படி இலங்கை பூமியில் 25 மாவட்­டங்கள் உள்­ளன. அந்த முறை­மையை மாற்றி ஒரு குறிப்­பிட்ட உறு­தி­யான எந்­த­வி­ட­யத்­தையும் தெரி­விக்­காத மாகா­ணங்­களின் ஊடாக ஏதோ ஒன்று செய்­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர். இதன் மூலம் இவர்கள் எதற்கு முயற்­சிக்­கின்றர் என்­பதை நாங்கள் புரிந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.

3. இந்த இடைக்­கால அறிக்­கையில் மாகா­ணங்­க­ளினால் செய்­யக்­கூ­டி­ய­வற்றை மாகா­ணங்­க­ளுக்கே வழங்­க­வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான ஒரு எண்­ணக்­க­ருவின் ஊடா­கவே 1972 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கில் பிரி­வி­னை­வா­திகள் தனி­நாட்டைக் கோரி வரு­கின்­றனர் என்­பதை நாம் சிந்­தித்­துப்­பார்க்­க­வேண்டும்.

4. மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கப்­படும் இந்த அதி­கா­ரங்கள் ஏனைய அனைத்து மாகா­ணங்­க­ளி­னதும் அனு­மதி இல்­லாமல் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் மாற்ற முடி­யாத ஒரு விட­யமும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அது­மட்­டு­மன்றி மாகா­ண­சபை பிர­தி­நி­தி­களும் உள்­ள­டக்­கத்­துடன் இருக்கும் இரண்­டா­வது சபையின் அனு­ம­தியும் இல்­லாமல் பாரா­ளு­மன்­றத்­தினால் தேசிய கொள்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாத வகையில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் ஒத்­தி­சைவு பட்­டி­யலை நீக்­கு­வ­தற்கும் அந்த அதி­கா­ரங்­களை மாகா­ண­ச­பை­க­ளுக்கு கொடுப்­ப­தற்கும் சமஷ்டி நாட்­டுக்கு உரிய முறையில் மத்­திய அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை குறைக்­கவும் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

5. மாகாண ஆளு­நர்­க­ளுக்கு காணப்­படும் நிறை­வேற்ற அதி­கா­ரத்தை குறித்த மாகா­ணத்தின் அமைச்­ச­ர­வைக்கு வழங்­கவும் எந்த நேரமும் மாகாண அமைச்­ச­ர­வையின் ஆலோ­ச­னை­களின் படி செயற்­ப­டு­வ­தற்கும் முத­ல­மைச்­சரின் ஆலோ­ச­னை­யின்றி ஆளுநர் ஒருவர் ஒரு மாகா­ணத்தில் அவ­சர நிலைமை காணப்­ப­டு­வ­தாக மத்­திய அர­சாங்­கத்­திற்கு அறி­விக்க முடி­யா­த­வாறும் ஏற்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அது­மட்­டு­மன்றி மாகா­ண­ச­பை­யினால் நிறை­வேற்­றப்­படும் ஒரு பிரே­ர­ணைக்கு அனு­மதி அளிப்­பதோ அல்­லது அது­தொ­டர்­பான விட­யங்­களை ஆராய்­வ­தற்கு உயர் நீதி­மன்­றத்­திற்கு அனுப்­பு­வ­தற்கு ஆளு­ந­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும் இருக்­கின்ற காலம் இரண்டு வராங்­க­ளினால் குறைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த இரண்டு வாரங்கள் கடந்­து­விட்டால் இயல்­பா­கவே அந்தப் பிரே­ர­ணைக்கு அனு­மதி கிடைத்­து­விட்­ட­தாக கரு­தப்­ப­டு­வ­தாக தெரி­விப்­பதன் மூலம் மாகா­ண­ச­பைகள் மீதான மத்­திய அர­சாங்­கத்தின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­ப­டு­வ­தற்கு யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது இலங்­கையில் காணப்­படும் அதி­கா­ரப்­ப­கிர்வு முறை­மை­யா­னது இந்­தி­யா­வி­லி­ருந்து பெற்­றப்­பட்­ட­தாகும். இந்­திய அர­சி­ய­ல­மைப்பில் 201 ஆவது பிரிவின் படி மாநில அர­சாங்­கங்கள் நிறை­வேற்றும் எந்­த­வொரு சட்­டமும் எந்­தக்­கா­ர­ணமும் இன்றி ஜனா­தி­ப­தி­யினால் நிரா­க­ரிக்­கப்­ப­டலாம். அதற்­கான அதி­காரம் அவ­ருக்கு இருக்­கி­றது. ஆனால் எமது நாட்டில் ஜனா­தி­ப­திக்கு அவ்­வா­றான அதி­காரம் இருந்­த­தில்லை. எனவே மாகா­ண­ச­பைகள் தொடர்­பாக நிறை­வேற்று அதி­கா­ரத்­திற்கு காணப்­படும் அதி­கா­ரங்­களை மேலும் குறைக்கும் இடைக்­கால அறிக்­கையின் யோச­னை­களை நாம் எதிர்க்­கின்றோம்.

6. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் ஏற்­பா­டுகள் மற்றும் அது தொடர்­பான உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்­பு­களின் கீழ் ஜனா­தி­பதி அல்­லது மத்­திய அர­சாங்­கத்­திற்கு காணப்­ப­டு­கின்ற காணி தொடர்­பான அதி­காரம் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தற்கு யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி ஒரு மாகா­ணத்தில் காணப்­ப­டு­கின்ற ஒரு காணியை மத்­திய அர­சாங்­கத்தின் தேவைக்­காக கோரினால் அதனை மாகா­ண­சபை நிரா­க­ரித்தால் அந்தப் பிரச்­சி­னையை முதலில் மத்­தி­ய­ச­பைக்கு அனுப்­பவும் பின்னர் நீதி­மன்­றத்தை நாடு­வதை தவிர வேறு எந்த மாற்று ஏற்­பா­டு­களும் இல்லை. இந்­தி­யாவில் மத்­திய அர­சாங்­கத்தின் தேவை­யான காணி­யொன்றை மாநிலம் ஒன்­றி­லி­ருந்து பெறு­வ­தற்கு அதி­காரம் இருக்­கி­றது. எனவே காணி தொடர்பில் தற்­போது காணப்­படும் ஏற்­பா­டு­களில் எந்­த­மாற்­றமும் செய்­யப்­ப­டக்­கூ­டாது.

7. 55 முதல் 45 பேரைக் கொண்­ட­தாக மாகா­ண­சபை பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­கிய இரண்­டா­வது சபை­யொன்றை அமைப்­ப­தற்கு யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த இரண்­டா­வது சபையின் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இல்­லாமல் எந்­த­வொரு அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தமும் நிறை­வேற்­றப்­பட முடி­யாது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் நோக்கம் பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரத்தை வரை­ய­றுப்­ப­தா­கவும் அது­தொ­டர்­பாக நிறை­வேற்று அதி­காரம் ஒன்றை . மாகாண சபை­க­ளுக்கு வழங்­கு­வ­தா­கவும் தெரி­கி­றது. இந்த விட­யத்தில் இந்­திய அர­சி­ய­ல­மைப்பின் 249ஆவது பிரி­வுக்கு சம­மான அதி­கா­ரங்கள் இல்­லா­விடின் இலங்­கைக்கு இரண்­டா­வது சபை­யொன்று அவ­சியம் இல்லை என்­பது எமது கருத்­தாகும்.

8. அனைத்து சிறு குழுக்­க­ளுக்கு அதி­க­மான பிர­தி­நி­தித்­து­வத்தை வழங்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டிய பிர­தேச நிதித்­து­வ­வாரி தேர்தல் முறை­மையின் கீழ் தெரிவு செய்­யப்­படும் பிர­தி­நி­தி­களின் வீத­மா­னது 40 வீத­மாக இருக்கும் போது இன­வா­தக்­கு­ழுக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­ப­தற்­காக சிறு­பான்மை தொகு­திகள் மற்றும் கலப்பு தொகு­தி­களை உரு­வாக்­கு­வ­தற்கும் யுத்­தத்­தினால் வெளி­நா­டு­க­ளுக்கு சென்ற மற்றும் யுத்­தத்தின் பின்­னரும் இலங்­கைக்கு வரா­த­வர்­களை இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளாக கருதி வட­மா­கா­ணத்தின் மேல­திக பாரா­ளு­மன்ற ஆச­னங்­களை ஒதுக்­கு­வ­தற்கும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது போன்று இலங்கை அர­சி­ய­லுக்குள் இன­வா­தத்­திற்கு முன்­னு­ரிமை கொடுப்­பதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. பிர­தேச நிதித்­துவ முறை­மையின் படி தெரிவு செய்­யப்­படும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நிகழ்­கா­லத்தின் பிர­காரம் மாவட்ட மட்­டத்தில் அல்­லாமல் மாகா­ண­மட்­டத்தில் தெரிவு செய்­யப்­ப­டு­வதை நாம் ஏற்­க­வில்லை.

இதற்கு முன்னர் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­சபை வெளி­யிட்ட ஆவ­ணங்­களில் பொலிஸ் அதி­கா­ரங்கள் குறித்து குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும் அந்தத் தலைப்­பா­னது இந்தப் புதிய யோச­னையில் உள்­ள­டக்­கப்­ப­டா­மைக்கு பொலிஸ் சேவையை ஒன்­ப­தாக பிரித்து தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க 13 திருத்­தத்தில் ஏற்­பா­டுகள் இருக்­கின்­றமை கார­ண­மாக இருக்­கலாம். தற்­போது தேசிய பொலிஸ் சேவை­யா­னது நாடு முழு­வதும் செயற்­படும் விதத்­தி­லேயே தொடர்ந்தும் இருக்­க­வேண்டும் என்­பது எமது கருத்­தாகும்.

எனவே தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் ஒன்­ப­தா­வது அத்­தி­யா­யத்தில் முத­லா­வது உப பிரிவில் காணப்­படும் ஏற்­பா­டா­னது யதார்த்­திற்கு ஏற்­பு­டை­யது என திருத்தம் செய்­யப்­ப­ட­வேண்டும். அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரங்கள் தொடர்பில் உயர் நீதி­மன்­றத்தின் அதி­கா­ரங்­களை நீக்கி புதி­தாக அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் ஒன்றை உரு­வாக்­குதல், நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கி­யதன் பின்னர் பிர­த­ம­ருக்கு சில அதி­கா­ரங்­களை வழங்­குதல், தேர்­தலின் பின்னர் குறிப்­பிட்ட காலம் வரை பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடி­யா­த­வாறு ஏற்­பா­டு­களை முன்­வைத்தல் உள்­ளிட்ட எம்மால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாத பல்­வேறு யோச­னைகள் இந்த இடைக்­கால அறிக்­கையில் இருக்­கின்­ற­போ­திலும் அவை இந்த அறிக்­கையில் பிர­தான நோக்­கங்­க­ளுக்கு தொடர்­பு­ப­டா­மை­யினால் அவை தொடர்பில் நாம் தற்­போது எதுவும் பேச­வில்லை.

தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் புத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்கும் 9ஆவது பிரிவை அகற்­று­வ­தற்கு யோசனை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அது இவர்­களின் தற்­போ­தைய முதன்மை நோக்கம் அல்ல என்­பது தெளி­வா­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பின் 9ஆவது பிரிவு தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள மாற்­ற­மா­னது இறுதி நேரத்தில் நீக்­கிக்­கொள்­ளப்­பட்­ட­மை­யா­னது சங்க சபையை ஏமாற்றி நாட்டின் ஏக்­கிய அல்­லது யுனிட்­டரி தன்­மையை பேணு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­படும் போராட்­டத்தை முடக்­கு­வ­தற்­கான முயற்­சி­யாக இருக்­கலாம் என ஆய்­வா­ளர்கள் கரு­து­கின்­றனர்.

இது­போன்று நல்­லாட்­சி­யா­ளர்­களின் சமஷ்டி நோக்­கத்­திற்கு எந்­த­வி­த­மான சேதத்­தையும் ஏற்­ப­டுத்­தாமல் பெரும்­பான்மை மக்களை ஏமாற்றுவதற்காக இறுதி நேரத்தில் நீக்கிக்கொள்ளக்கூடிய வாறான மற்றுமொரு யோசனையும் உள்ளது. அரசியலமைப்பின் 7ஆவது பிரிவின் படி தேசிய கீதத்தில் தமிழ் மொழியையும் இணைக்கவேண்டும் என்ற யோசனையே அதுவாகும். இதுபோன்று இறுதி நேரத்தில் கைவிடுவது போன்று முன்வைப்பதற்காக பல்வேறு யோசனைகள் இந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

 நாம் அரசியல் மற்றும் தந்திரங்கள் தொடர்பான ஒரு குழுவினருடனேயே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதை புதிதாக கூறவேண்டிய அவசியம் இல்லை. தற்போது நல்லாட்சியாளர்களின் இலக்கானது பௌத்தத்திற்கான முதலிடம் மற்றும் தேசிய கீதம் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை மாற்றுவது அல்ல. மாறாக இலங்கையின் கட்டமைப்பை ஒற்றையாட்சி மற்றும் யுனிட்டரி என்ற அடிப்படையில் இருந்து சமஷ்டி என்ற அடிப்படையை நோக்கி நகர்த்துவது மட்டுமே நல்லாட்சியாளர்களின் நோக்கமாக இருக்கின்றது என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

அதனால் இனவாத ரீதியில் ஆட்சிப் அலகுகளைப் பிரிப்பதற்கும் அவற்றுக்கான விரிவான அதிகாரங்களை வழங்குவதற்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே இந்த அழிவுக்கு இட்டுச் செல்லக்கூடிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளை கைவிட்டு மக்களுக்கு வாக்களித்தவாறு அரசியலமைப்பு திருத்தத்தை மட்டும் செய்வதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு நான் அரசாங்கத்தை கோருகின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.